Sunday, November 3, 2013

தன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய ஆசிரியயை எரித்துக் கொன்ற உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர்!

இந்தியாவில் உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்த ஆசிரியை ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இடிஸ்ரி என்ற ஆசிரியை ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் டெலாங் என்ற இடத்துக்கு பயிற்சிக்காக வந்து அங்குள்ள பாடசாலையில் சேர்ந்து பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஆசிரியை மீது ஒரு கண் இருந்தது. இந்த நிலையில் அவர் பலவந்தமாக மானபங்கம் செய்து ஆசிரியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திவிட்டார். தண்டசேனா ஏற்கனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர். இதுபற்றி ஆசிரியை பொலிசில் புகார் செய்தார். ஆனால் பொலிசார் கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையே தன் மீதான புகாரை வாபஸ் பெறுமாறு உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் மிரட்டல் விடுத்தார். அவரது மிரட்டலுக்கு பயப்படாத ஆசிரியை புகாரை வாபஸ் பெற மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் கூலிப்படையை ஏவி ஆசிரியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது ஆட்களை ஏற்பாடு செய்தார். அவர்கள் ஆசிரியை மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர். இதில் 90 சதவீத தீக்காயம் அடைந்த அவர் விசாகப்பட்டினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 5 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இந்த விவகாரம் பற்றி அறிந்த முதலமைச்சர் நவீன் பட்நாயக் குற்றபிரிவு பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆசிரியை புகார் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸ் இன்ஸ் பெக்டர் சுஜித்கு மார்காய் பணிநீக்கம் செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை விரைவு கோர்ட்டில் துரிதமாக நடத்தவும் உத்தவிடப்பட்டுள்ளது.

புகார் அளிக்கப்பட்ட உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் தண்ட சேனா தலை மறைவானார். ஆந்திரா ஒடிசா எல்லையில் இச்சாபூர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த அவரை பொலிசார் கைது செய்தனர். ஆசிரியை எரித்துக் கொன்ற கூலிப்படை கும்பலை தேடிவருகிறார்கள்.

4 comments :

Anonymous ,  November 3, 2013 at 12:27 PM  

These type of horrifying incidents are very common in India.Sex maniacs and murderers are in plenty where as it is laughable they shed crocodile tears and silently cry for the sake of tamils in srilanka .The best actors and actresses we have even seen

Anonymous ,  November 3, 2013 at 12:39 PM  

Sithambaram need first look kind of this matters in indai, and not sri lankan local matters

ஈய ஈழ தேசியம் ,  November 3, 2013 at 2:27 PM  

புகார் கொடுத்த ஆசிரியை அவ்வாறு எரித்து படுகொலை செய்யப்பட்டது கொடூரமான நிகழ்வு. அதற்கு காரணமானவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். இதற்கான போராட்டத்தை காங்கிரஸ் ப.சிதம்பரம் மற்றும் வைகோ சீமான் கருணாநிதி விரைவில் ஆரம்பிப்பார்கள்.

Anonymous ,  November 3, 2013 at 6:32 PM  

We do hear Hon.Minister Sidamparam,
shed tears,while he heard about C4 stories.We wonder whether he had'nt seen the The worst caste system of India dividing society into classes based on differences in family origin and violences against the low caste society. "Usual Gang Rapes"and killings.The poverty stricken,poverty trapped indians,unlimted violences around the country Will the TN petty politicians cry against this abnormal situation and make everything perfect and start cry for another country's illness.Sorry that they cannot feel that they have imperfection.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com