Thursday, January 12, 2012

கனடாவில் குற்றம்புரிந்த இலங்கை தமிழர் நாடு கடத்தப்படவுள்ளார்

கனேடிய அரசாங்கத்தால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் நேற்று முன்தினம் (10) செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ரொரன்டோ - ஒன்றாரியா பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழரான செல்லத்தம்பி தர்மபாஸ்கரன் என்பவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

61 வயதான இவரை கனடாவில் இருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கனேடிய குடிவரவு எல்லை முகவர் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்லத்தம்பி பாஸ்கரன் மிக மோசமான தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டுள்ளவர் என கனேடிய குடிவரவு எல்லை முகவர் நிலைய தலைவர் லக் போர்டெலன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் செல்லத்தம்பி ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அவர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என அவர் கூறியுள்ளார்.

கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரி நுழைந்த செல்லத்தம்பி, அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்டு இலங்கைக்கு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைவாக இருந்து வந்துள்ளார்.

கடனாவில் தேடப்பட்டு வரும் 90 முக்கிய குற்றவாளிகளில் 15வது நபராக செல்லத்தம்பி பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com