சித்திரை புத்தாண்டும் சுபபுண்ணிய நேரங்களும்
நந்தன வருஷம் 13.04.2012 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 5:47 மணிக்கு உத்தராடம் - 1பாதத்தில் கன்னி இலக் கினத்தில் பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் முன்னிரவு 7:20 மணிக்கு உத்தராடம் - 2 பாததில் துலாம் இராசியில் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.
வாக்கிய பஞ்சாங்கத்தில் விஷூபுண்ணிய காலம் பகல் 1:45 முதல் இரவு 9:45 வரை அமைவதாக குறிப்பிடுகின்றது.
மருத்துநீர்
தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் வேண்டும்.
புத்தாடை
மருத்துநீர் வைத்து ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிவது நன்மை தரும்.
தெய்வ வழிபாடும் ஆசிர்வாதமும்
சைவ சமயத்தவர்கள் பூரண கும்பம் வைத்து தீபம் காட்டி முதலில் பிள்ளையாரை வணங்கி பின்னர் இஷ்டகுல தெய்வங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.
தோஷ நட்சத்திரங்கள்.
கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் 1ம், 2ம் கால் உத்தரம் மூலம், பூராடம், உத்தராடம்
கைவிசேடம்
சித்திரை மாதம் 15ம் திகதி ஞாயிறு
பகல் 8.42 - 9.44
பகல் 9.56 - 11.54 நண்பகல் 12.06 - 2.02
சித்திரை மாதம் 16ம் திகதி திங்கள்
பகல் 9.10 - 9.44
பகல் 9.52 - 11.47
நண்பகல் 12.03 - 1.58
0 comments :
Post a Comment