யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் வர்த்தகர் ஒருவரை வெள்ளை வானில் கடத்த முயற்சி
யாழ்ப்பாணத்தில் வைத்து முஸ்லீம் வர்த்தகர் ஒருவரை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதோடு இக்கடத்தல் முயற்சியானது தோல்வியில் முடிவடைந்துள்ளது எனத் தெரியவருகின்றது. முஸ்லீம்களில் மிகவும் பிரபல்யமா
ஒரு வர்த்தகரையே இவ்வாறு கடத்திச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வர்த்தக கொடுக்கல் வாங்கல்களே இதற்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர் யாழ்.பொலிஸில் முறைப்பாடென்றையும் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment