Dr. சிவரூபன் வழங்கிய தகவலினால் புலிப் பினாமிகளுக்கு உயிரூட்டச் சென்ற எழுவர் கைது!
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் எழுவர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களிலிருந்து நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் எழுவரும், தற்போது பொலிஸாரினால் கைசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பலை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபன் என்பவரின் தகவல்களுக்கு ஏற்பவே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சின்னமணி தனேஷ்வரன், இரத்தினம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னத்துரை, விநாயகமூர்த்தி நெஜிலன் என்ற எழுவருமே யாழ்ப்பாண பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால், கிளிநொச்சியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இவ்விடயத்துடன் தொடர்புற்ற மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு ஏற்ப, பிரதேசங்கள் பலவற்றில் புதைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள், மற்றும் வெடி பொருட்கள் பற்றிய தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் போயுள்ள பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாண அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment