Thursday, January 17, 2013

பாகிஸ்தான் ஹாக்கி வீர்ர்களை திருப்பி அனுப்பியது இந்தியா!!!

இந்தியா ஹாக்கி லீக் தொடரில் விளையாட வந்திருந்த பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள், மீண்டும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பே பாக் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட காரணம் என்றும் சொல்லப்படுகிறது.ஐ பி எல் T20 கிரிக்கெட் தொடர் போல எச் ஐ எல் எனப்படும் உள்ளூர் ஹாக்கி அணிகள் விளையாடும் முதலாவது ஹாக்கி இந்தியா லீக், தொடர் தற்போது நடக்கிறது. இதில் பாகிஸ்தான் சேர்ந்த 9 ஹாக்கி வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர், பாக் ராணுவ வீரர்களால் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.அதோடு பாக் வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என்றும், இந்தியாவில் இருக்க கூடாது என்றும் சிவசேனா போன்ற கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதை அடுத்து பிரச்சனை பெரிதாகும் வாய்ப்பு அதிகரித்ததால், பாக் ஹாக்கி வீரர்கள் 9 போரையும் அவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப் பட்டது.

இது குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் பொது செயலர் நரேந்தர் பத்ரா கூறுகையில், "தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் வீரர்களைத் திருப்பி அனுப்ப முடிவு செய்தோம். இம்முடிவை ஹாக்கி இந்தியா, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்புக்கள் சேர்ந்துதான் ஒரு மனதாக எடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர்களுக்கு ஒப்பந்த தொகை முழுவதுமாக வழங்கப்படும். சம்பந்தப் பட்ட அணிகள் வேறு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com