சிங்களவர்களே நீங்கள் 8-10 பிள்ளைகளைப் பெற்றெடுங்கள்!
இபோச ஊழியர்கள் தொழில்புரியும் அதேவேளை, சிறந்ததொரு திருமணத்தைச் செய்து அதிகமதிகம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மற்றும் தொழிநுட்பப் பிரிவுக்கு 420 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அமைச்சர் வெல்கம தொடர்ந்து தெளிவுறுத்துகையில், நாட்டில் இன்று ‘சிங்கள’ குடித்தொகை குறைந்து செல்கின்ற காலகட்டத்தில் இளைஞர்கள் தொழில்புரியும் அதேவேளை அதிகமதிகம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள மனதிற் கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் குறைந்தது 8 - 10 பிள்ளைகளாவது ஒரு குடும்பத்தில் இருக்க வேண்டும். தானும் அவ்வாறான குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment