ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஆரம்பமாகியது குடிசன வீட்டு வசதிகள் மதிப்பீட்டு பணிகள்.
30 ஆணடுகளுக்கு பின்னர் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையிலிருந்து முழு நாட்டையும் உள்ளடக்கும் விதத்தில் குடிசன வீட்டு வசதிகள் கணிப்பீடு ஆரம்பமாகியுள்ளது. முதலாவது பதிவாக ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் ஜனாதிபதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2011 ஆம் ஆண்டுடன் தொடர்புடைய வட மாகாணத்தின் முக்கிய சம்பவங்கள் தொடர்பான அறிக்கையொன்றும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர் நாயகம் சுரஞ்சனா வித்தியாரட்ன உட்பட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment