சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தனியார் வியாபாரத்தில் ஈடுபடுத்திய பொலிஸ் அதிகாரி
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தனியார் வியாபாரம் ஒன்றில் ஈடுபடுத்தியமை தொடர்பாகவே உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று அறிவித்தல் விடுத்துள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக சேவையாற்றிய போது தனது மனைவியினால் நடத்திச் செல்லப்பட்ட கடை ஒன்றில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை பணிக்கு அமர்த்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று அறிவித்தல் விடுத்துள்ளார்.
.
0 comments :
Post a Comment