இலங்கையில் அறபு மொழியை கற்பித்துவரும் சவுதி அரேபிய உலமாக்களை உடனடியாக வெளியேற்றுவீர். சம்பிக்க
இலங்கையில் தங்கியிருந்து மத்ரஸாக்களில் நீண்ட காலமாக அறபு மொழியைக் கற்பித்து வரும் ஸவுதி அரேபிய உலமாக்களை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற 'அல் - ஜிகாத் - அல் கைதா'எனும் தனது நூலை வெளியிட்டு, அவ்விழாவில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
ஸவுதியிலிருந்து இலங்கை வந்துள்ள சுமார் 700 இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய மத்ரஸாக்களில் கற்பித்து வருகின்றனர். அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இவர்கள்தான் காரணம் என்பது தெளிவாகியுள்ளது.
'ஹலால்' பிரச்சினை மட்டுமல்லாது, முஸ்லிம் பெண்கள் அபாயா உள்ளிட்ட கறுப்பு உடை அணிவதை தீவிரப்படுத்தும் நடவடிக்கை மற்றும் ஏனைய அடிப்படைவாதச் செயற்பாடுகளுக்கும் மத்ரஸாக்களுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, இலங்கையில் இருந்து கொண்டு அடிப்படைவாதக் கருத்துக்களைப் போதிக்கும் அரேபிய பிரசைகள் இந்நாட்டிலிருந்து வெளிஎற்றப்பட வேண்டியவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment