இலங்கைக்கு எதிரான பிரேரணையை கண்டித்து நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்படவுள்ள நிலையில். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
இன்று காலை நீர்கொழும்பு நகரிலும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
அரசாங்கத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி பிரதான பஸ் நிலையம் அருகில் நிறைவடைந்தது.
செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.
0 comments :
Post a Comment