Sunday, November 3, 2013

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவிருப்பும் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளைக் குழப்பாதீர்கள் - வல்லிபுரம்

மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணங்கிச் சென்று தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து அம்மக்களின் அபிலாஷை களைப் பூர்த்தி செய்யவதற்கு முன்வந்துள்ள வட மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களது செயற்பாடுகளைக் குழப்பி தமிழ் மக்களை மீண்டுமொரு முறை யுத்தம், உயரிழப்பு, இடம்பெயர்வு என்ற அவஸ்த்தைக்குள் தள்ளிவிட வேண்டாமென தமிழ்மக்கள சார்பாக வல்லிபுரம் என்பவர் தமிழ் ஊடகங்களிடம் தயவான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்

இது தொடர்பாக தமிழ் ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு வெள்ளவத்தையில் வசிக்கும் வல்லிபுரம் என்பவரால் கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில தனியார் தமிழ் ஊடகங்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லும் அரசியலுக்கு முன்வந்துள்ளதை விரும்பாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இதே கருத்தைக் கொண்டுள்ள சிலருடன் இணைந்து குழப்பும் சதிமுயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது எனவும், அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனது இணங்கிச் சென்று காரியம் சாதிக்கும் அரசியலுக்கு, தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 comments :

Anonymous ,  November 3, 2013 at 8:46 AM  

TNA and some other groups always expect " critical political moments" to be remained,this what they were doing from the past

Anonymous ,  November 3, 2013 at 11:07 AM  

They will continuosly interupt the administration until they find a silly puppet to dance according to their tune.

Anonymous ,  November 3, 2013 at 8:35 PM  

இலங்கை தமிழர்களை பொறுத்தளவில் ஒன்றுபட்ட இலங்கை நாட்டுக்குள், கௌரவமான உரிமைகளுடனான ஒரு மாநில சுய ஆட்சியை தான் விரும்புகின்றனர். ஆகவே தான் பிரதம நீதியரசர் விக்கினேஸ்வரனை முதல்வராக தெரிவு செய்தார்கள். மற்றும் தமிழ் கூட்டணியையும் தெரிவு செய்தார்கள்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி உறுப்பினர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து முழு மனதுடன் செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இருக்கிறார்கள்,

திறமை, தராதரம், அனுபவம் மற்றும் பொதுநலம் கொண்ட எமது கௌரவ முதலமைச்சர் நிச்சயமாக அரசியல் சாக்கடைக்குள் விழ மாட்டார். அவரை எவரும் விழுத்தவும் முடியாது. அவரின் பாதை என்றும் நேர்மை, நீதியானதுடன் யதார்த்தமானதும் கூட. அவருக்கு தேவை அமைதியான, ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மட்டுமே.

எதையுமே ஒரு இரவில் முடித்து விட முடியாது. எனவே நல்ல சிந்தனை, பொறுமை, நிதானமாக காய்களை நகர்த்த வேண்டும். இனி வரும் காலங்களில் இலங்கையில் சதுரங்க அரசியல் மட்டுமே வெற்றி பெரும். சாக்கடை அரசியல் அல்ல.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com