Monday, September 2, 2019

கோத்தா ஜனாதிபதியானால் முழு நாடும் குட்டிச்சுவராகுகுமாம்! - முஜீபுர் ரஹ்மான்

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டால், நாடு பாதுகாப்பற்றுப் போகும் என ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிடுகிறார்.

பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபக்ஷ இருந்தபோது, இந்நாட்டின் ஊடகச் சுதந்திரம், குடிமக்களின் சுதந்திரம் என்பன கேள்விக்குறியாகவே இருந்தன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அக்கால கட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டன. அவர் ஜனாதிபதியானால் இந்நாட்டின் நிலை என்னவாகும் என பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு - மோதரவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எது எவ்வாறாயினும் இரண்டாக பிளவு பட்டிருந்த நாட்டினை பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டி இணைத்து வைத்தவர் என்ற நன்றியுணர்வுடன் இந்நாட்டின் மக்கள் உள்ளனர் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபிர் ரஹ்மான் மறந்துவிட்டாரா என்று கேள்வி இங்கு எழுந்து நிற்கின்றது.

Read more...

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதற்கும் அதற்கு வசதியாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கும் ரணில், மஹிந்த, மைத்திரி ஆகியோர் முன்னெடுப்பொன்றைச் செய்வதாக செய்திகள் உலாவருகின்றன.

இம்மூவரைப் பொறுத்தவரையும் ஜனாதிபதிப் பதவி தலையிடியானதொன்று என்பது அனைவரும் அறிந்ததே!

ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் என்பது நமக்குத் தெரியும். ஜனாதிபதித் தேர்தல் ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு கூடாத, ஒரு மாதத்திற்குக் குறையாத காலப்பகுதிக்குள் நடாத்தப்படவேண்டும். சரத்து 31(3)

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஜனவரி எட்டாம் திகதி முடிவடையும். எனவே, தேர்தல் டிசம்பர் எட்டாம் திகதிக்கு முன்னரான அதேநேரம் நவம்பர் எட்டாம் திகதிக்கு முற்படாத ( அதாவது 08/11/2019 இற்கும் 08/12/2019 இற்கும் இடைப்பட்ட) ஒரு திகதியில் நடாத்தப்பட வேண்டும். இதனடிப்படையில்தான் டிசம்பர் 7ம் திகதியை தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் அடிக்கடி குறிப்பிட்டிருக்கின்றார்.

ஒரு சட்டத்தைத் திருத்துதல்

ஒரு சட்டமூலம் (அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதன்பின்) வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவேண்டும். (சரத்து 78) அதிலிருந்து இரு வாரங்களின்பின் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவேண்டும். அதிலிருந்து ஒரு வாரத்திற்குள் எந்தவொரு பிரஜையும் அச்சட்டமூலத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தலாம்.

சவாலுக்குட்படுத்தும் அடிப்படைகள்.

எந்தவொரு சட்ட மசோதாவையும் சவாலுக்குட்படுத்தும் ஒரேயொரு அடிப்படை இம்மசோதா அரசியலமைப்பிற்கு முரண் என்பதாகும்.

அரசியலமைப்பைப் பொறுத்தவரை இரு வகையான சரத்துக்கள் இருக்கின்றன. ஒரு வகை: அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் திருத்தலாம். இன்னுமொரு வகை: மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கைடுப்பும் தேவை: சரத்து 83 இன் பிரகாரம் பின்வருவன இவ்வகையான சரத்துக்களாகும்.

சரத்துக்கள்: 1,2,3,6,7,8,9,10, 11,30(2) ( இது ஜனாதிபதியின் பதவிக்காலத்தைக் குறிக்கிறது), 62(2) ( இது பாராளுமன்றப்பதவிக்காலத்தைக் குறிக்கிறது) இந்த இரு பதவிக்காலத்தையும் நீடிக்கின்ற திருத்தம்;

இந்த சர்வஜன வாக்கெடுப்பின் தேவையை கோருகின்ற இச்சரத்துக்கள் சரத்து 83 இல் குறிப்பிடப்பட்டுள்ளதால் அச்சரத்தைத் திருத்துவதற்கும் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை ( இந்த சரத்து 83ஐ சற்று ஊன்றி வாசியுங்கள்; ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முடியுமா? இல்லையா? என்பது இந்த சரத்து 83இல்தான் தங்கியிருக்கின்றது.

ஒரு சாதாரண சட்ட/ சட்டத்திருத்தத்திற்கான மசோதாவை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தும்போது உயர்நீதிமன்றம் அம்மசோதா அரசியலமைப்பிற்கு முரண்படவில்லை; எனக் கூறலாம். அல்லது

சரத்து 83இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்கள் தவிர்ந்த வேறு ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சரத்துக்களுடன் குறித்த மசோதா அல்லது அதன் சில பகுதிகள் முரண்படுகின்றது, அல்லது முரண்படுகின்றன; எனக்கூறலாம்.

அவ்வாறு முரண்படுமாயின் இரு வகையான தீர்வை முன்வைக்கலாம்: ஒன்று: குறித்த வசனங்களை நீக்கினால் அல்லது இவ்வாறு திருத்தினால் முரண்படாது. அதன்பின் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்றலாம்; என்பதாகும். இரண்டு: 2/3 பெரும்பான்மையால் நிறைவேற்றவேண்டும்; என்பதாகும்.

அதேநேரம் அம்மசோதா, மேலே சரத்து 83இல் கூறப்பட்ட ஏதாவதொரு சரத்துடன் முரண்பட்டால் சில நேரம் நீதிமன்றம் திருத்தத்தை முன்வைக்கலாம் அல்லது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரலாம்.

அவதானம் செலுத்துக


இங்கு குறிப்பிடுவது சாதாரண சட்டத் திருத்தமாகும். சாதாரண சட்டத் திருத்தத்திற்குக்கூட சிலவேளை 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை என நீதிமன்றம் கூறலாம்; என மேலே பார்த்தோம். ஆனாலும் அது சாதாரண சட்டமே. 2/3 ஆல் நிறைவேற்றியதால் அல்லது சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தியதால் அது அரசியலமைப்புச் சட்டத்தில் சேராது.

எனவே, அவ்வாறு 2/3 பெரும்பான்மையாலும் சர்வஜன வாக்கெடுப்பாலும் நிறைவேற்றப்பட்ட ஒரு சாதாரண சட்டத்தை பின்னர் நீக்குவதாக இருந்தால் சாதாரண பெரும்பான்மை போதும். சரத்து 84(3)

இதற்குப் பின்னால் உள்ள தத்துவம் என்னவென்றால் இச்சட்டம் அமுலுக்கு வரும்போது அரசியலமைப்பின் குறித்த சரத்துக்களில் தாக்கம் செலுத்துகின்றது. அதனை நீக்கும்போது அரசியலமைப்பு பழைய நிலைக்கு வருகிறது. அத்தாக்கம் இல்லாமல் போகிறது. தாக்கத்தை ஏற்படுத்த விசேட அனுமதி தேவை. தாக்கத்தை இல்லாமலாக்க சாதாரண அனுமதி போதும்.

உதாரணமாக, அரசியலமைப்பு தடுத்த ஒரு விடயத்தை இச்சட்டம் அனுமதிக்கலாம். அதற்கு மக்கள் ஆணை தேவைப்படலாம். அதனை நீக்கும்போது அரசியலமைப்புச் சட்டம் பழைய நிலைக்கு வந்துவிடுகிறது. அதனால்தான் “ சாதாரண பெரும்பான்மையால் நீக்கிவிடலாம்” என்று சரத்து 84(3) கூறுகிறது.

இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள்; புதிய மாகாணசபைச் சட்டத்தை நீக்கிவிட்டு பழைய தேர்தல்முறைக்குச் செல்வதற்கு 2/3 தேவையா? நிச்சயமாகத் தேவையில்லை. சிலர் புரியாமல் தேவை என்கிறார்கள். சிலர் புரிந்தும் மாகாணசபைத் தேர்தலைத் தள்ளிப்போட ஒரு சாட்டாக 2/3 தேவை என்கிறார்கள்.

அரசியலமைப்புத் திருத்தம்

அரசியலமைப்புத் திருத்தமாயின் 2/3 பங்கு சுயமாகத் தேவை. நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவது மேலே கூறப்பட்ட சரத்து 83 இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்களுடன் முரண்படுகின்றது; என்பதாகும். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும்.

ஜனாதிபதிப் பதவியை ஒழித்தல்


மேற்கூறிய மூவரும் ஜனாதிபதிப் பதவியை ஒழிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அவர்களது சொந்தக்கட்சியில் உள்ளவர்களே அதனை ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க எப்படியோ 2/3 ஐப் பெறுகிறார்கள்; என வைத்துக்கொண்டால் இம்மூவரும் இணைந்தால் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதும் சிரமமாகாது. ( ஜனாதிபதி பதவியை ஒழிக்க 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை).

அவ்வாறாயின் பிரச்சினை என்ன? பிரச்சினை காலஅவகாசம்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. சட்டமூலத்தை வரைந்து அமைச்சரவை அனுமதி பெறுவதற்கு ஒரு வாரம், வர்த்தமானியில் பிரசுரித்தபின் ஒழுங்குப்பத்திரத்தில் சேர்ப்பதற்கு இருவாரங்கள், சர்வஜன வாக்கெடுப்பும் நடாத்தப்படுவதால் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தும்நிலை எழாது. எனவே ஆகக்கூடியது ஐந்து வாரங்களுக்குள் 2/3 ஆல் நிறைவேற்றலாம்.

அதன்பின் சபாநாயகர் கையொப்பம் வைத்ததும் ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரகடனம் வெளியிட வேண்டும். அதிலிருந்து ஒரு மாதத்தின் பின் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்த வேண்டும். அதன்பின் ஜனாதிபதி கையொப்பமிடவேண்டும். அத்துடன் ஜனாதிபதிப் பதவி ஒழிந்துவிடும்.

எனவே, சட்டரீதியாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் தாராளமாக ஜனாதிபதிப் பதவியை ஒழிக்கலாம். சர்வஜன வாக்கெடுப்பு முடிவடைந்து ஜனாதிபதி கையொப்பம் வைக்கும்வரை தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான நடைமுறைகளை செய்தே ஆகவேண்டும்.

சிலவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு குறிக்கப்பட்ட திகதிக்குமுன் சர்வஜன வாக்கெடுப்பு முடிவடையாவிட்டால் குறித்த திகதியில் ஜனாதிபதித்தேர்தல் நடைபெறும். ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பைக் காரணம்காட்டி தேர்தலை ஒத்திப்போடமுடியாது. சர்வஜன வாக்கெடுப்பு நிறைவேறிவிட்டால் தேர்தல் நடவடிக்கை தானாகவே செயலிழந்துவிடும்.

இங்கு கேள்வி, சட்டரீதியாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஜனாதிபதிப்பதவியை ஒழிக்க முடியுமென்றபோதிலும் அரசியல்ரீதியாக அது சாத்தியமா? என்பதாகும்.

ஒரு புறம் ஜனாதிபதியை சம்மதிக்க வைக்கவேண்டும்; என்றால், அடுத்த அரசாங்கத்தில் அவருக்கு ஓர் உயர்பதவி கோருவார். இல்லையெனில் அவரது கட்சி பா உ க்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். மட்டுமல்ல, 2/3 ஆல் நிறைவேற்றினாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்; என்று சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரகடனத்தை வெளியிட மறுக்கலாம். பாராளுமன்றம் நிறைவேற்றிய நம்பிக்கையில்லாப் பிரேரணையையே ஏற்றுக்கொள்ள மறுத்தவர். அதன்பின் உயர்நீதிமன்றம் சென்றுவர காலஅவகாசம் இருக்காது.

மறுபுறம் சஜித்தையும் கோட்டாவையும் ஆதரிக்கும் பா உ க்கள் சம்மதிப்பார்களா? அவர்களைச் சம்மதிக்கவைக்க காலஅவகாசம் தேவை.

அடுத்தது; எதிர்கால நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதியின் அதிகாரங்கள் எவை? முக்கியமாக எதிர்கால ஜனாதிபதியை நியமிப்பது பிரதமரா? பாராளுமன்றமா? ( 72ம் ஆண்டு யாப்பில் பிரதமரே நியமித்தார் - பிரிவு 25) போன்ற விடயங்களைப் பேசித்தீர்மானிக்க அவகாசம் தேவை.

பாராளுமன்றத் தேர்தல்முறையையும் மாற்ற முற்படலாம். தற்போதைய முறையின்கீழ் எந்தக் கட்சியும் இலகுவில் அறுதிப்பெரும்பான்மை பெறமுடியாது. ஜனாதிபதி ஆட்சிமுறை அரசுக்கு ஸ்த்திரத்தன்மையை வழங்குகிறது. அப்பதவி ஒழிக்கப்படும்போது ஒரு கட்சி தனித்து ஆட்சியமைக்கக்கூடிய வகையில் தேர்தல்முறை மாற்றப்பட வேண்டும்; என்ற கருத்து அவர்களிடம் ஏற்கனவே இருக்கிறது. ( இங்குதான் சிறுபான்மைகளுக்கு பிரதான ஆபத்து இருக்கின்றது) எனவே இவைகளைத் தீர்மானிக்க காலஅவகாசம் தேவை. இந்தப்பின்னணியில்தான் தேர்தலை ஒத்திவைக்க முற்படுகிறார்கள்.

தேர்தலை ஒத்திவைக்க முடியுமா?

உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியது, பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புத் தேவை; குறைக்கும்போது மீண்டும் அதே மக்களிடம் செல்வதால் தேவையில்லை; என்பதாகும். ஏனெனில் பதவிக்காலத்தை நீடிப்பதென்பது மக்கள் ஆணைக்கப்பால் செல்கிறது . அது சரத்து மூன்றில் கூறப்பட்ட வாக்குரிமையைப் பாதிக்கின்றது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பு தேவை.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள். அதனை இன்னுமொரு ஆறு மாதங்கள் நீடிப்பதாயினும் கண்டிப்பாக சர்வஜன வாக்கெடுப்புத் தேவை. தேர்தலை ஆறு மாதம் ஒத்திப்போடுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த முடியுமா? அதற்காக பல நூறு கோடி ரூபாய்களை செலவுசெய்ய முடியுமா? அது பாரிய விமர்சனத்தைக் கொண்டுவராதா?

இந்தப்பின்னணியில் சர்வஜன வாக்கெடுப்பின்றி அவசர அவசரமாக 2/3 ஆல் மாத்திரம் தேர்தலை ஒத்திப்போட ஒரு முயற்சி நடைபெறலாம். இதனால்தான் சில சிறுபான்மைக் கட்சிகள் உசாரடைந்திருக்கிறார்கள்.

சாதாரண சூழ்நிலையில் சர்வஜன வாக்கெடுப்பின்றி தேர்தலை ஒத்திப்போடவே முடியாது. ஆனால் 19வது திருத்தத்தில் இன்னுமொரு தவறு நடந்திருக்கின்றது. அது சிலவேளை வேண்டுமென்றே விடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த தவறு ஒத்திப்போடுவதில் பிரதான பங்குவகிக்கலாம்.

மேலே கூறப்பட்ட சரத்து 83(b), 19 வது திருத்தத்துக்கு முன் பின்வருமாறு கூறியது: அதாவது, சரத்து 30(2)ஐ அல்லது 62(2) ஐ ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அல்லது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்குமேல் நீடிப்பதற்காகத் திருத்துவதாயின் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்; எனக் கூறியது.

அப்பொழுது “ஆறு வருடத்திற்குமேல்” எனக் கூறியதற்கான காரணம் அப்போது ஜனாதிபதியின்/ பாராளுமன்றத்தின் பதவிக்காலம் ஆறு வருடமாகும். எனவே, அதற்குமேல் செல்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை.

இப்பொழுது பதவிக்காலம் ஐந்து வருடமென்பதால் இது ஐந்து வருடங்களுமேல் நீடிப்பதாயின் வாக்கெடுப்புத்தேவை; எனத் திருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இச்சரத்து திருத்தப்படவில்லை. இப்பொழுதும் “ஆறு வருடத்திற்குமேல்” என்றுதான் இருக்கின்றது.

இதில் 30(2) ஐ பதவியை நீட்டுவதற்கு ( வாக்கெடுப்பின்றி) திருத்தமுடியாது; என்றுதான் இருந்தது. இப்பொழுது 30(2)/62(2) ஐத் திருத்தி ஐந்தாக குறைத்து விட்டார்கள். ஆனால் 83(2) ஆறை ஐந்தாக குறைக்கவில்லை. இது ஒரு தவறாக இருக்கலாம்; அல்லது வேண்டுமென்றே விடப்பட்டிருக்கலாம்.

காரணம், இவற்றைக்கூறுகின்ற 83 ஐத் திருத்துவதற்கும் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்று கூறப்பட்டிருக்கின்றது.

30(2)/62(2) இற்கும் 83 இற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டையும் பற்றி 83 இல் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 30(2)/62(2) ஐ பதவியை நீட்டுவதற்காக வாக்கெடுப்பின்றி திருத்தமுடியாது; என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைப்பதற்காக அல்லது அடியோடு திருத்தக்கூடாது; எனக் குறிப்பிடப்படவில்லை.

எனவே, பதவியைக் குறைப்பதற்காக 30(2) ஐயும் 62(2)ஐயும் திருத்திவிட்டார்கள். 83 அப்படியல்ல. அதில் 83 ஐத் திருத்தக்கூடாது; என்று மட்டும்தான் கூறப்பட்டுள்ளது. எனவே, 83 இல் உள்ள “ஆறு” என்ற சொல்லை “ஐந்து” என்று மாற்றினால் 83 ஐத் திருத்தியதாகிவிடும்; சர்வஜன வாக்கெடுப்பின்றி திருத்தமுடியாதே, என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம்.

இப்பொழுது எழுகின்ற கேள்வி 83(2) இல் ஆறு வருடங்களுக்குமேல் வாக்கெடுப்பின்றி நீடிக்கக்கூடாது; என்றுதான் இருக்கின்றது. எனவே, இன்னுமொரு ஆறு மாதம் நீடிப்பது இச்சரத்திற்கு முரணாகாது; என்ற அர்த்தத்தை எடுக்கமுடியாதா? இது அவர்களால் முன்வைக்கக்கூடிய ஒரு வாதம். ( Literal interpretation).

எதிர்வாதம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடம் எனும்போது “ ஆறு வருடம்” என்பது அந்த இடத்தில் எவ்வாறு பொருத்தும். இங்கு “ ஆறு வருடம்” என்பது “ நீடிக்கப்படுதல்” என்பதற்குரிய அடைமொழி மாத்திரமே”. இங்கு “ ஆறு” என்ற சொல்லிற்கு நேரடியான எண்கணித வியாக்கியானம் பொருந்தாது. இதற்கு இயற்கையான அல்லது சூழ்நிலைக்கேற்ற ( contextual) வியாக்கியானமே வழங்கப்பட வேண்டும்.

அதாவது “ ஆறு வருடங்களுக்குமேல் நீடிக்கப்படக்கூடாது” என்பதில் உள்ள “ ஆறுவருடங்களுக்குமேல்” என்ற அடைமொழியை “ ஜனாதிபதியின் பதவிக்காலம் எதுவோ அதற்குமேல் நீடிக்கக்கூடாது” என்றே வியாக்கியானப்படுத்த வேண்டும். சுருங்கக்கூறின் “ ஆறு” என்பது “ ஐந்து” என்று வாசிக்கப்பட வேண்டும்.

இதற்கு வலுச்சேர்க்கும் இன்னுமொரு வாதம், இவ்வாறான ஒரு திருத்தம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின் கொண்டுவந்தால் அப்பொழுது மக்கள் ஐந்து வருடங்களுக்களுக்கே ஆணை வழங்கியிருப்பார்கள். அந்நிலையில் மக்கள் ஆணையின்றி இன்னுமொரு ஆறு மாதம் நீடிக்கமுடியுமா? அது மக்கள் ஆணையை மீறியதாகும்.

அவ்வாறு மீறினால் அது சரத்து மூன்றில் கூறப்பட்ட “ வாக்குரிமையைப்” பாதிக்கும். அவ்வாறு பாதிக்குமானால் சர்வஜன வாக்கெடுப்பு தேவை. எனவே, சரத்து 83ம் சரத்து 3 ம் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதாக இருக்கமுடியாது. இரண்டும் ஒன்றுக்கொன்று இசைவுடையதாக இருக்கவேண்டுமானால் “ ஆறு வருடம்” என்பது “ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு மேலதிகமாக “ என்பதையே அடையாளப்படுத்துகின்றது; என பொருள் கொள்ளப்படல் வேண்டும்.

நீதிமன்றம் சிலசமயங்களில் “May” என்ற சொல்லை “ Shall “ என்று அந்த இடத்திற்கேற்றாற்போல் வியாக்கியானப்படுத்துவதுபோன்று இங்கு “ ஆறு” என்பது “ ஐந்து” என்றே வியாக்கியானப்படுத்தப்படவேண்டும்.

மறுவார்த்தையில் கூறுவதானால் 83(2) இன் அடிப்படை 30(2)/62(2) ஐ, பதவிக்காலத்தை நீடிப்பதற்காக வாக்கெடுப்பின்றி திருத்த முடியாது; என்பதே! அப்போதைய பதவிக்காலம் ஆறு வருடம் என்பதால் அது அப்போதைய பதவிக்காலத்தைக் குறித்ததேதவிர வெறும் எண்கணித கணக்கைக் குறிக்கவில்லை.

மறுவாதம்


சரி, அவ்வாறு “ஆறை” ஐந்து என எடுத்துக்கொண்டாலும் இந்த ஜனாதிபதிக்கு ஆறு வருடங்கள் மக்கள் ஆணை கிடைத்ததே! எனவே, இந்த ஜனாதிபதியின் பதவியை இன்னும் ஆறுமாதம் நீடிப்பது சரத்து 3 இற்கெதிரானதல்லவே! என மறுவாதத்தை முன்வைக்கலாம். இது வலுவான ஓர் வாதம்.

எதிர்வாதம்

83(2) ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பை மாத்திரம் குறிப்பிடவில்லை. அது 62(2) ஐயும் குறிப்பிடுகின்றது. அதாவது பாராளுமன்ற பதவிக்கால நீடிப்பும் ஆறு வருடங்களுக்குமேல் செய்யமுடியாது; என்றுதான் கூறுகின்றது. தற்போதைய பாராளுமன்றத்திற்கு மக்கள் ஐந்து வருடங்களுக்கே ஆணை வழங்கியிருக்கின்றார்கள். எனவே, அந்த “ஆறு” என்ற சொல்லை “ஆறு” எனக்கொண்டு பாராளுமன்ற பதவிக்காலத்தை இன்னுமொரு ஆறு மாதம் நீடித்தால் அது மக்கள் ஆணையை மீறதா? சரத்து 3 ஐப் பாதிக்காதா?

சரத்து 83(2) இல் வருகின்ற “ ஆறு வருடங்கள் “ எனும் சொற்றொடரை ஒரே சமயத்தில் பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடிக்க “ ஐந்து” என்றும் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க “ ஆறு” என்றும் வியாக்கியானப்படுத்த முடியுமா?

எனவே, ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் மாத்திரமே. அதை ஒரு நாளால் அதிகரிப்பதென்றாலும் 2/3 உடன் சர்வஜன வாக்கெடுப்பும் தேவை.

சிலவேளை

இந்த ஜனாதிபதி ஆறு வருடத்திற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டார். பாராளுமன்றம் அதனை ஐந்து வருடமாக குறைத்தது. இன்று அதே பாராளுமன்றம் அதை இன்னுமொரு ஆறு மாதங்களால் நீட்டுவது மக்கள் ஆணைக்கு முரணல்ல. எனவே, இந்த ஜனாதிபதிக்கு மட்டும் ஒரு இடைக்கால ஏற்பாடாக இப்பதவி நீடிப்பை வழங்கலாம்; என்ற ஒரு நிலைப்பாட்டை நீதிமன்றம் சிலவேளை ஏற்றுக்கொண்டால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்.

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்டால் அது சிறுபான்மைகளுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கும் மலையகத் தமிழருக்கும் பாரிய ஆபத்தாக வந்துமுடியும். தற்போது இருக்கின்ற இரு வகைப்பாதுகாப்பும் இழக்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

அதாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் சிறுபான்மைகளுக்கு இருக்கின்ற பலம் இல்லாமலாகிவிடும். ஜனாதிபதி முறைமையில் சிறுபான்மைகளுக்கு சில சாதகங்களும் சில பாதகங்களும் இருக்கின்றன. ( அவற்றை இன்னுமொரு ஆக்கத்தில் பார்ப்போம்).

தற்போதைய பொதுத்தேர்தல் முறைமை சிறுபான்மைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஒருபுறம் நமது விகிதாசாரத்திற்கேற்ப அண்ணளவாக ஆசனங்களைப்பெற உதவுகிறது.
மறுபுறம், எந்தவொரு தேசியக்கட்சியும் அதிகமான சந்தர்ப்பங்களில் சுயமாக பெரும்பான்மை பெறமுடியாத நிலையில் பாரியதொரு பேரம்பேசும் சக்தியை அது சிறுபான்மைகளுக்கு வழங்குகிறது.

“ யானையின் பலம் யானைக்குத் தெரிவதில்லையாம் அது இறக்கும் நேரம் வரும்வரை”, என்பதுபோல் நமது கட்சிகளுக்கு இந்தப்பலம் புரியாதது அல்லது புரிந்தும் அதனை தம்சொந்த நலனுக்காக மட்டும் உபயோகிப்பது என்பது நாம் பொருத்தமான தலைமைத்துவத்தை/ பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்யத்தவறுவதால் ஏற்படும் துரதிஷ்ட நிலையாகும்.

மறைந்த தலைவரைப்போன்று தகுதியான தலைமைத்துவம் அமையுமானால் இம்முறையின்கீழ் நமது அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும். நமது கையாலாகாத்தனம் வேறு. ஆனால் இத்தேர்தல்முறை மாற்றப்படுமானால் இந்தியாவை விடவும் மோசமான நிலைக்கு சிறுபான்மை பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் தள்ளப்படலாம்.

எனவே, இவ்விடயத்தில் சிறுபான்மைகள், குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

Read more...

ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டம் மட்டுமே இருக்க முடியும்... - கோத்தபாய

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் பொதுமக்களின் தேவைகளைப் பாதுகாப்பதைத் தவிர்த்து, அரசியல் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது சம்மேளனத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது சம்மேளனம் அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருவரினதும் பூரண ஒத்துழைப்புடனேயே இந்நிகழ்வு இடம்டபெற்றது.

'சட்டம் எனும் எண்ணக்கரு ஒரு நாகரிக சமுதாயத்தின் அத்திவாரமாகும். பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக கட்டாயம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது நாங்கள் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்ற உண்மையாகும்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் பொதுமக்களின் தேவைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு மேலும் இடமளிக்கக் கூடாது.

அதற்குப் பதிலாக அந்நிறுவனங்களுக்கு உண்மையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொடுத்து, அதனை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை சக்திமிக்கவர்களாக ஆக்குவதற்கு சட்டத்தரணிகளின் ஆலோசனைகளையும் உதவிகளையும் எதிர்பார்க்கின்றேன்....

ஒரு நாட்டுக்குள் ஒரு சட்டம் மட்டுமே செயற்பட முடியும்...

சட்டம் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும்...

குடிமகன் எப்போதும் சட்டத்தினால் மரியாதைப்படுத்தப்பட வேண்டும். என்றாலும், குடிமகன் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கும் பயந்தால் அங்கு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும் ஆட்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்தான் என்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

Sunday, September 1, 2019

இரு வாரங்களுக்கு ரணில் - சஜித் போர் நிறுத்தம்!

இரண்டு வாரங்களுக்கு ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் தரப்பும் சஜித் தரப்பும் முடிவுசெய்துள்ளதாக அறிய வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதித் தலைவர் சஜித் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவர் ஒன்றுகூடிக் கலந்தாலோசித்த போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்காகக் கலந்தாலோசிப்பதற்காக சிரேஷ்ட அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளனர்.

இரண்டு வாரங்கள் முடியும் வரை கூட்டங்கள் நடாத்தாதிருப்பதற்கும், ஒருவரை ஒருவர் விமர்சிக்காதிருக்கவும், ஜனாதிபதிர் தேர்தல் பற்றியும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிப் பேசாதிருக்கவும் இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பில் மேலதிக விபரங்களை ஆராய்வதற்காக எதிர்வரும் 06 ஆம் திகதி இரு தரப்பினரும் மீண்டும் ஒன்றுகூடவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன, அமைச்சர் ஹர்ஷ த சில்வா ஆகியோர் சென்ற வியாழக் கிழமை இரவு இரகசிய முறையில் சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பு இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்திருந்ததுடன், அங்கு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் தேசிய ஜனநாயக முன்னணியின் தோற்றம் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. மக்கள் விரும்புகின்ற, தேர்தலில் வெற்றியீட்ட முடியுமான ஒருவரை முன்னணியிலிருந்து தெரிவுசெய்ய வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெளிவுறுத்தியுள்ளார். அதற்காகத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, முன்னணியை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டினாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக பலமான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Read more...

புலனாய்வு மறுசீரமைப்பின் பின்புலம்.. சுபத்திரா

கடுமையான சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.

அவ்வாறு கூறியதுடன் நிற்காமல் அதற்கான நடவடிக்கைகளையும் அடுத்த சில நாட்களிலேயே ஆரம்பித்திருக்கிறார். இதன்படி, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு அந்தப் பதவியிலிருந்து நீ்க்கப்பட்டிருக்கிறார்.

இராணுவத் தளபதியாக புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் போது, கட்டளைப் பதவிகளில் மாற்றங்களைச் செய்வது வழமையானதே.

என்றாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா புலனாய்வுப் பிரிவை குறிவைத்தே அந்த திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறார். அது தான் கவனிப்புக்குரியதாக உள்ளது.

புலனாய்வுப் பிரிவினரை மையப்படுத்தியே தேசிய பாதுகாப்பு செயற்படுத்தப்படுகின்றது என்றும் அதனால், இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளை மறுசீரமைப்புச் செய்வதில் கவனம் செலுத்தப் போவதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவத்தில் மிகவும் வேகமாகப் பலபப்படுத்தப்பட்டது இராணுவப் புலனாய்வுப் பிரிவு தான். 7 பற்றாலியன்களுடன், 5000 பேர் கொண்டதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவு வலுப்படுத்தப்பட்டிருந்தது.

தாம் பலமாக புலனாய்வுக் கட்டமைப்பை உருவாகியிருந்தோம். அதனை தற்போதைய அரசாங்கம் சீர்குலைத்து விட்டது என்று கோத்தபாய ராஜபக்ச அண்மையில் கூட ஒரு சந்தர்ப்பத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்பட்டு விட்டது என்றொரு பலமான கருத்து, கூட்டு எதிரணியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆட்சிக்கால குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற சந்தேகத்தில், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 320 பேர் விசாரணைகளுக்கு உடபடுத்தப்பட்டனர் என்றொரு தகவல் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

எனினும், இவர்களில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள் தான் இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டதால், புலனாய்வுப் பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டு விட்டன என்றும், அதனால் தான், குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்றும் எதிர்க்கட்சிகளாலும் கடும் போக்காளர்களாலும், முன்னாள் இராணுவ அதிகாரிகளாலும் கூறப்பட்டு வருகிறது.

எவ்வாறாயினும், 2015இல் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரே, 7ஆவது இராணுவப் புலனாய்வுப் பற்றாலியன் உருவாக்கப்பட்டது என்பதும் 8ஆவது இராணுவப் புலனாய்வு பற்றாலியன் உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் பலவினப்படுத்தப்பட்டு விட்டதாக, 21/4 குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, தற்போதைய பாதுகாப்புச் செயலாளரான ஜெனரல் சாந்த கொட்டேகொடவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும் முற்றாக நிராகரித்திருந்தனர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், புலனாய்வாளர்கள் சிலரைக் கைது செய்வதால், இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டது என்று கூறமுடியாது என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். இராணுவத்தை மேலும் நவீன மயப்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் கொண்டதாக மாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கான திட்டங்களை தாம் வகுத்திருப்பதாகவும், செயற்படுத்தவுள்ளதாகவும் முன்னர் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த திட்டத்துக்கு அமைய, மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் தலைமையில், அடிப்படைவாதம், உள்நாட்டு வெளிநாட்டு தீவிரவாதம் தொடர்பாக புலனாய்வுகளை மேற்கொண்டு அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள எடுப்பதற்கு புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவப் புலனாய்லுப் பிரிவுகளை விரிவுபடுத்தி, மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளது கவனிக்கத்தக்க விடயமாக இருக்கிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மீது போர்க்குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவரது போர்திறன் மிகவும் அசாதாரணமானது. புலனாய்வையும், அதற்கேற்ற உத்திகளையும் ஒருங்கிணைத்து திறமையாக கையாளக் கூடியவர் அவர்.

2002-2006 போர் நிறுத்த காலக்கட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கும், இராணுவப் பிரதிநிதிகளுக்கும் இடையில் வடக்கில் - இராணுவ சூனியப் பிரதேசங்களில் நடந்த பெரும்பாலான சந்திப்புக்களில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா பங்கெடுத்திருந்தார்.

அந்தக் கூட்டங்களில் அவர் புலிகளின் தளபதிகளுடன், அமர்ந்து பேசுகின்ற ஒருவராக இருக்கவில்லை. பேச்சுக்களில் ஈடுபட்ட ஜெனரல் சாந்த கொட்டேகொட, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற தளபதிகளுடன் ஒரு உதவியாளராகவோ, பார்வயைாளராகவோ பங்கெடுத்திருந்தார்.

அதன்போது, அவர் பேச்சுக்களில் கவனம் செலுத்துவதை விட, புலிகளின் தளபதிகளினது ஆளுமையையும், பலம் மற்றும் பலவீனங்களையும், உடல்மொழிகளையும், உன்னிப்பாக கவனம் செலுத்தினார்.

அவரது அந்தக் கவனிப்புக்கள், இறுதிக்கட்டப் போரில், புலிகளுக்கு எதிரான போரைக் கையாளும் போது அவருக்கு உதவியிருந்தது என்பது பலருக்குத் தெரியாத இரகசியம்.

புலனாய்வுக்கும், அதனைச் சார்ந்த விடயங்களுக்கும் மாத்திரமன்றி, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இன்னொரு விடயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார். இராணுவத்தை நவீன மயப்படுத்துவது சர்வதேச இராணுவங்களுக்கு இணையானதாக தரமுயர்த்துவது தான் அவரது அந்த இலக்கு.

ஏற்கனவே முன்னைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், இராணுவத்துக்கு நவீன கருவிகள் வாங்கப்பட்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் அதனை பலப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதனை செயலாக்கம் செய்வதற்கு தற்போதைய இராணுவத் தளபதி முன்னுரிமை கொடுக்கப் போகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

எனினும், இந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவர் தனது திட்டங்களை செயற்படுத்துவாரா என்ற சந்தேகங்கள் உள்ளன.

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த பல இராணுவ அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், பதவி உயர்வுகள் அளிக்கப்படாமல், விலகிச் செல்ல நேரிட்டது. இதனால் இதுவரை லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அடக்கியே வாசித்து வந்தார். ஆனால், இப்போது அவர், பலமானதொரு நிலையை எட்டியிருக்கிறார். முதலாவது அவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அது அவருக்கான அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது.

இன்னொன்று சர்வதேச எதிர்ப்புகள், கண்டனங்களைப் பற்றி கவலையின்றி அவரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறார்.

இதன் மூலம், போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றியோ, சர்வதேச எதிர்ப்புக்களைப் பற்றியோ கவலையில்லை, என்ற செய்தி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும், இராணுவத்துக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இது, 2015இற்கு முன்னர் இலங்கை இராணுவம் எவ்வாறு செயற்பட்டதோ, எவ்வாறான முறையில் வழிநடத்தப்பட்டதோ அதேமுறையில் செயற்படுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், இராணுவத்துக்கு தற்போதும் பாதுகாப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனால், எல்லா மாவட்டங்களிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக முகாம்களுக்குள் முடங்கியிருந்த இராணுவம் ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர எவ்வாறு வெளியே வந்ததோ, அது போலவே, தொடர்ந்தும் வெளியே வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா யாருடைய உத்தரவுகளை நிறைவேற்றுபவராக யாருடைய விருப்புக்களை நிறைவேற்றுபவராக இருக்கப் போகிறார் என்ற கேள்வியும் உள்ளது.

பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட இருந்தாலும், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு விவகாரங்களில் போதிய அனுபவங்களையோ, முதிர்ச்சியையோ கொண்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை.

இவ்வாறான நிலையில், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்தின் மூலம், ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு இராணுவத்துக்குள் வலுப்பெறும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன.

ஏற்கனவே, இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கீழ் ஒரு கட்டளைத் தளபதியாக போரை வழி நடத்திய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் நேரடி உத்தரவுகளை பெற்று, அதற்கேற்ப செயற்பட்டவர் என்றொரு குற்றச்சாட்டு உள்ளது.

இருவரும் மிக நெருங்கியவர்கள் என்பதால், வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் முற்றிலுமாக மறுக்க முடியாத ஒரு சூழலில். இந்த நியமனம், அவருக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

விரும்பியோ, விரும்பாமலோ, கோத்தபாய ராஜபக்சவின் அறிவுரைக்கமைய, புதிய இராணுவத் தளபதி செயற்படும் வாய்ப்புகள் இருப்பதை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுமானால், அவரது விருப்புக்கமைய நியமனங்களும், மறுசீரமைப்புகளும், திட்டங்களும் செயற்படுத்தப்படுமானால், அது ஆரோக்கியமானதொரு பாதுகாப்பு சூழலுக்கான அறிகுறியாக இருக்காது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவை மறுசீரமைப்பதும், இராணுவத்தை நவீனமயப்படுத்துவதும், முக்கியமானதெனக் கருதும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அதனை எந்தளவுக்கு சுய ஆளுமையுடன் முன்னெடுக்கிறார் என்பதை பொறுத்தே அவருக்கான அங்கீகாரம் உறுதி செய்யப்படும்.

Read more...

அசாத் சாலி எவ்வாறு பயங்கரவாதிகளை பூஜிதவுடன் இணைந்து காப்பாற்றினார் என்பதை போட்டுடைக்கின்றார் டிஐஜி!

அசாத் சாலி, றிசார்ட் பதுயுதீன் , ஹிஸ்புல்லா போன்றோருக்கு பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்புண்டு என்ற குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்து வருகின்றனர். ஆனால் அசாத் சாலிக்கு பயங்கரவாதிகளுடனிருந்த தொடர்பு தொடர்பில் முன்னாள் கேகாலை மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பலப்படுத்தியுள்ளார்.

அசாத் சாலிக்கு மாவனல்லை புத்த சிலையை உடைத்த பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பு இருந்தாகவும் அவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு அவர் நேரடியாக பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு எவ்வாறு பயங்கரவாதிகளை காப்பாற்றினார் என்பது தொடர்பாகவும் ஊடக நேர்காணல் ஒன்றின்போது வெளிப்படுத்தியுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் குறித்த விடயத்தில் அசாத் சாலி சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதை தடுத்திருக்காவிட்டால், 300 உயிர்களை பலிகொண்டு 500 நபர்களை காயப்படுத்திய பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு பொலிஸாரால் முடிந்திருக்கும் என்றும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அம்பலப்படுத்துகையில்:

மாவனல்லை தாக்குதலுக்கு தலைமை தாங்கினார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சாதிக் மற்றும் ஷகீட் என்ற இருவர் தேடப்பட்டனர். அத்தருணத்தில் குறித்த நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோணைத் தொடர்பு கொண்ட பொலிஸ் மா அதிபர் தேடப்படும் சந்தேக நபர்கள் தொடர்பாக அசாத் சாலியை தொடர்பு கொள்ளுமாறும், அவர் குறித்த சந்தேக நபர்களை பொலிஸாரிடம் பாரமளிக்க தயாராகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் வேண்டுதலின் பிரகாரம் , உதவி பொலிஸ் அத்தியட்சர் காமினி தென்னக்கோண் அசாத் சாலியை தொடர்பு கொண்டபோது, சந்தேச நபர்களை மறுநாள் மௌலவி ஒருவரூடாக பொலிஸாரிடம் பாரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார். ஆனாலும் அவர் அதனை செய்யவில்லை. அவ்வாறு அவர்களை கைது செய்வதில் அசாத்சாலி இடையூறு விளைவிக்காதிருந்திருந்தால், குறித்த நபர்களை நாம் கைது செய்து ஈஸ்டர் தினத்தாக்குதல்களை தடுத்திருப்போம். காரணம் இதே நபர்களே ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கும் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் டிஐஜி.

மேலும் மாவனல்லை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாட்டு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகள் உள்ளது என்பதை நாம் அறிந்துகொண்டு அது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வேண்டியிருந்தோம். எமது அந்த வேண்டுதலுக்கு பதிலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் ஷாணி அபயசேகர, குறித்த அமைப்பின் பெயர், அவர்களின் முகவரி, அந்த அமைப்பின் தலைவர்களின் விபரம் என்பவற்றை அறிவித்தாலன்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என எழுத்துமூலம் அறிவித்தார். (அதன் பிரதி இங்கே உள்ளது) அந்த விபரங்கள் எங்களிடம் இருந்திருந்தால் நாம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியினை நாடியிருக்கமாட்டோம். நாமே செயற்பட்டு அழிவினைத் தடுத்திருப்போம்.

அத்துடன் மாவனல்லை விடயம் தொடர்பான சிஐடி யிடம் உள்ள கோப்புக்களை எடுத்து பரிசீலனை செய்தால், அங்கே எவ்வாறு கடமையில் உதாசீனம் இடம்பெற்றுள்ளது என்பதை அதிகாரிகள் எவ்வாறு அசமந்த போக்குடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதையும் அறிந்து கொள்ளமுடியும்.

Read more...

Dr. சிவரூபன் வழங்கிய தகவலினால் புலிப் பினாமிகளுக்கு உயிரூட்டச் சென்ற எழுவர் கைது!

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் எழுவர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களிலிருந்து நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் எழுவரும், தற்போது பொலிஸாரினால் கைசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பலை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபன் என்பவரின் தகவல்களுக்கு ஏற்பவே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சின்னமணி தனேஷ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னத்துரை, விநாயகமூர்த்தி நெஜிலன் என்ற எழுவருமே யாழ்ப்பாண பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால், கிளிநொச்சியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இவ்விடயத்துடன் தொடர்புற்ற மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு ஏற்ப, பிரதேசங்கள் பலவற்றில் புதைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள், மற்றும் வெடி பொருட்கள் பற்றிய தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போயுள்ள பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாண அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

Saturday, August 31, 2019

கோத்தாவின் ஊடகப் பேச்சாளர்களாக டலஸ், ரம்புக்வெல

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு இரண்டு ஊடகப் பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல ஆகியோரே, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என, பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியின் தலைவர்களே இரண்டு ஊடகப் பேச்சாளர்களின் நியமனத்தை உறுதி செய்துள்ளனர்.

Read more...

ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் என்பது உறுதி...! சஜித் சுயேட்சை வேட்பாளர்....

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் பொது ஜன ஐக்கிய முன்னணியினதும் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டு வெற்றிபெற்றால், அடுத்துவரும் அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷவும், பிரதமராக மகிந்த ராஜபக்ஷவும், சபாநாயகராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்படவுள்ளார்கள் என நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

சென்ற ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் ஒன்றுகூடி நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் அங்கு இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுதொடர்பில் பல்வேறு பிரிவினரும் அவ்வவ் கட்சிகளுடன் தொடர்புடைய துறைசார் நிபுணர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பெரும்பாலானோர் இது பொருத்தமானதொரு முன்மொழிவே எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக இதுவரை பெயர் குறிப்பிடப்படாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி அபிலாசை இல்லாதொழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. எனவே, சஜித் பிரேமதாச சுயேட்சையாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய நெருங்கிய வட்டாரங்கள் அறிவிக்கின்றன.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்குத் தயாராக உள்ளார் எனவும் தெரியவருகின்றது.

Read more...

கைது செய்யப்பட்ட வைத்தியர் கொம்மாதுறையில் வைத்து கருணாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியமை வெளிச்சத்திற்கு!

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாக செயற்பட்டுக்கொண்டிருந்த சிவரூபன் என்பவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவனிடமிருந்து ஆயுதங்கள் பல மீட்டக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்தது.

சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவன் கருணாவை கொல்ல முயற்சித்துள்ளமையும் குறிப்பாக கருணாவின் கொம்மாந்துறையிலுள்ள தென்னந்தோப்பில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். இதற்கான வேவு வேலைகளை செய்வதற்கு அவன் தன்னுடன் கடமையாற்றும் தாதி ஒருவரை பயன்படுத்தியுள்ளான்.

கருணாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட திட்டம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவன் தற்போது மட்டக்களப்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளான்.

மேலும் சிவரூபன் சில புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகளை இணைத்துக்கொள்ள முற்பட்டபோதே விடயம் பிசகியுள்ளது. கருணா போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர் என்றும் அவரை தீர்த்துக்கட்டப்போவதாகவும் குறிப்பிட்டு அவர்களின் உதவியினை கோரியுள்ளான் சிவரூபன். வுன்செயலில் ஈடுபட விரும்பாத குறித்த முன்னாள் புலிகள் விடயத்தினை உடனடியாக பாதுகாப்பு தரப்புக்கு அறிவித்துள்ளதுடன் சிவரூபனை கைது செய்யவும் உதவியுள்ளனர்.

Read more...

உடையுமா கிழக்கு உதயம்? துணைபோகின்றதா கிழக்குக்கான அரசியல் கட்சி ?

கிழக்கு உதயம் என்கின்ற அமைப்பு 2004ம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுனாமி பேரலை தாக்கியபோது, கிழக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கென சுவிட்சர்லாந்தில் உருவானது. கிழக்கு என்ற தமது அடையாளத்தை வெளிப்படுத்தினால் துரோகிகள் அல்லது பிரதேசவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றதோர் அபாயமான காலகட்டத்தில்தான் உதயம் உருவானது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்ற அவசர அழைப்புடன் அந்த அமைப்பு ஆரம்பமாகியிருந்தாலும், கிழக்குக்கென்று தனித்துவமான சுயாதீனமான தலைமைத்துவம் ஒன்று வேண்டும், எம்மால் தனித்து இயங்கமுடியும், தொடர்ந்தும் எம்மை யாழ் மேலாதிக்க சக்திகள் ஆட்சி செய்ய அனுமதிக்கமுடியாது என்கின்ற ஏகப்பட்ட உள்ளக்கிடக்கைகளின் வெளிப்பாடகவே உதயம் உருவானது. கிழக்கு என்ற பெயரை கம்மீரமாக கூறிக்கொண்டு, ஆம்! எங்களாலும் முடியும் என்று ஆரம்பமான முதலாவது அமைப்பு கிழக்கு உதயம் என்றும் அடையாளப்படுத்தலாம்.

புலிகள் அமைப்பிலிருந்து தனது சொந்த காரணங்களுக்காக பிரதேசவாத போர்வையை போர்த்துக்கொண்டு கருணா வெளியேறியிருந்தபோது, யாழ் மையவாத பிற்போக்குவாதிகளின் பார்வை ஒட்டுமொத்த கிழக்கு மக்கள் மீதும் திரும்பியிருந்த காலகட்த்தில் உதயம் பிரகாசமாக உதயமானது. உதயத்தின் தோற்றத்திற்கு எதிராக எழுந்த அத்தனை சவால்களையும் அது எதிர்கொண்டது. இச்சவால்களை எதிர்கொள்வதில் அந்த அமைப்பை உருவாக்க உறுதுணையாக நின்ற கிழக்கின் மக்கள் உறுதியுடன் செயற்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் செயற்பட்டமைக்கான முதன்மைக் காரணம் ஏலவே குறிப்பிட்டதுபோல் கிழக்கின் மக்களுக்கு உதவவேண்டும் என்ற விருப்புக்கு சமாந்தரமாக கிழக்கின் தனித்துவம் தொடர்பான அவர்களது உள்ளக்குமுறல்களுமாகும்.

துரோங்களாலும் துரோகிகள் என்ற போலி முத்திரை குத்தல்களாலும் சாபக்கேடுக்குள்ளான எமது சமூகத்தில் பொதுநோக்குடன், அதுவும் பாமரமக்களின் எதிர்கால விடிவுக்காக செயற்படுவதும் துரோகமே. கட்சிகளும் அமைப்புக்களும் மக்களுக்காக என்பதிலிருந்து விலகி அவை தலைவருக்காகவும் தலைமைக்காகவுமே என்ற அச்சுறுத்தலிலிருந்து உதயத்தாலும் தப்பித்துக்கொள்ள முடியவில்லை.

ஆம், நடந்தது! குறுகிய காலத்தில் உதயம் உடைந்தது யாழ் மையவாத பாசிஸ தலைமையின் நிகழ்சி நிரலில் அதன் அடிவருடிக்கும்பலொன்ன்று உதயத்தை உடைத்து புதிய அமைப்பொன்றை உருவாக்கி கொண்டனர். உதயத்தின் மக்கள் பலம் குன்றியது. செயற்பாடுகளின் தாக்கம் தணிந்தது. நிர்வாகச் சிக்கல்கள் உருவானது. மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் உருவானது. இவை அத்தனைக்கும் மத்தியில் உதயத்தின் இயங்கு சக்திகளான மக்களின் பலத்துடன் அது 15 வருடங்களாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நகர்வு ஆரம்ப வேகத்திலும் மிகக்கம்மியாகவே அமைந்திருந்தது என்பதை பதிவு செய்தே ஆகவேண்டும்.

மேற்குறிப்பிட்டவை யாவும் இறந்தகாலம். ஆனால் எதிர்காலம் இறந்தகாலத்திலும் பார்க்க ஆபத்தான திசையை நோக்கி நகர்கின்றது என்ற அடிப்படையில் சில விடயங்களை வெளிப்படையாக மக்களின் ஆய்வுக்கு விடலாம் எனக் கருதுகின்றேன்.

கடந்த சில வருடங்களாக உதயத்தின் நிர்வாகத்தினுள், குறிப்பாக நிர்வாக சபை உறுப்பினர்களுள் உருவாகியுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் ஒரு பொது அமைப்பை, விசேடமாக உதவிகள் தேவைப்படும் ஒரு தொகுதி மக்கள் பயனடைகின்ற அமைப்பை உடைத்து மேலும் பலவீனமடையச் செய்யக்கூடிய நிலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. இக்கட்டுரையின் நோக்கம் நபர்களைச் சாடுவது அல்ல என்பதாலும் உடைவை தடுத்து நிறுத்தி இதுவரை செய்யப்பட்ட பணி தொடர்ந்தும் மேலதிகவேகத்துடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்துவது என்பதாலும் மேலோட்டமாக சில விடயங்களை தொட்டுச்செல்லலாம் எனக் கருதுகின்றேன்.

நிதிநிர்வாகத்திற்குரிய பொறுப்புக்கூறல்கள் இதுவரை சரியாக இடம்பெறாதன் காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளது என்ற முடிவுக்கு இலகுவாக வரக்கூடியதாகவுள்ளது. பொதுமக்களின் பணத்திற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் அதற்கு கட்டுப்படாது செல்வதற்கு எமது அரசியல் மற்றும் ஆயுதக்கலாச்சாரங்கள் வழிவிடுகின்றது அல்லது துணை நிற்கின்றது என்ற குற்றச்சாட்டை உதயத்தின் உயிர்நாடியாக இருக்கக்கூடிய பொதுமக்கள் வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக நிதிநிர்வாகத்திற்கு பொறுப்பானவரிடம் பொறுப்புக்கூறல் என்ற கருமத்திலிருந்து தாங்கள் விடுபடமுடியாது என்று மக்கள் வலியுறுத்துகின்றபோது, அரசியல் கட்சி ஒன்று அவர் எங்களுடைய ஆள் என்று மிரட்டுகின்ற நிலைமை உருவாகியுள்ளதாக அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுவதானால் உதயத்தின் முன்னணிச் செயற்பாட்டாளரான பெண் ஒருவரை அரசியல் கட்சி ஒன்றின் பெண்கள் அணிப்பொறுப்பாளர் மிரட்டியதாக அறியமுடிகின்றது. இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றதாகவும் அதற்கும் குறித்த அரசியல்கட்சியே பொறுப்புக்கூறவேண்டும் என்றும் மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இச்செயற்பாடானது அக்கட்சியின் பொதுமக்கள் மீதான அக்கறையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. கட்சிகள் பொது அமைப்புக்கள் மக்களுக்கானவை என்பதையும் அவை தனிநபர்களுக்கானவை அல்ல என்பதையும் குறித்த கட்சி ஏற்றுக்கொள்ளவேண்டும். நிதிநிர்வாத்திற்கு பொறுப்பானவர் கட்சியின் விதிமுறைகளுக்கு கட்டுப்படாது செயற்படுகின்றபோது, அவர் மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர் என்பதையும் நிர்வாக விதிகளுக்கு கட்டுப்படவேண்டியவர் என்பதையும் வலியுறுத்துவதை விடுத்து அவரை விடுங்கள் அவர் எங்களுடைய ஆள் என்பது அக்கட்சி மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு குந்தகமாக அமையலாம்.

எனவே குறித்த அரசியல் கட்சி கிழக்கு மக்களின் மேம்பாட்டில் அக்கறைகொண்டதாகவிருந்தால் உடனடியாக அமைப்பு உடைந்து பலவீனமடைவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும் நிதிக்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நபரை அரவணைத்து தஞ்சம் வழங்குவதை தவிர்க்கவேண்டும்.

அத்துடன் அமைப்பினுள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துகொண்டு உடைவினை தவிர்த்து முன்நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் உடனடியாக இடம்பெறவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

ஹக்கீம், ரிஷாத், பாட்டாலி, மனோ ஒத்துழைப்பு சஜித்துக்கே...!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரை நியமிப்பதற்கு, ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது என அமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகின்றார்.

அதற்கேற்ப, ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், பாட்டாலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேஷன் உள்ளிட்ட தலைவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு தங்களது ஆதரவு கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்ததும், சஜித் பிரேமதாசாவுக்கான ஆதரவுக்காக கட்சியைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றிணைத்துக் கொள்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் எதிர்வரும் நாட்களில் கலந்தாலோசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

ரணில் இருந்தது போதும் - உபுல் ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் கட்டாயம் இரண்டாம் தரப்பினருக்கு அவகாசம் வழங்க வேண்டும் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிடுகின்றார்.

ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் மூலம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்வது, வேட்புமனுவின் பின்னர்தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளமையானது வஞ்சகச் செயலாகும் என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிடுகிறார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தற்போது பொதுமக்களில் பத்துப் பேரிடம் அல்ல, நுாறு பேரிடம் கேட்டாலும் எல்லோரும் ஒருமித்த குரலில் 'ரணில் நின்றது போதும்.... போதும்' என்றே கூறுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

Read more...

Friday, August 30, 2019

ரணிலின் ஆட்டம் ஆரம்பமானது! மைத்திரியுடன் இணைந்து நிறைவேற்று ஜனாதிபதிமுறைக்கு ஆப்புக்கு திட்டம்.

அரசியல் சூத்திரத்தில் ரணில் ஜாம்பவான். அவர் அரசியலில் நகர்த்துகின்ற காய்களை தடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே தடுக்கமுடியும் என்றால் அது மிகையாகது. அந்த அளவுக்கு அரசியல் சூழ்சியில் மன்னன்.

இலங்கையின் 7 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மக்கள் காத்திருக்கின்ற அதேநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தடுமாடுகின்றது. கட்சியின் தலைவராக இதுவரை காலமும் தனிமனிதனாக காய் நகர்த்தி வந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு தற்போது பெரும் தலையிடியாக பிறேமதாஸவின் மகன் சஜித் மாறியுள்ளார்.

சஜித் பிறேமதாஸ ஜனாதிபதி வேட்பாளர் பதவியினை ரணிலிடமிருந்து பலவந்தமாக பறித்தெடுப்பதற்கு தயாராகியுள்ளார். அவர் மக்கள் பலத்தையும் கட்சியினுள் தனக்கு அபிமானத்தையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்கமீது அதீத அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றார். இந்நிலையில் பல்வேறு தடங்களைப்போட்டு இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை அறிவிக்காதிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் எனக்கு வேண்டாம் என்று சஜித் தெரிவிக்குமளவுக்கான காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

நேற்றிரவு மைத்திரிபாலவை அலரிமாளிகையில் சந்தித்து பூட்டிய அறையில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. இங்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான திட்டங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதாவது 19 திருத்தச்சட்டத்தின் ஊடாக கை கால்கள் உடைக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கமாக காணப்படும் ஜனாதிபதி யின் முதுகெலுப்பை உடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட்டால், ஜனாதிபதி என்பவர் ஒரு வீசேட பதவிக்குரிய பெயரளவிலானவராவே இருப்பார். அத்தருணத்தில் பிரதமரே நாட்டின் சர்வ அதிகாரம் கொண்டவராக செயற்படுவார்.

1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவே ஜே.ஆர் ஜயவர்த்தனவிற்கு பின்னர் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் ஆட்சியை கைப்பற்றினர். சந்திரிகா குமாரணதுங்க ஜேவிபியுடன் ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக ஒப்பந்தம் செய்திருந்தார். மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஜனாதிபதி முறையை ஒழிக்கின்றேன் எனக்கு ஆதரவு தாருங்கள் என ஜேவிபியின் ரில்வின் சில்வாவுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால 100 நாட்களில் ஒழிக்கின்றேன் என வாக்குகளை பெற்றிருந்தார் என்பது வரலாறு.

அதாவது ஆணை பெண்ணாக்குவதை தவிர அனைத்தையும் இந்நாட்டில் என்னால் செய்ய முடியும் என ஜே.ஆர் ஜெயவர்த்தனவினால் மார்தட்டப்பட்ட அந்த அரக்க முறையை ஒழிப்பதற்கு நாட்டு மக்கள் ஆணைவழங்கியுள்ளபோதும் பதவியை கைப்பற்றிய எவரும் அதனை செய்து முடிக்கவில்லை. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க தன்னால் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என்ற முடிந்த முடிவை ஏற்றுக்கொண்டு விடயத்தில் இறங்கியுள்ளார்.

ரணிலின் இந்த முயற்சிக்கு மைத்திரியின் ஆதரவு கிடைக்கும்போது எதிர்கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவும் கடைக்கண்ணை காட்டிவிட்டிருப்பதற்கான சாத்திக்கூறுகள் மிகவும் அதிகமாகவுள்ளது. அதற்கான காரணம் அரசியல் யாப்பின் பிரகாரம் இருமுறைகள் மாத்திரமே ஜனாதிபதியாக ஒருவர் பதவி வகிக்க முடியும். எனவே அம்முறை ஒழிக்கப்பட்டு சர்வ அதிகாரம் கொண்ட பிரதமர் முறை வந்தால் அடுத்த சர்வ அதிகாரம் கொண்டவராக தன்னால் வரமுடியும் என மஹிந்த நிச்சயமாக எதிர்பார்ப்பார்.

இவ்விடயத்திற்கு ஜேவிபி யின் முழு ஆதரவும் கிடைக்கும் என்பதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கும். எது எவ்வாறாயினும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாகவே நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்க முடியும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கான அறிவித்தல் வரலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Read more...

தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். த.தே.கூ ஐ.தே.கட்சியை கைவிட்டு எம்முடன் இணையவேண்டும். கோருகின்றார் கோத்தா

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் சலுகை அரசியலுக்கு அடிபணியாமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எம்முடன் கைகோர்க்கவேண்டும். தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். எனவே, எம்முடன் கைகோர்க்குமாறு கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியை இனியும் தமிழ் மக்கள் நம்பக் கூடாது. ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாத அந்தக் கட்சியா தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கப் போகின்றது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆண்டுகளாக ரணில் அரசுடன் திரைமறைவில் செய்த நடவடிக்கை எல்லாம் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். தமிழ் மக்கள் சிறுபிள்ளைதனக்காரர்கள் அல்லர்.

ஜனாதிபதி வேட்பாளராகக் கடந்த 11ஆம் திகதி நான் அறிவிக்கப்பட்டபோது, தமிழ் மக்கள் பெருமளவில் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். எனவே, எம்முடன் கைகோர்க்குமாறு கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் – முஸ்லிம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து தேசிய அரசு ஏற்கும் வகையில் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

என் மீது சில தரப்பினர் வீண் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றார்கள். நான் அப்படியான குற்றச்சாட்டுக்கள் எவையும் புரிந்தவன் அல்லன். இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானது. மூவின மக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து நிம்மதியாக வாழும் சூழ்நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். எனவே, சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம்களாகிய தமிழ் பேசும் மக்களும் எமக்கு ஆதரவு வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more...

காணாமல் ஆக்கப்பட்ட செல்வியின் 28 ஆண்டுகள் … நினைவுகளோடு பயணம்...

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார்.

செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.

புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர். அதுவே கைது செய்தலாக முடிவுற்றது.

செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.

செல்வி வவுனியாவில் உள்ள சேமமடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி. அத்தோடு இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். ‘தோழி’ இதழின் ஆசிரியரும் கூட.

செல்வி தன் நாடகங்களினாலும் கவிதைகளினாலும் குறுகிய காலத்திலேயே மதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து சுயேற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கு பல்கலைக்கழக சக மாணவர்களை செல்வி ஊக்குவித்தார் . அவர் கவிஞராகவும், நாடகாசிரியராகவும் பணியாற்றியவர். பாலஸ்தீன கைதிகள் பற்றிய நாடகமொன்றையும் அவர் இக்காலத்தில் செய்திருந்தார்.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாட க மொன்றை அரங்கேற்றத் தயராகிக் கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார். பல்கலைக்-கழத்தில் பெண்கள் இயக்கத்தில் தீவரமாக செயற்பட்டிருந்தார்.

வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.. யாழ்ப்பாணத்தில் அல்லல்படும் தாய்மார்களுடன் முன்னின்று செயல்பட்டதினால் அவர் சமூகத்திற்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கிய பங்கை வகித்தார்.

ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட 'சொல்லாத சேதிகள் ' என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. அத்தோடு செல்வியின் கவிதைகளும் சிவரமணியின் கவிதைகளும் சேர்ந்த தொகுப்பொன்றை தாமரைச் செல்வி பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டிமிருந்தது. செல்வியின் கவிதைகள் தமிழகத்திலுள்ள சிறு பத்திரிகைகளான மனஓசை, மண் அரங்கேற்றம் இவை தவிர ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றுள்ளன.

செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.

இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு வழங்கப்பட்டது. International PEN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பு கார்ல்ஸ் வொர்த்தியால் தொடங்கப்பட்டதாகும்.

இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும், இலட்சியத்திற்காகவும், எழுத்துத்தளத்திலும், கலைத் தளத்திலும், படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ் விருது வழங்கப்பட்டது.

செல்வி உயிருடன் இருப்பதாக நம்பி வந்த அவருடன் நெருங்கிய அனைவருமே மனந் தளர்ந்து போயிருந்தனர் . அவரது தாயார் உட்பட எந்த உறவினரும் அவரை சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் தேகாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று றொட்டர்டாம் போயற்றி இன்டர்நெஷனல் 1994இல் அறிக்கை வெளியிட்டது.

1992இல் எழுதுவதற்கான சுதந்திரம் எனும் விருது 'PEN' எனும் சர்வதேச அமைப்பின் விருது செல்விக்கு கிடைத்தது. இவ்விருதினை அதற்கு முன்னரே வழங்கத் தீர்மானித்திருந்தபோதும் இவ்விருதின் மூலம் சிறைவைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஏதும் ஊறு நேரக்கூடும் என்றும் விருதினை அறிவிக்க வேணடாம் என்று செல்வியின் நண்பர்கள் பலர் அறிவித்திருந்ததாக ' PEN' அமைப்பின் தலைவர் எட்மண்ட் கீலி அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனாலும், அவரது நிலை அல்லது அவரது இருப்பிடம் பற்றிய எதுவித தகவலையும் காணவில்லையென்பதால் விருதினை பகிரங்கப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக 1992இல் 'PEN 'அமைப்பின் தலைவர் அறிவித்திருந்தார்.

சர்வதேச கவிதை அமைப்பு 1994க்கான International betry Sbciety award எனும் விருது வழங்கப்பட்டது. இது மானுட சுதந்திரத்திற்காகவும், அடிப்படை உரிமைக¬ளுக்காகவும் குரல் கொடுத்த ”சுதந்திரம் மறுக்கப்பட்ட” கவிஞர்களுக்காக வழங்கப்படுகின்ற விருதாகும்.

இவ்விருது வழங்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட சர்வதேச கவிஞர்களைப் போலவே செல்வியும் விடுதலை செய்யப்படவேண்டுமென இவ்வமைப்பு கேட்டுக்கொண்டது.

இவ்விருது பற்றிய அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

“மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும், அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது “.

இந்த பிரசுரத்தின் இறுதிவரிகள் இவ்வாறு நிறைவுபெறுகின்றன. "மனித உயிருக்கும் உடலுக்கும் மரியாதை குன்றிப்போதல் மேலோங்கிவரும் இவ் உலகில், பலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில், இந்த வருடத்திற்கான விருதினை தமிழ் கவிஞையான செல்விக்கு வழங்குவதற்கு இவ் அமைப்பின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது."

இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட விருதான இதனை பெற்றுக் கொள்ள செல்வி அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகளினால் சிறைவைக்கப் பட்டபடியே அப்போதும் இருந்தார்.

1993 டிசம்பர் வெளியான 'சரிநிகர்' பத்திரிகையில், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் (இப்பேட்டியில் மூலமானது Counterpoint எனும் ஆங்கில சஞ்சிகையாகும்) செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார்.

செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன.

மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன.

தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம்.

அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது.
இன்று அவர் எம்முடன் இல்லை.

விடுதலையின் பேரால், கருத்துச் சுதந்திரத்தின் குரல் நசுக்கப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் மீள எழுவோம்.

நாங்கள் மீளவும் உயிர்ப்போம். மானுட விடுதலைக்காக...

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று K.K.சந்திரகுமார் என்பவரால் அவரது முகப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Read more...

வேட்பாளர் யாரென்று அறிவிக்க வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கால அவகாசம் கோருகின்றார் ரணில்!

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், அதிபர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக, வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை நேற்றுமுன்தினம் இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இராப்போசன விருந்துடன் சந்தித்துப் பேசியுள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா, நோர்வே உள்ளிட்ட ஸ்கன்டிநேவிய நாடுகளின் தூதுவர்கள் பலரும், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின், அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போதே, மாலைதீவுக்கு வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளவுள்ள பயணத்தின் பின்னர், புதிய கூட்டணி மற்றும் அதன் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இராஜதந்திரிகளிடம் எடுத்துக் கூறினார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்து கொண்டிருந்தார்.

அதேவேளை, ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு வரையும் பணிகள் நேற்று நிறைவடைந்துள்ளன. இதன்படி கூட்டணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Read more...

Thursday, August 29, 2019

வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக செயற்பட்ட ஊடகங்கள் பற்றி ஐ.நாவில் முறைப்பாடு!

குருணாகலை வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரச்சாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட பிரதிநிதி அஹ்மத் ஷஹீதிடம் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினை கையளித்தவர்கள் பற்றி அவர் வெளியிடவில்லை. ஆயிரக்கணக்கான பெளத்தப் பெண்மணிகள் முஸ்லிம் வைத்தியர்களால் கருத்தடை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பொய்யாக பிரச்சாரம் செய்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பினை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்தும் ஐ.நாவுக்கு பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read more...

பொதுஜன பெரமுனவின் அங்கத்துவம் பெற்ற எஸ்.பீ - டிலான் இருவருக்கும் வந்த வினை.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ. திசாநாயக்க, டிலான் பெரேரா இருவருக்கும் அவ்வாறு அங்கத்துவம் பெறும்போது சமுகமளித்திருந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் அங்கத்துவத்துவத்தை இல்லாது ஒழிப்பதற்கும், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவுசெய்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிரி ஜயசேக்கர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர உள்ளிட்ட கட்சியின் முக்கியத்தர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடிய போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதற்கேற்ப, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் அவர்கள் அங்கத்துவம் பெறும்போது அங்கு சமுகமளித்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக மிக விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வீரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். .

Read more...

'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரணிலால் ஒழிக்க முடியாது' என்கின்றனர் மைத்திரியும் மகிந்தவும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த பிரேரணையை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இருவரும் முடிவு செய்துள்ளனர். ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் நேற்று முன் தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இரவு சந்தித்து ஒரு மணி நேரம் அளவில் இதுபற்றிக் கலந்தாலோசி்த்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது தொடர்பான பிரேரணையை ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்துள்ளார். அதுதொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசனை செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உடன்பட்டுள்ளதுடன், அதற்கேற்பவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு இந்தக் காலப்பிரிவு பொருத்தமற்றது எனவும், அதன்மூலம் நாட்டை அபாயத்தின்பால் கொண்டு செல்வதற்குத் தான் தயாராக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு குறிப்பிட்டுள்ளார். அங்கு அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு 19 ஆவது அரசியல் யாப்பு கொண்டு வந்ததற்கேற்ப நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக 20 ஆவது அரசியல் யாப்பினைக் கொண்டுவர முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அங்கு இருவரும் சந்தித்த வேளையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க மாட்டோம் என இருவரும் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைவது தொடர்பில் அங்கு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இரண்டு கட்சிகளினதும் பிரேரணைகளையும் அலசி ஆராய்ந்து இறுதி முடிவினை எடுக்க இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.

வெகுவிரைவில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் அழைப்பதற்கு தலைவர்களும் இருவரும் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

அதேசந்தர்ப்பத்தில் அமைச்சரவை உறுப்பினர்களை 30 ஆக மட்டுப்படுத்தவும் தேர்தல் முறைமையையும் மாற்றியமைக்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடன்பட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலான பிரேரணைக்கு பொதுஜன பெரமுன உடன்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி இருவரிடையேயும் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினததும் பொதுஜன பெரமுனவினதும் பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்ட மகிந்த அமரவீர, இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாகவுள்ளவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரே எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

மைத்திரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரி - மகிந்த சந்திப்பு


இறுதித் தீர்மானத்திற்காக அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பு


ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இருவரும் நேற்று முன்தினம் இரவுவேளை மஹகமசேக்கர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தை மிகச் சிறப்பாக இடம்பெற்றதாக இரு கட்சிகளினதும் நம்பகத்தன்மை வாய்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து இறுதி முடிவினை எடுப்பதற்காக, தலைவர்கள் இருவரும் அடுத்த வாரமும் கலந்தாலோசிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

Read more...

ஐதேகவின் சஜித் குழுவினர் மங்களவின் வீட்டில் ஒன்றுகூடுகின்றனர்...

முதலமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று இரவு விஷேட இராப்போசன விருந்துபசாரம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

முதலமைச்சரின் கொழும்பு இல்லத்திலேயே அந்த விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

அங்கு ஜனாதிபதி வேட்பாளர்தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத் தெரியவருகின்றது.

Read more...

இலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்! ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் நோர்வேயில் வசிக்கும் நடராஜா சேதுறூபன் என்பவன் இணையவழியாக கப்பம் பெற்றான் என குற்றஞ்சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு (வழக்கிலக்கம் 30600) தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கிற்கு ஊத்தை சேது மன்றில் ஆஜராகாததைத் தொடர்ந்து அவனுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றினால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 02.08.2019 ம் திகதி நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் பெயரில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஊத்தை சேது, 06.08.2019 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டான்.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள ஊடகங்கள் மும்மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டிருந்தது. கப்பம் பெற்றதாக குற்றஞ்சுமத்தப்பட்ட குறித்த வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்த சக்தி தொலைக்காட்சியின் கிளிநொச்சி பிரதேச ஊடகவியலாளரான சுஜீவனது புகைப்படக்கருவி மீது ஊத்தை சேதுவின் தந்தையான வல்லிபுரம் நடராசா என்பவன் நீதிமன்ற தாக்குதல் நடாத்தியிருந்தமையை சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்திருந்தது.

இந்நிலையில் இலங்கைநெட் குறித்த சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தமை ஊத்தை சேதுவுக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளதாக மின்னஞ்சல் ஊடாக தெரியப்படுத்தியுள்ளதுடன் , ஊத்தை சேதுவிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் ஊடக சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளான். முகப்புத்தகத்தில் எடிட்டர் இன் ச்சீப் என தன்னை குறிப்பிட்டுள்ள ஊத்தை சேது நீதிமன்ற வழக்கொன்று தொடர்பாக செய்தி வெளியிட்டமையால் தான் அதிர்சி அடைந்தாக தெரிவித்துள்ளான்.

இலங்கைநெட் இணையத்தளமானது ஊடக தர்மத்தை மதித்து அதன் வரையறைக்குள் நின்று 11 வருடங்களாக பொது நோக்குடன் எவ்வித பக்கசார்புமின்றி செயற்பட்டுவரும் ஊடகமாகும். கடந்த 11 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சமின்றி செயற்பட்டுவரும் இலங்கைநெட்டை ஊத்தை சேது என்ற கறட்டி ஓனான் வெருட்டி ஓ**க முற்பட்டால் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் ஊத்தை சேது என்ற நடராஜா சேதுறூபனுக்கு இச்செய்தியினூடாக பகிரங்க அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

நடராஜா சேதுறூபன் மீது கப்பம் பெற்றதாக இலங்கையில் வெளியான செய்திக்குறிப்புக்களில் சில ஊத்தைசேதுவின் ஞாபகமூட்டலுக்காக இங்கு தரவேற்றப்படுகின்றது.










කොටි හිතවාදී නඩරාජා අත්අඩංගුවට


çඑෆ්.අස්ලම්)

එල්.ටී.ටී.ඊ සංවිධනයේ වෙබ් අඩෙවියක නිර්මාතෘවරයෙකු මෙන්ම දෙමළ ඩයස්පෝරාවේ ප්‍රබල කොටි හිතවාදියෙකු වශයෙන් හදුනාගෙන ඇති නඩරාජා සේදුරූපන් නැමැත්තා යාපනය නෙල්ලිඅඩි පොලිසිය විසින් ඊයේ (2) අත්අඩංගුවට ගෙන තිබේ.

නෝර්වේ රාජ්‍යයේ සිට මෙරටට පැමිණ ඇති සැකකරු යාපනය නෙල්ලිඅඩි ප්‍රදේශයේදීම අත්අඩංගුවට ගෙන ඇතැයි පොලිසිය සඳහන් කරයි.

පුද්ගලයෙකුට දුරකතන මාර්ගයෙන් බැණ තර්ජනය කිරීම සහ කප්පම් ඉල්ලීමේ සිද්ධියකට අදාලව අධිකරණය හමුවේ පෙනී නොසිටීම මත කිලිනොච්චිය මහේස්ත්‍රාත් අධිකරණය විසින් නිකුත් කර තිබුණු වරෙන්තුවකට අනුව සැකකරු අත්අඩංගුවට ගෙන තිබේ.

එල්.ටී.ටී.ඊ සංවිධානයේ වෙබ් අඩෙවියේ නිර්මාතෘ බව කියන මෙම සැකකරු නෝර්වේ රාජ්‍යයේ පදිංචි පුද්ගලයෙකු බවත් ත්‍රස්තවාදය පැවති සමයේ කොටි සංවිධානය වෙනුවෙන් මුදල් එක්රැස් කිරීම ඇතුළු ත්‍රස්තවාදයට ආධාර අනුබල ලබාදීමේ චෝදනාවන්ද ඔහුට එරෙහිව එල්ල වී තිබෙන බවට් උසස් පොලිස් නිලධාරියෙකු ලංකාදීපයට පැවසීය.

සැකකරු අද කිලිනොච්චිය මහේස්ත්‍රාත් අධිකරණය වෙත ඉදිරිපත් කිරීමට නියමිත අතර වැඩිදුර විමර්ශන නෙල්ලිඅඩි පොලිසිය සහ ත්‍රස්ත විමර්ශන දෙපාර්තුමේන්තුව සිදුකරයි.


மேலும் ஊத்தை சேதுவால் இலங்கைநெட் ன் கருத்துச்சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் இங்கு தரவேற்றப்படுகின்றது.


Dear Sir / Madam

I am writing this email about an article published on your website today. I am extremely appalled about the content of the article. I am writing to you to request you that an apology to MR.Nadarajah Sethurupan is published in your website immediately.

I would like to confirm that Mr.Nadarajah Sethurupan has no involvement in any bribe activities as alleged by yourselves in that article. This has been confirmed by the Court in Kilinochchi MC in Sri lanka during the trial.

I am require you to provide information as to the source of the content.

I have been enclosed a copy links of that article as retrieved from your online.

I am not owner to NEWJAFFNA .net facebook it was operated by someone in Sri lanka.

I never ever had any server on my name. many time my emails was illegally hacked by you and your members.

http://www.ilankainet.com/2019/08/blog-post_54.html


I look forward to a swift response from you in this matter and if you have any future queries please do not hesitate to contact me.


Best Regards
Nadarajah Sethurupan
Mobile : + 47 47 944 944
E-mail : news@norwaynews.com
http://www.norwaynews.com

ஊத்தை சேது கப்பம்வாங்கியதான குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அழும் காட்சி


Read more...

Wednesday, August 28, 2019

நாட்டுக்காக தீர்மானம் எடுக்க வேண்டிய கடைசித் தருணமே ஜனாதிபதித் தேர்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நாட்டுக்காக இந்நாட்டு மக்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய கடைசித் தருணமாகும் என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.

நாட்டைக் காப்போம் - நாட்டை உருவாக்குவோம் - நாட்டு மக்களே ஒன்றுபடுவோம் என்ற தொனிப்பொருளினாலான 'உரையாடல் வட்டம்' ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்குகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'உரையாடல் வட்ட'த்தின் தலைவர் கெவிந்து குமாரத்துங்க உரையாற்றும்போது:br/>
'மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் தயாராகிவருகின்றது. காட்டிக் கொடுக்கும் செயலுக்குத் தலைமத்துவத்தைக் கொடுத்த கரு ஜயசூரிய நாட்டுக்கு எதிரான சட்ட மூலத்தைக் கொண்டுவந்த போது என்ன செய்தார்?

காணாமற் போனோர் பற்றிய சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுக்காமலேயே நிறைவேற்றினார். அவர், நாட்டிலுள்ள ஒரு துஷ்டர். இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாச குறிப்பிடுகிறார்.

பெளத்த மதபீடத்தையும், இராணுவத்தினரையும் பாதுகாப்பாராம்.. மங்கள சமரவீரவின் மேடையிலிருந்து முழங்குகின்றார். பெளத்த பிக்குமாரை இழிந்துரைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற நாடு உருவாக்கப்பட்டு வருகின்றபோது அதனை நாசமாக்கினார். இப்போது எங்களுக்கு இப்பாேதைக்கு நினைவுக்கு வருவது கோத்தபாய ராஜபக்ஷ மட்டுமே...

குடியுரிமை பற்றிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டுவந்தார்கள். அதன் சிறிய தலைப்பாக இருப்பது தேசிய பாதுகாப்பு. அதுபற்றிப் பேசுவோர்தான் தேசிய பாதுகாப்பை இல்லாதொழிக்கச் சென்றவர்கள். இப்போது தேசிய பாதுகாப்பை நிகழ்ச்சி நிரலில் இணைத்திருக்கிறார்கள். நாங்கள் ஓர் அடியைத் தவறிழைத்தால் அதனைச் சரிசெய்ய இயலாது' எனக் குறிப்பிட்டார்.

Read more...

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆப்பு வைக்க தயாராகும் மைதிரி பிணைமுறி விசாரணை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்தல்!

ஜக்கிய தேசிய கட்சியை இலக்கு வைத்து பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, இவ்விசாரணைகள் தாமதமடைதல் நீதி நிலைநாட்டப்படுவதற்கு தடையாகும் எனக் குறிப்பிட்டார். பிணைமுறி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பிலான நான்கு இடைக்கால அறிக்கைகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஏனைய அறிக்கைகளையும் முன்வைக்க முடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது. பணச்சலவை தொடர்பான 05 வருட ஆவணங்களை வங்கிகளிடம் கோரியுள்ளபோதிலும் அவ்வறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறாமையினால் விசாரணைகளை முன்னெடுப்பதில் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக தண்டனை சட்டக்கோவையின் கீழ் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ்விடயம் தொடர்பான சாட்சியங்கள் சத்தியப் பிரகடனங்களினூடாக எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் முன்வைக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டது.

விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக தமது தரப்பில் வழங்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளும் பெற்றுத்தரப்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பதில் கடமை பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Read more...

மட்டகளப்பில் தீவிரவாதியின் உடலை தமிழரின் மயானத்தில் புதைத்ததால் பதற்றம்

தமிழ் மக்களது மயான பூமியில் தீவிரவாதி அமைப்பை சேர்ந்த தற்கொலை தீவிரவாதி ஒருவரை புதைப்பதை மட்டகளப்பு பிரதேசத்தில் வாழும் தமிழர் மாத்திரமின்றி இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களினாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொரு சம்பவமாகும்.

கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற சம்பவமானது அனைவரது மத்தியல் பாரிய மனத்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதி அமைப்பை சேர்ந்த தீவிரவாதியான முகமது அசாத்தின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை தமிழர்களின் மயான பூமியில் அடக்கம் செய்யப்படமை எல்லா தமிழர்கள் மத்தியிலும் வேதனையளித்துள்ளது.

மேலும் தமிழர்களின் இந்ந இந்து மயான பூமியானது அவர்களது உறவினர்களது தகனம் மற்றும் ஈமக்கிரியைகள் போன்ற சடங்குகள் செய்வதற்கு பயன்பட்டுவந்ததுடன் தமிழர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத இடமாகவும் இம் மயான பூமி காணப்பட்டது, இருப்பினும் தமிழர்களின் பாரம்பறிய வழிமுறைகளை மாற்றி இம் மயானத்தில்; தற்போது தீவிரவாதி ஒருவரின் உடலை அடக்கம் செய்தமையானது தமிழர்களின் பாரம்பரியத்தை கொச்சைப்படுத்தும் செயலாக காணப்படுகின்றது.

மேலும் தீவிரவாதியின் உடலை இவ் இடத்தில் அடக்கம் செய்தமை கவலைக்கிடமான ஒரு விடயமாகும் என்பதுடன் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இச் சம்பவம் இடம்பெற்றிருந்தாலும் அரச தரப்பு வழக்கறிஞ்சரும் , பொலிஸாரும் தெளிவுப்படுத்தாமல் அமைத்தி காத்ததே இச் சம்பவத்திற்கு முழு காரணமாகும் . அத்துடன் அரச தரப்பு வழக்கறிஞ்சர்;, பொலிஸார் போன்றோரது அலச்சிய போக்கை வன்மையாக நாம் கண்டிக்கின்றோம்.

எனவே இப்பிரதேசத்தில் உள்ள தமிழ் அரசியல் வாதிகள் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து புதைக்கப்பட்ட உடல் பாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட அனைத்து இ.தொ.கா உறுப்பினர்களும் தமிழர் பாரம்பரிய செயற்பாடுகள் அழிவதற்கு ஒருபோதும் துனைபோக மாட்டோம் என அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Read more...

வறிய கிளிநொச்சி மக்களிடம் அதிக வரியை அறவிடுகின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிர்வாகத்தினர்

வறிய கிளிநொச்சி மக்களிடம் அதிக வரியை அறவிடுகின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நிர்வாகத்தினர்.ஆதாவது இலங்கையில் வறுமையில் முதலிடத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த ஆதன வரியை அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் இலங்கையில் வறுமையில் முதல் மாவட்டமாக காணப்படுகிறது.வேலையில்லாப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இங்குள்ள மக்கள் அதிகரித்த வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் கரைச்சி பிரதேச சபையில் எங்களது எதிர்ப்பினையும் மீறி இவ்வருடம் முதல் அறிமுகப்படுத்தியுள்ள ஆதனவரியை மக்களிடமிருந்து பத்து வீதமாக அறிவிடுவதற்கு ஆளும் கட்சியினர் எடுத்துள்ள தீர்மானம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது அதிகரித்த வரிசுமையை சுமத்துவதாகவும். எனவே மக்களின் நலன் கருதி நாம் இதனை வன்யைாக கண்டிப்பதோடு, அதனை கரைச்சி பிரதேச சபை குறைக்க வேண்டும் எனவும் இல்லை எனில் மக்களின் ஆதரவுடன் இந்த வரிச்சுமைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கிளிநொச்சியோடு ஒப்பிடுகையில் வசதிவாய்ப்போடு காணப்படுகின்ற யாழ்ப்பாணம்,வவுனியா போன்ற மாவட்டங்களில் உள்ள மாநகர சபை,நகர சபைகள், பிரதேச சபைகள் என்பன மிகவும் குறைந்த வீதத்திலேயே ஆதன வரியை அறவீடு செய்கின்றனர். அந்த வகையில் யாழ் மாநகர சபையில் ஆறு வீதமும், நல்லூர் பிரதேச சபையில் நான்கு வீதமும், மன்னார் நகர சபையில் ஆறு வீதமும், கோப்பாய் பிரதேச சபையில் நான்கு வீதமும் என ஆதனவரி அறவிடப்படுகிறது. எனவே இங்கெல்லாம் இந்த வீதங்களில் வரி அறவிடப்படும் போது கரைச்சியில் மட்டும் பத்து வீதம் அறவிடப்படுவது மிக அநியாயமானது. மரத்தால் வீழ்ந்தவர்களை மாடு ஏறி மிதித்து கதையாய் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் அதிகரித்து வரியை அறிவிடுவதனை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பில் நேற்று(28-08-2019) கரைச்சி பிரதேச சபையில் அதிகரித்து ஆதனவரி தொடர்பில் விசேட சபை அமர்வுக்கு எம்மால் கோரப்பட்டு நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின் இறுதியில் பத்து வீதம் ஆதனவரி அறவிடுவதா இல்லை என சபையில் வாக்கெடுப்பு நடத்துமாறு நாம் கோரினோம் ஆனால் சபையின் தவிசாளர் சர்வதிகார போக்கில் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக அவ்வாறு வாக்கெடுப்பு நடத்த முடியாது என பதிலளித்துவிட்டார். எனவும் தெரிவித்தனர்.

எனவே இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனிடம் வினவிய போது கரைச்சி பிரதேச சபையினால் பொது மக்களிடமிருந்து ஒரு வீத ஆதனவரியே அறவிடப்படுகிறது எனத் தெரிவித்தார். எனவே இதேவிடயம் தொடர்பில் கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவகலத்தை தொடர்பு கொண்டு வினவிய போது ஆதன வரி கரைச்சி பிரதேச சபையினால் பத்து வீதமே அறவிடப்படுகிறது எனத் தெரிவித்தனர்.அத்தோடு கரைச்சி பிரதேச சபையின் ஆவணங்களிலும் பொது மக்களிடமிருந்து பத்து வீதம் அறவிடப்பட்டமைக்கான பதிவுகளே காணப்படுகின்றன.

Read more...

Tuesday, August 27, 2019

சபாநாயகர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! - கரு

சபாநாயகர் தனது பதவியிலிருந்து பதவி விலகப் போகின்றார் என்ற செய்தி மிகப் பொய்யான செய்தி என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள செய்தியாவது:

‘2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி புதிய பிரதமர் பதவிப்பிரமாணம் செய்த சட்ட விரோத செயல், ஜனநாயகத்திற்கெதிராக செயற்படுதல் போன்றன மீண்டும் நடைபெற்றால் சபாநாயகர் தனது பதவியிலிருந்து பதவி விலகுவார் என (2019.08.26) சில அச்சூடகங்களும் சமூக வலைத்தளங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. இது முழுமையாக ஜோடிக்கப்பட்ட பெரும் பொய்யாகும் என்பதை அறியத்தருகின்றோம்.

சபாநாயகர் ஒருபோதும் அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை என்பதுடன், அவ்வாறான கருத்தினை வெளியிடவில்லை என்பதையும் தெளிவுறுத்துகின்றோம்.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கு எதிராகவும் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ள வேண்டிய உச்ச நடவடிக்கையினை எடுப்பதற்கு ஒருபோதும் பின்நிற்காமல் உறுதியாக சபாநாயகர் நிற்பார்.

எது எவ்வாறாயினும், மேற்குறிப்பிடப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ள ஊடகங்கள் அவற்றின் அனுமானத்தின்படியே அந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன என்பது தெரிகின்றது. அதனால் அவ்வாறானதொரு நிலை மீண்டும் நாட்டில் இடம்பெற மாட்டாது என்பதில் சபாநாயகர் நம்பிக்கையுடன் உள்ளார்’ எனத் தெரிவித்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com