காஸ் மற்றும் பால்மா விலை அதிகரிப்பு: சீமெந்தின் விலையை அதிகரிக்க அனுமதி
காஸ் மற்றும் பால்மாவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோகிராம் எடையுள்ள சமையல் காஸ் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இவ்விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் 400 கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 63 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பக்கெட்டின் விலை 163 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீமெந்து பக்கெற் ஒன்றின் விலையை 70 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதியளித்துள்ளது.
0 comments :
Post a Comment