விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் தேமோபாரிக் ஆயுதங்களையும் கொள்வனவு செய்ய புலிகள் முனைந்துள்ளார்கள் - பாலித கோகன்ன

சர்வதேச சந்தையில் புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் தேமோபாரிக் ஆயுதங்களையும் கொள்வனவு செய்ய முனைந்துள்ளார்கள் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். இதில் தேமோபாரிக் ஆயுதங்கள் என்பவை பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும். எரிவாய்வு போன்று பாரிய வெப்பத்துடன் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணக்கூடிய குண்டுகளை இதனூடாக ஏவ முடியும். இதன் இரசாயனக் கலவைகளுடாக இலக்கு வைக்கின்ற பிரதேசதில் உள்ள ஒட்சிசன் வாயுவை அதிவேகத்தில் அப்புறப்படுத்தி அங்குள்ள அனைத்து சுவாசிக்கின்ற உயிர்களையும் மூச்சுத் திணறி கொல்லமுடியும் என்பது மிகவும் அபாயகரமானதாகும்.
புலிகள் மேற்படி அபாயகரமான ஆயுதங்களையும் விமானப்படையினரின் தாக்குதல் வேகத்தை சமாளிப்பதற்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வாங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அவர்களது தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதன் மூலமும் வேறுவழிகளிலும் நிரூபனமாகியுள்ளது என தெரிவித்த பாலித கோகன்ன இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதையும் தற்போதைக்கு வெளியிட முடியாதெனவும் போர் நிறைவு பெற்றவுடன் அதன் ஆதாரங்கள் அனைத்தும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment