Wednesday, January 11, 2012

இளைஞர்களை பலிக்கடாக்கள் ஆக்காதீர். பாதுகாப்பு செயலர் வேண்டுகோள்.

அரசியல் ஆதாயத்திற்காக இளைஞர்களை பலிக்கடாக்கள் ஆக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற  கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் ஜனநாயகத்தின் மூலம் அதிகாரத்திற்கு வர முடியாத சக்திகள் அதற்காக இளைஞர்களை தூண்டி விட முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

ஆவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனநாயக வழிமுறையில் அதிகாரத்திற்கு வர முடியாத குழுக்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து  ஆட்சியை பிடிப்பதற்கான வழிமுறைகளை நாடி வருகின்றனர். அவர்களின் நடவடிக்கையின் மூலம் இதனை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  ஆர்ப்பாட்டங்கள் நல்லது தான் அதன் மூலம் எமது ஜனநாயக நெறிமுறைகள் வெளிப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களால் நாம் பெற்ற சமாதானத்தை இல்லாதொழிக்கவோ தற்போது நாட்டில் ஏற்பட்டு வரும் அபிவிருத்திகளை சீர்குலைப்பதற்கோ, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை குழப்புவதற்கோ, இடமளிக்க முடியாது. இது தொடர்பாக நாங்கள் உரிய அவதானத்துடன் செயற்படுவோம். அரசாங்கம் ஒன்றை மாற்ற வேண்டுமானால் மக்களுக்கு அதனை இலங்கையில் தேர்தல் மூலம் சாத்தியமாக்கலாம். ஜனநாயக விரோத போக்கி;ல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாட்டில் ஸ்தீரமின்மையை ஏற்படுத்த முயற்சிப்பதாயிருந்தால் அதனை நாம் தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com