மட்டக்களப்பு வலையறவுப்பாலம் திருத்த வேலைக்காக இன்றிரவுமூடப்படவுள்ளது
மட்டக்களப்பு வவுணதீவு வலயறவுப்பாலம் வீதி திருத்தப்பணி காரணமாக இன்றிரவு 4ம் திகதி காலை 10 மணிமுதல் பயணிகள் பாவனை தடைசெய்யப்பட்டு நான்கு தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவிக்கின்றார்.
இதன்படி இன்று 4ம் திகதி இரவு 10மணிக்கு பின்னர் எதிர்வரும் மாதம் 8ம் திகதி வரை இப்பாதையால் பயணிக்கும் பயணிகள் வலையிறவு பாலத்தடியிலிருந்து வவுணதீவுச் சந்தி வரை படகுச்சேவை மூலம் பயணிக்க முடியுமென்றும் வாகனங்களில் பயணிப்போர் கரடியனாறு மண்முனைத்துறை பட்டிருப்புப் பாலமூடாக பயணிக்க முடியுமென்றும் அரச அதிபர் அருமைநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதவிர குறித்த பாலம் மூடப்பட்டிருக்கும் காலத்துள் பாலத்தின் இரு மருங்கிலும் இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளும் சேவையிலீடுபடுத்தப்படவுள்ளது. இப்பாலத்தின் திருத்தப்பணிகள் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவித்திட்டத்தில் சுமார் 80 கோடி செலவில் கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் தற்போது புணரமைக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்டுவரும் இந்த வலையிறவுப்பாலத்தின் வீதி அமைப்புப் பணிகள் எதிர்வரும் 2013 அக்டோபர் மாதம் நிறைவு செய்யப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களம் அறிவிக்கின்றது.
இந்த வலையறவு பால வீதி புதிதாக புனரமைக்கப்படுவதன் மூலம் பல வருடங்களாக வவுணதீவு ஊடாக படுவான்கரைப் பிரதேசங்களுக்கு குறிப்பாக வெள்ள அனர்த்த காலங்களில் முற்றாக வீதி துண்டிக்கப்பட்டு சொல்லொணாத்துயரங்களை அனுபவிக்கும் மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கின்றது.
(மட்டக்களப்பு சிஹாறாலத்தீப்)
0 comments :
Post a Comment