பிரபாகரனின் இளைய மகனின் சடலத்துடன் தயாராகியுள்ளது சனல் 4 வின் மற்றுமொரு காணொளி
சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கானொளியை தயாரித்துள்ளது.
புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகன் என்று கூறப்படும் பாலச்சந்திரன் (12வயது) துப்பாக்கி சூடுகளுடன் இறந்த நிலையில் காணப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
இந்த கானொளியில் பாலச்சந்திரனின் மார்பில் 5 துப்பாக்கி சூடுகள் தெளிவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக விரிவான தகவல்கள் அந்த காணொளியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் , பாதுகாப்பு படையினர் என்று சந்தேகிக்கப்படும் குழுவினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் அந்த காணொளியில் காட்சிகளாக இடம்பெற்றள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் எதிர்வரும் புதன்கிழமை இரவு 10.55 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சியில் இந்த காணொளி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment