பயங்கரவாத தடைசட்டத்தில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் யாழ்.நீதிவான் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முள்ளியவளையைச் சேர்ந்த களக்கேணி கிழக்கைச் சேர்ந்த ராஜரஞ்சிதன் ரஜீந்தன் வயது 24 என்ற இளைஞரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.
கடந்த 7.7.2009 இல் வுவுனியா வலயம் 4 இல் வைத்து பொலிஸரால் கைது செய்யப்பட்டு பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெலிக்கடைக்கு மாற்றப்பட்டு பின்னர் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளில் இவருக்கு எதிரான குற்றங்கள் நிருபிக்கப்படாததைத் தொடர்ந்து இவர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment