ஜனநாயகத்தை தாருங்கள்! கேட்கின்றார் பொன்சேகா..
இன்று இலங்கையில் ஜனநாயகம் அற்றுப்போய் விட்டதாக குறிப்பிடும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா ஊழல் ஆட்சியாளரிடமிருந்து நாட்டை பாதுகாக்க கூடிய ஒர் இடமிருக்குமாயின் அவ்விடத்திற்கு செல்வதற்கு தான் தயாராக இருப்பதாக கூறுகின்றார்.
இன்று எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்று கேட்கின்றேன். இந்த நாடு புதுமையான நாடாக மாற்றம் பெற்றுள்ளது. நாட்டில் உள்ள ஜனநாயகம் என்பது தேர்தல் மாத்திரமே, ஆனால் தேர்தலுக்குச் சென்று புள்ளடி இடுகின்றவர்கள் யாருக்கு புள்ளடி இட்டோம் எனச் சொல்ல முடியாது உள்ளது என்றும் கூறுகின்றார்.
0 comments :
Post a Comment