இடைத்தங்கல் முகாம்களில் 750 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்.
புலிகளின் பிடியில் இருந்து தப்பி முனிக்பாம், செட்டிக்குளம் மற்றும் நெலுங்குளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களில் 750 மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார் அடங்குகின்றனர். இவர்களை வவுனயா ஆசிரியர் வைத்தியசாலை, செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையிலும் பூவரசங்குளம் மாவட்ட வைத்தியசாலையிலும் மகப்பேற்றுக் காலங்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இடைத்தங்கல் முகாம்களில் மகப்பேற்றுக்கான போதிய வசதிகள் இல்லாமை அவசர நிகழ்வுகள் தாய்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் பேச்சாளர் வன்னிநாயக்க அவர்கள், அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார். மேற்படி 3 வைத்தியசாலைகளிலும் சிறந்த மகப்பேற்று வைத்தியர்களும் மேற்பார்வையாளர்களும் உள்ளதாகவும் அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மேலதிகமாக கொழும்பில் இருந்தும் வாராந்த அடிப்படையில் மகப்பேற்று வைத்தியர்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment