35 வீடுகளில் திருடிய பிரபல திருடன் நீர்கொழும்பு பொலிசாரால் கைது
நீர்கொழும்பு நகரிலும் அதன் அயற் பிரதேசங்களிலும் உள்ள 35 வீடுகளில் பல இலட்சம் பெறுமதியான நகைகளையும் பொருட்களையும் திருடியுள்ள பிரபல் திருடன் ஒருவனை கைது செய்துள்ளதுடன், 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் நகைகளையும் மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு , கதிரானை ,ஜயபிம பிரதேசத்தை சேர்ந்த (34 வயது ) ஒரு பிள்ளையின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார்.
இவர், போதைவஸ்து மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்சன தெரிவித்தார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை, மீரிகமை ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார்.
பின்னர் திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்து அந்த பணத்தை கொண்டு போதைப்பொருள் உட்கொண்டுள்ளதுடன் , சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.
திருடப்பட்ட பொருட்கள் மற்றம் நகைகளில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நகை கமரா , செல்லிடத் தொலைபேசி , டி.வி.டி பிளேயர் , எரிவாயு சிலின்டர் , இலத்திரணியல் உபகரணங்கள், விஸ்கி போத்தல் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , அந்த நபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் எனவும் பொலிஸ் அதிகாரி சுபாஷ் பிரியதர்ஷன தெரிவித்தார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் ஆலோசனையின்படி குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்ஷனவின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் , திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment