எதிர்காலத்திட்டம் தொடர்பாக சீருடையை கழற்றி வைத்துவிட்டு கூறுகின்றேன். ஜெனரல்.
இராஜனாமா கடிதத்தை பாரமளித்த முப்படைகளின் பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா களனி ரஜ மாகா விகாரைக்கு சென்று வழிபட்டார். அங்கு அவரை சுற்றி வழைத்த ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைத் தொடுத்தனர், சகல கேள்விகளுக்கும் மிகவும் குறுகிய பதிலை வழங்கிய அவரிடம் அரசியலில் நுழைவது தொடர்பாக கேட்கப்பட்டபோது, எதிர்கால திட்டம் தொடர்பாக சீருடையை கழற்றி வைத்த பின்னர் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
கேள்வி. உங்களுக்கும் அரசிற்கும் இடையில் மோதல் உள்ளதாக பேசப்படுகின்றது. உண்மையா?
பதில். அதை நீங்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.
கேள்வி. பதவியில் இருந்து விலகியதும் அரசியலில் ஈடுபடுவீர்களா?
பதில். சீருடையில் இருந்துகொண்டு இதற்கு பதில் கூற முடியாது. சீருடையை கழற்றி வைத்தவுடன் மக்களுக்கு தெரியப்படுத்துவேன்.
கேள்வி. அரசியலினுள் நுழையமாட்டேன் என கூறியிருக்கின்றீர்களே.. ..
பதில். அப்போது நான் சீருடையில் இருந்தேன். தற்போது நிலைமை அவ்வாறு இல்லை.
கேள்வி. ஓய்வு பெற்றவுடன் என்ன செய்வீர்கள்?
பதில். ஓய்வு பெற்றவுடன் கூறுவேன்
கேள்வி. ஓய்வு பெறுவதையிட்டு சந்தோசப் படுகின்றீர்கள் ?
பதில். நிச்சாயமாக, மிகவும் சந்தோசப் படுகின்றேன்
ஜெனரல் சரத் பொன்சேகா தனது இராஜனாமா விற்காக 16 காரணிகளைச் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. அதில், தன்னை இராணுவத் தளபதி யிலிருந்து விலத்தி தனது விருப்பத்திற்கு மாறாக எவ்வித அதிகாரங்களும் அற்ற பதவி ஒன்றிற்கு நியமித்தபோது தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும், தான் சதி முயற்சியில் ஈடுபட்டதாக ஜனாதிபதியினால் குற்றஞ் சுமத்தப்பட்டதாகவும், அதேநேரம் தான் நாட்டில் இல்லாதபோது தனது சக ஊழியர்களை கழற்றியமையானது வெறுக்கத்தக்க விடயம் எனவும், அடைந்துள்ள இராணுவ வெற்றியை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதுடன், எதிர்காலத்தில் உருவாகக் கூறிய கசப்பான விடயங்களைத் தவிர்த்துக்கொள்ளவற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை எனவும், இன்று மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது அனாவசிய செலவினங்கள், மோசடிகள், ஊழல்கள், மற்றும் மக்களது உரிமைகள் சிதைக்கப் பட்டுள்ளமையாலேயே என குறிப்பிட்டுள்ள அவர் பாதுகாப்பு படையினரின் அதீத அர்ப்பணிப்புக்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியானது அர்த்தமற்றதாகச் செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment