யாழ்ப்பாணம் புதிய பொலிஸ் நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார் டக்ளஸ்.
யாழ் பொலிஸ் தலைமையக புதிய கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. 294 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கட்டியெழுப்பப்படவுள்ள இக்கட்டிடடத்திற்கான தளத்தினை இன்று அதிகாலை சுபநேரமான 6.23 மணிக்கு வெட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 6.44க்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் வடபகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நீல்தளுவத்த, 512வது படையணியின் கட்டளைத் தளபதி அஜித் பல்லேவல, யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்து கொண்டதுடன் தாமும் ஒவ்வொரு கற்களை பதித்து அமையப்போகும் புதிய பொலிஸ் தலைமையகக் கட்டிட வரலாற்றில் பதிவாகியுள்ளனர்.
1927ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ் பொலிஸ் நிலையம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கை அண்மித்த பகுதியில் செயற்பட்டு வந்த நிலையில் 1984ம் வருடம் ஏப்ரல் மாதம் 10ம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment