இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகள், இவ்வாண்டு பூர்த்தியாகுமாம்.
தெற்கின் அபிவிருத்தியை கேந்திரமாகக் கொண்டு, இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை, மத்தலையில் நிர்மாணிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட விமான நிலையத்தின் முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள், அடுத்த ஆண்டு மர்ர்ச் மாதம் பூர்த்தியடையவிருந்தது. எனினும, அதன் நிர்மாணப் பணிகள், இவ்வாண்டு நவம்பர் மாதமளவில் பூர்த்தியடையுமென, எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீனக்குடியரசின் ச்சைனா ஹாபர் பொறியியல் கம்பனியும், விமான நிலைய விமான சேவைகள் கம்பனியும் இணைந்து, நிர்மாணப் பணிகளை மேற்கொள்கின்றன. 2 ஆயிரம் ஹெக்டெயார் பரப்பில் நிர்மாணிக்கப்படும் விமான நிலையத்தில், 3 ஆயிரத்து 500 மீட்டர் நீளமான விமான ஓடுபாதையின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்து வருகின்றன. உலகின் மிகப்பெரிய விமானமான ஏ-380 ரக விமானங்களையும், இங்கு தரையிறக்க முடியும்.
ஆரம்பகட்டத்தில் 10 விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகளும், இங்கு காணப்படுகின்றன. 10 ஆயிரம் சதுர மீட்டர் கொண்ட பயணிகள் பிரிவின் நிர்மாணப் பணிகளும், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெரிசல்மிக்க நேரங்களில் 800 சர்வதேச பயணிகளுக்கும், 100 உள்ளுர் பயணிகளுக்கும் தேவையான வசதிகள், விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
0 comments :
Post a Comment