அமெரிக்க படைவீரர் ஒருவரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைவீரர் ஒருவர் பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக கந்தஹார் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ வீரர் இராணுவ தளத்தில் இருந்து வெளியேறிய இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக ஆப்கானிஸ்தான் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் குறிப்பிட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கு பயணம் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு காபூலிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment