Showing posts with label Katturai. Show all posts
Showing posts with label Katturai. Show all posts

Saturday, November 11, 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு

1974ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அதன் வெள்ளிவிழாவை 1999ம் ஆண்டு கொண்டாடியது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ‘பாசிஸப் புலிகளின்’ அதிகாரத்தின் கீழ் தமிழ் அரசியலும், தமிழ் சமூகமும் முழுமையாக ஆட்பட்டுக் கிடந்ததினால், யாழ்.பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு தொடர்பாக எந்த தமிழ் ஊடகமும் எழுதத் துணியவில்லை அல்லது அதுபற்றி எழுதாமல் கள்ள மெளனம் காத்தன என்றும் கூறலாம்.

அந்தக் கள்ள மெளனத்தை உடைத்து யாழ். பல்கலைக்கழக வரலாற்றின் உண்மையை வெளிக்கொணர "அமுது" சஞ்சிகை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு என்னும் கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அடுத்து வரும் 2024ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகம் அதன் பொன்விழாவை (50ஆண்டு) கொண்டாட வேண்டும். ஆனால் கடந்த இரு வாரங்களுக்கு முன் சட்டத்தரணியும், முன்னனி சமூகச் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கத்தின் கருத்துரை வழங்கும் நிகழ்வொன்றுக்கு அங்கு தடை விகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என இன்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, இன்றுள்ள தலைமுறையினருக்கு யாழ். பல்கலைக்கழகம் உருவான வரலாற்றுத் தகவல்களை வழங்கும் நோக்கில் 2001 "அமுது" சஞ்சிகையில் வெளிவந்த அந்த தொடர் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

- அமுது - பிரதம ஆசிரியர் எஸ். மனோரஞ்சன் –
2023 – November.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தனது 25 வருட பூர்த்தியை வெள்ளி விழாவை அண்மையில் கொண்டாடியது. இவ்விழாவை முன்னிட்டு விழா மலர் ஒன்றும் (ஆங்கிலத்தில் மட்டும்) வெளியிடப்பட்டதுடன் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழகத்தின் கடந்தகால பன்முக வளர்ச்சி பற்றியும் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பல கட்டுரைகள் அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டன. எல்லாம் நல்லபடியாக நடந்த போதும் இந்நிகழ்ச்சிகளின் போது, யாழ். பல்கலைக்கழகம் பற்றி வெளிவரத் தவறிய முக்கிய விடயம் ஒன்று தொடர்பாக அதன் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களின் மத்தியில் விசனித்து இருப்பதை அவதானிக்க முடிகிறது.

அதாவது-
இப் பல்கலைக்கழகம் எவ்வாறு பலத்த போராட்டங்களின் மத்தியில் உருவானது என்பது பற்றிய அதன் வரலாறகும். வெள்ளிவிழா ஏற்பாட்டாளர்கள் அதன் வரலாற்றை வெளிக்கொணர தவறியது அவர்களது அசட்டையீனம் மட்டுமன்றி, ஒரு திட்டமிட்ட இருட்டடிப்பு என்று கருதுவதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. ஒரு தனிமனிதனும் சரி, ஒரு ஸ்தாபனமும் சரி, ஒரு நாடும் சரி தனது தோற்றத்தை அறிந்திருக்க வேண்டும், என்ற ஒரு சாதாரண விடயம் கூட தமிழ்ச் சமூகத்தின் உயர் தன்மை வாய்ந்த புலமைச் சமூகமொன்றின் புலனுக்கு எட்டாமல் போனது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. இன்னொரு பக்க உண்மையும் இந்த விடயத்தில் உண்டு. இன்றைய தலை முறையைச் சேர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமன்றி, இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்ற அநேக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் கூட இது தோற்றம் பெற்ற வரலாறு தெரியாது என்பது கவலைக்குரிய உண்மையாகும்.

ஒவ்வொரு தமிழ் மகனும் இப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றை அறிந்து இருப்பது வெறும் தகவல்களுக்காகவோ புலமைத்துவத்துக்காகவோ அல்ல. நமக்கு அன்றைய காலகட்டத்தில் தலைமை வழங்கிய தமிழ் தலைமைகள் தமது அப்புக்காத்து தொழிலிலும், சுயநல அரசியல் தேவைகளிலும் செலுத்திய அபரிமிதமான அக்கறையை தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் காட்டவில்லை என்பது மட்டுமன்றி, அதற்கு எதிராகவும் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவுமே. அவர்கள் தொடக்கி வைத்த தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரான இந்த அழிவுப் பாதை அரசியல் இன்றும் தொடரப்படும் துரதிர்ஷ்டத்தையும் நாம் பார்க்கிறோம். இப் பல்கலைக்கழகத்தை இயங்க விடாதிருக்க எடுத்த முயற்சிகளும், இளம் சமுதாயத்தை கல்வியறிவற்றவர்கள் ஆக்கி கொடிய யுத்தத்தில் அவர்களை பலிக்கடாக்கள் ஆக்குவதிலும் இருந்தும் இதை நாம் புரிந்துகொள்ள முடியும் எனவேதான் இப் பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒவ்வொரு மாணவனும் ஏனையவர்களும் இதன் தோற்றத்தைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளுவது அவசியமாகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கு பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்ற தமிழ் மக்களின் அவா இலங்கை 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ல் சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவே உருவான ஒரு விடயமாகும். ஆனால் அக்கோரிக்கையை தமது அரசியல் கோஷங்கள் ஆக்கியவர்கள் யாரெனில், மூத்த தமிழ் அரசியல் கட்சியான திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியும் அதிலிருந்து பிரிந்து சென்ற திரு. எஸ். ஜே. வீ. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியுமே. ஆனால் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை கீரியும் பாம்புமாக எதிரெதிரான அரசியலை நடத்தி வந்த இந்தக் கனவான்கள், இந்த யாழ் பல்கலைக்கழக விவகாரத்திலும் ஏட்டிக்கு போட்டியான நிலையிலேயே செயல்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு தேவையானது "இந்து" பல்கலைக்கழகம் என பொன்னம்பலம் கோர, செல்வநாயகமோ தமிழ்ப் பல்கலைக்கழகமே அமைக்க வேண்டும் என கூறினார். இவர்கள் இருவரினதும் புத்திசாலித்தனமற்ற, தவறான, பிடிவாதமான நிலைப்பாடு தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கும் கடமையை தட்டிக் கழிப்பதற்கு அரசாங்கத்திற்கு மிகவும் வசதியாக இருந்தது. இரண்டு தமிழ் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு தமிழ் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தினால் சாதகமான நிலைமை உருவாகும் என்றும், அவ்வாறுஅமைக்கப்படும் பல்கலைக்கழகத்தில் இயல்பாகவே தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரவிடயங்களின் அபிவிருத்திக்கு களம் ஏற்படும் என்றும், பல தமிழறிஞர்களும் முற்போக்கு அரசியல்சக்திகளும் அன்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இரு தலைவர்களும் தமது நிலைப்பாட்டிலேயே அழுங்குப் பிடியாக நின்று காரியம் கை கூடாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியினரோ ஒருபடி முன்னே சென்று தமது கற்பனைத் "தமிழரசுராஜ்யத்தின் தலைநகரான" திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியிலும் இறங்கினார்கள். இதற்கென பல்வேறு குழுக்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து அன்பளிப்பாகவும் மலிவு விலையிலும் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பெற்றதுடன், ஆயிரக்கணக்கான ரூபா நிதியையும் சேகரித்தனர். ஆனால் இன்றுவரை அம்முயற்சிகைகூடவில்லை அதற்கென பெற்ற காணிகளுக்கும் நிதிக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே இருக்கின்றது.

இந்து - தமிழ் பல்கலைக்கழகத்திற்காக இழுபறிப்பட்ட கனவான்கள் ஒன்றாக ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்து கொண்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் தான் 1965 ஆம் ஆண்டு திரு. டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. தீவிர சிங்கள இனவாதிகளான கே. எம். பி. ராஜரத்ன, ஆர்.ஜி. சேனநாயக்க போன்றவர்களையும் உள்ளடக்கி இருந்த அந்த ஏழு கட்சி கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சிகளும் இணைந்து கொண்டன. தமிழ் காங்கிரஸ் சார்பாக திரு. மு. சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவும், தமிழரசு கட்சி சார்பாக திரு. மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகவும் பதவியேற்றனர். தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இவ்விரண்டு கட்சிகளும் டட்லியுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்று செய்ததாகவும் கூறப்பட்டது. டட்லி செல்வா உடன்படிக்கை ஒன்றின் மூலம் மாவட்ட சபைகள் அமைக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் பல்கலைக்கழக நம்பிக்கை மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. 1947ல் அமைந்த டட்லியின் பிதா டி. எஸ். சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி அரசில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் மந்திரிப் பதவி பெற்று, அவ்வரசு இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் செயலுக்கு உடந்தையாக இருந்ததற்காக, அவரை விட்டு பிரிந்து சென்று தமிழ் அரசு கட்சி அமைத்த செல்வநாயகம் அவர்கள் இப்பொழுது பொன்னம்பலத்துடன் டட்லி அரசில் இணைந்து கொண்டதே மக்களின் இந்த நம்பிக்கைக்கு காரணம் ஆகும்.

தமிழர்களுக்கு நன்மையான விடயங்கள் ஏதாவது நடக்கலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். புதிய அரசாங்கம் அமைத்ததும் நடாத்திய முதலாவது கொள்கை விளக்க உரையான சிம்மாசன பிரசங்கத்தில் மகாதேசாதிபதி கவர்னர் ஜெனரல் திரு. வில்லியம் கோபல்லாவ யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அடையாள மானியமாக பத்து ரூபா ஒதுக்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசின் மனப்பூர்வமான ஒரு அறிவிப்பு அல்ல என்றாலும், இரண்டு கட்சிகளும் நினைத்திருந்தால் அதை பயனுள்ளதாக மாற்றியிருக்க முடியும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி நினைத்தபடியே விவகாரம் அவர்களுக்கு சாதகமாக முடிந்தது.

இரண்டு தமிழ் கட்சிகளும் வழமை போலவே "இந்து" பல்கலைக்கழகம் "தமிழ்" பல்கலைக்கழகம் என்ற குஸ்தியில் இறங்கி காரியத்தை கெடுத்துக் கொண்டனர். ஐக்கிய தேசியக்கட்சி குரங்குக்கு அப்பம் பங்கிட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. நாலரை ஆண்டுகள் டட்லி அரசுடன் இணைந்திருந்தும், தமதும் தமது நெருங்கிய உறவினர்களின் சகபாடிகளினதும், தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட காங்கிரஸ், தமிழரசு தலைமைகள் தமிழ் மக்களுக்கு ஒன்றையும் பெற்றுக் கொடுக்கவில்லை மாவட்ட சபைகளும் பல்கலைக்கழக கோரிக்கையும் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டன. இந்த முக்கிய விடயங்களை விடுத்து "திருகோணமலையை புனித நகராக பிரகடனம் செய்யவில்லை" என்ற நொண்டிக் காரணத்தை கூறி 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழ் அரசு கட்சி அரசிலிருந்து விலகிக் கொண்டது.

தமிழரசும் காங்கிரசும் மண் கவ்வினர்.

ஆனால் "சிங்களத் தலைமை வழமைபோல் எங்களை ஏமாற்றிவிட்டது" என்று ஒப்பாரி வைத்து அடுத்த தேர்தலில் வாக்குக்காக இக்கட்சிகள் ஆடிய கபட நாடகத்தை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக்கொண்டதை பின்னர் 1970 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின. 1970 பொதுத்தேர்தலில் திருமதி சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர, சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்தது. தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் பல்கலைக்கழகம் பற்றிய நம்பிக்கை தோன்ற ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக சம சமாஜக், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறிப்பிடக் கூடிய செல்வாக்கு இருந்தது. அதனால் அந்தக் கட்சிகளின் தலைமைகள் இவ் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கக் கூடும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்த இடத்தில் 1970 பொதுத்தேர்தலில் வட பகுதியில் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரக்கூடிய ஒன்றாகும். தமிழரசுக் கட்சியின் தளபதி என வர்ணிக்கப்பட்ட அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டை தொகுதியில் தோல்வியுற்றதுடன், அது தனது கோட்டைகளாக இருந்த நல்லூர், கிளிநொச்சி தொகுதிகளையும் இழந்தது. அதேபோல உடுப்பிட்டி தொகுதியில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட "உடுப்பிட்டிச் சிங்கம்" முன்னாள் உபசபாநாயகர் திரு. மு. சிவசிதம்பரம் தோல்வி கண்டதுடன், கட்சியின் தலைவர் முடிசூடா மன்னன் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

தமிழரசு கட்சியின் சார்பில் டட்லி அரசின் உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த திரு. மு. திருச்செல்வம் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்படாது செனட் சபை என்னும் மூதவை மூலம் கொல்லை வழியாக அமைச்சர் ஆனபடியால் 1970 தேர்தலில் போட்டியிடாது வந்த வழியே தப்பிக்கொண்டார்.

இந்த பாரதூரமான தோல்விகளுக்கு காரணம் இந்த இரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தது மட்டுமல்லாமல், வட பகுதி தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பிரிவான தாழ்த்தப்பட்ட மக்கள் இக்காலகட்டத்தில் நடாத்திய ஆலய பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம், பொது இட சமத்துவ போராட்டங்களை அடக்க முற்பட்டமையுமேயாகும். தேர்தலின் பின்னர் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அமைந்ததைத் தொடர்ந்து அது நிறைவேற்ற எண்ணிய வேலை திட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அமைவும் அதன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றது. வட பகுதியில் அக்காலகட்டத்தில் இயங்கிய மக்கள் நலன் மீது அக்கறையும், செல்வாக்கும், தீர்க்கதரிசனமும், திறமையும் வாய்ந்த இடதுசாரித் தலைமைகளும் பிற ஜனநாயக சக்திகளுமே இதற்கு காரணமாகும்.

யாழ் பல்கலைக்கழக கனவை நிறைவேற்ற திட்டம் வகுக்கப்பட்டது. கனகநாயகம் தலைவராக தெரிவு

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதை துரிதப்படுத்துவதற்காகவும், அதன் செயற்பாடுகளை விசாலப் படுத்துவதற்காகவும் மக்கள் இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக சேர். பொன். இ,ராமநாதனின் மருமகனும் பிரபல சட்டத்தரணியும், தமிழ் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செனட்டருமான ஆர். கனகநாயகம் தெரிவு செய்யப்பட்டார். அவருடன் வடக்கின் பிரபல இடதுசாரித் தலைவர்களான மு. கார்த்திகேசன், அ. வைத்திலிங்கம், அ. விசுவநாதன், வீ.ஏ. கந்தசாமி, எம். சி. சுப்ரமணியம், பத்மா சிவகுருநாதன், டாக்டர் சு.வே. சீனிவாசகம், ஐ.ஆர். அரியரத்தினம், ஆர். தர்மரத்தினம், மாதகல் வ.கந்தசாமி ஆகியோர் செயல்பட்டனர்.

வட பகுதி மக்களின் நீண்டகால அபிலாசையை பிரதிபலித்து நின்ற இந்த இயக்கத்திற்கு தமிழ்ச்சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த பல்வேறு பிரிவினரிடம் இருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது. பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் இந்த முயற்சிக்கு தமது மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்து இந்த இயக்கத்தின் கூட்டங்களில் திரண்டனர். ஆசிரியர்களை பெருமளவு கொண்ட இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் என்பனவும் ஏனைய தொழிற்சங்கங்களும் இம் முயற்சிக்கு உறுதுணையாக நின்றன.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஊடாக தமது ஆதரவை பிரகடனம் செய்தனர். யாழ்ப்பாண கல்வித்துறையின் தூண்களாக அக்காலத்தில் விளங்கிய ஒரேடர் சி. சுப்ரமணியம், எஸ். சிவபாதசுந்தரம், என். சபாரத்தினம், எஸ். கனகரத்தினம், வீ. மகாலிங்கம், க.ந. வேலன் உட்பட பல கல்விமான்களும் கல்விச் சேவை அதிகாரிகளும் சமயப் பெரியார்களும் பல்கலைக்கழக இயக்கத்தின் உந்து சக்திகளாக விளங்கினர்.

மறுபக்கத்தில் பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்களின் பிரசித்திபெற்ற விரிவுரையாளர்களான பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. இந்திரபாலா, கா. சிவத்தம்பி, எஸ். சிவஞானசுந்தரம் (நந்தி), அ. சந்திரசேகரம், எஸ். தர்மரத்தினம், கே. கைலாசநாதக் குருக்கள், எஸ். ராமகிருஷ்ணன், எம். ஏ. நுஃமான், சித்திரலேகா மௌனகுரு போன்றவர்கள் யாழ் பல்கலைக்கழக அமைவில் கரிசனையுடன் பங்காற்றினர்.

அரசாங்க தரப்பை பொறுத்தவரை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத், அமைச்சரும் முன்னாள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவருமான கே. பி. இரத்னாயக்கா மற்றும் அமைச்சர்கள் பீட்டர் கெனமன், செல்லையா குமாரசூரியர் ஆகியோரும், அப்போது கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவிருந்த பிரேமதாச உடகம போன்றோரும் பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர்.

இவ்விடயத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்ட இன்னொருவர் சிறிமாவோவின் மூத்த புதல்வி சுனேத்ராவின் கணவராக இருந்தவரும், ஜனவேகய பத்திரிகையின் ஸ்தாபகருமான திரு. குமார் ரூபசிங்க அவர்களாவார். அவர் யாழ். பல்கலைக்கழகம் அமைவதை அரசாங்க வட்டாரத்தில் தீவிரமாக வலியுறுத்தியதுடன், அதன் திறப்பு விழா ஒழுங்குகளுக்காக பல நாட்கள் முன்னதாகவே வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து செயலாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் 1977 ல் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்தன அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த குமார் ரூபசிங்கவை யாழ் பல்கலைக் கழகத்துக்கு மாற்றம் செய்த சுவாரசியமும் நிகழ்ந்து.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் குழிபறிப்பு தொடர்கிறது.

தமிழ் மக்கள் தரப்பில் இருந்தும் அரசாங்க தரப்பிலிருந்தும் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதற்கு இவ்வளவு ஆதரவு இருந்தபோதிலும் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்கள் தமது எதிர்ப்பை கைவிடவில்லை. தமது கடந்தகால சுயநல, போட்டி அரசியலால் சாதிக்க முடியாமல்போன கைங்கரியத்தை ஏனையவர்கள் அதுவும் குறிப்பாக இடதுசாரிகளும், தம்மால் தமிழ் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களும் சேர்ந்து சாதித்தால், அது வரலாற்றில் பதிவாகி தமக்கு ஒரு நிரந்தர இழுக்காக போய்விடும் என்ற அச்சமே கூட்டணி தலைவர்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணமாகும்.

எனவே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் இந்தக் காரியத்தை, நமக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிரான தமது காரணங்களாக மிக சிரிப்புக்கிடமான பல கதைகளை மக்கள் மத்தியில் அவிழ்த்து விட்டனர்.

அதில் ஒன்று சேர். பொன் இராமநாதனால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலியில் உள்ள பரமேஸ்வரா கல்லூரியில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் அக்கல்லூரி இல்லாது போய்விடும் என்பதாகும். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருப்பது போல் ஏராளமான கட்டிடங்களை கட்டி ஆரம்பிக்காமல், சும்மா வெறுமனே ஒரு பாட சாலையில் பெயர் பலகையை மாட்டிவிட்டு இதுதான் பல்கலைக்கழகம் என அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றப் பார்க்கிறது என்றும் கூறினர்.

இதற்கு பதிலளித்த திரு. எஸ். ஆர். கனகநாயகமும் ஏனையோரும், பரமேஸ்வரா கல்லூரியையும், மருதனாமடத்தில் நிறுவப்பட்டுள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரியையும் எதிர்காலத்தில் மிக உயர்நிலை கல்வி நிறுவனங்களாக வளர்த்தெடுப்பதே இராமநாதன் தம்பதியினரின் நோக்கமாக இருந்தது என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு எடுத்துக் கூறினர். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவை கூட ஒரு குதிரைப் பந்தய திடலில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், பேராதனைப் பல்கலைக்கழகம் கூட பல கட்ட வளர்ச்சிக்கு ஊடாகவே இன்றைய நிலையை அடைந்தது என்பதையும் எடுத்துக் கூறினர்.

கூட்டணியினர் முன்வைத்த மற்றோரு காரணம் மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற சூழலில் பல்கலைக்கழகம் அமைந்தால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளின் சேஷ்டைகளைப் பார்த்து இதர பாடசாலை மாணவர்களும் கெட்டு போய்விடுவார்கள் என்றும், அயலில் உள்ள மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பிணக்குகள், மோதல்கள் உருவாகும் என்பதுமாகும். அத்துடன், தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் வழக்கத்திலுள்ள பகிஸ்கரிப்பு, மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பனவும் மாணவர்களை அதிகம் ஆகர்சிக்கின்ற இடதுசாரி அரசியல் கருத்துக்கள் யாழ்ப்பாணத்திற்கு தொட்டுவிடும் என்ற அச்சமும் ஆகும். ஆனால் பிற்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர்களால் மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு மோதலை தவிர பொது மக்களுடன் யாழ். பல்கலைக்கழகத்துடன் எந்தவித மோதலும் நடைபெறவில்லை.

அது மட்டுமில்லாமல் அரசால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு எதிராகவும், பின்னர் விடுதலைப் புலிகள் உட்பட பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் மாணவர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பல்கலைக்கழக மாணவர்களே முன்னணியில் நின்று போராடி வந்துள்ளதை, போராடி வருவதை வரலாறு நிரூபித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது எதிர்ப்புக்காக முன்வைத்த மற்றொரு காரணம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் அங்கு சிங்கள மாணவர்களுக்கும் கற்பதற்கு வருவார்கள், அதன் மூலம் யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆதிக்கம் வந்து விடும் என்பதாகும்.

இந்த "சிங்கள பூச்சாண்டியும்" அங்கு எடுபடவில்லை. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக இருந்த பேராதனை, கொழும்பு, கட்டுப்பத்தை, வித்யோதய, வித்யாலங்கார என்பவற்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என மூவின மாணவர்களும் இணைந்தே கல்வி கற்று வந்தனர். இன்றும் கூட யாழ்ப்பாணம், மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் மூவின மாணவர்களும் இணைந்தே கல்வி கற்கின்றனர்.

விடுதலைப் புலிகளினதும் சில பல்கலைக்கழக கல்விமான்களினதும் "யாழ்ப்பாண தமிழ் இனவாத" கொள்கை காரணமாக பின்னர் சிங்கள மாணவர்கள் மட்டுமன்றி முஸ்லிம் மாணவர்களும் யாழ். பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி பல்வேறு பிரச்சாரங்களையும் தந்திரோபாயங்களையும் கைக்கொண்ட போதும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் நிறுவுவதில் உறுதியுடன் செயல்பட்டது. இச்சூழ்நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு தற்காலிக ஏற்பாடாக விஞ்ஞான பீடத்திற்கென அமெரிக்கன் மிஷனரிகளால் நிறுவப்பட்ட பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டடங்களை அரசாங்கம் சுவீகரித்தது. இந்த நடவடிக்கை யாழ்ப்பாண கல்லூரி நிர்வாகமும் அதனுடன் சம்பந்தப்பட்ட மதத் தலைமையும் கடுமையாக ஆட்சேபித்தனர். இந்த ஆட்சேபனை தமிழ் மக்களுக்கு வியப்பை அளித்தது. ஏனெனில் அமெரிக்கன் மிஷனரியினர் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவே யாழ்ப்பாணக் கல்லூரியையும் இதர பாடசாலைகளையும் தமிழ் பகுதிகளில் நிறுவினர். உண்மையாக இருந்தால் அவற்றை விட சிறப்பான உயர்வான பல்கலைக்கழகத்தின் வரவை மகிழ்ச்சியுடன் வரவேற்றல்லவா இருக்க வேண்டும், என அன்று மக்கள் தக்க பூர்வமாக வினவியதில் வியப்பில்லை.

ஓடுற வெள்ளத்தில் அள்ளத்தீர்மானித்த தமிழரசு சுக்கானை பிடிக்க முஸ்தீபு

இது சம்பந்தமாக யாழ்ப்பாணக் கல்லூரியின் சம்பந்தப்பட்ட மத நிர்வாகத்துடன் திருவாளர்கள் எஸ். ஜே. வீ. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் போன்றோர் ஆலோசனைகளை நடத்தியதுடன், குருநாகலில் உள்ள சில சிங்கள இன மதத் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு சென்று, அரசாங்கத்தில் இருந்த செல்வாக்கு பெற்ற கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த அமைச்சரான திரு. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மூலம் தங்கள் எதிர்ப்புக்களை நிறைவேற்ற முயன்றனர். ஆனால் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எப்படியும் அரசாங்கம் பல்கலைக் கழகத்தை ஆரம்பித்தே தீரும் என்ற நிலை உருவானதால் ஓடுற வெள்ளத்தில் அள்ளுவது மிச்சம் என்ற நிலைப்பாட்டை கூட்டணியினர் எடுக்கத் தீர்மானித்தனர்.

பல்கலைக்கழகத்தில் தமக்கு வாய்ப்பான சூழலை உருவாக்குவதற்காக அதன் சுக்கானைப் பிடிக்கும் முக்கிய பதவியான தலைவர் பதவிக்கு தமிழரசு கட்சியினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் நீண்டகால தீவிர ஆதரவாளரான பேராசிரியர் சு.வித்தியானந்தனை நியமிப்பதற்கு "அலுவல் பார்க்கும்" கைங்கரியத்தில் இறங்கினர். ஆனால் அதுவும் அவர்களுக்கு கை கொடுக்க தவறிவிட்டது. அரசாங்கம் திரு. க.கைலாசபதி அவர்களை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முதலாவது தலைவராக நியமித்து தன்னையும், கைலாசபதியையும், தமிழையும் பெருமைப்படுத்திக் கொண்டது.

இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச உறுப்பினர்கள் சிலர், அதிலும் குறிப்பாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் சொந்த ஊரான கரவெட்டி வடமராட்சியை சேர்ந்த சிலர் திரு. கா. சிவத்தம்பியை (இப் பேராசிரியர் நீண்டகாலமாக கம்யூனிஸ்ட் மாஸ்கோ சார்பு பிரிவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த காரணத்தால்) யாழ். பல்கலைக் கழகத்தின் முதலாவது தலைவராக அவரை நியமிக்கும் படி அரசாங்கத்துக்கு தந்திகளையும் கடிதங்களையும் அனுப்பி வைத்தனர். ஆனால் அரசாங்கத் தலைமை ஏகோபித்த முறையில் கைலாசபதியையே முதலாவது தலைவராக நியமனம் செய்தது.

கைலாசபதியின் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல்

திட்டமிட்டபடி 74 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரது இரண்டு நாள் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரல்களும் வகுக்கப்பட்டன. தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி உடனடியாக யாழ்ப்பாணம் சென்றார். நிலைமைகள் நல்ல முறையில் உருவாகி வந்த போதிலும் எதிர்ப்பாளர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளில் மூர்க்கத்தனமாகவே இருந்தனர் அகிம்சையைப் பேசிக்கொண்டே வன்முறையில் ஈடுபட திட்டம் வகுத்தனர். முதலாவதாக வன்முறை பேராசிரியர் கைலாசபதி மீது காட்டப்பட்டது. அவர் யாழ்ப்பாணம் வந்து தங்கிய முதல் இரவு அன்றே நாட்டு வெடிகுண்டு ஒன்றை அவரின் வீட்டின் மீது எதிர்ப்பாளர்கள் வீசினர் ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பேராசிரியர் யாழ்ப்பாணம் வந்த ஆரம்ப நாட்களில் வண்ணார்பண்ணை தபாலகத்திற்கு அருகில் இருந்த தமது மைத்துனர் (பிற்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்த திரு. கே.பொன்னம்பலம்) வீட்டிலேயே தங்கியிருந்தார்.

குண்டுவீசிய செய்தியை காலையில் உள்ளூர் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அவரை நலம் விசாரிக்க சென்ற நண்பர்கள் இருவரிடம் திரு. கைலாசபதி சிரித்துக் கொண்டே கூறிய வார்த்தைகள் அவர் உறுதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. "நானும் பனங்காட்டு நரிதான் என்பதை இந்த மடையன்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது" என பேராசிரியர் அப்பொழுது கிண்டலாக கூறியதாக அவரை பார்க்கச் சென்றவர்கள் பின்னர் குறிப்பிட்டனர்.

திறப்பு விழாவுக்கு முன்னர் எல்லா ஒழுங்குகளையும் கைலாசபதி நேரடியாக கண்காணித்து செய்து முடித்தார். தினசரி காலை முதல் இரவு ஆகும்வரை பல்கலைக்கழகம் அமைய இருந்த பரமேஸ்வரா கல்லூரியின் ஒரு சிறிய அறையில் (இப்போது பாதுகாப்பு அதிகாரியின் காரியாலயமாக இருக்கிறது) எவ்வித வசதிகளுமற்ற நிலையில் கடுமையாக உழைத்தார். கட்டிட வேலை, வர்ணம் பூசுதல், நீர், மின்சார விநியோகம், தளபாட அமைப்பு, துப்புரவு வேலை என எல்லா வேலைகளையும் நேரடியாக தானே முன்னின்று கவனித்து செய்வித்தார்.

இரவில் அவர் வீடு திரும்பும் ஒவ்வொரு நாளும் தலையில் சுண்ணாம்பு தூசிகளுடன் ஒரு மேசன் தொழிலாளியை போலவே வீடு திரும்பினார். எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்ட சூழ்நிலையில் தமிழர்களின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கப் போகும் மங்களகரமான நிகழ்வுக்காக, அதாவது யாழ் பல்கலைக்கழக வளாகத்தை (அப்பொழுதெல்லாம் பல்கலைக்கழகங்களும் Campus களாகவே இருந்தன) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தனது சிரேஷ்ட அமைச்சர்கள், அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சகிதம் வருகை தந்தார். மறுபக்கத்தில், தமது எதிர்ப்பு முயற்சிகள் அனைத்திலும் தோல்வி கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்" போல தமது அடுத்தகட்ட எதிர்ப்பு நடவடிக்கையை பெரும் ஆராவாரத்துடன் அறிவித்தனர்!

சிறிமாவோவின் வருகையும் தமிழரசின் ஹர்த்தாலுக்கான அழைப்பும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இரண்டு நாட்களையும் குடா நாட்டுத் தமிழ்மக்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வேண்டுகோள் விடுத்தனர். அந்த இரண்டு நாட்களும் பிரதமர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், கடைகள் யாவற்றையும் பூட்ட வேண்டும் எனவும் தெருக்களில் மக்கள் நடமாடாது மயான அமைதி நிலவ வேண்டும் எனவும் கூட்டணியினர் அறிவித்தனர். பிரதமர் சிறிமாவோ யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட பின்னரே மக்கள் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினர். தனது உணர்ச்சியூட்டும் வசனங்களால் தமிழ் மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திருப்பி விடுவதற்கு தமிழரசு கட்சியின் பிரச்சார ஏடான "சுதந்திரன்" படாத பாடுபட்டது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் உண்ணாவிரதம் ஒன்றையும் இரு நாட்களுக்கு ஏற்பாடு செய்தனர். இந்த போராட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு எதிராக கூட்டணியினர் செய்து கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டு மக்கள் வேதனையும் ஆத்திரமும் அடைந்த அதே வேளையில் இன்னொரு வதந்தியும் வேகமாக பரவியது.

அதாவது உண்ணாவிரதம் இருப்பவர்களை போலீசார் தாக்கப் போகிறார்கள் என்பதே அந்த வதந்தியாகும். அது 1974ல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு குழப்பத்தில் பெற்ற அரசியல் இலாபம் போல், இந்த நிகழ்விலும் அவ்வாறு ஒரு இலாபத்தை உருவாக்கிக் கொள்ள எண்ணிய கூட்டணியினர், போலீஸ் தாக்குதல் பற்றிய வதந்தியை முன்னதாகவே பரப்பி மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்க முயன்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆனால் மக்களை பொறுத்தவரையில் இவர்களது கூத்துக்களால் மிகவும் வெறுப்புற்ற நிலையில் உண்மையிலேயே போலீஸ் வந்து "இவர்களுக்கு ரெண்டு போட்டால் என்ன" என்று எண்ணும் நிலையிலேயே இருந்தனர். ஆனால் நடந்த வேடிக்கை என்னவென்றால், சில கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு பரப்பிய இந்த வதந்தியினால் கூட்டணியின் இன்னொரு பகுதியினர் உண்மையிலேயே அச்சத்திற்கு உள்ளாகினர். விபரீதங்கள் எதுவும் ஏற்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சினர். அவர்களில் முக்கியமானவர் அப்போதைய கோப்பாய் தொகுதி எம். பி. யாக இருந்த சிந்தனைச் சிற்பி திரு.சி. கதிரவேற்பிள்ளை ஆவார்.

திரு கதிரவேற்பிள்ளை உடனடியாக காரியத்தில் இறங்கினார். தான் மிகவும் மதிப்பு வைத்திருந்த, அத்துடன் சகல தரப்பினரதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக உண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து கொண்டிருந்த திரு. மு. கார்த்திகேசன் அவர்களை அழைத்து வரும்படி தனது காரை அனுப்பி வைத்தார். திரு. கார்த்திகேசன் அப்பொழுது பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்தார். கார்த்திகேசன் தனது இலட்சியத்தில் மிகவும் உறுதியான பற்று உள்ளவர் என்பதை அறிந்திருந்த கதிரவேற்பிள்ளை, அவர் தனது காரில் ஏறி வருவதற்கு வசதியாக தனது காரில் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் கூட்டணியின் உதயசூரியன் கொடியையும் கழட்டி வைத்துவிட்டுதான் காரை அனுப்பி வைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கதிரவேற்பிள்ளையின் வேண்டுகோளை ஏற்று கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்த நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய முன்றலை கார்த்திகேசன் சென்றடைந்த பொழுது, போலீசார் தங்களை தாக்கி கலைக்காது இருக்க கார்த்திகேசன் அரசாங்க தலைவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் கதிரவேற்பிள்ளையினால் விடுக்கப்பட்டது. கார்த்திகேசன் அவ்வாறான பிரத்தியேக செல்வாக்கு எதுவும் அரசுடன் தனக்கு இல்லை என்பதை விளக்கியதுடன், அரசோ போலீசாரோ உண்ணாவிரதிகள் மீது அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று தாம் நம்பவில்லை என்று தமது ஊகத்தை தெரிவித்தார் உண்மையும் பின்னர் அவ்வாறே அமைந்தது. இருந்தும் மாலையில் உண்ணாவிரதம் முடிவடையும்வரை சில கூட்டணி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கார்த்திகேசன் அங்கேயே தங்க நேர்ந்தது.

வாள் ஏந்தி நின்று போர்பிரகடணம் செய்தார் அமிர்தலிங்கம்.

ஆனால் மாலையில் உண்ணாவிரத முடிவில் கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கம் "சங்கிலி அரசனின் வாள்" என்று சொல்லி ஒரு வாளை ஏந்தி அரசுக்கு எதிரான போர் பிரகடனம் ஒன்றை விடுத்து தன் வீரத்தை வெளிப்படுத்திக்கொண்டார்.

இவை ஒருபுறமிருக்க, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பலவித எதிர்ப்புகளையும் மீறி திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி அமைந்திருந்த இடத்தில் திட்டமிட்டவாறு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மிகவும் கோலாகலமான முறையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் அரசாங்க தலைவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு தூதுவர்களும், உள்ளூர் கல்விமான்கள், அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள் என்போரும் கலந்து கொண்டனர். இந்த இரண்டுநாள் நிகழ்ச்சிகளிலும் குடாநாட்டில் சிறிமாவோ பண்டாரநாயக்கா சென்ற இடமெங்கும் மக்கள் வீதிகளில் இரு மருங்கிலும் நின்று வரவேற்பு கொடுத்ததை யாழ்ப்பாணம் முன்னொருபோதும் கண்டிருக்கவில்லை.

தமிழ் மக்களின் இந்த செயற்பாடானது தமிழர் விடுதலைக் கூட்டணி இழைத்த மிகப் பெரும் குற்றத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையாக வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட பின்னரும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதன் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு முயன்று வந்தனர். பேராசிரியர் கைலாசபதி தலைமையிலான நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்பட்டன. அயலில் உள்ள மக்களையும் மாணவர்களையும் மோத வைப்பதற்கும் பல முறை முயன்றனர். எல்லாமே தோல்வியில் முடிந்தன.


1977ல் ஜே. ஆர். அரசு பதவிக்கு வந்ததும் அதுவரை பேசி வந்த தீவிர தமிழ் தேசியவாதத்தை கைவிட்டு வழமை போல ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் அரசியல் ஒற்றுமைகாண கூட்டணியினர் முயன்றனர். தமிழரசு, காங்கிரஸ் பழைய தலைமைகளின் துரோகத்தனத்துக்கு எதிராக பிற்காலத்தில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் யாழ் பல்கலைக்கழகமே ஊற்றுமூலமாக இருந்தது. பின்னர் இயக்கங்கள் வழிதவறி அராஜக நடவடிக்கைகளில் இறங்கிய பொழுதும் பல்கலைக்கழக சமூகமே அவற்றைத் தட்டிக் கேட்டது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம், இயக்க அராஜங்களுக்கு எதிரான ஜனநாயகத்துக்கான போராட்டம் என்ற மிகச் சரியான திசையில் யாழ் பல்கலைக்கழக சமூகம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டது. புலிகளின் காலத்தில் இப்போராட்ட முனைப்பு மழுங்கடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த இருவகை போராட்டங்களிலும் பல நல்ல மனிதர்களை யாழ். பல்கலைக்கழக சமூகம் இழந்தது. குறிப்பாக கேதீஸ்வரன், ரவிசேகர், ராஜனி திராணகம, செல்வி, விஜிதரன், விமலேஸ்வரன், மனோகரன், தில்லைநாதன், சிவரமணி, தர்மலிங்கம், ரமணி இப்படி எத்தனையோ பேர் தமது வாழ்வை தியாகம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ் மக்களுக்காக யாழ். பல்கலைக்கழக சமூகம் சிந்திய செந்நீர் துளிகள்.

இத்தகைய பாரம்பரியத்தை கொண்ட யாழ். பல்கலைக்கழகம் இன்று பகிடிவதை என்கின்ற அநாகரிகமான செயல்களிலும், ஜனநாயக செயற்பாடுகள், கருத்து சுதந்திரம் என்பவற்றை மறுதலிக்கும் அரசியல் செயல்பாடுகளில் தன்னை வீழ்த்தி இருப்பது கவலைக்குரியது. இதை தடுத்து நிறுத்தி பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை இடையூறின்றித் தொடர மீண்டும் களத்தில் இறங்க வேண்டியவர்கள் தமிழ் பொது மக்களும் முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழ் கல்விமான்களுமேயாவர்.

இன்று தமிழ் மக்கள் ஒருபுறம் 50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பேரினவாதத்தால் இன உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன நிலைமை, இன்னொரு பக்கத்தில் விடுதலைக்கு போராட புறப்பட்டவர்களிடம் இருந்து அடிப்படை மனித உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் இழந்துள்ள அவலம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் ஒரு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட முடியாது. இரண்டு கண்களையும் திறந்து, இரண்டு கைகளையும் வீசி, இரண்டு கால்கலாலும் நடந்து முன்னைய காலங்களைப் போல் முழு மனிதனாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும் என்பதே உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

Read more...

Friday, May 15, 2020

முள்ளிவாய்கால் முடிவுக்கதை ! தொடக்கக்கதை கேளீர்! கலாநிதி

அல்பிரட் துரைப்பா அவர்கள் தனிப்பெரும் தலைவர் என்ற அடைமொழியோடு அறியப்பட்ட ஜி ஜி பொன்னம்பலத்தையும் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகள் என்று அறியப்பட்ட தமிழரசு கட்சியையும் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றவராகும்.

அதற்கு முக்கிய காரணாமாக கருதப்படுவது அவரின் மக்கள் நலம் சார்ந்த அணுகுமுறைதான்.

தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே ஏறைக்குறைய கொழும்பு வாழ் தமிழ் மேட்டு குடிகள்தான்.

தமிழ் தலைவர்கள் என்றால் அவர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவனின் புத்திரர்கள் என்ற ரீதியில்தான் நடந்து கொண்டார்கள்.
பண்டிதர் கா பொ.இரத்தினம்

தேர்தல் சமயத்தில் மட்டும் வந்து தமிழ் சிங்களம் போன்ற இரு சொற்களை மட்டுமே வைத்து அரசியலில் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டே இருந்தார்கள்.

மறு புறத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் கணக்கு வழக்கு இல்லாமல் எகிறி கொண்டிருந்தது.

இன்றும் கூட தமிழ் சிங்களம் என்ற இரண்டு சொற்களை மட்டுமே மூலதனமாக கொண்டு அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பார்முலாவில்தான் பயணிக்கிறார்கள். ஆனால் தற்போது மக்கள் கொஞ்சம் விழித்து கொண்டு விட்டார்கள்.

அன்றய வடக்கு தமிழ் அரசியல்வாதிகளில் அல்பிரட் துரையப்பாவுக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு எந்த தமிழ் தலைவருக்கும் இருந்ததில்லை.

பெரிய தமிழ் தலைவர்களுக்கு எல்லாம் பெரிய கூட்டங்கள் இருந்தன . ஆனால் அவை வெறும் கும்பல்கள் என்ற ரீதியில் மட்டுமே இருந்தன.

ஏனெனில் அவர்கள் எல்லோருமே தமிழ் சிங்களம் என்ற இரு சொற்களை வைத்து அரசியல் செய்பவர்களாகும்.

இனவாதத்தை வளர்த்து அதில் மட்டுமே குளிர்காய்ந்து அரசியல் நடத்தியவர்கள் ஆரம்பத்தில் துரையப்பாவை அரசியல் ரீதியாக வீழ்த்தி விட முடியும் என்று கருதி கொண்டுதான் இருந்தார்கள்
அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வைத்தியம் நடந்தது 1970. ஆம் ஆண்டு தேர்தலில்.

இருபெரும் கட்சிகளான தமிழரசு கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் ஆறு தொகுதிகளில் அதிர்ச்சிகரமான தோல்விகளை சந்தித்தன.

இரு கட்சிகளையும் சேர்ந்த மிக முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தனர் .

இரு கட்சிகளும் ஒன்றோடு மோதிக்கொண்டு தோற்று போனவர்கள் பட்டியல் இதோ

:1 - ஜி ஜி பொன்னம்பலம் ( இவரின் பேரன்தான் இன்ற புலி ஆதரவு அரசியல்வாதி கஜேந்திரகுமார் போன்னம்லம்)
திரு அமிர்தலிங்கம்
திரு எம் சிவசிதம்பரம்
திரு தா.சிவசிதம்பரம்
திரு .ஆலாலசுந்தரம்
திரு .இ எம் வி .நாகநாதன் ( தந்தை செல்வநாயகத்தின் சம்பந்தி. சந்திரகாசனின் மருமகன்)

இந்த தோல்விதான் தமிழரசு கட்சியின் புதிய அரசியல் பயணத்திற்கு காரணமானது.

இந்த சூழ்நிலையில் உலக தமிழராச்சி மன்றத்தில் பெரும் வலுவான குழுவாக இருந்தவர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளும் ஒரு முக்கிய செய்தியாகும்
குறிப்பாக உலக தமிழராய்ச்சி நிறுவனம் முதலில் மலேசியாவில்தான் உருவானது .

அங்கு பணியில் இருந்த தனிநாயகம் அடிகளும் பண்டிதர் கா பொ இரத்தினமும் இது முக்கிய பங்காற்றி இருந்தார்கள்.

மலேயயா பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளாரோடு இணைந்து பணியாற்றினார் பண்டிதர் கா பொ இரத்தினம் அவர்கள். .

திரு பண்டிதர் கா பொ இரத்தினம் பின்பு தமிழரசு கட்சியின் எம்பியாக கிளிநொச்சி ஊர்காவல் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றார் .

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர்ராய்சி மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் தற்போது மீண்டும் ஒரு தடவை எண்ணிப்பார்க்கவும்.

மிக தெளிவாக புரியக்கூடிய அரசியல் கணக்குகள் இந்த யாழ்ப்பாண மாநாட்டில் தங்கி இருந்தது என்பது ஒரு பெரிய ரகசியமே அல்ல.

அன்றைய காலக்கட்டத்தில் சரி எது பிழை எது என்று மக்கள் சிந்திக்க கூடியி நிலையல் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.
இலங்கையில் சிங்கள இனவாதம் தலை தூக்கி ஆடிகொண்டு இருந்த காலக்கட்டம் அது.

மிக கவனமாக அரசியலை கையாள வேண்டிய முக்கிய சந்தர்ப்பத்தில் வெறும் தேர்தல்களில் வெற்றி பெறுவது ஒன்றே குறி என்று இலங்கை தமிழரசு கட்சி செயலாற்றியது.

1970 தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பல தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்பட்டது.

அந்த தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியில் வெறும் 56 வாக்குகளால் திரு அல்பிரட் துரையப்பா வெற்றி வாய்ப்பை இழந்தார் .

அதில் வெற்றி பெற்றவர் பல தேர்தல்களின் தமிழரசு கட்சி சார்பாக போட்டி இட்டு தோற்றுகொண்டு இருந்த சி எக்ஸ் மார்டின் ஆகும்.

இவர் வெற்றி பெற்ற சில நாட்களிலே ஸ்ரீ மாவோ அம்மையாரோடு சேர்ந்து கொண்டார். திரு ஜி ஜிபோன்னம்பலமோ மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
யாழ்ப்பாண தமிழராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட மக்கள் எழுச்சிதான் தமிழரசு தமிழ் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணியாக உருவெடுக்க முக்கிய காரணமாகும்.

இந்த இருபெரும் கட்சி தொண்டர்களின் தமிழ் தேசியம் உணர்வுகள் மிகவும் உணர்சிகரமாக இருந்தது. எதையும் சீர்தூக்கி பார்க்க கூடிய நிலையில் அன்று மக்கள் இருக்கவில்லை.மக்களை அப்படி ஒரு நிலைக்கு தள்ளியதில் அமிர்தலிங்கத்தின் பங்கு அளப்பெரியது.

அவரின் மனைவி திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் பேச தொடங்கினால் மக்களை கண்ணீர் விடும் அளவுக்கு பேசுவார் . மிக சிறந்த பேச்சாளர் . நல்ல இசைப்புலமையும் உள்ளவர் . சில மேடைகளில் உணர்ச்சி ஊட்டும் பாடல்களையும் பாடுவார்.

திரு அமிர்தலிங்கத்தின் பிபலமாக ஒரு இளைஞர் கூட்டத்தை அவர் கட்டி மேய்த்தார் . அதில் ஒருவர்தான் இன்றைய எம்பி மாவை சேனாதிராசாவும். குறிப்பாக பிரபகரனுகும் அமிர்தலிங்கத்துக்கும் இடையில் நல்ல தொடர்பு இருந்தது.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் அமிர்தலிங்கத்தின் மகனின் பங்கும் இருப்பதாக பலர் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு உன்மத்த நிலைக்கு அன்றைய தமிழ் சமுகத்தை உருவாக்கி இருந்தார்கள் தமிழரசு கட்சியினர். முழுக்க முழுக்க தேர்தல் வெற்றிகளை மனதில் கொண்டே அதை அவர்கள் கட்டமைத்தர்கள்.

அவர்கள் தொகுதிகள் தோறும் பல இளைஞர்களை மூளை சலவை செய்வதில் வெற்றி பெற்றார்கள் . துரையப்பாவை கொன்றபின் நடந்த தேர்தலில் இணைந்த தமிழரசு தமிழ் காங்கிரஸ் கட்சிகள் வரலாறு காணாத வெற்றிகளை அள்ளி குவித்தார்கள். அதன் காரணமாகவே அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக வர முடிந்தது.

துரைப்பா கொலையின் காரணமாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சியின் இளம் நட்சத்திரம் என்று அறியப்பட்ட திரு யோகேஸ்வரன் பெருவெற்றி பெற்றார் ( இவரும் புலிகளின் குண்டுகளுக்கு இரையானர்); -கலாநிதி...............................

Read more...

Saturday, January 4, 2020

எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம்! நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா

நேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் :

கௌரவ சபாநாயகர் அவர்களே,
கௌரவ பிரதமர் அவர்களே,
கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே,
கௌரவ அமைச்சர்களே,
கௌரவ இராஜாங்க அமைச்சர்களே,
கௌரவ பாராளுமன்ற பிரதிநிதிகளே,

இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் தலைவராக உங்களுக்கு உரைநிகழ்த்தும் இவ்வாய்ப்பானது நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்நாட்டின் மக்கள் வழங்கிய வரலாற்றுமிக்க வெற்றியினாலேயே எனக்குக் கிடைத்துள்ளது. அமைதியானதும் அத்துடன் நியாயமானதுமான தேர்தல் ஒன்றிற்காகத் தம்மை அர்ப்பணித்த அனைத்துப் பிரஜைகளுக்கும், நிறுவனங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நான்
இவ்வேளையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ் உயர்சபையில் அமர்ந்திருக்கும் நீங்கள் எக்கட்சியைச் சேர்ந்தவராகவிருப்பினும் இந்நாட்டு மக்களது நலன் கருதி சேவையாற்றுவது எம் அனைவரதும் அடிப்படைப் பொறுப்பாகும். நான் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இந்நாட்டின் இராணுவ அதிகாரியொருவராகவும், பத்து வருடங்களுக்கு அண்மித்த காலம் இந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் சேவையாற்றினேன்.

நான் முனைப்பான அரசியலில் ஈடுபட்டிராவிடினும் மக்கள் சேவை யாதென்பது பற்றி நான் சிறிய வயதிலிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். எனது தந்தையின் மூத்த சகோதரரான டி.எம்.ராஜபக்ஷ அவர்கள் 1936 ஆம் ஆண்டில் அரசப் பேரவையில் அம்பாந்தோட்டை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததுடன், 1945 ஆம் ஆண்டில் அவர் காலமான பின்னர் அம்பாந்தோட்டை மக்கள் எனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ அவர்களை அரச பேரவைக்காகத் தெரிவு செய்தனர்.

அதன்பின் அவர் மக்கள் வாக்கினால் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அன்று தொடக்கம் இற்றைவரைக்கும் உறுகுணை கிருவாபத்துவையின் கிராமப்புறமான மெதமுலனயை அடிப்படையாகக் கொண்ட மூன்று தலைமுறையைச் சேர்ந்த ராஜபக்ஷவினர் வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாகச் சேவையாற்றியுள்ளனர். இக்காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், உப சபாநாயகர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமராக மட்டுமல்லாது ஜனாதிபதிகள் இருவர்களாகவும் எங்கள்மீது நம்பிக்கை வைத்த இந்நாட்டின் பொதுமக்கள் எம்மை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அன்று உறுகுணையின் சிங்கமாக அழைக்கப்பட்ட டி.எம்.ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த முதல் நாளிலிருந்தே குரக்கன் நிறமான சால்வையொன்றை அணிந்திருந்தார். அவர் கிருவாபத்துவையின் குரக்கன் செய்கைபண்ணும் விவசாயிகளையே அந்தச்சால்வையின் மூலம் அடையாளப்படுத்தினார். டி.எம்.ராஜபக்ஷ அவர்களின்பின் எனது தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ அவர்களும் அவரின்பின்
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இந்தக் குரக்கன் நிறமான சால்வையை அணிந்திருந்தனர்.

நான் அந்தச் சால்வையை அணியாதிருப்பினும் இந்நாட்டின் கஷ்டத்திற்குள்ளான மக்கள் சார்பில் என்றென்றும் தம்மை அர்ப்பணித்த குரக்கன் சால்வையினால் அடையாளப்படுத்துகின்ற அந்த ஆழமான தத்துவத்தையே நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். அத்தத்துவம் ஜனாதிபதி தேர்தலுக்காக நான் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடங்கியிருக்கிறது.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

இவ்வேளையில் நான் சுபீட்சத்தின் நோக்கு; எனும் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்னிலைப்படுத்துகின்றேன்.

2019 நவம்பர் மாதம் 16 ஆந் திகதி நடைபெற்ற தேர்தலில் இந்நாட்டு மக்கள் எனக்கு மிகத் தெளிவானதொரு மக்கள் வரத்தினை பெற்றுக் கொடுத்தனர். என்மேல் வைத்த மிகுந்த நம்பிக்கையைக் கொண்டே அவ் வரத்தினை எனக்கு வழங்கினர். அந்நம்பிக்கையை எவ்வகையிலும் மீறாது நாம் உறுதியளித்த அதேவாறு மக்களுக்காகச் சுபீட்சமானதொரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு நானும் எனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

எனக்கு வாக்களித்த மக்களுக்கு இந்நாட்டு அரசியல் கலாசாரத்தில் பாரியதொரு மாற்றத்தைச் செய்யவே தேவையேற்பட்டு இருந்தது. குறிப்பாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல்ரீதியான நிகழ்ச்சி நிரலை மக்கள் நிராகரித்தனர். மேலும் அரசர்களை உருவாக்கும் வகிபாகத்தை நடித்துக் கொண்டு நாட்டின் அரசியலை வழிநடாத்துவதற்கு எவருக்கும் சந்தர்ப்பமளிக்கப்படமாட்டாது என்பதை பெரும்பான்மை மக்கள் நிரூபித்தனர். இந்த யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நான் அழைப்புவிடுக்கின்றேன் கடந்த காலத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு நடாத்திய அரசியலைத் தற்போதாவது கைவிட்டு மக்களிடையே பேதங்களை விதைப்பதற்குப் பதிலாக ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஒன்றுசேருமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.

பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும். எமது நாட்டின் உன்னதமான அரசியல் யாப்பின்படி எனது பதவிக்காலத்தினுள் நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் என்றும் புத்தசாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பேன் என்றும் அதேபோன்று எந்தவொரு பிரசையும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை எப்போதும் காப்பேன் என்றும் இதன்போது வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

சிறுவயதில் எனது தந்தையார் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எனது ஞாபகத்திலுள்ளது. நான் பெரும்பாலும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரியில் இருந்து பாராளுமன்றச் செயற்பாடுகளைக் கண்டு களித்துள்ளேன். கடந்தகாலத்தில் நாங்கள் கண்ட பாராளுமன்றம் மிகவும் முன்மாதிரியான இடமாக இருந்தது. இதில் மிக முக்கிய கருத்துமிக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன. மிகத் தர்க்கரீதியான வாதவிவாதங்கள் இடம்பெற்றன. பாடசாலைப் பிள்ளைகளைப் போன்று மூத்தவர்களும் அவற்றைப் பார்க்கும், செவிமடுக்கும் ஆசையுடன் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தனர். பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தைப் பாதுகாத்துக்கொள்ள உறுப்பினர்கள் எல்லா வகையிலும் முயற்சித்தனர். மக்கள் அன்று பாராளுமன்றத்தை மதித்தனர். மக்கள் பிரதிநிதிகளை மதித்தனர். எனினும் பிற்பட்ட காலங்களில் இந்த மரியாதை
படிப்படியாக குறைந்து போயிற்று.

இந்தப் பாராளுமன்றம் மீண்டுமொருமுறை மக்களின் உண்மையான பிரச்சினைகளை கலந்துரையாடும், தேசியக் கொள்கைகளை விவாதிக்கும் சட்டவாக்கத்துறையின் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றும் முன்மாதிரியானதொரு இடமாக மாற்றப்பட வேண்டும். பாராளுமன்றத்தை மக்களின் மதிப்பை வென்றெடுக்கும் ஒரு இடமாக மாற்றியமைக்கும் அடிப்படைப் பொறுப்பு இங்கிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளிடமே தங்கியுள்ளது. இன்று இந்நாட்டில் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் கழிந்த பின்னரும்கூட இந்நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் நாம் திருப்தியடைய முடியாது. இந்நிலைமையை மாற்றியமைக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. அது சார்பில் தேவையான அர்ப்பணிப்புக்களைச் செய்வதற்கு நாம் தயாராக வேண்டும்.

மக்கள் பிரதிநிதி ஒருவரின் அடிப்படைப் பொறுப்பாவது மக்களுக்குச் சேவையாற்றுவதேயாகும். எமக்குக் கிடைத்துள்ள பதவிகள் சிறப்புரிமைகள் அல்ல அவை பொறுப்புக்கள் என்பதை நாம் அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாடொன்றை முன்னேற்றுவதற்காகச் சீரான தொலைநோக்கும், திட்டங்களும் தேவைப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டின் மக்களுக்கு அறிமுகப்படுத்திய; சுபீட்சத்தின் நோக்கு; எனும் கொள்கைக் பிரகடனமானது சுமார் 4 வருடங்களுக்குக் கிட்டியகாலமாக ‘வியத் மக’ போன்ற தேசிய அமைப்புக்களூடாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ;கம சமக பிலிசந்தரக்; நிகழ்ச்சித்திட்டத்தினூடாகவும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் நிகழ்த்திய விவாதங்களூடாகவும் மக்களது கருத்துக்களைப் பெற்றுக்கொண்டும் எனது நோக்கையும் அதில் சேர்த்துக் கொண்டும் தயாரித்த தேசிய
வேலைத்திட்டமாகும்.

அத்திட்டத்திற்கமைய மக்களுக்குச் சுமையாகவிருந்த வரிச்சுமையை தளர்த்தல், வெளிப்படைத் தன்மை மற்றும் வினைத்திறமையுடன் கூடிய உயர்ந்த நிருவாகத் திறமுறையை ஆரம்பித்தல், வீணான அரசாங்கச் செலவுகளைத் தவிர்த்துக் கொள்ளல் போன்ற பல நடவடிக்கைகளைத் தற்போது நாங்கள் எடுத்துள்ளோம். எமது கொள்கைகளினிடையே தேசியப் பாதுகாப்புக்காக உச்சக் கட்ட முன்னுரிமை கிடைக்கின்றது.

தேசியப் பாதுகாப்புப் பொறிமுறையை மீண்டும் வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். திறமை வாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பொறுப்புக்களை கையளித்துள்ளோம். தேசியப் பாதுகாப்புக்கான பொறுப்புடைய முப்படைக்கும், பொலிசாருக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். தேசிய உளவுப் பிரிவு வலையமைப்பை மறுசீரமைத்து வலுப்படுத்தியுள்ளோம். எமது தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும், அடிப்படைவாதத்திலிருந்தும், பாதாளச் செயற்பாடுகளிலிருந்தும், கள்வர்கள் பயத்திலிருந்தும், கப்பம் பெறுநர்களிடமிருந்தும், போதைப்பொருள் இடையூறிலிருந்தும், சாதாரண மக்கள் வாழ்க்கையை முறியடிப்பவர்களிடமிருந்தும் அத்துடன் பெண்கள் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களற்ற பாதுகாப்பான நாடாக உருவாக்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன்.

எமது அடிப்படை நோக்கமானது உற்பத்திப் பெருக்கமுள்ள ஒரு பிரஜை, மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற குடும்பம், ஒழுக்கம் மிக்க சமூகம் மற்றும் சுபீட்சமான ஒரு தேசத்தை உருவாக்குவதேயாகும். இந்நாட்டில் வாழுகின்ற, வேலை செய்யக்கூடிய வயதிலுள்ள ஒவ்வொரு ஆரோக்கியமான பிரஜையையும், சமூகத்திற்கு உழைக்கக் கூடிய உற்பத்திப் பெருக்கமிக்க பிரஜையாக மாற்றுவதில் அரசு முன்னின்று செயற்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் இந்நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கச் செய்வதே எமக்குத் தேவையாகிறது. அபிவிருத்திச் செயற்பாடுகளின் நன்மைகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரப்படுவதில்
நாங்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். அதேபோன்று நாட்டு மக்களின் தேவைகள் உண்மையாகவே நிறைவேற்றப்படுகின்றனவா, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்பதை ஆராய்வதற்காக புதிய திறமுறையொன்றையும், சுட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கான மக்களின் பதிலை ஆராய்வதற்காகத் தேர்தல் வரும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு அனைவரதும் ஆதரவு எமக்குத் தேவைப்படுகிறது. கடந்த நாட்களில் நாங்கள் வியாபாரத்துறைக்காக வழங்கிய வரிச்சலுகைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்கள் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கமைய வரிகள் குறைக்கப்பட்ட ஒவ்வொரு பண்டத்தினதும், ஒவ்வொரு சேவையினதும் குறிப்பிட்ட விலை குறைக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வறுமையை ஒழிப்பது எமது அரசாங்கத்தின் முன்னுரிமையாகக் கருதுகின்றோம். அதற்காக நாங்கள் மக்கள் ஏழைகளாவதற்கான காரணங்களைப் புரிந்து கொண்டு அவற்றிற்குத்
தீர்வுகளை வழங்க வேண்டும். தகுந்த கல்வியோ அல்லது திறமையோ இல்லாமை, பயிரிடுவதற்குக் காணிகள் இல்லாமை, சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மூலதனம்

இல்லாமை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும் நடைமுறை சாத்தியமான அணுகுமுறையைப் பெற்றுக் கொள்ளலாம். எதிர்வரும் மாதத்தில் இந்நாட்டின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நாம் திட்டம் வகுத்துள்ளோம். அரச துறையையும், தனியார் துறையையும் ஒன்றிணைத்துக்கொண்டு தொழிலின்மைக்காகப் நடைமறை சாத்தியமான தீர்வுகளை முன்வைப்பதற்கு எமது அரசாங்கம் தயாராகவுள்ளது. குணநலமிக்க, சட்டத்தை மதிக்கும், ஒழுக்கப் பண்பாடுடைய சமூகத்தை உருவாக்குவோம் என்பது கடந்த தேர்தலின்போது எமது தொனிப்பொருளாக இருந்தது. மக்கள் அதற்காக எமக்கு வரமொன்றை அளித்துள்ளார்கள்.

எமது நாடு மிகவும் பண்டையகால வரலாற்றுமிகுந்த பௌத்த தத்துவத்தைப் போன்று உலகினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல மத போதனைகளினால் போஷிக்கப்பட்ட சமூகம் வாழும் நாடாகும். எமது விழுமியங்களையும், கலாசாரங்களையும் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

இலங்கையை அபிவிருத்தியடைந்ததொரு நாடாக உருவாக்குவது எமது இலக்காகும். அது இறைமையான, சுதந்திர நாடாதல் வேண்டும். அதேபோன்று அது பாதுகாப்புமிக்க அமைதியான நாடாதல் வேண்டும். இவ் அனைத்துப் பிரிவுகளும் நிறைவுபெறுமிடத்தே இலங்கை உண்மையிலேயே சுபீட்சமானதொரு நாடாகும். சுபீட்சத்தின் நோக்கு; என்பதன் வாயிலாக நாங்கள் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையினையே அறிமுகப்படுத்துகின்றோம். ஒவ்வொரு பிரஜைக்குமாக ஏற்றுக் கொள்ளத்தக்க மட்டத்திலான பொருளாதார நிலைப்பாட்டை உறுதிப்படுத்துதல், முன்னேறுவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்குதல், மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட தூய்மையான அத்துடன் வினைத்திறன்மிக்க அரச சேவையை உறுதிப்படுத்தல் மற்றும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களைப் பாதுகாத்து அவர்களை வலுவூட்டுதல் அதன் முக்கிய நோக்கமாகும்.

மக்களை மையமாகக்கொண்ட பொருளாதாரத்தினை வெற்றிகரமாகத் தாபிப்பதாயின் அரசாங்கத்தின் உச்சக் கட்ட உத்தியோகத்தர்கள் தொடக்கம் குறைந்தபட்ச உத்தியோகத்தர் வரை நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக எமது நோக்கு மற்றும் நோக்கங்களைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்போது அவர்களின் கடமைகளை மிகவும் செயற்திறனான முறையில் நிறைவேற்றலாம். ஊழல்கள் மற்றும் மோசடிகளைப் புறக்கணிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நாங்கள் செயற்படுத்த வேண்டியுள்ளது. ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நாங்கள் அந்தஸ்த்தைக் கருதாது சட்டத்தை விரைவில் செயற்படுத்தவுள்ளோம். இன்று அநேகமான நாடுகள் அரசதுறையின் வினைத்திறமையை உயர்த்துவதற்காகத் தொழில்நுட்பத்தை தீர்வொன்றாக பயன்படுத்தியுள்ளனர். அதனூடாக அனைவருக்கும்
சமவாய்ப்புக்களை வழங்க முடியும். அதனால் அரச நிறுவனங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டைப் பரவலாக்குவதன்பால் நாங்கள் விசேட கவனத்தைச் செலுத்துகின்றோம்.

எமது நாட்டின் பூகோள ரீதியிலான அமைவு, பௌதீக வளங்கள் மற்றும் மனித வளம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டியுள்ளது. இற்றைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையானது கிரேக்கம், ரோம், அரேபியா, சீனா உள்ளிட்ட பல்லின வியாபாரிகள் வருகின்ற சர்வதேச வியாபார நிலையமாகவிருந்தது. இலங்கை அவ்வாறு உலகில் பிரபல்யமாவதற்கு முக்கிய காரணமானது கீழைத்தேய மற்றும் மேலைத்தேய இணைப்பை ஏற்படுத்தும் கடல்பாதையில் மிக முக்கியமானதொரு இடத்தில் எமது நாடான இலங்கை அமைந்திருத்தலாகும். இன்றும் நாம்
அச்சலுகையை அவ்வாறே பெற்றுக்கொள்ள முடியுமாகவுள்ளது.

2005 – 2014 இடைப்பட்ட காலத்தில் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் இலங்கையை தென் ஆசியாவின் பொருளாதார மையமாக முன்னேற்றுவதற்கு திட்டம் வகுத்தது. மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகமானது தென் மாகாணத்தின் மாபெரும் தொழில்நுட்ப நகரத்தினைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே தெரிவு செய்யப்பட்டது.

இலங்கையை ஆசியாவில் நிதிசார் மற்றும் வர்த்தக மையமாக உருவாக்குவதற்காகவே கொழும்பு துறைமுக நகரத்தை கட்டியெழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. நீண்டகால நோக்கங்களுடன் திட்டமிடப்பட்ட அக்கருத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துச்செல்லவேண்டும். நாங்கள் செவ்வையான ஒரு திட்டத்தின்படி செயற்பட்டால் பிராந்திய அயல் நாடுகளுக்குப் பண்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற பல்வேறு சர்வதேச வியாபாரங்களை இலங்கையில் நிலைப்படுத்திக்கொள்ள முடியும். அதற்காக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் அம்முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் தேவையான சகல வசதிகளையும் துரிதமாக வழங்குவதற்காகவும் நாங்கள் தயாராகவிருத்தல் வேண்டும்.

அதிவேகப் பாதைத் தொகுதிகளைப்போன்று நெடுஞ்சாலைத் தொகுதிகளை முன்னேற்றும் பணிகளைத் துரிதப்படுத்தி நாட்டின் எந்தவொரு இடத்திலிருந்தும் இன்னுமொரு இடத்திற்குச் சில மணித்தியாலயங்களினுள் பயணிக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துதல் பொருளாதார அபிவிருத்திக்கு மிக முக்கியமானது. புகையிரதச் சேவையை மேம்படுத்துதலும் இவ்வேலைத்திட்டத்தின் அவசியமானதொரு பிரிவாகும். வினைத்திறன்மிக்க அத்துடன் சொகுசு முறையிலான புகையிரதச் சேவையின் மூலம் இன்று பாரியதொரு பிரச்சினையாக நிலவுகின்ற வீதி நெருக்கடிக்கான தீர்வுகளைக் காண முடியும்.

நகரமயமாக்கல் ஒரு நாட்டிற்கு நன்மையைப்போன்று தீமையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அபிவிருத்தி நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக எமக்கு மீள் நகரமய வேலைத்திட்டமொன்று தேவைப்படுகிறது. இதனூடாக நகரப்புற நெருக்கடியைக் குறைப்பதற்கும், சூழல் மாசடைவதைக் குறைப்பதற்கும், அதேபோன்று வாழ்க்கைச் செலவுகளைக் குறைப்பதற்கும் எமக்கு வசதி கிடைக்கிறது. இலங்கைபூராகவும் பரந்திருக்கும் மக்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகள், சுகாதாரச் சேவைகள் மற்றும் தொழில்கள் என்பவற்றை நடாத்திச் செல்வதற்காக தமது பிரதேசத்தினுள்
வேண்டிய வசதிகள் இருக்க வேண்டும். வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைத் தொகுதிகளின் முன்னேற்றத்தைப்போன்று நாடு முழுவதிலும் அதிவேக சர்வதேச வலையமைப்பு வசதிகள் மற்றும் தொடர்பாடல் வசதிகள் என்பவற்றை இதற்காக வழங்குதல் முக்கியமாகிறது.

பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டின்போது மின்சார விலைகள் முக்கிய காரணியாகும். குறிப்பாக பொருளாதாரத்துறைகளுக்கு முதலீட்டாளர்களை வரவழைக்கும்போது இது அழுத்தம் செலுத்துகின்றது. நியாயமான விலைக்கு வலுசக்தியை உற்பத்தி செய்வதற்காக எமக்குக் குறுகியகால அத்துடன் நீண்டகாலத் தீர்வுகள் தேவைப்படுகிறது. நீண்டகாலத் தீர்வுகளைத் தேடும்போது சூரிய சக்தி, காற்றின் சக்தி, நீர் மின்சாரம் போன்ற சுற்றாடல் நேயமிக்க புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய மூலங்களின்பால் முக்கிய கவனம் செலுத்துவது எமது கொள்கையாகும்.

எமது நாடு இரத்தினக்கற்கள் மற்றும் கனிய வளங்கள் நிறைந்த நாடாகவிருப்பினும் அவற்றின் பெறுமதியை அதிகரிக்கும் தொழில்கள் இற்றைவரைக்கும் சர்வதேச ரீதியில் முன்னேற்றமடையவில்லை. பெறுமதியை அதிகரிக்காது இத்தகைய இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அதிகளவிலான அந்நியச் செலாவணியை வருடாந்தம் இழக்க நேரிடுகிறது. இலங்கையில் மட்டுமன்றி ஆபிரிக்க பிராந்திய நாடுகளிலிருந்துகூட கொண்டுவரப்படும் இரத்தினக்கற்களின் பெறுமதியை அதிகரித்து விற்பனை செய்யக்கூடிய சர்வதேச ரீதியிலான இரத்தினக்கல் வர்த்தகத் தொகுதியொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடல்கள் மற்றும் புவிச்சரிதவியல் அளவைகளுக்காக புதிய தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டுமென்பதுடன், இலங்கையின் கனிய வளங்களுக்குப் பெறுமதி சேர்க்கும் கைத்தொழில்களுக்கான முதலீடுகளுக்கு விசேட சலுகைகளை வழங்கி அவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

பல்வேறு சட்டதிட்டங்கள், அனுமதிப் பத்திரங்கள் என்பவற்றின்மீதான தடைகளின் மூலம் இலங்கையின் பாரம்பரிய வாழ்வாதாரங்களாகிய இரத்தினக் கல் தொழில், ஓட்டுக் கைத்தொழில், செங்கல் கைத்தொழில், தச்சு வேலை மற்றும் கைத்தொழில்கள் போன்ற துறைகளுக்காக அநாவசியமான அத்துடன் அநீதியான வரையறைகளை விதித்து நாட்டின் அபிவிருத்திக்கு தடையேற்படுத்துவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

எதிர்காலத்தைத் திட்டமிடும்போது கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் முதலியன தொடர்பாகத் தற்போது இருப்பதைவிட முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறந்ததொரு காலநிலை இருக்கின்ற அத்துடன் அதிவிசாலமான கடல்சார் பொருளாதார வலயத்திற்கு உரித்துடைய நாடென்ற ரீதியில் நம்மால் இத்தொழிலை இதை விட மிகவும் முன்னேற்ற முடியும். சரக்குப் பொருட்கள், பழவகைகள், மரக்கறி வகைகள், தானியங்கள், மாமிசம் மற்றும் மீன் போன்ற ஏற்றுமதி செய்யக்கூடிய கமத்தொழில் உற்பத்திகள் பல இருக்கும்போது இதைவிட ஏற்றுமதி வருமானத்தை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டில் வாழும் மக்களின் 1/3 பங்கினர் கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் கடற்றொழில் என்பவற்றின்மீது வாழ்கின்றனர். நாங்கள் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

இத்தொழில்களை முன்னேற்றுவதற்காகப் பாரம்பரிய செய்கை முறைகளுக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட புதிய அணுகுமுறை தேவைப்படுகின்றது. அதேபோன்று நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை நோக்காகக்கொண்ட கமத்தொழிலுக்காகச் சேதனப் பசளைப் பயன்பாட்டை பரவலாக்குதலும் எமது கொள்கையில் ஒரு பகுதியாகும். எதிர்வரும் தசாப்தத்தில் இலங்கையில் கமத்தொழிலை முற்றுமுழுதாகச் சேதனப் பசளைப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும். உள்ளூர் ரீதியாக சேதனப் பசளை உற்பத்தியை விருத்தி செய்யும் வேலைத்திட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. கமத்தொழில் உற்பத்திகளை வரையறையின்றி மீள் ஏற்றுமதி செய்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதால் சிறிய ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எமது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் செயற்பட்டது. கமத்தொழில் உற்பத்திகளை மீள் ஏற்றுமதி செய்வதை முற்றும் முழுதாக நிறுத்துவதற்கு தற்போது பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கடல்சார் பொருளாதாரம் தொடர்பாகவும் இதைவிடக் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். கடற்றொழிலை முன்னேற்றுவதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், இயந்திர உபகரணங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக முறையானதொரு வேலைத்திட்டமொன்றை நாங்கள் அறிமுகப்படுத்தவுள்ளோம். ஆழ்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் படகுகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகச் சகல கடற்றொழில் துறைமுகங்களை நவீனமயப்படுத்துவதுடன், தேவைகளுக்கேற்ப புதிதாக துறைமுகங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். நன்நீர் மீன்பிடித்தொழிலை முன்னேற்றுதலும், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதலும் எமது திட்டத்தின் ஒரு பகுதியாகும். எதிர்காலச் சந்ததியினர் சார்பில் சூழலைப் பாதுகாத்தல் எமது அடிப்படைப் பொறுப்பாகும். அரச கொள்கைகளைத் தயாரிக்கும்போதும், செயற்படுத்தும்போதும் சூழல் பாதுகாப்புத் தொடர்பில் நாங்கள் முக்கிய கவனத்தைச் செலுத்துவோம்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றும் போது உலகில் முன்னணியில் திகழ்கின்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஒரு நாடென்ற வகையில் எமக்குள்ள மிகப் பெறுமதியான வளமானது எமது எதிர்காலச் சந்ததியாகும். அதனால் மனிதவள அபிவிருத்தியை எமது அரசாங்கத்தின் முக்கியமானதொரு பொறுப்பு என நாங்கள் இனமறிந்துள்ளோம். நாட்டின் எதிர்காலச் சந்ததியைப் பயன்மிகுந்த பிரஜைகளாக்குவதற்குத் தேவையான அறிவினால் அவர்களைப் போஷிப்பதற்கும், அவர்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவங்களை விருத்தி செய்வதன்பால் முக்கிய கவனம் செலுத்துவதற்கும் எமக்கு நேர்ந்துள்ளது. இளைஞர் யுவதிகளை வழிதவறவிடாது அவர்களுக்காக உயர்கல்விக்கும், தொழில்நுட்ப கல்விக்குமுள்ள வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும். இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மிகக் குறுகிய காலத்தினுள் கட்டியெழுப்ப வேண்டும். அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலும், அரசாங்கத்தின் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிலும் உள்ள இயலளவுகளை
வினைத்திறமையாக பயன்படுத்துவதன் வாயிலாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இன்று பல்கலைக்கழகங்களில் கற்பிக்கின்ற சில பாடநெறிகள் தொழிற்சந்தைக்கு ஏற்றவாறாக அமைவதில்லை. தற்கால தொழிற்சந்தை தேவைகளுக்காக எமது பல்கலைக்கழக மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு தற்போது கற்கும் பாடநெறிகளுக்கு மேலதிகமாக அவர்கள் தன்னிச்சையாக பங்குபற்றக் கூடிய குறுகிய கால மேலதிக பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மாணவர்களை அனுமதிக்கும் போதும் அதேபோன்று சந்தை தேவைகளை இலக்கிட்டு பாடநெறிகளைத் திருத்தும் போதும் பல்கலைக்கழகங்களுக்கும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களுக்கும் கூடிய சுதந்திரத்தை வழங்க வேண்டும்.
நாட்டில் தற்போது உள்ள டிப்ளோமா மட்ட பாடநெறிகளை நடத்தும் நிறுவனங்களை முறையே பட்டமளிக்கும் தரத்திற்கு உயர்த்துவது அவசியமாகும். இதற்கான ஆரம்பமாக எமது ஆசிரியர் பயிற்சி பாடசாலைகள் மற்றும் தாதியர் பயிற்சி பாடசாலைகள் என்பவற்றை பட்டமளிப்பு தரத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறையானது தற்போது
கல்வித்துறையினுள் பிரச்சினையாகவுள்ளது. அதேபோன்று தாதியர்களுக்காக தற்போது வழங்கப்படும் மூன்று வருடகால டிப்ளோமாவை நான்கு வருடகால பட்டப் படிப்பு வரை உயர்த்துவதன் மூலமும், அவர்களின் ஆங்கில அறிவை விருத்தி செய்வதன் மூலமும் அவர்களுக்கு சர்வதேச தர அளவுகளின் கீழ் வெளிநாடுகளிலும் கூட சேவையாற்றுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்தில் சித்தி பெறாதவர்களும், சாதாரண தரம் வரை கற்றுக் கொண்டவர்களுமான மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் இயந்திரவியல் பிரிவின் அறிவினை விருத்தி செய்து கொள்வதற்காக இயந்திரவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரித் தொகுதியை வலுப்படுத்த வேண்டும். குறித்த நிறுவனங்களுக்காக வழங்கப்படும் ஒதுக்கீடுகளையும் வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். இதனூடாக சர்வதேச ரீதியில் ழில்பயிற்சி பெற்ற ஊழியப்படையை உருவாக்க முடியுமானதுடன், உள்நாடு போன்று வெளிநாட்டுச் தொழிற்சந்தையிலும் உயர்ந்த சம்பளத்தைப் பெறக் கூடிய தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக்
கொடுக்க முடிகிறது.

தொழிற்துறையினுள் ஆங்கில அறிவு போதாமை பெருமளவிலான இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்புக்களை இழக்கச் செய்கிறது. இதனால் இலங்கையின் ஒவ்வொரு பாடசாலையிலும் ஆங்கிலமொழியைக் கற்பிப்பதற்கான வசதிகளை முன்னேற்றுவதற்கும் அதற்குத் தேவையான ஆசியர்களை இணைப்புச் செய்வதற்கும் விசேட திறமுறையொன்றை நாங்கள் அறிமுகப்படுத்துவோம். இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொடுப்பதற்காக எமது வெளிநாட்டு தூதரகங்களுக்கு முக்கிய பொறுப்புக்களை கையளிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். பயிற்றப்படாத ஊழியர்கள் அநேகமானோரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக ஒவ்வொரு துறையிலும் பயிற்சிபெற்ற ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் எமது நாட்டிற்கு கிடைக்கின்ற அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்வதற்கும் சர்வதேச தொழிற்சந்தையினுள் எமது நாட்டின் பிரதிமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் முடிகிறது.

கல்வித்துறையானது ஒரு நாட்டிற்கு சிறந்த அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்வதற்குரிய வழியாகும். இலங்கைப் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையானோர் இன்று ஆசிய உயர்கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொண்டு இருக்கின்றனர். கல்விக்காக எமது பிள்ளைகளை அதி கூடிய பணச் செலவில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்குப் பதிலாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கையின்பால் கவரச் செய்யும் விதத்திலான வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சர்வதேச ரீதியில் தமது தரப்படுத்துகைகளிலிருந்து மேலுயர்வதற்காக குறுகிய கால அத்துடன் நீண்டகால திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எமது நாடு முன்னேற்றமடைந்து வரும் நாடாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் உண்மையிலேயே இதிலிருந்து மீண்டு முன்னேறிய நாடாக வேண்டுமாயின் அதற்காக உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல் வேண்டும். 5 பில்லியனுக்கும் கூடிய மக்கள் வாழ்கின்ற ஆசியாவினுள் இன்று மாபெரும் பொருளாதார மலர்ச்சி ஏற்பட்டு உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையம் ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

பணம் செலவழிக்கும் ஆற்றலுள்ள மத்திய வகுப்பின் சமுதாயம் கடுகதியாக விருத்தியடைவது இவ்வலயத்திற்குள்ளேயாகும். ஆகையால் எமது உள்நாட்டு தொழில் முயற்சியாளர்கள் ஆசிய பிராந்தியத்தினுள் புதிய
சந்தைகளைத் தேடிச் செல்வதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். 21 ஆவது நூற்றாண்டானது அறிவை மையமாகக் கொண்ட நூற்றாண்டாக அழைக்கப்படுகிறது. செயற்கை புத்திக்கூர்மை (Artificial Intelligence) , உயிரினத் தொழில்நுட்பம் (biotechnology), ரொபோ விஞ்ஞானம் (robotics), 3D அச்சீடு, IOT உதிரிப்பாகங்கள் (Internet of Things) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் உலகத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன.

உலகின் முன்னேற்றமடைகின்ற பல நாடுகள் இவ்யதார்த்தத்தைப் புரிந்துள்ளன. தொழில்நுட்ப மைய முதலீடுகளுக்காக அவர்கள் பெரும் பணத்தைச் செலவு செய்கின்றனர். எமது முதலீட்டுக் கொள்கையை முகாமை செய்யும் போது நாங்கள் இதன்பால் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக எமக்கு எந்த வகையான முதலீடுகள் தேவைப்படுகின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கமைய நாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்ற முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளையும், சலுகைகளையும் வழங்கி நாங்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

எமது இளம் சந்ததியை புதிய தொழில்நுட்பங்களைக் கற்பதற்கும் அவற்றிற்குரிய ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் ஈடுபடுத்துவது மிக முக்கியமாகும். அதற்காக தாமதிக்காமல் துரிதமாக தயாராவதற்கு நாங்கள் கல்வித்துறைக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதேபோன்று இளம் சந்ததியினருள் ஆங்கில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமக்கான சந்தை வாய்ப்புக்கள் இருப்பது தொழில்நுட்பத்துறைகளில் மட்டுமல்ல என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருங்காலத்தில் எம்மால் இலகுவாக முன்னேற்றக் கூடிய மற்றுமொரு துறையாவது சுற்றுலாத்துறை கைத்தொழிலாகும். 2018 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வருமானத்தை ஈட்டிய சுற்றுலாத்துறைக் கைத்தொழிலானது இன்னும் பல ஆண்டுகளினுள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டும் தொழிலாக மாறுவதற்கு அவகாசம் உள்ளது. இதற்காக மிக முறையானதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். ஜனநாயகத்தின் உச்சக்கட்ட பயனை அடைவதாயின் அரச நிருவாகத்தையும் உரியவாறு செயற்படுத்த வேண்டும்.

அரச நிறுவனங்களை இலாபகரமாக அத்துடன் வினைத்திறமையாக நிருவகிப்பதற்காக உயர் பதவிகளுக்கு தகுதிவாய்ந்தவர்களைத் தெரிவு செய்யும் போது உரிய துறையின் அறிவும் பொறுப்பை வகிப்பதற்கான தகைமையும் கொண்டுள்ளவர்களை நியமிப்பதாக நாங்கள் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டோம். அதற்கமைய புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின் அரச நிறுவனங்களை நிருவகிப்பதற்காக பொருத்தமானவர்களைப் பரிந்துரைப்பதற்கு நாங்கள் குழுவொன்றைத் தாபித்துள்ளோம்.

2004 – 2014 இடைப்பட்ட காலத்தினுள் நாங்கள் இலங்கைப் பொருளாதாரத்தில் துரிதமான அபிவிருத்தி ஏற்படும் விதத்தைக் கண்டோம். வீதித் தொகுதி, வீடமைப்பு, மின்சாரம், நீர், தொடர்பாடல் வசதிகளைப் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளிலும் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவம், நகர அலங்கரிப்பு போன்ற துறைகளிலும் மாபெரும் முன்னேற்றம் நிகழ்ந்தது. திறமையான நிருவாகத்தினை தாபித்தலின் மூலம் எம்மால் மீண்டும் இந்த நிலையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

ஜனநாயக ரீதியிலான இராச்சியமொன்றில் வெற்றிகர நிலைமை தங்கியிருக்கும் அடிப்படையாவது அரசியலமைப்புச் சட்டமாகும். 1978 தொடக்கம் 19 தடவைகள் திருத்தப்பட்ட எமது அரசியலமைப்பில் உள்ள உறுதியற்ற மற்றும் குழப்பமான தன்மையினால் தற்காலத்தில் பல பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது. எமது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, நிலைப்பாடு மற்றும் ஒற்றையாட்சியை பாதுகாப்பதாகவிருப்பின் தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் சில மாற்றங்களைச் செய்யவே வேண்டும். விகிதாசார வாக்கெடுப்பு முறையில் உள்ள ஆக்க முறையிலான இலட்சணங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளையில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டினையும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்துவதற்காக தற்கால தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றது.

இலக்கங்களினால் தேர்தல்களை வெல்லக் கூடியதாகவிருப்பினும் தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத அடிப்படை வாதத்தின் அழுத்தங்களுக்கு தொடர்ந்து கீழ்படியும் நிலையற்றதொரு பாராளுமன்றம் ஒரு நாட்டிற்கு பொருந்தாது. மக்களின் இறையாண்மையை உறுதி செய்கின்ற வலுவான சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சுயாதீன நீதிமன்றம் தாபித்தலை சட்டரீதியான மாற்றத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். எமது நாட்டின் விசேட அமைவினால் உலகரீதியான புவி அரசியலினுள் முக்கிய கவனம் தற்போது இலங்கையின்பால் செலுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையொன்றைப் பின்பற்றுவோம் நாங்கள் அனைத்து நாடுகளோடும் நட்புறவுகளைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஆயினும் ஒருபோதும் நாம் எமது சுயாதீனத் தன்மையைக் விட்டுக் கொடுக்க முடியாது. இராஜதந்திர உறவுகளின் போது அல்லது சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போதும் எந்தவொரு வெளிநாட்டின் முன்னிலையிலும் மண்டியிடாத நாட்டின் இறைமையை எப்போதும் பாதுகாக்கின்ற, எந்தவொரு நாடோடும் சமநிலையில் கொடுக்கல் வாங்கல் செய்யும் தேசிய அபிமானத்தைப் பாதுகாக்கின்ற கௌரவமான ஆட்சியை நாம் உருவாக்குவோம்.

முக்கியமாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த எமது நிலப் பிரதேசங்கள் அல்லது பௌதீக வளங்களை ஒருபோதும் வேறொரு நாட்டிற்கு உடமையாக்காதிருத்தல் எமது கொள்கையாகும். இலங்கையரை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படும் கௌரவமான இனமாக்குவது எனது அபிலாஷையாகும். அந்த நோக்கத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் போது ஒரு இனம் என்ற ரீதியில் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் மூலம் எமது முன்னிலையில் உள்ள சவால்களை வெற்றி பெறவும் முடியும்.

நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். நான் எனது நாட்டைப் பற்றி பெருமைப்படுகின்றேன். எனக்கு எனது நாடு தொடர்பான தொலைநோக்குள்ளது. வரலாற்றினால் தற்கால சந்ததிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பொறுப்பைக் கையேற்பதற்கு என்னுடன் ஒன்று சேருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி மும்மணிகளின் ஆசிகள்.

Read more...

Thursday, August 29, 2019

இலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்! ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் நோர்வேயில் வசிக்கும் நடராஜா சேதுறூபன் என்பவன் இணையவழியாக கப்பம் பெற்றான் என குற்றஞ்சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு (வழக்கிலக்கம் 30600) தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கிற்கு ஊத்தை சேது மன்றில் ஆஜராகாததைத் தொடர்ந்து அவனுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றினால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 02.08.2019 ம் திகதி நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் பெயரில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஊத்தை சேது, 06.08.2019 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டான்.

இது தொடர்பாக இலங்கையிலுள்ள ஊடகங்கள் மும்மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டிருந்தது. கப்பம் பெற்றதாக குற்றஞ்சுமத்தப்பட்ட குறித்த வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்த சக்தி தொலைக்காட்சியின் கிளிநொச்சி பிரதேச ஊடகவியலாளரான சுஜீவனது புகைப்படக்கருவி மீது ஊத்தை சேதுவின் தந்தையான வல்லிபுரம் நடராசா என்பவன் நீதிமன்ற தாக்குதல் நடாத்தியிருந்தமையை சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்திருந்தது.

இந்நிலையில் இலங்கைநெட் குறித்த சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தமை ஊத்தை சேதுவுக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளதாக மின்னஞ்சல் ஊடாக தெரியப்படுத்தியுள்ளதுடன் , ஊத்தை சேதுவிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் ஊடக சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளான். முகப்புத்தகத்தில் எடிட்டர் இன் ச்சீப் என தன்னை குறிப்பிட்டுள்ள ஊத்தை சேது நீதிமன்ற வழக்கொன்று தொடர்பாக செய்தி வெளியிட்டமையால் தான் அதிர்சி அடைந்தாக தெரிவித்துள்ளான்.

இலங்கைநெட் இணையத்தளமானது ஊடக தர்மத்தை மதித்து அதன் வரையறைக்குள் நின்று 11 வருடங்களாக பொது நோக்குடன் எவ்வித பக்கசார்புமின்றி செயற்பட்டுவரும் ஊடகமாகும். கடந்த 11 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அச்சமின்றி செயற்பட்டுவரும் இலங்கைநெட்டை ஊத்தை சேது என்ற கறட்டி ஓனான் வெருட்டி ஓ**க முற்பட்டால் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் ஊத்தை சேது என்ற நடராஜா சேதுறூபனுக்கு இச்செய்தியினூடாக பகிரங்க அறிவித்தல் விடுக்கப்படுகின்றது.

நடராஜா சேதுறூபன் மீது கப்பம் பெற்றதாக இலங்கையில் வெளியான செய்திக்குறிப்புக்களில் சில ஊத்தைசேதுவின் ஞாபகமூட்டலுக்காக இங்கு தரவேற்றப்படுகின்றது.










කොටි හිතවාදී නඩරාජා අත්අඩංගුවට


çඑෆ්.අස්ලම්)

එල්.ටී.ටී.ඊ සංවිධනයේ වෙබ් අඩෙවියක නිර්මාතෘවරයෙකු මෙන්ම දෙමළ ඩයස්පෝරාවේ ප්‍රබල කොටි හිතවාදියෙකු වශයෙන් හදුනාගෙන ඇති නඩරාජා සේදුරූපන් නැමැත්තා යාපනය නෙල්ලිඅඩි පොලිසිය විසින් ඊයේ (2) අත්අඩංගුවට ගෙන තිබේ.

නෝර්වේ රාජ්‍යයේ සිට මෙරටට පැමිණ ඇති සැකකරු යාපනය නෙල්ලිඅඩි ප්‍රදේශයේදීම අත්අඩංගුවට ගෙන ඇතැයි පොලිසිය සඳහන් කරයි.

පුද්ගලයෙකුට දුරකතන මාර්ගයෙන් බැණ තර්ජනය කිරීම සහ කප්පම් ඉල්ලීමේ සිද්ධියකට අදාලව අධිකරණය හමුවේ පෙනී නොසිටීම මත කිලිනොච්චිය මහේස්ත්‍රාත් අධිකරණය විසින් නිකුත් කර තිබුණු වරෙන්තුවකට අනුව සැකකරු අත්අඩංගුවට ගෙන තිබේ.

එල්.ටී.ටී.ඊ සංවිධානයේ වෙබ් අඩෙවියේ නිර්මාතෘ බව කියන මෙම සැකකරු නෝර්වේ රාජ්‍යයේ පදිංචි පුද්ගලයෙකු බවත් ත්‍රස්තවාදය පැවති සමයේ කොටි සංවිධානය වෙනුවෙන් මුදල් එක්රැස් කිරීම ඇතුළු ත්‍රස්තවාදයට ආධාර අනුබල ලබාදීමේ චෝදනාවන්ද ඔහුට එරෙහිව එල්ල වී තිබෙන බවට් උසස් පොලිස් නිලධාරියෙකු ලංකාදීපයට පැවසීය.

සැකකරු අද කිලිනොච්චිය මහේස්ත්‍රාත් අධිකරණය වෙත ඉදිරිපත් කිරීමට නියමිත අතර වැඩිදුර විමර්ශන නෙල්ලිඅඩි පොලිසිය සහ ත්‍රස්ත විමර්ශන දෙපාර්තුමේන්තුව සිදුකරයි.


மேலும் ஊத்தை சேதுவால் இலங்கைநெட் ன் கருத்துச்சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல் இங்கு தரவேற்றப்படுகின்றது.


Dear Sir / Madam

I am writing this email about an article published on your website today. I am extremely appalled about the content of the article. I am writing to you to request you that an apology to MR.Nadarajah Sethurupan is published in your website immediately.

I would like to confirm that Mr.Nadarajah Sethurupan has no involvement in any bribe activities as alleged by yourselves in that article. This has been confirmed by the Court in Kilinochchi MC in Sri lanka during the trial.

I am require you to provide information as to the source of the content.

I have been enclosed a copy links of that article as retrieved from your online.

I am not owner to NEWJAFFNA .net facebook it was operated by someone in Sri lanka.

I never ever had any server on my name. many time my emails was illegally hacked by you and your members.

http://www.ilankainet.com/2019/08/blog-post_54.html


I look forward to a swift response from you in this matter and if you have any future queries please do not hesitate to contact me.


Best Regards
Nadarajah Sethurupan
Mobile : + 47 47 944 944
E-mail : news@norwaynews.com
http://www.norwaynews.com

ஊத்தை சேது கப்பம்வாங்கியதான குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அழும் காட்சி


Read more...

Friday, May 24, 2019

அல்லாஹ் அக்பர். வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 2 ( யஹியா வாஸித் )

1983 க்கு முதல் எங்கள் கதையே வேற டைப், ஒரு குட்டி கட அல்லது மூன்டேக்கர் வயல்காணி, நாலு மாடு, பத்து ஆடு, ஒரு மீன்பிடி வல, ஒரு தோணி, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பதினாலடி பைபர் கிளாஸ் போட்டு. கொஞ்சம் டீச்சர்ஸ். இது கிழக்கில்.

வடக்கிலோ ஒரு பழைய ஓட்டை பைசிக்கிள், குட்டி குட்டி பழைய இரும்பு கடைகள், மெல்லிதா ஒரு இறைச்சிக்கடை, ரெண்டே ரெண்டு பேர் மட்டுமே உட்காரக்கூடிய தையல் மசின் கடை அத்துடன் இந்தியாவுக்கு தொண்ணூறு நிமிடத்தில் போகக்கூடிய அதிசக்தி வாய்ந்த ( 3 இஞ்சின் ) பைபர் கிளாஸ் போட்டு.

இந்தியாவின் ராஜா பீடி அதனுடன் போட்டிபோட்டுக்கொண்டு தானா பீனா சொக்கலால் ராம்சேட் பீடி, பழையகாட் சாறன் என யாழ்ப்பான சோனவன், வல்வட்டிதுறையானின் துணையுடன் கொண்டு வந்து அசத்துவான். யாழ்ப்பாணத்து முபீன் காக்கா எண்டா, எங்களுக்கெல்லாம் ஒரு கெத்து ஏறும். அவர் ஒரு குட்டி எம்ஜீஆர்.

ஒரு குட்டி லொறி, அம்பாசிடர் கருப்பு கார் அல்லது ஒரு மைனர் கார், கொஞ்சம் பேன்சி பொருட்கள், அந்த ஓட்டை வண்டிகளில், இந்த பேன்சி பொருட்களை ஏற்றிக்கொண்டு வடகிழக்குக்கு கொண்டுவந்து, விற்றுவிட்டு செல்பவர்கள்தான் வடகிழக்கிட்கு வெளியே உள்ள முஸ்லிகள்.

வடகிழக்கு முஸ்லிம்களுக்கும், தென்மேற்கில வசித்த முஸ்லிம்களுக்கும் இருந்த இன்னொரு தொடர்பு அரச உத்தியோகத்தர்கள், குறிப்பாக ஆசிரியர்கள். இவர்கள் அவர்களின் வீடுகளில் கூலிக்கு இருப்பதும், அவர்கள் இவர்களின் வீடுகளில் கூலிக்கு இருப்பதும், அங்கிருந்து மரக்கறி, தேன் போத்தல், இங்கிருந்து அரிசி, அவல் பார்சல் என ஒரு மெல்லிய தொடர்பு எப்போதும் இளையோடிக்கொண்டிருக்கும்.

நாங்கள் அனைவரும், இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும், எங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் என அழைத்து கொள்வோம், அழைத்துக்கொண்டோம்.

இதையெல்லாம் தாண்டி இன்னும் மூன்று வகையான முஸ்லிம்கள் ஸ்ரீலங்காவின் சில பகுதிகளில் ரொம்ப கெத்தாகவும், சிங்கள அரச இயந்திரங்களுக்கு பாரிய சொத்தாகவும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

போறா முஸ்லிம்ஸ், இவர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள், கொழும்பு பிட்டகொட்டுவ மார்க்கெட்டின் அன்றாட வியாபாரத்தையும், யாழ். பெரிய ஆஸ்பத்திரிக்கு பக்கத்தில் உள்ள அணைத்து வாசனை திரவியங்கள் ( கறுவா, ஏலம்,மிளகு,சாதிக்காய் ) இந்தியாவில் இருந்து வள்ளங்களில் போகும், வரும் சரக்குகளின் தலை விதிகளையும் இவர்களே தீர்மானித்தார்கள்.

எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள், கொழும்பு சிங்கள அரசியல் தலைவர்கள் இவர்களின் ஜோல்னா பைகளுக்குள் இருந்தார்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் எங்களை இவர்கள், அய்ந்து சல்லிக்கும் கணக்கெடுப்பதில்லை. ஆம் இவர்கள் பாணியில் சொல்வதானால், வீ ஆர் நாட் அ ப்ரோபர் முஸ்லிம்ஸ் ??????

ஜாவா முஸ்லிம், தங்கல்ல, ஹம்மான்தொட்டே, கொழும்பு ராஜகிரிய, வத்தள இதுதான் இவர்களது இருப்பிடம். கம்பீரம், நடையில் ஒரு மிடுக்கு, கூடியவரை நுனிநாக்கு ஆங்கிலம், வெஸ்ட்ரன் டைப்பில் உடை, சிங்களமும் தமிழும் இவர்களுக்கு கைவந்த கலை. இவர்களில் தொண்ணூற்றி அயிந்து சத விகிதம்பேர் பாதுகாப்பு தரப்பில் பணி புரிவார்கள். புரிந்தார்கள், புரிகின்றார்கள்.

இவர்களுக்கும் இந்த சிறிலங்காவில் வாழும் எங்களுக்கும் எந்த தொடர்புமே கிடையாது, எங்களை இவர்கள் மனிதனாக மதிப்பதே இல்லை, அவர்கள் ஒரு தனி ரகம். இவர்களில் பலர் பயங்கர பக்திமான்கள்.

நம்ம வன்னி ராஜாக்கள் காலத்தில், பிடி பட்ட அனைவரையும் விசாரித்தது தொடக்கம், வன்னிக்காட்டுக்குள் நுழைந்து உயிர்களை பணயமாக வைத்து உளவு வேலை செய்தவர்கள் இந்த ஜாம்பவான்களே.

இந்த விபரம் தெரியாமல் நம்ம இளவல்கள், சோனவன் காட்டிக்கொடுத்துட்டான், சோனவன் வெடி வைச்சிட்டான் என சொல்லி, சாறன் விற்க போனவன், லாம்பெண்ணை விற்க போனவன், அரிசி யாவாரத்துக்கு போனவன் எல்லோரையும் போட்டு தள்ளி, நாங்க வேற நீங்க வேறடா என சொல்லாமல் சொல்லி, எங்களுக்கு லாடம் அடித்தார்கள்..

மாக்கீன் மார்க்கார், ஜாயா, நைனார் மரைக்கார், பதியுடீன் மஹ்மூத், அலவி மௌலானா குரூப். புல்லுக்கும் நோகாமல், காலுக்கும் நோகாமல் நடந்து, எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு, தங்களது புள்ள, குட்டி, குட்டிட குட்டிகளுக்கு, வெளி நாடுகளிலும், உள்நாட்டிலும் சொத்துக்கள் சேர்த்து வைத்து விட்டு, வேடிக்கை காட்டிய வள்ளல்கள்.

செல்வாக்கு மிக்கவர்கள், சொல்வாக்கு தவற மாட்டார்கள். இவர்களை பொறுத்தவரை நாங்கள் கிட்டதட்ட தேர்ட் கிளாஸ் பீப்பிள். ஒரு அரச உத்தியோகம் எடுப்பதற்காக தேனும், திணை மாவும் கட்டிக்கொண்டு இவர்கள தேடிச் சென்றால், வீட்டுக்கு வெளியே உட்கார வைத்து, சிங்கள மந்திரிக்கு ஒரு ரெக்கமெண்டேசன் லெட்டர் எழுதி தருவார்கள். இவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு அவ்வளவுதான்.

ஆனால், வட கிழக்கு முஸ்லிம்களுக்கும், தென் மேற்கு முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி புரையோடிப்போயிருந்தது, ஆம் அது திருமண, சம்பிரதாய சடங்குகள்.

இங்கு வடகிழக்கில், எவ்வளவுதான் இஸ்லாம் பேசினாலும், எவ்வளவுதான் அவர் உலக நாகரீகம் தெரிந்தவராக இருந்தாலும், எவ்வளவுதான் சொத்துபத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும், சீதனம், பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுவது, தாலி கட்டுவது, திருமண சடங்கை ஊரையே கூட்டி, வெடில் கொளுத்தி, ஆர்ப்பாட்டமாக செய்வது என்பது ஒரு விதியாகவே இருந்தது.

இதே சம்பிரதாயத்தை, "எங்களுக்கு ஒன்றுமே வேண்டாம், ஒங்குட புள்ளைக்கு குடுக்கிறத நீங்க குடுங்க, எங்களுக்கு ஒண்டும் வேணாம்" என்ற இந்த வார்த்தைகளை, உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை, மாட்டுத்தாவணி, கல்லல், காரைக்குடி, பேராவூரணி, தூத்துக்குடி, குளிகைமாற்று பட்டினம், காயல்பட்டினம் போன்ற இடங்களில் வசிக்கும் ஹிந்து, தமிழ் மாப்பிள்ளை வீட்டார் , திருமணத்துக்கு முதல் நாட்களில் பெண் வீட்டாரிடம் உரிமையுடன் சண்டையிட்டு பெறுவதை எண்ட கண் குளிர கண்டு, காது குளிர கேட்டிருக்கின்றேன். சம்தின்க் ரோங், சம் வெயார். என யோசித்தும் இருக்கின்றேன்.

இத போய் நம்முட வாப்பா, உமாக்கிட்ட கேட்டு வேலல்ல, சாச்சியிடம்தான் போய் கேட்கலாம், அவதான் நம்முட கேர்ல் பிரெண்ட் அண்ட் வில்லி, உம்மா வாப்பாக்கிட்ட போட்டுக்கொடுக்கிரதுல கில்லி, But, still i love her, அந்த சாச்சி மட்டும் இப்ப உயிரோடு இருந்திருந்தால், நான் இப்படி ரோட்டு ரோட்டா, தெரு தெருவா, நாடு நாடா, அகதியாக ஓடிக்கொண்டிருக்க மாட்டேன், அவட மடியில படுத்துக்கிட்டு, அவக்கிட்ட பால் குடிச்சிக்கிட்டு, ஒரு குட்டி வாழ்க்கை வாழ்த்திருப்பேன்.

போய் கேட்டேன், வாய பொத்திக்கி இரிடா நாயே, நீயே ஒழுங்கா பள்ளிக்கு தொழப் போறேல்ல அதுக்குள்ள நியாயம் பேச வந்துட்டார், என்று சொல்லி என் வாயை ஒரே அடியாக லாக் பண்ணி விட்டார். யெஸ் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்க எனக்கு எந்த ரைட்ஸ் உம் இல்லை. கிட்டதட்ட நான் ஒரு ????

தென் மேற்கிலோ திருமண சடங்குகள் நோ சீதனம், நோ தாலி கட்டுதல், பள்ளிவாசல்களில் மகர் கொடுத்து கல்யாணம், மாப்பிள்ளைதான் எல்லாமே என்ற தோரணையில் நடந்தது, நடக்கின்றது. அயிந்து சதமும்
பெண்வீட்டாரிடம் வாங்க மாட்டார்கள்.

இது இந்த திருமண முறை எனக்கு தெரிந்த இஸ்லாத்தில் கூறப்பட்டாலும், கன்னியாகுமரி, நாகர்கோயில், திருவனந்தபுரம், பீமா மசூதியை அண்டிய பகுதிகள்,கொச்சின், காலிகட், கண்ணனூர் பகுதிகளில் வாழும்
ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இவ்வாறே நடந்து கொள்கின்றார்கள்.

என்ன கூத்திது, நாங்க முஸ்லிம்கள் என்று சொல்கின்றோம், எங்கிட பூர்வீகம் எது எண்ட ஒரு எழவும் வெளங்கிதில்ல. வந்தவன், வாறவன், போறவன் குறிப்பாக அரசியலில் வந்தவன், வாறவன், போறவன்,
திண்டவன், குடிச்சவன், (சொத்து / பேர் / புகழ் ) சேர்த்தவன் எல்லாரும், ஏய் !டேய் !! நீங்கள் இந்த நாட்டில சப்ஜெக்ட்டே கிடையாதுடா என்கின்றான்.

மகியங்கனையில இருக்கின்ற ஊரி வரியகே வன்னியா ( வேடுவர் தலைவர் ) வாயே தொறக்க காணோம்.

1983 வரை தாயும் பிள்ளையுமாக , வாயும் வயிறுமாக, தீ மிதிப்புகளும், கொடியேற்றங்களுமாக, புரியாணிகளும், வட்டிலாப்பங்களுமாக, வெசாக் கூடுகளும், கந்தூரிக்களுமாக, வாழ்ந்து, வளர்ந்து, கழித்து, மகிழ்ந்த சமூகங்கள் கிழித்தெறியப்பட்ட காகித சிதறல்கள் போல் !!!!!!!!

எல்லா, ஸ்ரீலங்கா முழுக்க உள்ள மொத்த பள்ளிவாசல் தலைமை பீடங்கள், மெளலவிக்கள், அவ்லியாக்கள், அம்பியாக்கள், ஹாபீஸ்கள், ஹஸ்ரதுக்கள், சேகுக்கள் எல்லோரிடமும் கால்ல உளுந்து, கெஞ்சி கேட்கின்றேன் ? Who am i please ?

அயிந்து நேரம் தொழுது, காலை ஏழுமணி முதல், மாலை ஆறுமணிவரை கூலிவேலை செய்து, கிடைக்கின்ற ஆயிரத்து நூறு ரூபாயில், தொள்ளாயிரம் ரூபாய்க்கு கறி புளி வாங்கிக்கொண்டு வந்து, பொண்டாட்டியை ஆக்க சொல்லிவிட்டு, ஸ்கூலுக்கு போற ரெண்டு புள்ளைகளைகளுக்கும் நூறு ரூபாயை கொடுத்துவிட்டு, மீதி நூறு ரூபாவை யாருமே துணையில்லாமல் இருக்கும் அடுத்த வீட்டு பெரியம்மாவுக்கு கொடுத்து விட்டு
நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கும் நான் ? யார் ? நான் ஒரு முஸ்லிமா ?

என்னை, இந்த பாவியை, உங்களது இஸ்லாம் அரவணைத்து கொள்ளுமா ?

1983 ஜூலை கலவரத்துக்கும், முந்தாநாள் 2019 ஏப்ரல் 2 1 இல் வெடித்து சிதறிய, மொத்த சோனவனின் மானம் மரியாதைக்கும், முழி முழியென முழிக்கும் நமது அரசியல் வஸ்தாதுகளுக்கும் என்ன தொடர்பு ????

( அல்ஹம்துலில்லாஹ், எண்ட அல்லாஹ் நாடினால் தொடருவேன்................ )
22-5-2019

Read more...

Saturday, March 9, 2019

அனந்தியின் கஞ்சிக்குள் மண்ணை தூவியுள்ள அமெரிக்காவும் முழிபிதுங்கும் ஊடகங்களும்.

மன்னார் மனித புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கை நேற்றுமுன்தினம் மன்னார் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்டதுடன், அம் மனிதக் கூடுகள் சுமார் 500 வருட கால பழைமை வாய்ந்தவை என்ற விடயத்தை பத்தோடு ஒன்று பதினோராவது செய்தியாக அறிவித்து விட்டு ஊடகங்கள் மௌனமாகிவிட்டன.

முள்ளிவாய்காலில் மண்கவ்வி, வெள்ளைகொடியை தூக்கிய பின்னர் ஆயுதங்களை மௌனித்துவிட்டோம் என புலிகள் இன்றும் பம்மாத்துவது போன்றே ஊடகங்களின் செயற்பாடுகளும் காணப்படுகின்றது. மேற்படி விடயம் வெளியாகியபோது, மன்னார் புதைகுழி விவகாரத்திற்கு அப்பால் நாட்டில் வேறு விடயங்கள் ஏதும் இல்லை என்றபோக்கில் அதன் ஒவ்வொரு நகர்வுகளையும் பிறேக்கிங் நியூஸ் போட்டுக்கொண்டிருந்த ஊடகங்கள் இன்று நவ துவாரங்களையும் அடைத்துகொண்டுள்ளன.

இலங்கையில் ஊழல் மோசடிகளும் , நீதிமறுப்பும் மேலோங்கி நிற்கின்றது. இவற்றுக்கு காரணமான அரசியல்வாதிகள் குறுந்தேசியவாத போர்வையினுள் மறைந்து நின்று தமது கடமைகளிலிருந்து விலகிச் செல்லும்போது அதற்கான அனுசரணையினை ஊடகங்கள் முண்டியடித்து மேற்கொள்கின்றன.

மன்னார் மனித எலும்புக்கூடுகள் தோண்டப்பட்ட காலப்பகுதியில் வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சராகவிருந்த அனந்தி சசிதரன் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தது. குறித்த மோசடிகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பில் பின்தொடர்ந்து அறிக்கையிடவேண்டிய ஊடகங்கள் அனந்தி சசிதரனை மனித எலும்புக்கூடுகளுள் மறைத்துக் காப்பாற்றினர்.

குறித்த எலும்புக்கூடுகள் படையினரால் கொன்று புதைக்கப்பட்டவர்களினதே என்றும் இவ்வாறான சூழ்நிலையில் தனக்கு இலங்கையில் வாழ்வதற்கு அச்சமாகவுள்ளதாகவும் அனந்தி சசிதரன் புருடா விட அவற்றை அள்ளிக்கொண்டு, ஐயோ அனந்திக்கு சரியான பயமாக இருக்கின்றதாம் என ஊடகங்களும் மக்களை பயமூட்டின.

பிரபாகரன் வன்னியில் சித்திரவதைக் கூடங்களை வைத்து மனித குல விரோத செயற்பாடுகளை மேற்கொண்டபோது அங்கு எவ்வித அஞ்சமும் இன்றி வாழ்ந்த அனந்தி சசிதரனுக்கு புதிதாக தற்போது எங்கிருந்து அச்சம் வந்தது என்றும், எலும்புக்கூட்டினை கண்டு அஞ்சும் உமக்கு எதற்கு அரசியல் என்றும் கேள்விகளை ஊடகங்கள் கேட்க தயங்கின.

சிறுவர்களை படையில் பலவந்தமாக இணைப்பதற்கு அனந்தியின் கணவன் எழிலன் தலைமை தாங்கியபோது என்றோ ஒரு நாள் குறித்த அநியாயத்திற்கு தானும் தனது குழந்தைகளும் பதில்கூற வேண்டிவரும் என்ற அச்சம் அனந்திக்கு ஏற்பட்டதில்லையா என்ற கேள்வியை அனந்தியிடம் இதுவரை எந்த ஊடகமும் கேட்டதாக பதிவுகள் இல்லை.

எனவே இவ்விடயத்திலாவது அனந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை ஊடகங்கள் அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கடைமையிலிருந்து விடுபடமுடியாது.

எது எவ்வாறாயினும் மண்டையோட்டினுள் ஒழிந்து நின்று அடுத்த மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிம்மாசனம் ஏறலாம் என்றிருந்த அனந்தியின் கஞ்சியினுள் மண் தூவியதாக அமைந்துள்ளது புளோடிராவிலிருந்து வந்த அறிக்கை.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர் என்றனர். இந்திய இராணுவம் குடிகொண்டிருந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்தியங்கிய குழுக்கள் கொன்று புதைத்திருக்கலாம் என்றனர். புலிகளின் வதை முகாம்களிலிருந்தவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்றனர். இவ்வாறான கருத்துக்களை அரசியல்வாதிகள் சுயவிளம்பரத்திற்காக தெரிவித்தபோது, அந்தந்தக் காலப்பகுதியில் தமது உறவுகளை இழந்த மக்கள் அனுபவித்திருக்கக்கூடிய உளவியல் ரீதியான வேதனைகள் தொடர்பில் அரசியல்வாதிகளோ அவர்களது அடிவருடிகளான ஊடகங்களோ கவலைப்பட்டதில்லை. ஆனால் இன்று இருதரப்பினரும் அம்மணமாகி நிற்கின்றனர்.-பீமன்


Read more...

Friday, December 21, 2018

ஐந்தறிவுள்ள நாய்க்கும் புலிகள் மீது காழ்ப்புணர்ச்சியா? பீமன்

கடந்த மாதம் மட்டக்களப்பில் இரு பொலிஸாரில் ஒருவர் அரைநித்திரையிலும் ஒருவர் கடமையிலும் இருந்தபோது கோழைத்தனமாக கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக சந்தேகத்தின்பேரில் இருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை உறுப்பினனான அஜந்தன் என்பவனின் மனைவி ஓரிரு தினங்களுக்கு முன்னர் தனது கணவனை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உண்ணா விரதமொன்றை ஆரம்பித்திருந்தார். அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் விபச்சாரிகள் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் பேசுவதாக கொலையை அரசியலாக்கியிருந்தமையையும் அவதானிக்க கூடியதாகவிருந்தது. அதேநேரம் இரு அப்பாவி இளைஞர்கள் கண்மூடி திறப்பதற்குள் எவ்வித காரணங்களும் இன்றி தீய நோக்குடன் கொல்லப்பட்டமையின் பின்னணி, அது இலங்கையின் எதிர்காலத்திற்கு உருவாக்ககூடிய அச்சுறுத்தல் தொடர்பாக எவ்வித கரிசனையும் அற்றோர் "கைது செய்யப்பட்டுள்ளோர் வெறும் அப்பாவிகள்" என்ற பொறுப்புணர்வற்ர கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதையும் காண முடிகின்றது.

இக்கருத்துக்களின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளோர் போதிய ஆதாரம் இன்றித்தான் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பதை அறியும் பொருட்டு குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனருடன் பேசியதிலிருந்து குறித்த நபர்கள் எழுந்தமானமாக கைது செய்யப்படவில்லை என்ற ஒரே ஒரு தகவலை மாத்திரம் தற்போதைக்கு வெளியிடமுடியும். கொலை இடம்பெற்ற சுற்றுவட்டத்தில் கொலையாளிகள் விட்டுச்சென்ற ஒரு பையும் ஜக்கட்டும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பையையும் ஜக்கட்டையும் பின்தொடர்ந்து சென்ற மோப்பநாயின் அடையாளம் காட்டலுடனேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை சம்பவம் இடம்பெற்ற சுற்றுவட்டத்திலுள்ளவர்களும் அஜந்தனின் கிராமத்தவர்களும் நன்கறிவர். ஆனாலும், மோப்ப நாயின் அடையாளம் காட்டுதலில்தான் அவன் கைது செய்யப்பட்டான் என்பதை நன்கறிந்திருந்த ஊடகங்களோ அன்றில் சமூகவலைத்தளத்தினரோ இந்த நியாயமான கைதின் பின்னணியை வெளிப்படுத்தாமை அவர்களது நயவஞ்சகத்தனத்தை காண்பிக்கின்றது.

இவ்விரு கொலைகளும் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பதனை நாட்டு மக்கள் உணரவேண்டும். வெளிப்படையாக சொல்வதானால்: இனவாதத்தையும் யுத்தத்தையும் வைத்து சுகபோகமும் ராஜயோகமும் அனுபவிக்க விரும்பும் தரப்புக்களின் கூட்டுச்சதியே இக்கொலையாகும். இன்னும் தெளிவாக சொல்வதானால் தெற்கிலே ஒரு தரப்பிற்கு மீண்டும் இலங்கையிலே புலிப்படை அல்லது புலிசார் வன்செயல் தேவைப்படுகின்றது மறுபுறத்தில் தமிழ் அரசியல்வாதிகள் சிலருக்கும் புலம்பெயர் புலி எச்சங்களுக்கும் தாங்கள் செயற்பாட்டில் உள்ளோம் என புலம்பெயர் தேசமெங்கும் தமது பைகளை நிரப்ப இலங்கையில் யுத்தம் தேவைப்படுகின்றது.

மேற்குறித்த இரு தரப்பினரதும் தேவைகளை நிறைவேற்ற முன்னாள் புலிகள் கூலிப்படையாக செயற்படுகின்றனர். இக்கூலிப்படைகள் இரண்டு அப்பாவி உயிர்களை பலியெடுத்திருக்கின்றார்கள். அந்த அப்பாவி உயிர்கள் தொடர்பாக அடிமனதிலிருந்து எவரும் கவலை வெளியிடுவதாக இல்லை மாறாக கொலைஞர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

முள்ளிவாய்காலில் பிரபாகரன் மண்டியிட்டதன் பின்னர் புலிகளின் ஒரு தொகுதியினர் எவ்வாறு இலங்கை இராணுவத்தினருக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் கூலிப்படையாக செயற்படுகின்றார்கள் என்பதனை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

பாதுகாப்பு அமைச்சிலிருந்து ஊதியம் பெறும் புலிகள்

புனர்வாழ்வு முகாம்களிலிருந்தபோது தமது தேவைகளுக்காக பயன்படக்கூடியவர்கள் என படையினர் இனம்கண்ட சிலரை இன்றும் குறித்த அரசியல்தரப்பு பயன்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்களில் ஒருவரான சம்பிக்க ரணவக்க கடந்த காலங்களில் பகிரங்க மேடைகளில் தெரிவித்த விடயங்கள் பிரதானமானவை. சம்பிக்க ரணவக்க பகிரங்க மேடை ஒன்றில் பேசும்போது இவ்வாறு கூறினார்:

" புலிகளின் முன்னாள் கிழக்கு தளபதிகளான ராம் , நகுலன் போன்றோருக்கு கோத்தபாய ராஜபக்ச பாதுபாப்பு அமைச்சின் நிதியத்திலிருந்து மாதந்தம் ஊதியம் வழங்கினார். கிழக்கில் எமது குழந்தை தேரர்களை கொன்ற கொலைகாரர்களுக்கு நாம் பணம் வழங்குவது எவ்வாறு நியாமாகும் என்பதை நான் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டேன், அப்போது மஹிந்த கூறினார், அவர்கள் எமக்கு கிழக்கில் தேர்தல்காலங்களில் உதவுவார்கள் அதற்காக நாம் அவர்களை பயன்படுத்தவுள்ளோம் என்றார். அவ்வாறே வடக்கிலும் முன்னாள் புலிகளுக்கு பாதுகாப்பு நிதியிலிருந்து நிதி வழங்குகின்றனர். மறுபுறத்தில் சிவில் பாதுகாப்பு பிரிவு என்ற ஒன்றை உருவாக்கி பாதுகாப்பு அமைச்சினூடாக அவர்களுக்கு தொழில்களை வழங்கி சம்பளம் வழங்குகின்றனர். இது தொடர்பாகவும் மஹிந்தவுடன் பேசியபோது, அவர்கள் வடக்கில் தேர்தல்வரும்போது எமக்கு வேலை செய்வார்கள் என்றார் மஹிந்த"

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் போலிப்புலிகள் அமைப்பு

புனர்வாழ்விலிருந்து வெளியேறிய புலி உறுப்பினர்களை கொண்டு புலனாய்வுப் பிரிவினர் ஒரு போலிப் புலிகள் அமைப்பை உருவாக்கினர் என்றும் அவ்வாறானதோர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் தொடர்ந்தும் புலிக்காச்சல் இருக்கின்றவர்களை அடையாளம் கண்டு கொள்வதாகும் என்றும் களனிப்பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச-

அவ்வாறு செயற்பட்டதன் ஊடாக புலிகள் மீண்டும் சக்திபெறவேண்டும் என்ற எண்ணம் கொண்ட உள்ளநாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ளவர்களை புலனாய்வுப் பிரிவினர் இனம்கண்டு கொண்டார்கள். அவ்வாறே புலம்பெயர் தேசத்தலிருந்து கொண்டு இங்கு புலிகளமைப்பை உருவாக்க நினைக்கின்றவர்களையும் இனம் கண்டு கொண்டார்கள்.

அத்துடன் எமது அதிகாரிகள் மேற்படி போலிப்புலிகள் அமைப்பை வைத்து கண்டறிந்தவற்றை பாதுகாப்பு சபைக்கு அறிக்கையிட்டனர். தூரதிஷ்டவசமாக பாதுகாப்பு சபையிலிருந்த யாரோ ஒருவர் ஊடாக மேற்படி போலிப்புலிகள் அமைப்பை இயக்கிய எமது புலனாய்வுத்துறை அதிகாரிகளின் விபரங்கள் பத்திரிகைக்காரர்களது கைகளில் கிடைக்கப்பெற்று அவை பிரசுரமாகியுள்ளதன் ஊடாக அந்த அதிகாரிகளின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச கவலை தெரிவித்திருந்தார்.

சம்பிக்க மற்றும் வீரவன்ச ஆகியோரது வெளிப்படுத்தல்களிலிருந்து புலிகள் எவ்வாறான கூலிப்படைகள் என்பதையும் அவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக எந்த குற்றச்செயல்களையும் புரிந்துவிடுவார்கள் என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். புலிகள் அமைப்பு அதன் வரலாறு முழுவதும் கூலிப்படையாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. யாழ்பாணத்தில் அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து கொழும்பில் லலித் அத்துலத்முதலி இந்தியாவில் ரஜீவ் காந்தி என புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கொலையையும் கூலிக்கு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பது நிருபணமகியுள்ளபோதும் தமிழ் மக்கள் அதை நம்ப மறுப்பது பேராபத்தானது. புலிகள் பேசுகின்ற விடுதலைப்போராட்டம் தமிழ் தேசியம், தமிழ் உணர்வு என்பன வெறும் போர்வையாகும். தமிழ் மக்கள் இந்த உண்மைகளை ஏற்க மறுக்கும் வரை புலிகளும் புலிசார் பினாமிகளும் தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டே இருப்பர்.

புலம் பெயர் புலிகளுக்கான கூலிப்படை

புலம்பெயர் புலிகளின் கட்டமைப்பில் 2002 ல் தான் வெடிப்பு விழுந்தது. ஆனாலும் புலிகளின் தலைமையகம் வன்னியில் பலமாக இருந்ததனால் அவர்கள் வெடிப்புக்களை பிளவு நிலைக்கு செல்லாமல் இரும்புக்கரம்கொண்டு அடக்கி காத்தார்கள். 2009 மே க்கு பின்னர் உள்ளிருந்த ஒவ்வொரு வெடிப்பும் நிரந்தரமானது பிரிந்து தங்களுக்குள் மோதிக்கொண்டார்கள். அந்த மோதல் ஒன்றும் கொள்கை ரீதியானது அல்ல ஒவ்வொரு தரப்பிடமுமிருந்த மக்கள் சொத்தை எவ்வாறு தங்கள் பைகளுக்குள் அமுக்குவது என்பதில்தான்.

மக்களின் சொத்தை முழுசாக விழுங்கி உழைக்காமல் இத்தனை சொத்துசேர்த்தவர்களுக்கு அந்த ருசி விடவில்லை. தொடர்ந்தும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் எவ்வாறு பிடுங்கலாம் என்ற வியூகங்களைத்தான் வகுத்தார்கள். அதற்காக போர்குற்ற விசாரணை, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல்கொடுத்தல், நாட்டிலுள்ள முன்னாள் புலிகளுக்கு உதவுதல் போன்ற போலித் திட்டங்களை வகுத்தார்கள். இத்திட்டங்களைக் காட்டி இலங்கைலுள்ள முன்னாள் புலிகளை வளைத்துப்போட்டார்கள்.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு புலிகள் இன்னும் உள்ளார்கள் எனக் காண்பித்து அவர்களிடமிருந்து தொடர்ந்தும் பணம் பறிப்பதற்குமான திட்டத்துடனே இன்றும் செயற்பட்டு வருகின்றனர். இதன் பிரகாரமே இலங்கையிலுள்ள முன்னாள் புலிகளுக்கு பணத்தினை கொடுத்து பல்வேறுபட்ட தீய செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவித்தல், அசாதாரண நிலைமைகளை ஆங்காங்கே உருவாக்கல், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் அமைப்புக்களை உருவாக்கி செயற்படுதல். அதனூடாக புலிகளின் செயற்பாடுகள் இலங்கையில் உள்ளதாக புலம்பெயர் தமிழரின் காதில் பூ சூடுதல் போன்றனவே அந்த செயற்பாடுகள்.

புலம்பெயர் தேசத்தில் புலனாய்வு முகமூடிகள்.

இது இலங்கையில் செயற்பட்ட ஆழ ஊடுருவும் படையணியிலும் ஆபத்தான கட்டமைப்பு. யார் ? எங்கு ? எந்த வேஷத்திலிருக்கின்றார்கள் என்பது அவர் அவர்களுக்கு மாத்திரமே தெரியும். 2009 மே யில் சரணடைந்தவர்கள்தான் இன்று அவ்வாறு புலம்பெயர் தேசமெங்கும் ஆழ ஊடுருவியிருக்கின்றார்கள்.

இது எவ்வாறு சாத்தியம் என்று யாரும் கேட்கலாம். முக்கிய புள்ளிகள் பலர் 2009 க்கு பின்னர் வெளிநாடுகளில் மிதந்தனர். எவ்வாறு இவர்கள் வெளியே வந்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் இராணுத்தினருக்கு ஐப்பது லட்சத்திலிருந்து 1 கோடி ரூபா வரை பணம் கொடுத்து வந்தார்களாம் என்று சொல்லப்படுகின்றது. இங்குதான் அந்த சமாச்சாரமே இருக்கின்றது, இலங்கை இராணுவக் கட்டமைப்பு 2009 இல் அவ்வளவு ஓட்டைகள் உள்ள கட்டமைப்பாக இருக்கவில்லை. சிலவேளைகளில் தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை அவ்வாறிருந்திருக்கலாம். ஆனால் 2009 மே யில் புலனாய்வுத்துறை அவ்வாறானதோர் ஓட்டையை உருவாக்கியது. பணம் படைத்தவர்கள் ஒருசிலரை பணம்வாங்கிக்கொண்டு விடுவதுபோல் பாசாங்கு செய்து விடுவித்ததுடன் அதே ஓட்டையினூடு அதேவேஷத்துடன் தங்களது முகமூடிகளையும் அவ்வாறே விட்டுவிட்டது. அத்துடன் புனர்வாழ்வின் பின்னரும் விசுவாசிகள் சிலரை அனுப்பி தனது முகமூடிப்படையணியை புலம்பெயர் தேசத்தில் பலப்படுத்தி கொண்டுள்ளது.

தற்போது இவர்கள் பல்வேறு பணிகளை செய்கின்றனர். புலம்பெயர் தேசத்திலுள்ள புலிசெயற்பாட்டாளர்களை இனம்காணுதல், நாட்டிலுள்ள புலிச்செயற்பாட்டுக்கு தயாரானவர்களை இனம் காணுதல், அவர்களை கொண்டு தமது ஏஜமானர்களின் தேவைகளை நிறைவேற்றுதல் என்பனவே அவர்களது பிரதான பணி. (மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரட்டைக்கொலையும் அவ்வாறானதாக இருக்கலாம்)

இவ்வாறானதோர் சூழ்நிலையில் புலம்பெயர் தேசத்திலிருந்து வருகின்ற கொந்தராத்துக்களை நிறைவேற்றுபவர்களின் நிலைமை கைத்தீன் போட்டு வளர்க்கப்படுகின்ற சேவலின் கதையாக முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும்.

கையாலாகா காவல்துறை.

2009 ல் யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து 2015 தை மாதம் எட்டாம் திகதி வரை பயங்கரவாதிகளின் மீள்எழுகை அன்றில் ஒருங்கிணைவு தொடர்பாக எந்த கேள்வியும் இருக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம். ஆனாலும் 2015 தை மாதம் எட்டாம் திகதிக்கு பின்னர் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீண்டும் இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயல்வோருக்கான தளத்தை வழங்கவில்லை என்று வாதிடமுடியாது. உறுதி செய்யப்பட்ட கருத்துச் சுதந்திரம் புலிகளின் அநியாயங்களை நியாயப்படுத்துவதற்கும், பேச்சு சுதந்திரம் மீண்டும் புலிகள் ஒன்றுகூடுவதற்கு பகிரங்க அழைப்பு விடுப்பதற்கும் , எழுத்துச் சுதந்திரம் புலிகளின் புகழ் பாடுவதற்கும் , ஒன்றுகூடும் சுதந்திரம் பயங்கரவாதிகளை நினைவு கூறுவதற்கும், கொண்டாடுவதற்கும் பயன்பட்டது.

மேற்படி செயற்பாடுகள் பாரதூரமான விளைவுகளை கொடுக்கும் என்றும் இச்செயற்பாடுகளுக்கு எதிராக நிச்சயமாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாயவேண்டும் என்றும் காவல்துறையினரை கேட்டபோது அவர்கள் அச்சட்டத்தை பயன்படுத்த முடியாதவர்களாக அரசியல்வாதிகளின் ஆணைக்கு கட்டுப்பட்டு நின்றனர். மைத்திரபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமைக்கான கைமாறாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு கட்டுப்போடப்பட்டுள்ளது.

கிட்லரின் பெயரை தன் குழந்தைக்கு சூட்டிய தம்பதியினருக்கு சிறைத்தண்டனை.


உலகிலே பயங்கரவாதத்திற்கு எதிராக நாடுகள் பொதுவான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் இவ்விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை.

அண்மையில் பிரித்தானியாவில் தனது குழந்தைக்கு அடல்ப் கிட்லரின் பெயரை வைத்த தம்பதியினரில் மனைவிக்கு 5 ஆண்டுகளும் கணவனுக்கு 6 ஆண்டுகளும் சிறைவிதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான யூதர்களை கொன்றொழித்த கிட்லரை மேற்குல நாடுகள் இன்றும் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாகவே பார்கின்றனர். அவர் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் உருவாவது அல்லது அவரை நினைவு கூறுவது கிட்லரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாக அமையும் எனக் கருதும் அவ்வரசுகள் கிட்லர் சார்பு அமைப்புக்கள் யாவற்றையும் தடை செய்து மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகின்றது. அந்த வரிசையில் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக தனது குழந்தைக்கு அடல்ப் கிட்லர் என்ற பெயரை சூட்டியமைக்காகவே தம்பதியினர் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.

இவ்வாறான நடைமுறையை செயற்படுத்துவதற்கு இலங்கை பொலிஸாருக்கு போதியளவு சட்டத்தில் அனுமதி உள்ளபோதும், அவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளின் அனுமதியை நாடி நிற்பார்களாயின் பயங்கரவாதத்தை ஒருபோதும் துடைத்தெறிய முடியாது.

கொலை மிரட்டல்

கனடாவிலுள்ள வானொலி ஒன்றிற்கு தகவல் வழங்கிய அஜந்தனின் மனைவி ஒருசில நாட்களில் தனது கணவன் விடுதலை செய்யப்படாவிட்டால், பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துவிடுவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்கொலை என்பது தண்டனைக்குரிய குற்றம், ஆனால் ஒருவர் தற்கொலை செய்து இறந்துவிட்டால் அத்துடன் அந்த கதை முடிகின்றது. உயிர் தப்பினால் அபராதம் செலுத்தவேண்டும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அதற்கு அப்பாலும் இங்குள்ள பாரதூரமான விடயம் யாதெனில் அவர் நான்கு சிறார்களை கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றார். எனவே உயிராபத்துக்குள்ளாகி நிற்கும் சிறார்களை முதலில் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக செயற்பட்டு தாயிடமிருந்து பிரித்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதுடன், தாய் இலங்கை பிரஜையாக நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டிருக்கின்றார் என்பதையும் அவர் அதற்கு கட்டுப்பட மறுத்தால் அதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதன் ஊடாகவே நற்பிரஜைகள் உள்ள நாடு ஒன்றை எம்மால் காண முடியும்.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com