சனல் 4 காணொளிகள் போலியானவை என்பதை தொழில்நுட்ப ரீதியாக நிருபிப்பதில் வெற்றி என்கின்றார் ஆரியசிங்க.
சனல் 4 அலைவரிசையின் காணொளி போலியானதென்பதை தொழில்நுட்ப ரீதியாக நிருபிப்பதில் அரசாங்கம் வெற்றியளித்துள்ளதாக ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில் காணொளியை தயாரித்த சனல் 4 அலைவரிசைக்கு இதில் உள்ள போலியான தன்மையை சுட்டிக்காட்டினேன். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட காணொளியில், ஒரு பெண் இலங்கைக்கு வந்து விடுமுறையை கழிக்கும்போது, தயாரித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, இம்முறையும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பெண், ஒரு எல்ரிரிஈ உறுப்பினர் என்பது, தெரியவந்துள்ளது. இந்த காணொளியுடன் எல்ரிரிஈ சார்பானவர்களுக்கும், அரச சார்ப்பற்ற அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது, உறுதியாகின்றது. இந்த காணொளியை பார்த்தவர்களுக்கு இதில் உள்ள முரண்பாடுகளை உடனே புரியக்கூடிய வகையில் நாம் தெளிவினை ஏற்படுத்தினோம் என்றும் கூறியுள்ளார்.
1 comments :
We are really proud to hear as it has brilliant people to defend the soverignity of the country.
Post a Comment