றுஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி மீது பொலிஸார் வழிமறித்து தாக்குதல்
தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருஹூணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்களின் மாணவர்கள் இன்று மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை மீது காலி, கலேகான சந்தியில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
காலி நகரில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக, ருஹூணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் இன்னொரு திசையிலிருந்தும், மருத்துவ பீட மாணவர்கள் ஒரு திசையிலிருந்தும் சென்று கலேகான சந்தியில் ஒன்றுகூடினர்.
றுஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் காலி நகரை நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு சென்று கொண்டிருந்தபோது கலேகான சந்தியில் வைத்து பொலிஸார் வழிமறித்து தாக்குதல் நடத்தியதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment