சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன் பிரேத அறை அமைக்கப்படவுள்ளது
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பிரேத அறையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மேற்கொண்டு வருகின்றது என பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2ஆயிரம் ஆண்டில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்ததின் போது இவ்வைத்தியசாலையானது முற்றாக அழித்து நாசம் செய்யப்பட்டதாகும்
அதன் பின்னர் அவ்வைத்தியசாலையானது 300 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்தே தற்போது இதனை அமைத்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மாகாணப்பொறியியலாளர் மற்றும் ஒரு குழவினர் விசேட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
மிகவிரைவில் வைத்தியசாலையின் கிழக்கு பக்கமாக இப்போதுள்ள தற்காலிக பிரே அறைக்கு அருகில் நவீன வசதிகளுடன் இது அமையப்பெறவுள்ளது.
0 comments :
Post a Comment