Saturday, January 14, 2012

ஆடம்பர வீடொன்றில் விபசாரம் - பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்: ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை

நீர்கொழும்பு - தலாதுவ பிரதேசத்தில் நவீன வசதிகளுடன் கூடிய வீடொன்றில் இரகசியமான முறையில் விபசார நடத்தப்பட்டு வருவதற்கு எதிரப்;பு தெரிவித்து, இன்று முற்பகல் 10.30 மணியளவில் பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விபசார விடுதியை உடனடியாக அகற்று, பிரதேச மக்களின் கௌரவத்தை காப்பாற்று, தலாதுவ பிரதேச மக்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தாதே என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

இதனை அடுத்து பிரதேச மக்களுக்கும் குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் பேச்சு வார்த்தை இடம் பெற்றது.

இதேவேளை, பிரதேசவாசிகள் நடத்திய எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இனந் தெரியாத நபர்கள் சிலர் எச்சரித்தனர்.

இது தொடர்பான செய்தியை வெளியிட வேண்டாம் எனவும் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாகவும் அந்த குழுவினர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததோடு ஊடகவியலாளர்களிடம் அங்கிருந்து செல்லுமாறும் அச்சுறுத்தினர்.

இதற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த செய்தியை வெளியிடுமாறும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

அச்சு, இலத்திரணியல் ஊடகங்களை சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்கள் நான்கு பேர் இந்த ஆர்ப்பாட்டச் செய்தியை சேகரிக்கச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com