தெரிவுக்குழுவில் இடம்பெறமாட்டோம் என ஒருபோதும் தெரிவிக்கவில்லையாம்!
அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவென அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தெரிவிக்கவில்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசினால் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்திலேயே தெரிவுக்குழுவில் இடம்பெற மாட்டோம் என தெரிவித்திருந்தமை திரிவுபடுத்தப்பட்டு தாம் ஒருபோதும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளப்போவதில்லை என தகவல்கள் வெளியானதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பாக பேசி வருகின்ற போதிலும் இது தொடர்பில் அரச அமைச்சர்களின் ஆதரவு பெரியளவில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
நேற்றைய தினம் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழ்ச் கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் பல விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment