பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் கொலை தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை நிராகரிப்பு
இறுதி யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன், இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செனல் 4 தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதியின் பேச்சாளரும், ஊடக ஆலோசகருமான பந்துல ஜெயசேகர இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
செனல் 4 வெளியிடவுள்ள 'இலங்கையின் கொலைக்களம் - தண்டிக்கப்படாத யுத்த குற்றங்கள்' என்ற காணொளியின் தயாரிப்பாளர் கெலம் மெகரே, பிரித்தானியாவின் இண்டிபென்டன்ட் நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில்
பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நிலத்தில் கிடத்தப்பட்ட சடலத்தில் ஐந்து துப்பாக்கி சன்னங்கள் இருக்கின்றமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் பேச்சாளரும், ஊடக ஆலோசகருமான பந்துல ஜெயசேகரவை மேற்கோள்காட்டி, ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்த குற்றச்சாட்டை பந்துல ஜெயசேகர நிராகரித்துள்ளார்.
குறித்த காணொளியை தாம் பார்க்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசாங்கத்தை களங்கப்படுத்தும் வகையில், சர்வதேச ரீதியாக இவ்வாறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்கம் மேற்கொண்ட இவ்வாறான சிறுவர் படுகொலைகள் குறித்து, ஆயிரக்கணக்கான காணொளிகளால் அரசாங்கத்தினால் வெளியிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment