டெங்கு காய்ச்சலினால் நீர்கொழும்பில் குடும்பஸ்தர் மரணம்
டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு நீர்கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமாகியுள்ளார் .
நீர்கொழும்பு கொச்சிக்கடை ,தக்கியா வீதியை சேர்ந்த மொஹமட் நிசார் மொஹமட் நிபால் (39வயது)என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை (8) மரணமானவராவார்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . அங்கு மேற்கொண்ட பரிசோதனைகளின் போது இவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு வைத்து மரணமாகியுள்ளார்.
நீர்கொழும்பு நகரில் இந்த வருடம் அதிக எண்ணிக்கையானோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .
இந்நிலையில், நீர்கொழும்பில் இந்த வருடம் டெங்கினால் பாதிக்கப்பட்டு இரண்டாவது நபர் மரணமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
0 comments :
Post a Comment