பம்பைமடு புனர்வாழ்வு நிலையம் யாழ்.பல்கலைக் கழகத்துக்கு! கல்வி அமைச்சு நடவடிக்கை!!
யாழ்.பல்கலைக்கழகத்தில் பம்பைமடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை, மீண்டும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க புனர்வாழ்வளிப்பு மற்றும் சிறைத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு நாளை(12.01.2012) வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பம்பைமடு புனர்வாழ்வளிப்பு மையம், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.
எனினும் இந்த வருடத்தில் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்ற மாணவர்களின் தேவை கருதி, உயர் கல்வி அமைச்சர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த கட்டிடத்தை மீண்டும் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதாக புனர்வாழ்வளிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment