Thursday, November 12, 2009

கோழித்தீன் லொறியினுள் 4 இலட்சம் சட்ட விரோத சிகரெட்டுக்கள்

சட்ட விரோதமாக கல்முனைக்கு எடுத்துவரப்பட்ட 4 இலட்சம் கோல்ட் சீல் சிகரட்டுகள் கல்முனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேராவின் தலைமையில் இச்சட்ட விரோத சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோழித்தீன் ஏற்றி வரப்பட்ட 47-6015 இலக்க லொறியி லேயே கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாயிரம் பண்டல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 இலட்சம் சிகரட்டுக்களையும், ஏற்றிவரப்பட்ட லொறியினையும் கைப்பற்றியுள்ளதுடன் சாரதி, நடத்துனரையும் கல்முனைப் பொலிஸார் தடுத்து வைத் துள்ளனர்.

சட்ட விரோதமாக கல்முனைக்கு கொண்டு வரப்பட்ட 4 இலட்சம் சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 28 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com