Thursday, March 14, 2013

ஐநாவின் வேண்டுகோளை கருத்திற் கொள்ளாமல் எழுவருக்கு மரண தண்டனை வழங்கியது ஸவுதி அரசு

ஆயுதங்களைத் தாங்கிக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எழுவருக்கு ஸவுதி அரசாங்கம், ஐநா பொது மன்னிப்பும்கோரியும் அதனைக் கருத்திற் கொள்ளாமல் மரண தண்டனை வழங்கியுள்ளது. ஏனையோர் இவ்வாறான தீய நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பதன் பொருட்டும், அவர்களுக்குப் பாடம் புகட்டும் பொருட்டும் ஸவுதி அரசு அவர்களைத்துப்பாக்கியினால் கொலை செய்ததாக ஸவுதி அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சு கூறுகிறது. 2005 ஆம் ஆண்டு இந்த ஏழுபேரும் 18 வயதுக்குக் குறைவாக இருந்த காலத்தில் புரிந்த கொள்ளைகள் 2009 இல் உறுதியாகி குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டன.

அபா மக்கள் சதுக்கத்தில் அவர்கள் எழுவரும் துப்பாக்கியினால் கொலை செய்யப்பட்டதாக AFP செய்திச் சேவை செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு வாரத்துக்கு முன்னர் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தாலும், மன்னர் அப்துல்லாஹ்வின் மூத்த புதல்வன் மூலம் மற்றொரு விசாரணை மேற்கொள்ளப்படும் வரை தண்டனை ஒரு மாததிற்கு பிற்போடப்பட்டிருந்தது.

பொலிஸாரின் துன்புறுத்தலுக்கும் தாய் கொலை செய்யப்படுவார் என்ற பயமுறுத்தலுக்கும் பயந்தே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், தான் யாரையும் கொலை செய்யவில்லை எனவும், கொள்ளையடிப்பதற்காக ஆயுதம் ஏந்திச் செல்லவில்லை எனவும் அப்போதைக்கு 15 வயதாகவிருந்த நஸார் அல் கதானி எஸோஸியேட்டட்டிற்கு அறியக் கொடுத்துள்ளார்.

எத்தனையோ மனித உரிமை ஆணைக்குழுக்கள் இத்தண்டனையைத் தளர்த்துமாறும், மீண்டும் வழக்கு விசாரணை செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்த போதும், இத்தண்டனையானது ஐநா வேண்டுகோள் விடுத்து இரு நாட்களுக்குப் பின்னரேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆயுத முனையில் கொள்ளையடித்தல், பாலியல் வல்லுறவு, கொலை, போதைவஸ்து வியாபாரம் ஆகியவற்றுக்கு ஸவுதியில் தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாண்டு ஸவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆகும். 2012 இல் 67 – 76 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக அறிக்கைகள் தெளிவுறுத்துகின்றன.

(கேஎப்)

3 comments :

Anonymous ,  March 15, 2013 at 6:21 AM  

கொடூர இதயம் கொண்ட மன்னர் ஆட்சி அல்லாவினால் தண்டிக்கபட வேண்டும். சவூதி அரேபிய காட்டுமிராண்டி மன்னர் குடும்பம் பூண்டோடு அழிக்கப்பட வேண்டும்.

Anonymous ,  March 15, 2013 at 11:02 AM  

Western countries and the allied countries are crying for the human rights violation around the world and arranging for the punishments.But they keep their mouth shut about the brutal human rights violation in Suadi....WHY..? it is really surprising and mysterious and an unanswered question which is worrying us for decades and decades.Don`t know whether Saudi is having a special permission from these countries to do as they want.

Anonymous ,  March 16, 2013 at 3:28 AM  

ஆயுத முனையில் கொள்ளையடித்தல், பாலியல் வல்லுறவு, கொலை, போதைவஸ்து வியாபாரம் ஆகியவற்றுக்கு ஸவுதியில் தண்டனை வழங்கப்படுகின்றது.இந்த குற்றங்களுக்கு வேறு என்ன தண்டனை பொருத்தம்?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com