லோங் வெயிக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்து- பல மணிநேரம் மின் மற்றும் போக்குவரத்து தடை
யாழ்ப்பாணம் ஓட்டுமடச்சந்தியில் பதினாறு சில்லுவாகனம் உயர்அழுத்த மின்கம்பியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் மானிப்பாய் வீதியில் ஒட்டுமடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாயிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான நீண்ட வாகனம் ஓட்டுமடம் சந்தியில் பின்பக்கமாக திரும்ப முற்பட்ட போது அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தை இடித்து தள்ளியது.
இதன்போது உயர் மின்கம்பிகள் மற்றும் ஏனைய கம்பிகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் உள்ளிட்டவை அறுந்து விழுந்த போதும் எந்தவிதமான உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
குறிப்பாக மூன்று மோட்டார் சைக்கிள்கள் மட்டும் சேதமடைந்ததுடன் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து மானிப்பாய் வீதிவழியான போக்குவரத்து முற்றாகத்தடைப்பட்டுள்ளதோடு யாழ்.நகரிற்காக மின்சாரமும் மூன்று மணித்தியாலயங்கள் வரையில் துண்டிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment