எதிர்காலத்தில் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்தில் பேண முடியாது - மத்திய வங்கி
கடந்த 38 மாதங்களுக்குள் பண வீக்கத்தை ஒற்றை இலக்கத்தில் பேணுவதற்கு முடிந்தபோதிலும், எதிர் காலத்திலும் அவ்வாறே முன்னெ டுப்பதில் சவாலை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பி்டப்பட்டுள்ளது.
எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் தொடர்பில் எதிர்கால நோக்கில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு அறிக்கையின பிரகாரம் அந்த வருடத்தின் டிசம்பர் மாதமளவில் பணவீக்கம் 4.9 வீதமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
ஆயினும், இந்த வருடத்தின் முதலிரண்டு மாதங்கள் நிறைவில் பணவீக்கம் 5.5 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment