Monday, March 4, 2013

நவநீதம் பிள்ளையின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கின்றது ஜேர்மன்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் செயல்பாடுகள் தொடர்பாக ஜேர்மன் கடுமையாக விமர்சித்துள்ளது. ஒரு சில தரப்பினரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் நவதநீதம் பிள்ளை செயல்பட்டு வருவதாகவும் அவரது நடவடிக்கைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாதெனவும் ஜெனீவாவிற்கான ஜேர்மன் தூதுவர் ஹென்ரி ஷூமார்க்கர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கு இணங்க இலங்கையை அசௌகரியத்தில் ஆழ்த்துவதற்காக பல்வேறு அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் கொண்டு வரப்படவுள்ள உத்தேச தீர்மானத்தை ஒரு போதும் தாம் ஆதரிக்க போவதில்லையென ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்திற்கு ஆதரவு கோரி அமெரிக்கா மேற்கொள்ளும் அழுத்தங்களையும் ஜேர்மன் கண்டித்துள்ளது. சனல் 4 அலைவரிசையினால் தயாரிக்கப்பட்டுள்ள நோ பயர் ஸோன் எனும் காணொளிக்கு தேவையான காட்சிகளை கே.டி.எஸ எனப்படும் இருவரை மட்டுமே கொண்ட ஊடக அமைப்பு ஒன்றினாலேயே வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த அமைப்பு அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ஜேர்மன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடு;த்துள்ளதுடன் அதனை ஜேர்மன் அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

2 comments :

Anonymous ,  March 4, 2013 at 4:45 PM  

This particular lady,backed by some elements in order put Srilanka into unwanted inconvenience.Srilanka is making steady progress after the conflict,once the Tsunaamy was over still the scars remmain.This is understandable.Germany is clever and made its best comments in this matter

Arya ,  March 6, 2013 at 2:46 AM  

மகிந்த என்ன குற்றம் செய்தார் ? அவர் தமிழர்களை கொன்று உயிருடன் எரித்த புலிக் கூட்டத்தை எமது நாட்டில் இல்லாது ஒழித்தார் , அவர் எப்படி குற்றவாளி ஆக முடியும் , இன்றைய இலங்கையில் எவரும் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழப்பதில்லை , புலிகள் இருக்கும் பொது ஒவ்வொரு நாளும் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காத்தவரை எப்படி தண்டிக்க முடியும் , அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் இதில் விளக்கமின்மை இருக்கலாம் , ஏன் புலன் பெயர் தமிழர்களுக்கு தெரிந்தும் வீண் வம்பு ? பழிவாங்கும் பிடி வாதம் ?

பிரபாகரனின் பழிவாங்கும் தன்மையே ராஜீவ் காந்தியை கொலை செய்து பல்லாயிரம் தமிழரின் உயிருக்கு உலை வைத்தது.

புலன் பெயர் தமிழர் முதலில் புலிகளின் மனித உரிமை மீறல்களை கண்டிக்க வேண்டும், உதாரணம் கந்தன் கருணை படு கொலை உட்பட பல உள்ளன.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com