சிங்கள பௌத்த நாட்டுக்கு தமிழ்மொழி தேசிய கீதம் எதற்கு? குமுறுகிறது ஹெல உறுமய
தேசிய கீதத்தில் சில பகுதிகள் தமிழ்மொழி மற்றும் சிங்களமொழியில் மீளமைக்க தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ள விடயம் பற்றியும், மீளமைக்கப்படும் தேசிய கீதம் பெப்ரவரியில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவின்போது இசைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
என்றாலும் இதற்கு கடும் எதிர்ப்பை ஜாதிக்க ஹெல உறுமய வெளியிட்டுள்ளது.
நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட ஜாதிக்க ஹெல உறுமயவின் மத்திய மாகாண உறுப்பினர் துஷார சுவர்ணத்திலக்க மேற்படி விடயம் தொடர்பாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இது சிங்கள பௌத்த நாடு. இந்த நாடு ஆபத்தை எதிர்நோக்கிய போது நாட்டை மீட்டெடுப்பதற்காக போராடியவர்கள் யார் என்பது அமைச்சருக்குத் தெரியாமலில்லை. இவரைப் போன்ற மார்க்சியவாதிளை நாங்கள் புறக்கணிக்கிறோம். என்றும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment