Monday, December 17, 2012

த.தே.கூட்டமைப்பிடையே வலுப்பெறும் பதவிப் போட்டி கிழக்கில் கைகலப்பில் முடிவடைந்தது.

பணம், பதவி ஆசை என்பன தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடையே பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றமை அண்மைக்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் எடுத்து விளக்குகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்று(16.12.2012) மட்டக்களப்பில் நடைபெற்ற இளைஞர் அணி அங்குரார்ப்பண நிகழ்வில் நடைபெற்ற குழப்பகரமான நிலையும் இதற்கு ஒரு சிறந்த சான்றாகும்.

இந்த நிகழ்வுக்கு கல்குடா பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்குபற்றிய சேயோன் தலமையிலான அணியினருக்கும், வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் விளையாட்டு உத்தியோகஸ்த்தராக கடமைபுரியும் பூபாளன் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பில் முடிவடைந்ததுடன் இதன் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பழைய அரசியல்வாதி ஆகியோருக்கிடையே நிலவிவரும் உள்முரண்பாடுகளே காரணம் எனக் கூறப்படுகின்றது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்திலே ஏணைய பாராளுமன்ற உறுப்பினர்களை விட யோகேஸ்வரன் தமிழரசுக் கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலைமை சக பாராளுமன்ற உறுப்பினர்களிடையே குறிப்பாக ஆரம்பகாலத்திலிருந்தே தமிழரசுக்கட்சியில் அங்கம் வகித்து பாராளுமன்ற உறுப்பினாகளாக இருந்த சிலருக்கு எரிச்லை உண்டு பண்ணியிருந்தது. இதனை குறிப்பிட்ட சொல்லாததனால் பல வருடமாக அரசியலில் இருக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை விட யோகேஸ்வரன் அதிக வாக்குகளைப் பெற்றுவிட்டானே என்பதுதான் இந்த பிரச்சினையின் முதற்காரணம்.

இதனால் தமிழரசுக் கட்சியில் இருக்கும் யோகேஸ்வரனின் ஆதிக்கத்தை குறைக்கவேண்டும் என்று தலைவர் சம்பந்தனிடம் குறிப்பிட்ட சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட அரசியல் வாதி அடிக்கடி கூறியும் வந்திருக்கின்றார். இதனை அறிந்து கொண்ட யோகேஸ்வரன் நேரடியாகவே அவருடன் பல விடயங்களில் முரண்பட்டு வந்ததுள்ளார். கடந்த மாகாண சபைத் தேர்தல் காலத்தில்கூட குறிப்பிட்ட தமிழரசுக்கட்டசி அரசியல்வாதி தேர்தல் தினத்தன்று எந்தவொரு வாக்குப் பதிவு நிலையத்திற்கும் போகாத விடயத்தையும் யோகேஸ்வரன் அம்பலமாக்கியிருந்தார். இவ்வாறு இரண்டு பாராளுமன்ற உறுப்பினாகளுக்குமிடையே ஏற்பட்டு வந்த முறுகல் நிலையின் ஒரு அங்கமே இன்றைய கைலப்பு நிலை என்று கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com