அமெரிக்கா பிரேரணையில் உள்ள விடயங்களில் பல அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இலங்கை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணை போதியளவு உள்ளடக்கத்தினை கொண்டிரு க்கவில்லை என அமைச்சரவையின் சிரேஷ்ட சட்ட ஆலோசகரும், முன்னாள் சட்ட மா அதிபருமான மொஹான் பீரிஸ்தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் இந்தப் பிரேரணையின் ஊடாக முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களில் பல தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில இலத்தீன் அமெரிக்க நாடுகளும், சில ஆபிரிக்க நாடுகளும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாகவும் இவ்வாறான பிரேரணைகளின் ஊடாக நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் எந்தவொரு ஒத்துழைப்பும் கிடைக்காதெனவும் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணை தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளடங்களாக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று மீண்டும் ஜெனீவாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment