வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்திச்சாலையை சுற்றிவளைத்தது STF.
வென்னப்புவை ஆராச்சிக்கட்டு காட்டுப் பகுதியில் சட்ட விரோத மதுபான உற்பத்திச்சாலை விசேட அதிரடிப் படையால் சுற்றிவளைத்துப் பிடிக்கப் பட்டது. அதன்போது 8 இலட்ச ரூபா பெறுமதியான கருவிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு வென்னப்புவை பொலிசில் ஒப்படைக்கப்பட்டார். சுற்றிவளைப்பில் 2 படகுகள், கோடா பெரல்கள் 38, ஸ்பிரிட் கேன்கள் 2 மற்றும் பொருட்கள் விசேட அதிரடிப் படையினால் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரும் கருவிகளும் மாரவிலை நீதவான் நீதி மன்றத்துக்கு 12 ம் திகதி கொண்டுவரப்பட்டனர்.
0 comments :
Post a Comment