மக்கள் பணத்தில் ஏப்பம்விடும் புலம்பெயர் புலிகள்.-சுதன்-
ஈழவிடுதலை போராட்டம் என்று கூறி இளைஞர், யுவதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், மதகுருமார், அரசியல் தலைவர்கள், சக விடுதலை அமைப்பு போராளிகள், தலைவர்கள் என தன் இனத்தவர் தனது அமைப்பு உறுப்பினர்கள் என்று கொலை செய்து சிங்கள அரசுக்கு மகிழ்ச்சி ஊட்டிய பிரபாகரனின் சொல்லை கேட்டு எதிரியிடம் மண்டியிடாமல், குண்டுகட்டி உயிரை மாய்த்த மறவர்கள், எதிரிக்கு ரகசியங்கள் தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக சைனைற் அருந்தி தம் உயிரை மாய்த்தனர் திராவிட இளைஞர்கள். ஆனால், அந்த இளைஞர்களின் மரணத்தில் சுகபோகம் அனுபவித்த கேரளத்து மைந்தன் பிரபாகரன், மூன்று இலட்சம் மக்கள் முகவரியை துலைத்துவிட்ட நிலையில் முட்கம்பி வேலிக்குள் அவலப்படுகையில் தான் மட்டும் தனது கைத்துப்பாக்கி, சைனைற் குப்பி, செய்மதி தொலைபேசி அனைத்தையும் சிங்கள ராணுவத்திடம் கையளித்து சரணாகதி அடைந்தது மட்டுமல்லாமல், மண்டியிட்டு ஊயிர்பிச்சை கேட்டு இறுதியில் சிங்கள அரசபடைகளின் கோடாலி கொத்துக்கு இலக்காகி தன்னுயிரை ஈர்ந்தார்.
இது இப்படியிருக்க புலம்பபெயர் புலிகள் இறுதியுத்தம், அவசர நிதிசேகரிப்பு என்று தமிழர் நிலங்கள் மன்னாரில் தொடங்கி படிப்படியாக சிங்கள படைகளிடம் பறிபோய் கொண்டுள்ள நிலையிலும் தமது ஊண்டியல் வசூலிப்பை புலம்பெயர் புலிகள் கைவிடவில்லை. சிங்களபடையின் ஆக்கிரமிப்பை வீரம் செறிந்த புலிகள் வீரவரலாறு படைக்கின்றனர் என்று கூறி தமது ஊடகங்கள் வாயிலாகவும் முட்டாள்களாக்கி தமது இறுதிகட்ட வருவாய் வசூலிப்பை மூர்க்கத்தனமாக மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் பிரான்ஸின் ஒவ வில்லியஸ் லாக்குறுனோ பகுதி புலிகளின் நிதி பொறுப்பாளர் ஏழாலை ரகுலேஸ் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களிடம் அவசரமாக சேர்த்த நிதியினை கொண்டு “லாக்குறுனோ” பகுதியில் பினாமி பெயரில் ஒர் திருமண மண்டபத்தை வாங்கி தனக்கு முதலீடாக்கியுள்ளார். இது தவிர இவருக்கு இரு வீடுகள் உள்ளன அவற்றில் ஒன்று தற்போது தனது சகோதரரின் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளதுடன் மற்றைய வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு அரசு வழங்கும் வருமானம் குறைந்தவர்களுக்கான வீட்டில் வசித்து வருகின்றார்.
இவை மட்டுமா? இவரால் வசூலிக்கப்பட்ட பணத்தில் 90,000 யுரோ பணம் கந்து வட்டிக்கும் விட்டுள்ளார். இவற்றை அறிந்து கொண்ட நான் உட்பட மேலும் சிலர் இவர் வழங்கிய நிதி பற்றுசீட்டினையும் கொண்டு சென்றபோது என்னையும் என்னுடன் வந்தவர்களையும் தனது குண்டர்படையை (அடியாட்கள்) வைத்து மிரட்டி அனுப்பியள்ளார். இதனால் நாம் ஏமாற்றமடைந்துள்ளோம். தமிழீழம் ஒன்று கிடைக்கும் அதனை எமது தேசிய தலைவர் காலத்திலேயே பெற முடியும் என்ற நம்பிக்கையில்தான் நாம் இந்த நிதியினை வழங்கினோம். ஆனால் எம்மிடம் சேகரிக்கப்பட்ட நிதியெதுவும் அங்கு செல்லவில்லை. இங்குள்ளவர்கள் அவற்றை தமது பொக்கற்றுக்குள் போட்டு கொண்டுள்ளனர். ஆதலால்தான் இவர்களால் இவ்வளவு தொகையில் சொத்துக்களை வைத்திருக்க முடிகின்றது.
இன்றுவரை அரசின் தயவில் தங்கிவாழும் இந்த குடும்பத்திற்கு இவ்வளவு சொத்துக்களை வாங்கிகொள்ள எங்கிருந்து பணம் வந்தது. இதனை அம்பலப்படுத்தி இந்த நிதிகள் அனைத்தும் முட்கம்பி வேலிகளுக்குள் வாழும் மக்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் பங்கீட்டு வழங்கவேண்டும் என்றும் இதற்கான அழுத்தத்தை பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தெருவுக்கு இறங்கி போராட்டம் நடாத்த முன்வர வேண்டும் இதற்கு அனைவரும் ஒன்றுதிரளவேண்டும். உங்களில் ஒருவனாக ஏமாந்துபோனவன் என்றவகையில் நானும் உங்களுடன் வீதிக்கு இறங்க தயாராகவுள்ளேன்.
தயவு செய்து இந்த மனகுமுறலை அனைத்து ஊடகங்களும், இணையத்தளங்களும் வெளிக்கொண்டுவர வேண்டும். அப்போதுதான் என்னைபோல் வருங்காலங்களில் மற்றையவர்கள் எமாறாது இருக்க முடியும். அதற்காகவே இந்த மடலை வரைகின்றேன். தயவு செய்து உங்களிடம் மன்றாட்டமாய் கேட்கின்றேன் இதனை அம்பலப்படுத்தி எனது இந்த முயற்சிக்கு உதவுங்கள்.
விடுதலையை கூறி பணம் சேகரித்த கொள்ளையர்களிடம் ஏமாந்துபோன தமிழன்.
0 comments :
Post a Comment