அவசரமாக எங்களை மொரட்டுவயிலிருந்து எடுத்துவிடுங்கள் - NDT
மொரட்டுவைப் பல்கலைக் கழக தொழினுட்பப் பிரிவை தியகமவுக்கு மாற்றும் திட்டத்தை துரிதமாக்கினால் நேற்று முன்தினம் நடைபெற்ற மாணவர் கைகலப்பு மாதிரி மீண்டும் பாரிய அளவில் இடம்பெறாது என்று தொழினுட்பப் பிரிவு மாணவர் சங்கம் குறிப்பிடுகிறது.
தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டுத் திடலுக்கு அண்மித்த 20 ஏக்கர் திட்டம் முடிவுறாமல் காலதாமாகி இருப்பதற்குக் காரணம் பொருளாளர் பீ.பீ. ஜயசுந்தரவின் விதந்துரைப்பினால் என்றும், மிகவும் துரிதமாக இத்திட்டத்தை அரசாங்கம் செய்வதற்கு முனைய வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் பிரமித்த புத்திக தெளிவுறுத்தியுள்ளார்.
‘1999 ஆம் ஆண்டின் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட எந்தவொரு கட்டடத்திலும் கற்பதற்கு தொழினுட்பப் பிரிவு இடம்தரவில்லை. 2005 ஆம் ஆண்டு இருந்த பழைய பாடத்திட்டமே இன்னும் இருக்கிறது. இதனால் தொழினுட்பப் பிரிவு மாணவர்கள் மிகவும் கவலையடனிருக்கின்றனர். தியகம திட்டம் மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்.
அங்கு எங்கள் பிரச்சினைகள் பற்றி நிருவாகத்தினரிடம் சொல்லி எங்களுக்குத் தீர்த்துக் கொள்ள முடியும். தற்போதுள்ள இடத்திலிருந்து கொண்டு எங்களுக்கு எதுவும் செய்யவியலாது. தொழிநுட்பப் பிரிவை தியகமைக்கு மாற்றும் வரை நாங்கள் தொடர்ந்து அதற்காகக் குரல் கொடுப்போம்’ என்று பிரமித்த புத்திக மேலும் தெரிவித்திருக்கிறார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment