முதிரை மரக்குற்றிகளை கடத்தியவர்கள் பொலிஸாரினால் கைது.
உறுகாமம் பிரதேசத்திலுள்ள அரச காடுகளிலிருந்து பெறுமதிமிக்க முதிரை மரங்களை சூறையாடி சட்டவிரோதமாக எடுத்துச்சென்றவர்களை செங்கலடி, கருத்தப்பால சோதனை சாவடியில் வைத்து ,ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த லொறி சோதனைக் குட்படுத்தப்பட்டதாகவும், நெல் மூடைகளை ஏற்றிச்செல்லும் போர்வையிலேயே இம்முதிரை மரக்குற்றிகளை கடத்தல்காரர்கள் கடததியதாகவும், தெரிவித்த பொலிஸார் கைப்பற்றபட்ட வாகனமும், சாரதியும், அதன் உதவியாளரும், ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment