Tuesday, April 9, 2019

இங்கிலாந்து உயரடுக்கு பாராசூட் துணைப்படைப்பிரிவு, பயிற்சி- க்கான இலக்காக கோர்பினின் படங்களைப் பயன்படுத்துகிறது.

By the Socialist Equality Party (UK)
தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினின் படங்களை நோக்கி உயரடுக்கு பாராசூட் துணைப்படைப்பிரிவின் சிப்பாய்கள் தோட்டாக்களைச் சுடும் காணொளி, பிரிட்டனின் ஆளும் உயரடுக்கால் கிளறிவிடப்பட்டு வருகின்ற அரசியல் வன்முறை சூழலுக்கு ஒரு மரணகதியிலான எச்சரிக்கையாகும்.

இந்த காணொளி ட்வீட்டரில் கசியவிடப்படுவதற்கு முன்னதாக ஸ்னாப்சேட்டில் பதிவேற்றப்பட்டிருந்தது. நான்கு பாராசூட் படைப்பிரிவு சிப்பாய்கள் கைத்துப்பாக்கியால் மீண்டும் மீண்டும் கோர்பின் படத்தை நோக்கி சுடுவதை இதில் காணமுடிகிறது. கேமிரா கோர்பின் படத்தை நோக்கி திரும்பி, தோட்டாக்களால் துளைக்கப்பட்ட அவர் முகத்தை நெருக்கமாக காட்டுவதற்கு முன்னதாக, “இது குறித்து மகிழ்ச்சி" என்ற எழுத்துக்கள் அந்த காணொளியில் சேர்க்கப்பட்டுள்ளன. சிப்பாய்களில் சிலர் சிரிப்பதைக் கேட்க முடிகிறது.



காபூல் சிப்பாய்கள் பயிற்சிக்கான இலக்காக ஜெர்மி கோர்பினின் படத்தைப் பயன்படுத்துகின்றனர்



இந்த காணொளி சமீபத்திய நாட்களில் படமாக்கப்பட்டிருப்பதாகவும், அதன் நிஜத்தன்மை இராணுவத்தால் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 3வது பாராசூட் துணைப்படைப்பிரிவு (3 PARA) உறுப்பினர்களில் சுமார் 80 பேர் 2018 இல் இருந்து, உறுதியான ஒத்துழைப்பு திட்டத்தின் (Resolute Support Mission) பாகமாக ஆப்கானிஸ்தான் காபூலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த காட்சி, ஸ்கை நியூஸ் எதை "புதிய காபூல் வளாகம்" என்று அறிவித்ததோ அதன் அறையிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தின் தீவிரத்தன்மையைக் குறைத்துக் காட்ட உடனடி முயற்சிகள் எடுக்கப்பட்டன.

முன்னாள் இராணுவச் சிப்பாய் சார்ஜென்ட் Trevor Coult டெய்லி மெயில் க்கு கூறினார், “அது ஒருபோதும் இணையத்தில் வெளியாகி இருக்கக்கூடாது. ஆனால் வேடிக்கையானது தானே தவிர, அதில் ஆழமானது ஒன்றுமில்லை. அதற்கொரு விசாரணை தேவையில்லை.” ஒரு சிரிக்கும் பொம்மைச் சித்திரத்துடன் (emoji) அந்த காணொளியைப் பகிர்ந்திருந்த Coult “ஒரு தொழிற் கட்சி தலைவருக்கு இது நல்லாயில்லை,” என்று அதில் கருத்தும் தெரிவித்திருந்தார். பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிப்பாயுமான ஜானி மெர்சர், “ஆழ்ந்த தவறான மதிப்பீட்டைச் செய்யும் நல்லவர்கள் ஒவ்வொரு அமைப்பிலும் இருக்கிறார்கள்,” என்று ட்வீட் செய்து, இந்த பாதுகாப்பு முயற்சியில் இணைந்தார்.

ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது என்றாலும், விமானப்படையின் 16வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நிக் பெர்ரி அந்த சம்பவத்தை "ஓர் ஆழ்ந்த மதிப்பீட்டுத் தவறு,” என்று குறைத்துக் காட்டினார்.

இந்த சம்பவத்தை ஒரு சில தனிநபர்களின் தவறான நடவடிக்கை என்று சித்தரிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிராகரிக்கப்பட வேண்டும். இந்த பாராசூட் துணைப்படைப்பிரிவு உலகில் உயரடுக்கு காலாட்படை பிரிவுகளில் ஒன்றாகும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து எந்த மூத்த அதிகாரிகளுக்கும் எதுவும் தெரியாது என்பதாக பலவந்தமாக நம்ப வைக்கப்படுகிறது.

பயிற்சிக்கான இலக்காக கோர்பினின் படத்தைப் பயன்படுத்துவது, மீண்டும் மீண்டும் அந்த தொழிற் கட்சி தலைவர் அதிவலது சக்திகளின் கொலை மிரட்டல்களுக்கு உள்ளாகி வருவதற்குப் பின்னணியில் நடக்கிறது. பிரெக்ஸிட் மீதான பயங்கர சூழல் அரசியல்ரீதியில் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் தான், அவர் பின்ஸ்பரி பூங்கா மசூதியில் ஒரு வலதுசாரி குண்டரால் வன்முறையான ரீதியில் தாக்கப்பட்டார், இந்நபர் பிரெக்ஸிட்டை எதிர்ப்பவர்களைக் கொல்ல விரும்புவதாக இணையத்தில் அச்சுறுத்தி இருந்தார்.

அனைத்திற்கும் மேலாக, கோர்பின் மீதான இந்த சமீபத்திய தாக்குதல் கிளர்ச்சி-தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்புப்பயிற்சி பெறும் ஒரு படைப்பிரிவினரிடம் இருந்து வருகிறது. சமீபத்திய தசாப்தங்களில் 3 PARA படைப்பிரிவு வடக்கு அயர்லாந்தில் நிலைநிறுத்தப்பட்டது அங்கே அது கத்தோலிக்க மக்களை மிருகத்தனமாக தாக்கியதுடன், ஃபால்க்லாந்து/மால்வினாஸ் போரில் சண்டையிட்டது.

தசாப்தங்களாக நீடித்து வரும் கட்டுப்பாடற்ற இராணுவவாதம் ஒரு தொழில்ரீதியான இராணுவ ஜாதியை உருவாக்கி இருப்பதுடன், அது அதிகரித்தளவில் நிர்வாக கட்டுப்பாடு அல்லது தடைகளின் எந்தவொரு வடிவத்திற்கும் விரோதமாக உள்ளது. இந்த இராணுவ காணொளிக்கான விடையிறுப்பில், முன்னாள் சிப்பாய்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கோர்பினைப் படுகொலை செய்வதற்கான இணைய அச்சுறுத்தல்களை விடுக்க சமூக ஊடகங்களைக் கையிலெடுத்துள்ளார்கள். “பிரிட்டன் அரச இராணுவ தொலைதொடர்பு பிரிவின் முன்னாள் சிப்பாய்" என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர், “நானொரு முன்னாள் சிப்பாய். நான் நிஜமாகவே கோர்பினை இலவசமாக சுடுவேன்,” என்று ட்வீட் செய்திருந்தார்.

இத்தகைய அச்சுறுத்தல் எல்லாம், தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி கூப்பரைக் கொல்ல திட்டமிட்டதற்காக பாசிசவாதி ஜாக் ரென்ஷா குற்றவாளியாக காணப்பட்டு வெறும் ஒரு நாளைக்குப் பின்னர் வருகின்ற நிலையில், இவை அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

மிகவும் அடிப்படையாக, காபூலில் உள்ள 3 PARA படைப்பிரிவு சிப்பாய்கள் கோர்பினை பயிற்சியின் இலக்காக வைப்பது, ஆயுதப்படைகளின் தலைமையினது பரந்த கண்ணோட்டங்களுக்கு வெளிப்பாட்டை வழங்குகிறது.

மூத்த இராணுவ பிரமுகர்கள் கடந்த மூன்றாண்டுகளாக, கோர்பின் அரசாங்கத்தை ஏற்க முடியாது என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளனர், ஏனென்றால் போர், நேட்டோ மற்றும் அணுஆயுதங்களின் பயன்பாட்டை முன்னர் கோர்பின் எதிர்த்திருந்தார்.

செப்டம்பர் 2015 இல் தொழிற் கட்சி தலைவராக அவர் தேர்ந்தெடுப்பட்டு ஒரு வாரத்திற்குள், கோர்பின் பிரதம மந்திரியாகும் சம்பவத்தில் "நேரடி நடவடிக்கை" எடுக்கப்படும் என்று பெயர் வெளியிட விரும்பாத “சேவையில் உள்ள மூத்த தளபதியை" மேற்கோளிட்டு சண்டே டைம்ஸ் குறிப்பிட்டது.

“எல்லா மட்டத்திலும் பாரிய இராஜினாமாக்கள் இருக்கும், நடைமுறையளவில் இராணுவக் கலகத்திற்கு ஒத்த ஒரு சம்பவத்திற்கான நிஜமான சாத்தியக்கூறை நீங்கள் முகங்கொடுப்பீர்கள்... ஒரு பிரதம மந்திரி இந்நாட்டின் பாதுகாப்பை ஸ்தம்பிக்க செய்வதை தலைமை தளபதி அனுமதிக்க மாட்டார், அதை தடுக்க என்னவெல்லாம் வழிவகைகள் சாத்தியமோ, நியாயமாகவோ அல்லது முறைகேடாகவோ, அதை மக்கள் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்,” என்றார்.

சில மாதங்களுக்குப் பின்னர், ஆயுதப்படைகளின் அரசியல் நடுநிலைமைக்கான அரசியலமைப்பு கோட்பாட்டை மீறி, பாதுகாப்புத்துறை தலைமை தளபதி சர் நிக்கோலஸ் ஹோஹ்டன் பிபிசி இன் ஆண்ட்ரூ மர் இக்குக் கூறுகையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்ற கோர்பினின் அறிக்கையைக் குறித்து "அந்த சிந்தனை அதிகாரமாக மாற்றப்பட்டால் என்னை கவலைப்படுத்தும்,” என்றார்.

டோரி அரசாங்கம், தொழிற் கட்சியின் பிளேயரிச கன்னை மற்றும் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் வலதுசாரி ஊடகங்களும் கோர்பினை "தேசிய பாதுகாப்புக்கான" ஓர் அச்சுறுத்தலாக, பயங்கரவாதிகளின் நண்பராக, ரஷ்யாவின் புட்டின் அரசாங்கத்தினது கைப்பாவையாக, ஓர் யூத-எதிர்ப்புவாதியாக தாக்குவதில் ஒருங்கிணைந்துள்ளன.

2016 இல், “தொழிற் கட்சி இரத்தக்காட்டேரியை ஒழிக்க வேண்டும்" என்ற தலைப்பில், பிளேயரிசவாதியான டன் ஹொட்ஜ்ஸ் இன் கட்டுரை ஒன்று டெய்லி மெயில் இல் பிரசுரிக்கப்பட்டது, கோர்பின் ஒரு சவப்பெட்டியில் இருப்பதைப் போன்றவொரு புகைப்படமும் அத்துடன் பிரசுரிக்கப்பட்டது. அந்த கட்டுரை தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jo Cox ஒரு பாசிசவாதியால் படுகொலை செய்யப்பட்டு வெறும் 10 நாட்களுக்குப் பின்னர் வெளியானது. கடந்த மூன்றாண்டுகளில் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் நிறைந்திருந்த எண்ணற்ற தலைப்புகளில், “காட்டேரியின் ஜிஹாதி தோழர்கள்,” “கோர்பின் 'ஒத்துழைப்பாளர்',” “கோர்பினும் கம்யூனிச உளவாளியும்" மற்றும் "அவர் கரங்களில் இரத்தம்" என்ற தலைப்புகளும் உள்ளடங்கி உள்ளன.

இந்த காணொளி வெளியாகி இருப்பது குறித்து நேற்று பரவலாக செய்திகள் வெளியான பின்னர், டோரி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஜோன்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரி தெரேசா மேயிடம் வினவினார், “எதிர்கட்சி தலைவர் [ஜெர்மி கோர்பின்] பிரிட்டனை அரசாள பொருத்தமற்றவர் என்ற நிலைப்பாடு இன்னமும் இருக்கிறதா,” என்றார். மே பதிலளித்தார், “சாலிஸ்பரி வீதிகளில் ஓர் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளான போது... நமது சொந்த பாதுகாப்பு முகமைகளை விட அவர் விளாடிமீர் புட்டினை நம்புவதற்கே முன்னுரிமை கொடுப்பதாக [கோர்பின்] தெரிவித்தார். இப்படியான ஒருவர் பிரதம மந்திரியாக இருப்பதற்கு இது இடமில்லை,” என்றார்.

பிரெக்ஸிட் மீது கோர்பினுடன் பேச்சுவார்த்தைகளில் நுழைவதற்காக மே ஐ கண்டிக்க இது பிரெக்ஸிட்-ஆதரவு டோரிகளுக்கு வழங்கப்படும் ஒரு குறிப்பாகும். “ஒரு மார்க்சிசவாதி, யூத-எதிர்ப்புவாதி தலைமையிலான அரசாங்கத்திற்கு வழிகாட்டி" மே அபாயத்தை மேற்கொண்டிருப்பதாக கரோலின் ஜோன்சன் தெரிவித்தார். சர்வதேச வளர்ச்சித்துறை முன்னாள் அமைச்சர் ப்ரீட்டி படேல் ட்வீட் செய்கையில், “பயங்கரவாதிகள் மற்றும் சோசலிச சர்வாதிகாரிகளுடன் தரப்பெடுக்கும் ஒருவர், நமது அணுஆயுத தற்காப்பை ஒப்படைத்துவிடக்கூடும், தனது கட்சியில் சர்வசாதாரணமாக யூத-எதிர்ப்புவாதத்தைச் செயல்படுத்தி உள்ள, பிரிட்டனை திவாலாக்கி விடக்கூடிய ஒருவரிடம் இப்போது பிரெக்ஸிட்டின் திறவுகோல்கள் வழங்கப்படுகின்றன,” என்றார்.

இதை பின்தொடர்ந்து, டோரிக்கள் பிரெக்ஸிட் நெருக்கடியைத் தீர்க்க தவறுவது கோர்பின்-தலைமையிலான அரசாங்கத்தை அனுமதிக்கும் ஆபத்திற்குட்படுத்துகிறது, அதாவது சன் பத்திரிகையின் வார்த்தைகளில், “அவர்களின் மார்க்சிச திட்டநிரலை நமது தொண்டைக்குழிக்குக் கீழே நிறுத்த நிர்பந்திக்கும்,” என்ற நாசகரமான பத்திரிகை செய்திகளைப் பின்தொடர்ந்து இது வருகிறது.

நேற்றைய இராணுவ காணொளிக்கு விடையிறுக்கையில், கோர்பின் தெரிவித்தார், “பாதுகாப்பு அமைச்சகம் அதன் மீது ஒரு விசாரணை நடத்தி, என்ன நடந்து கொண்டிருக்கிறது, யார் இதைச் செய்தது என்பதைக் கண்டறியும் என்று நம்புகிறேன்,” என்றார்.

தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி கூப்பர் ஒரு படுகொலை சதியிலிருந்து நூலிழையில் தப்பித்ததைக் குறிப்பிட்டுக் காட்டி, கோர்பின் தொடர்ந்து கூறுகையில், “ஆம் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன, ஆம் மக்களிடையே பிளவுகள் இருக்கின்றன,” என்றார். ஆனால், “அத்தகைய பிளவுகள் மற்றும் கருத்துவேறுபாடுகளைக் கண்ணியமான வழியில் வெளிப்படுத்துங்கள். அருவருக்கத்தக்க வன்முறையான ஏதோவிதத்தில் இறங்காதீர்கள்,” என்றவர் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

கோர்பினின் விடையிறுப்பு அரசியல்ரீதியில் குற்றகரமானது. ஆயுதப்படைகளிடம் இருந்து தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அச்சுறுத்தலைக் குறித்து அதற்கு எச்சரிக்கையூட்டுவதற்குப் பதிலாக, அவர் அதன் விசாரணை நடைமுறைகளில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், வர்க்க எதிரியை நோக்கி சமரசத்தையும் சமாதானத்தையும் வழிமொழிகிறார்.

பிரெக்ஸிட் மீது மே உடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதென்ற அவரின் முடிவு இந்த முன்னோக்கின் ஒரு துணுக்கு ஆகும். அவரின் சொந்த கட்சியினது வலதுசாரிகளுக்கு எதிராக எந்தவொரு நகர்வையும் எதிர்க்கும் அவர், டோரி அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு அழைப்புவிடுக்க மறுக்கிறார். பேரம்பேசும் கூட்டுறவு மூலமாக தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கு அவர் உபதேசித்து வருகின்ற அதேவேளையில், அரசாங்கமோ பிரிட்டன் வீதிகளில் ஆயிரக் கணக்கான துருப்புகளை அணித்திரட்டுவதற்குத் திட்டங்களை வகுத்து வருகிறது.

உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட் சம்பவத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான Yellowhammer நடவடிக்கை என்பதைக் குறிப்பிட்டு, சுகாதாரத்துறை செயலர் மட் ஹன்காக் கூறுகையில், அமைச்சர்கள் "திட்டவட்டமான" இராணுவ சட்டத்திற்குத் திட்டமிடவில்லை, “அதேவேளையில் அதை விருப்பத் தெரிவிலிருந்து விட்டுவிடவும் இல்லை,” என்றார். இதுபோன்றவொரு நிலைமையில் கோர்பினின் படத்தைப் பயிற்சிக்கான இலக்காக பயன்படுத்துவது ஆர்ப்பாட்டக்காரர்களையும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களையும் சுட்டுவீழ்த்துவதற்கான தயாரிப்பாக வெளிப்படுகிறது.

Read more...

Monday, April 8, 2019

அனுராதபுரத்தில் ரணிலையும் மைத்திரியையும் இணைத்த துமிந்த திஸாநாயக்க

கடந்த காலத்தில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்பின் ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மைத்திரிபாலவிற்குமிடையே நிலவிவந்த கசப்புணர்வு வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் இவ்விருவரையும் இணைக்கும் பணியில் பல்வேறு தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பொருட்டு தனது மாவட்த்தில் இடம்பெற்ற மிகப்பழமைவாய்ந்த கலாச்சார நிகழ்வொன்றின் மேடையில் ரணில் விக்கிரமசிங்கவையும் மைத்திரிபாலவையும் ஏற்றிவைத்துள்ளார் பா.உ துமிந்த சில்வா.

விவசாய கலாசாரத்தின் 52ஆவது தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று முற்பகல் வரலாற்று சிறப்புக்க அநுராதபுர ஜயஸ்ரீ மகாபோதி முன்னிலையில் இடம்பெற்றது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லினை ஜயஸ்ரீ மகாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் கோலாகல விழா அடமஸ்தானாதிபதி வண.பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் ஆலோசனைக்களுக்கமைய விவசாய அமைச்சும் கமநல சேவைகள் திணைக்களமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

ஜயஸ்ரீ மகாபோதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட காலம் முதல் ஆரம்பிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த புத்தரிசி விழா ஊர்வலமானது, சிங்கள முறைப்படி மங்கள வாத்தியங்களுடனும் சிங்கள கலாசார அம்சங்களுடனும் கிழக்கு வாசலின் ஊடாக ஜயஸ்ரீ மகா போதியை வலம்வந்து அங்கு பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசிய பாத்திரத்தில் புத்தரிசி நிரப்பும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது படியரிசியை வண.பல்லேகம சிறினிவாச நாயக்க தேரர், விவசாய அமைச்சர் பீ.ஹரிசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமை பதவி வகிக்கும் விவசாயிகளும் பாத்திரத்தில் சமர்ப்பித்தனர்.

பிரித்பாராயண முழக்கங்களுக்கு மத்தியில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகைதந்திருந்த விவசாய குடிமக்கள் பாத்திரம் நிறையும் வரை புத்தரிசியினை கொட்டினர். புத்தரிசி விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அதிதிகளும் பாத்திரத்தில் அரிசி நிரப்புவதில் கலந்துகொண்டனர்.

பண்டைய அரசர் காலம் முதல் பின்பற்றிவரும் இந்த சம்பிரதாயத்தை பூர்த்தி செய்வதற்கு நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகள் கலந்துகொண்டதுடன், மழையையும் சௌபாக்கியத்தையும் தன்னிறைவான விவசாயத்தையும் பொருளாதார சுபீட்சத்தையும் வேண்டி பல்வேறு பிரார்த்தனைகள் இதன்போது இடம்பெற்றன.

சம்பிரதாயபூர்மாக ஜயஸ்ரீ மகாபோதிக்கு சமர்ப்பிக்கப்படும் தேன் பாத்திரத்தினை வேடுவ தலைவர் வன்னில எத்தன் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் பீ.ஹரிசன், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோரும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம மந்திரி ரணில்விக்கிரமசிங்க, வரலாற்றில் அதிகளவிலான நெல் அறுவடை இம்முறை கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன் எதிர்காலத்தில் அந்த நிலைமையினை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக விவசாயத்துறை மற்றும் நெல் உற்பத்திகளை நவீனமயப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

புத்தரிசி விழாவானது இற்றைக்கு இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே எமது முன்னோர்கள் மேற்கொண்டு வருகின்ற சம்பிரதாய நிகழ்வாகும். அதனை சிங்கள கலாச்சாரத்தின் ஒர் பகுதியாக குறிப்பிட முடியும்.

சோறு சாப்பிடுவதை மையமாகக் கொண்ட இனமாகிய எமது உயிரானது, வெற்றிகரமான விவசாயத்துறையிலேயே தங்கியுள்ளது.

அன்றைய காலத்தில் எமது மூதாதையர்கள் மல்வத்து ஓயா ஆற்றுப்பள்ளத்தாக்கு, யான் ஓயா ஆற்றுப்பள்ளத்தாக்கு மற்றும் மகாவலி கங்கை ஆற்றுப்பள்ளத்தாக்கு ஆகியவற்றினை மையமாகக் கொண்டு விவசாயத்தினை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதேபோன்று தமது கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட சிறு குளங்கலுக்கருகில் நெற் பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்தனர். இவையனைத்துக்கும் மழைநீரும் அவசியமானது. அதனால் வெற்றிகரமான அறுவடையின் இறுதியில் அதன் மூலம் பெறப்படுகின்ற முதலாவது அறுவடையினை கடவுளுக்கு படைத்து பூஜைகளை மேற்கொள்வது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தது.

கடவுளுக்கு படைத்து பூஜைகளை மேற்கொள்ளும் சம்பிரதாயமானது மகிந்த தேரரின் வருகையுடன் ஜய ஸ்ரீமகாபோதிக்கும், கிராம விகாரைகளுக்கும் படைத்து பூஜைகளை நடாத்துவது வரை மாற்றமடைந்தது. அன்றைய காலத்தில் அவ்வாறாக நாகரீகம் மாத்திரமல்ல பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட்டது.

இலங்கைக்கு அதன் ஊடாக அதிகளவிலான வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று அன்றைய காலத்தில் பொதுமக்களிடம் வரிப்பணமும் அறவிடப்பட்டது. அதன் ஊடாகவும் அதிகளவிலான வருமானம் ஈட்டப்பட்டது.

இன்று வரி அறவிடும் போது அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னர், அன்றைய மன்னர்களின் ஆட்சி காலத்தில் பராக்கிரமபாகு மன்னரும் வரிகளை விதித்தமையினை நினைவிற் கொள்ள வேண்டும்.

சிங்கள மன்னர்களின் காலத்தினை போன்று டி.எஸ். சேனாநாயக்க ஷ மீண்டும் நெற் பயிர்செய்கையினை விருத்தி செய்தார். அவரது காலத்தில் அதிகமான புராதன குளங்கள் புனரமைக்கப்பட்டன.

அதேபோன்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக மன்னர்களின் காலத்தில் கூட மேற்கொள்ளப்படாத நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டன.

அந்த பாதையில் பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , விசாலமான நீர்ப்பாசன வேலைத்திட்டமான மொரகஹகந்தை வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தார். நீர்ப்பாசன அபிவிருத்திக்காக எமது அரசாங்கம் விசாலமான நிதியினை ஒதுக்கியுள்ளது.

2003ம் ஆண்டாகும் போது எமது அரசாங்கம் அரிசி உற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடாக இருந்தது. எனினும் கடந்த காலங்களில் காணப்பட்ட வறட்சியினால் பல்வேறு பிரதேசங்களில் பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் கடவுளின் புண்ணியத்தினால் எமக்கு மீண்டும் மழை நீர் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இம்முறை நெல் அறுவடையானது 30 இல்டசம் மெட்ரிக் தொன்களாகும். போகமொன்றில் அதிகளவான அறுவடைக் கிடைத்த பருவமாக இந்த வருடத்தினை குறிப்பிட முடியும். அதனால் கடவுளுக்கு பூஜை செய்து நன்றி தெரிவிப்பதோடு, பயிர் செய்கைக்காக தம் உழைப்பினை வியர்வையாக சிந்திய விவசாயிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் வடக்கு மத்திய பிராந்திய பிரதான சங்கநாயக அடமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பள்ளேகம தம்மரக்கித ஸ்ரீநிவாச தேரர் உட்பட மகா சங்கத்தினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன், பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க,

வீரகுமார திசாநாயக்க, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அநுராதநாயக ஆகியோர் உட்பட அரசியல்வாதிகள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Read more...

புலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்

"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாளர் ஜெயகாந்தன். அது மகா உண்மையும் கூட, தமிழ் எழுத்துலகிற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தவர்களில் புதுமைபித்தன் போல முன்வரிசையில் நிற்பவர் ஜெயகாந்தன்.

தொடக்ககல்வி மட்டுமே உண்டு, 20 வயதிற்குள் அவர் கிட்டதட்ட 50 தொழில்களை செய்திருப்பார், இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்தார், அது என்னவோ தெரியவில்லை, இறுக்கமான பொதுநல கொள்கையால் அற்புதமான கலைஞர்களை அக்கால கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிற்று, பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், பாவலர் வரதராஜன் குழுவின் இளையராஜா, அதனை போலவே ஜெயகாந்தன்.

சுருக்கமாக சொன்னால் மக்கள் கட்சி, மக்களின் கஷ்டமறிந்த கலைஞர்களை உருவாக்கிற்று. ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டை விட்டு காமராஜர் கட்சிக்கு வந்தார், அந்த மேதைக்கு தெரிந்திருகின்றது, லெனின் வேறு காமராஜர் வேறு அல்ல என்று.

அதன்பின் எழுத்தில் தீவிரம் கூடிற்று, நாவல்கள், கட்டுரைகள், தொடர்கள்,சிறுகதைகள் என அணல் பறக்க எழுதினார். ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் அவரின் தொடருக்காகவே விற்ற காலமும் உண்டு.

100க்கும் மேற்பட்ட கதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் என அவர் அள்ளி வீசிய படைப்புக்கள் ஏராளம், அவற்றில் ஒன்றிற்கு மிக உயர்ந்த ஞானபீடவிருதும் கிடைத்தது, சில கதைகள் படமாக கூட வந்தன, பாடலும் எழுதினார்.

ஞானபீட விருதென்றால் முகநூலில் வழங்கபடும் விருதுகள் அல்ல, அது இந்திய இலக்கியத்தின் நோபல் அல்லது பாரதரத்னா அவர் படைப்புகளின் மக்கள் சிந்தனை, சமூக நலன், சொல்லாடல் என சிறப்புக்களை விளக்க எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள், இன்று இன்னமும் எழுதுவார்கள், படியுங்கள் தெரியும்.

ஆனால் நாம் ஆச்சரியமாக பார்ப்பது எல்லாம் பாரதியாருக்கு பின் ஒரு தமிழனுக்கு இருந்த முற்போக்கும், மக்கள் நலனும், எளிய பாமர சொல்லாடலும், தீர்க்கமான கருத்துக்களும்.

அவைதான் அவரை மகாவித்தியாசபடுத்தி, ,"ஞான செறுக்கன்" என அழைக்கபடும் அளவிற்கு உயர்த்திற்று.

சினிமாவை அறவே வெறுத்தவர், ஒருமுறை எம்.ஜி.ஆர் அழைத்தும் பார்க்க செல்லாமல் சிறையில் இருந்த எம்.ஆர் ராதாவை வலிய காண சென்றார், கண்டன குரல்கள் எழும்பின, எப்படி எங்கள் எம்.ஜி.ஆரை பார்க்காமல் ராதாவை காண செல்லலாம்

அமைதியாக சொன்னார் ஜெயகாந்தன் "உங்கள் எம்.ஜி.ஆரை சிறைக்கு செல்ல சொல்லுங்கள், கண்டிப்பாக பார்க்கின்றேன்", இவ்வளவிற்கும் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் பெரும் சக்தி, கொஞ்சமும் அஞ்சவில்லை ஜெயகாந்தன்.

சிவாஜி கணேசன் காங்கிரஸில் இருந்தபோது ஒரு கூட்டம் காமராஜர் கூட்டத்தில் இப்பக்கம் காந்திபடம் அப்பக்கம் காமராஜர் படம் நடுவில் சிவாஜிபடம் இருக்க மேடையேறிய ஜெயகாந்தன் சீறினார்

"இப்பக்கம் மகாத்மா காந்தி அப்பக்கம் கருப்பு காந்தி, இடையில் யார் இவன்? நாட்டிற்கு செய்த நன்மை என்ன? இப்படித்தான் அண்ணா ஒரு பாம்பினை வளர்த்து அது இன்று நாட்டை கெடுக்கின்றது" என கர்ஜித்து அதனை கண்டித்தார்.

அந்த மகா பிரபல நடிகர் இந்துவாக நடிக்க மொட்டை போட்டார், கிறிஸ்தவ வேடத்தில் நடிக்க உபவாசமிருந்தார் என பத்திரிகைகள் (இன்றும் அப்படித்தான்) எழுதிதள்ள, எரிச்சலோடு கண்டித்து எழுதினார்

"அவர் இஸ்லாமியர் வேடத்தில் நடித்தார் அல்லவா? அப்பொழுது சுன்னத் செய்திருந்தாரா? அதனையும் எழுதுங்கள்"

இப்படி சமூக சீர்கேட்டை, பத்திரிகையின் தவறுகளை கண்டித்த எழுத்தாளன் எங்காவது இன்று தமிழகத்தில் உண்டா? இனி வருவானா?

சிங்கம்போல எதற்கும் பயபடாமல் தமிழகத்தில் ஒரு எழுத்தாளர் இருந்தார் என்றால் நிச்சயம் அது ஜெயகாந்தன் ஒருவரே.

முன் நவீனத்துவம்,பின் நவினத்துவம், கவித்துவம், கவிதானுபவம்,பிரக்ஞை என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. அடிதட்டு மக்கள் உழைப்பாளிகள், சாமானியர்கள் என அவர்களில் ஒருவராக மாறி எழுதினார்.

அதனாலதான் பிச்சைகாரி பாத்திரத்தில் கூட அவர் எழுத்து ஜெயித்தது.

புகழின் உச்சத்தில் இருக்கும்பொழுது எழுத்தை நிறுத்தினார், காரணம் இத்தமிழகம் எழுதி திருத்தமுடியாதது என்பதாகவும் இருக்கலாம், அவர் பெரிய தீர்க்கதரிசி, மகா தீர்க்கதரிசி

இந்திய அமைதிபடை திரும்பிய நேரம், தமிழகத்தில் யாருமே புலிகளை விமர்சிக்க அஞ்சிய நேரம் (அவர்கள் வெல்லவே முடியாதவர்கள் என உலகம் நம்பவைக்கபட்ட நேரம்), புலிகள் பத்மநாபாவை சென்னையில் கோரமாக கொன்ற நிசப்தம் கலந்தநேரம், மிக தைரியமாக புலிகளின் அழிவையும், அவர்கள் எப்படி இல்லாமல் போவார்கள் என்பதையும், அனாதைகளாக அழிவார்கள் என்பதையும் ஆனித்தரமாக பேசியவர் ஜெயகாந்தன் மட்டுமே. (உண்மையில் பத்மநாபா கொலையோடு பெரும் நடவடிக்கை எடுக்கபட்டிருந்தால் திருப்பெரும்புதூர் சம்பவத்திற்கு வாய்ப்பு குறைவு)

தமிழகத்தின் பெரும் எழுத்தாளருக்க்கு, சிந்தனை சிற்பிக்கு, ஒரு சிங்கத்திற்கு, எழுத்துலக பீஷ்மருக்கு இன்று நினைவு நாள்,

தமிழகத்து மாபெரும் சிந்தனையாளாரான அவரை நிச்சயம் நினைவு கூறலாம்.

பாரதி,புதுமைபித்தன் வரிசையில் நிச்சயம் இடம்பெறும் அந்த எழுத்தாளரின் தைரியாமான எழுத்துக்கள் இருக்கும்வரை அவருக்கு அழிவே இல்லை

குறுகிய வட்டத்தில் சிக்காமல், மானுடத்தை நேசித்த மாபெரும் பரந்த மனமுடைய எழுத்தாளர் அவர், பொதுவுடமைவாதியாக , இந்திய தேசியவாதியாக உயர்ந்து நின்றவர்

சமூகத்திற்கான எழுத்து என்பது என்ன? தைரியமான எழுத்து என்றால் என்ன? என்பதை தமிழகத்திற்கு முதலில் சொல்லி தந்த மாபெரும் சிந்தனையாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஜெயக்காந்தன் புலிகள் தொடர்பாக பத்மநாபாவின் அஞ்சலி கூட்டத்தில் பேசிய பேச்சை இங்கு கேட்கலாம்.





Read more...

அல்-குரானை சிங்களத்திற்கு மொழிபெயர்த்து மைத்திரியின் கையில் கொடுத்தது ஜம்இய்யதுல் உலமா!

இஸ்லாமியர்களின் வழிகாட்டி என்று சொல்லப்படுகின்ற அல்-குரான் நூல் சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதுடன் அதன் முதற்பிரதி அவர் கைக்கு வழங்கப்பட்டது.

இஸ்லாத்தின் வரலாறு தொடர்பில் புரிந்துகொள்வதற்கும் முஸ்லிம் மக்களின் கலாசாரம் மற்றும் மத பின்புலம் தொடர்பில் ஏனைய மதத்தினரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு மொழிபெயர்ப்புக்கு அப்பாற்பட்டு சரளமான சிங்கள மொழியில் அல்குர்ஆனை மொழிபெயர்த்திருப்பது சிறப்பம்சமாகும்.

இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சிங்களத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புனித அல்குர்ஆனின் முதலாவது பிரதியினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்செய்க் றிஸ்வி முப்தி ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

இஸ்லாமிய மத தலைவர்களும் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ.முபாறக் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more...

விக்கி- கஜேந்திரர்கள் குடும்பிப்பிடி. நான் நள்ளிரவில் களவாகச் சென்று சீனர்களை சந்திக்கமாட்டேன். விக்கி நக்கல்.

வடமாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்ற விக்கினேஸ்வரன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு கலப்பு நீதிமன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என தெரிவித்து வந்தவர்.

தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து அந்தர் பல்டி அடித்து முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான குழுவின் சிபார்சினை அடிப்படையாக கொண்டதோர் விசாரணைக்குழுவை ஆரம்பிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

மேற்படி சிபார்சானது வெற்றுப்பேப்பர் என்றும் அது வலுவற்றது என்றும் பேசப்பட்டு வந்த நிலையில் அவ்வாறானதோர் சிபார்சினை ஏற்றுக்கொள்ள விக்கினேஸ்வரன் தூண்டுவது அரசை காப்பாற்றும் செயல் என பல்வேறு கட்சிகள் விக்கினேஸ்வரன் மீது சீறிப்பாய்ந்திருந்தது.

இந்நிலையில் விக்கினேஸ்வரனின் மேற்படி துண்டுதல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மணிவண்ணன் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை விக்னேஸ்வரன் தொடர்ந்தும் வலியுறுத்தினால், அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்று எச்சரித்திருந்தார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், நள்ளிரவில் சென்று சீனர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று கிண்டல் அடித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மணிவண்ணனுடைய அவ்வாறானதொரு பேச்சை தான் அறியவில்லை. 'என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் அம்பலத்துக்கு வராத அந்தரங்கங்கள் இருந்தால் அவற்றை அறிய நானும் ஆவலாய் இருக்கின்றேன். நள்ளிரவில் சீனர்களைப் போய்ச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை' என்றும் பதிலளித்தார்.

இலங்கையில் செயற்படும் சகல அரசியல் கட்சிகளுக்கும் ஒவ்வொரு பின்புலத்தை காட்டி நயவஞ்சகப் பிரச்சாரம் மேற்கொள்வதையே தமிழ் தேசிய முன்னணி தமது அரசியல் வியூகமாக கொண்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு நாட்டுடன் அல்லது புலனாய்வு பிரிவுடன் பிணைத்து விடுவார்கள்.

ஆனால் தாங்கள் அவ்வாறான சகல தரப்பினருடனும் ரகசியமாக தொடர்பில் இருந்து பணத்தினை பெற்றுக்கொள்கின்றார்கள் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலமாகியுள்ளது. கடந்தவாரம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன தூதர் தலைமையிலான குழுவினரை இரகசியமாக இரவில் விளக்கள் அணைக்கப்பட்டதோர் சூழ்நிலையில் சந்தித்து பேசியுள்ளனர். அங்கு பெட்டிகள் மாறப்பட்டதாகவும் அறியக் கிடைக்கின்றது.

அவ்வாறேதான் கடந்தமுறை ஜெனீவாவிற்கு சென்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வட மாகாண ஆழுனருடன் ஒட்டி உறவாடி விட்டு ஊடகங்கள் அவற்றை கண்டுகொண்டபோது முழிபிதுங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விக்கியுடன் இணைந்து பணியாற்றவேண்டும் அன்றேல் உங்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என தமிழ் தேசிய முன்னணியினருக்கு புலம்பெயர் நிதிவழங்குனர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே மேற்படி குடுப்பி பிடி ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more...

சர்வோதயக் காணியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருள் பெட்டிகள் மீட்பு.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலையில சர்வோதய அமைப்பின் அலுவலகத்துக்கு அருகிலுள்ள வெற்றுக்காணியில் குறித்த வெடிபொருட்கள் ஞாயிற்றுக்கிழமை(7) மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியைத் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்ற வேளை பெக்கோ இயந்திரம் மூலம் துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அப் பகுதியில் இரு சந்தேகத்துக்கிடமான பெட்டிகளை அவதானித்த துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின்போது பெட்டிகளில் வெளிமருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று வந்த துப்பரவுப் பணிகள் இடைநிறுத்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Read more...

Sunday, April 7, 2019

ஷரீஆ சட்டத்தை கல்முனையில் நடைமுறைப்படுத்த பள்ளிவாயலில் தீர்மானம் நிறவேறியது. மீறுபவர்களது ஜனாஸா தனிமையிலாம்.

கல்முனையில் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை முற்றாக தடுக்கும் பொருட்டு ஒழுங்கு செய்யப்பட்ட போதை ஒழிப்புப் பிரகடன மாநாடு நேற்று (06) சனிக்கிழமை கல்முனை முகைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

கல்முனை புகைத்தல், போதைப்பொருள் ஒழிப்பு செயலணியின் ஏற்பாட்டில் அதன் தலைவரான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது உடனடியாக அமுலுக்கு வரும் பிரகடனங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் பிரகடனங்கள் என்று இரு வகையான பிரகடனங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

கல்முனைப் பிரதேசத்தில் புகைத்தல் மற்றும் போதைப் பொருட்களை பாவித்தல் அவற்றை விற்பனை செய்தல், விநியோகித்தல், கொண்டு செல்லுதல் பாதுகாத்தல்,சேமித்து வைத்தல் ஆகிய அனைத்தும் நேற்றுமுதல் முதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது:
கல்முனைப் பிரதேசத்தில் வாழும் ஒரு நபர் மேற்படி குற்றங்களில் ஈடுபடும்போது புகைத்தல் போதைப் பொருள் ஒழிப்பு செயலணியினால் அமைக்கப்படும் விசாரணை சபையின் முறையான விசாரணை ஒன்றின் முடிவில் நிருபிக்கப்படின் இஸ்லாமிய ஷரீஆவுக்கு அமைய குறித்த நபருக்கு சீர்திருத்தக் (தஃஸீர்) தண்டனைகள் நிறைவேற்றப்படும் .

குறித்த குற்றச்செயல் தொடர்பான சாட்சியங்களை மறைத்தல், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தல், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உதவுதல், ஊர் கட்டுப்பாட்டை மீறுதல் ஆகிய அனைத்தும் தடுக்கப்படுகின்றன. இவற்றில் ஈடுபடும் எவராக இருப்பினும் அவர்களுக்கும் தண்டனைகள் நிறைவேற்றப்படும்.

மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் நீதிமன்றம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற விசாரணை சபைகள் எடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் இச்செயலணி பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

அதேவேளை, மேற்படி கட்டுப்பாடுகளை மீறி புகைத்தல் போதைப்பொருள் விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபடுவர்கள் அல்லது இது விடயமாக நீதிமன்றத்தினால் தண்டணை வழங்கப்பட்டவர் புகைத்தல், போதைப்பொருள் செயலணியின் விசாரணை சபையிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டடு தௌபா செய்ய மறுத்தால் கீழ் குறிப்பிடப்படும் தண்டனைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகும்.
அவர்களின் பெயர்களை பள்ளிவாசல்களின் விளம்பரப் பலகையில் காட்சிப்படுத்தி, ஊர்க்கட்டுப்பாட்டை மீறியவர் என இனங்காட்டுதல், குறித்த நபரின் திருமணம், மரணம் முதலான நன்மை தீமைகளில் பள்ளிவாசலின் பங்களிப்புகளை விலக்கிக் கொள்ளுதல், குறித்த நபர் ஊரிலிருந்து முற்று முழுதாக தனிமைப்படுத்தப்படுவார், குறித்த நபரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு மையவாடியில் தனியான இடம் ஒதுக்கப்படும்.

இப்பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


Read more...

த.தே. கூட்டமைப்பின் வேண்டுதலுக்கிணங்கவே இன்றும் முன்னாள் புலிகள் தடுத்து வைக்கப்பட்டுளனர். போட்டுடைக்கின்றார் பசில்.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுகின்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் இன்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரும் அவரது அரசில் பலம்மிக்கவராகவும் விளங்கிய முன்னாள் பொருளாதார மற்றும் அபிவிருத்திகள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டதாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலும் அவர்களின் விடுதலை தொடர்பிலும் எமது அரசாங்கத்தினால் 99 சதவீத நடவடிக்கைகளை நாம் பூர்த்தி செய்திருந்தோம். அவர்களின் விடுதலைக்காக ஒரு சதவீத நடவடிக்கையே இந்த அரசாங்கத்திற்கு இருந்தது.

நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் Nதிசயக் கூட்டமைப்பினர் ஒருபோதும் இவர்களை விடுதலை செய்ய விரும்பமாட்டார்கள். இந்த அரசாங்கத்தை உருவாக்கியதும் சிறிலங்காவின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இன்று அரசாங்கத்தை காப்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இவ்வாறான நிலையில் சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ இவர்களின் விடுதலைக்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்களாயின் இதை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். காரணம் அவர்கள் வடக்கில் அரசியல் செய்ய மக்களை பொய்கூறி ஏமாற்ற இவர்கள் சிறையில் இருக்க வேண்டும். இதுதான் அவர்களின் அரசியல். சுமந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கவே தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் சிறையில் வைத்திருக்கின்றார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

19 ம் திருத்தத்தை தமிழ் மக்களுக்காக பயன்படுத்த தவறிய கூட்டமைப்பு!
வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு 19ஆம் அரசியலமைப்பு திருத்தச்சடடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிறந்த களமாக பயன்படுத்தியிருக்கலாம். அந்த திருத்தச் சட்டத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் உட்பட நாட்டில் எவருக்கும் எந்தவொரு நன்மையும் உள்ளடக்கப்படவில்லை.

அதில் ராஜபக்ச குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரம் கட்டும் செயற்பாடே முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு இருந்தும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறப்பட்டது.

அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19ஆம் திருத்தச்சட்டத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இன்று அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.

அதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்பது சக்திவாய்ந்த ஒரு பதவி. அதையும் இவர்கள் சரியான முறையில் பயன்படுத்தினார்களா?

அன்று அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவர் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் சர்வதேசத்திற்கு கொண்டு சென்றார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தங்களது மக்களுக்காக ஏன் எதையும் செய்யவில்லை?

வடக்கு, கிழக்கு மக்களின் ஏக பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு அவர்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள கூட்டமைப்பின் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லை.

அவர்கள் கொழும்பில் இருந்து கொண்டு அவர்களின் சம்பாத்தியத்தை மாத்திரமே பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Read more...

யாழ் அரசியல் விபச்சாரிகள் கழகத்தில் புதிய மாணவர் அணிமீது பாலியல் சேட்டை.

யாழ். அரசியல் எடுபிடிகள் கழகமான யாழ் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் கழகத்திற்கு இவ்வாண்டுக்கான புதிய மாணவர் அணியிலுள்ள சில மாணவிகள் பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைப்பதுடன், குறித்த காவாலிகளுக்கு எதிராக நடிவடிக்கை எடுக்குமாறு வலுயுறுத்தப்படுகின்றது:

நேற்று இடம்பெறவிருந்த கலைப்பீட புதுமுக மாவணர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாணவிகள் சிலரே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய முன்னணி எனப்படும் அரசியல் அனாதைகளின் எடுபிடிகள் சிலரே மேற்படி செயலை மேற்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கனிஷ்ட மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்ற மாணவர்கள் என்றபோர்வையில் யாழ் பல்கலைக்கழகத்தினுள் அரசியல் கைக்கூலிகளாக செயற்படும் சிலரே மேற்படி இழிசெயலை மேற்கொண்டனர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நடிவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலியல்சேட்டை சம்பவம் ஒன்றை வீடியோ செய்ய முற்பட்ட மாணவி ஒருவர் மாணவர்கள் என்ற போர்வை போர்த்திருக்கும் காடையர்களால் அடித்து தாக்கப்பட்டுள்ள இழிசெயல் ஒன்றும் பதிவாகியுள்ளது. குறித்த மாணவியை 5க்கு மேற்பட்டவர்கள் இணைந்து தாக்கி தங்களது வீரத்தை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த துணைவேந்தர் இடம்பெறவிருந்த வரவேற்பு நிகழ்வை ரத்து செய்துள்ளார்.
எதுவாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் குப்பை தொட்டியாக மாறியுள்ள யாழ் பல்கலைக் கழகத்தில் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவது என்பது கடினமான காரியமாகவே இருந்து வருகின்றது.

சட்டம் ஒழுங்கு விடயத்தில் கன்னியமாக செயற்பட்; ரஜனி திரணகம அம்மையாருக்கு வழங்கப்பட்ட தண்டனையின் பின்னர் காடையர்கள்கூடம் என்ற அங்கீகாரத்தை பெற்ற யாழ் பல்கலைக் கழகத்தில் குற்றங்கள் சர்வசாதாரணமாக மாறியுள்ளது:

எனவே மேற்படி குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனை வழங்கப்படப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Read more...

இஸ்ரேலை இலங்கை உட்பட உலக நாடுகள் பயங்கரவாத நாடு என அறிவிக்க வேண்டுமாம். கோருகின்றது உலாமா சபை

இஸ்ர‌வேலை ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடாக பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்திய‌ பொலிவியா நாட்டை இல‌ங்கை முஸ்லிம் உல‌மா க‌ட்சி பாராட்டுவ‌துட‌ன் அந்நாட்டை பின்ப‌ற்றி இல‌ங்கை உட்ப‌ட‌ உல‌க‌ நாடுக‌ள் அனைத்தும் இஸ்ரேலை ப‌ய‌ங்கர‌வாத‌ நாடாக‌ அறிவிக்க‌ வேண்டும் என‌வும் கேட்டுக்கொண்டுள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ம‌த‌னி இன்று (07) தெரிவித்த‌தாவ‌து,

இஸ்ரேல் உருவான‌ கால‌ம் முத‌ல் அது த‌ன‌க்கு விருந்தாளியாக‌ இருக்க‌ இட‌ம‌ளித்த‌ பால‌ஸ்தீன‌த்தை ஆக்கிர‌மித்திருப்ப‌துட‌ன் ம‌னித‌ உரிமைக‌ளை கொஞ்ச‌மும் ம‌திக்காம‌ல் தின‌மும் மிக‌ மோச‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை அர‌ங்கேற்றி வ‌ருகின்ற‌து.

குழ‌ந்தைக‌ள், பெண்க‌ளையும் காட்டுமிராண்டித்த‌ன‌மாக‌ தாக்கி வ‌ருகிற‌து. உல‌கில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை எதிர்ப்போம் என‌ கோஷ‌மெழுப்பும் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, இல‌ங்கை போன்ற‌ நாடுக‌ளும் இஸ்ரேலின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் க‌ண்டும் காணாம‌ல் இருக்கின்ற‌ன‌.

இவ்வாறு இந்த‌ நாடுக‌ள் இஸ்ரேல் விட‌ய‌த்தில் க‌ண் மூடிக்கொண்டிருப்ப‌தால் இஸ்ரேலின் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ செய‌ல்க‌ள் உச்ச‌க்க‌ட்ட‌த்தை அடைந்திருக்கின்ற‌ன‌.

இந்த‌ நிலையில் பொலிவியா நாடு இஸ்ரேலை ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடாக‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தியுள்ள‌மை ந‌ல்ல‌தொரு முன்னுதார‌ண‌மாகும். இத‌னை உதார‌ண‌மாக‌ வைத்து அனைத்து நாடுக‌ளும், இல‌ங்கையில் உள்ள‌ த‌மிழ், சிங்க‌ள‌, முஸ்லிம் க‌ட்சிக‌ளும் பொலிவியாவை பாராட்டுவ‌துட‌ன் இஸ்ரேல் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடுதான் என‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து.

Read more...

Saturday, April 6, 2019

கொழுந்துவிட்டெரியும் பிரதேசவாதத்தீயை அணைக்க முடியாதா? இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதா? வை எல் எஸ் ஹமீட்

சாய்ந்தமருது உள்ளூராட்சி கோரிக்கையினால் எழுந்த சூடான சூழ்நிலையில் சில நியாயங்களைப் புரியவைப்பதற்காக பல ஆக்கங்களை எழுதியிருக்கின்றேன். சில நியாயங்களை எழுதுவதைத் தவிர்ந்துகொண்டேன். ஏனெனில் அவை நியாயங்களாக, யதார்த்தங்களாக இருந்தபோதிலும் இவ்விடயம் உணர்வுகளோடும் சம்பந்தப்பட்டது; உணர்ச்சி வசப்பட்டநிலையில் அங்கு subjective பார்வையே மேலோங்கியிருக்கும். அப்பொழுது நியாயங்களும் சிலவேளை பிழையாகத் தெரியும்.

இந்நிலையில், யாருடைய உள்ளத்தையும் புண்படுத்திவிடக்கூடாது; என்ற ஒரு எண்ணப்பாட்டில் அந்நியாயங்களை எழுதுவதைத் தவிர்ந்துகொண்டேன். ஆனாலும் உள்ளூராட்சி தேர்தலுக்குப்பின் ஓரளவு அமர்ந்திருந்த சூழ்நிலை மீண்டும் உசுப்பிவிடப்பட்ட நிலையில் சில யதார்தங்கள் வெளிப்படையாக எழுதப்பட்டே ஆகவேண்டும்; ஒரு சில, எந்த யதார்த்தங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கடும்போக்காளர்கள் சிலவேளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நேர்மையாக சிந்திக்கின்ற படித்த, இரு ஊர்களின் சுமூக உறவை யாசிக்கின்ற சாய்ந்தமருது மக்கள் புரிந்துகொள்வார்கள்; என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.

இப்பிரச்சினை உருவாக்கப்பட்டது அரசியல்வாதிகளால், அதற்கு மீண்டும் உயிர்கொடுத்திருப்பதும் அதே அரசியல்வாதிகளே, என்பதை கடந்த பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதேநேரம் அரசியல்வாதிகளுடனான பிரச்சினை சக ஊருக்கெதிரான பிரச்சினையாக மாற்றப்பட்டதையும் அவ்வாக்கத்தில் மேலெழுந்தவாரியாக சுட்டிக்காட்டியிருந்தேன்.

அரசியல்வாதிகளுடனான பிரச்சினை, அவர்களுக்கெதிரான கோபம், போராட்டம் அனைத்தும் நியாயமானதே! ( வன்முறையைத்தவிர), ஆனால் அவை ஊர்களுக்கெதிரான பிரச்சினையாக உருமாறி சிலர் இதயத்தில் சீல் வைக்கப்பட்டவர்களைப்போன்று எந்த நியாயங்களையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமில்லாமல் அரைத்த மாவையே அரைத்து துவேசத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறம், சில நியாயமாக சிந்திக்கக்கூடிய, நிதானமாக முகநூல்களில் எழுதக்கூடிய சகோதரர்கள்கூட, மற்றவர்களைப்போன்று துவேசமாக, வக்கிரமாக எழுதாதபோதும் தங்களது உரிமையை, நியாயமான கோரிக்கையைப் பெற்றுக்கொள்ள அடுத்த ஊர் தடையாக இருக்கிறதே; என்ற ஆதங்கத்தை அவ்வப்பொழுது மிகவும் நாகரீகமாக வெளிப்படுத்துகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு நினைப்பதற்கு பிரதான காரணம் இந்த சபையைப் பெற்றுக்கொள்வது தங்களது “உரிமை”, அது “நியாயமான கோரிக்கை”, என்று நம்புகிறார்கள். அவ்வாறு பிரச்சாரகாரர்களால் நம்பவைக்கப்பட்டிருக்கின்றார்கள்; எந்த அளவு என்றால் வெளியூரில் உள்ளவர்கள்கூட அது அவர்களது உரிமை, நியாயமான கோரிக்கை; என்று கருத்துத்துத் தெரிவிக்குமளவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஏன் கல்முனையில் இருந்து எழுதுகின்ற சகோதரர்கள்கூட அது உங்களது உரிமை, நியாயமான கோரிக்கை, ஆனால் எங்களுக்கு இவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கின்றது; எனவே நான்காகப் பிரிக்கவேண்டும்; என்கிறார்கள்.

இதனைக்கேட்கின்றவர்கள் உங்களுடைய பிரச்சினையை நீங்கள் பாருங்கள்; எங்களை நாங்கள் ஆளவேண்டும்; எனக் கேட்பது எங்கள் உரிமை; உங்களது எல்லைப் பிரச்சினை ஒருபோதும் தீர்க்கமுடியாது; எங்களுக்கு எல்லைப் பிரச்சினை இல்லையே!; அப்படியானால் எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா?, கல்முனையைப் பாதுகாப்பதற்கு எங்களது உரிமை, எங்களது நியாயமான கோரிக்கையைத் தாமதிக்கவேண்டுமா? சாய்ந்ததருது பிரிந்தாலும் மருதமுனை, நற்பிட்டிமுனை இருக்கிறது; அவர்களின் துணையுடன் கல்முனையைப் பாதுகாக்கலாம்; ( அதாவது தமிழர்களைவிட ஆசன எண்ணிக்கை கூடுகிறது; இந்த ஊர்கள் இணையும்போது); எனவே, எங்களது உரிமையை, எங்களது நியாயமான கோரிக்கையை முதலில் நிறைவேற்றுங்கள்; என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இளைஞர்களும் இந்தக் கோணத்தில் மூளைச்சலவை செய்யப்படுவதால் இந்த இரண்டு ஊர்களுக்குமிடையில் ஒரு பாரிய நிரந்தர வெடிப்பு வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

இந்நிலையில் சபை பெறுவது உரிமையா? அது நியாயமான கோரிக்கையா? அல்லது வெறும் அபிலாஷை அல்லது விருப்பம் என்ற சொற்பதங்களுக்குள் உள்ளடக்கப்படவேண்டியதா? என்பதை 21ம் நூற்றாண்டில் வாழுகின்ற நாம் அறிவியல்ரீதியாக சற்று ஆராயவேண்டும்.

இதன் நோக்கம் தனிச்சபைக் கோரிக்கையை மழுங்கடிப்பதல்ல. தனிச்சபைக் கோரிக்கையினால் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசவாத வெறியையும் ஆவேசத்தையும் தணிப்பதுடன் ஒருவர் தன்அபிலாஷையை, விருப்பத்தை அடுத்தவருக்குப் பாதிப்பில்லாமல் அடைய ஒரு கூட்டுமுயற்சியில் ஈடுபடத்தூண்டுவதாகும்.

உரிமையா?

தனிச்சபை பெறுவது “ உரிமை” என்றால் அது எந்த அடிப்படையில்? இது முதலில் ஆராயப்பட வேண்டும்.

1987இற்குமுன் தனிச்சபை இருந்தது; எனவே அதை மீண்டும் பெற்றுக்கொள்வது நம் உரிமை என்கிறீர்களா?அப்படியானால் அன்று நாடுபூராகவும் பிரேமதாசவின் திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்ட அனைத்து சபைகளுக்கும் அந்த உரிமை இருக்கவேண்டும்.

ஒருவருக்கு உரிமை இருந்தால் அந்த உரிமையை வழங்க கடமைப்பட்ட ஒருவர் இருப்பார். உதாரணமாக நாம் நமது வீட்டில் நிம்மதியாக தூங்குவது நமது உரிமை. எனவே, அடுத்த வீட்டுக்காரன் நம்மைத் தொந்தரவு செய்யுமளவு வானொலியின் சத்தத்தையோ, வேறு ஒலிகளையோ எழுப்பாமல் நமது அமைதியை உறுதிப்படுத்துவது அவன் கடமை. அவன் தவறும்போது அவனுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம்.

அதேபோன்று, சபை பெறுவது நமது உரிமையானால் அதைத் தருகின்ற “ கடமை” அரசுக்கு இருக்கவேண்டும். அவ்வாறாயின் அன்று நாட்டில் இணைக்கப்பட்ட அனைத்து சபைகளையும் வழங்கவேண்டிய கடமை அரசுக்கு இருக்கவேண்டும். அது சரியா? அன்று இணைத்தது; அரசின் கொள்கையோடு சம்பந்தப்பட்டது.

எனவே, அன்று நாம் தனிச்சபையாக இருந்ததனால் இன்று தனிச்சபை கேட்பது உரிமையாகாது. அவ்வாறாயின் அது சகலசபைகளுக்கும் இருக்கவேண்டும்.

தகுதி உரிமையா?

எங்கள் சனத்தொகை, பிரதேச செயலகம், வங்கிகள் போன்ற ஒரு நகரசபையாகத் தேவையான அனைத்து தகுதிகளும் எங்களுக்கு இருக்கின்றது. எனவே சபை பெற்றுக்கொள்வது எங்கள் உரிமையில்லையா? என்பது அடுத்த கேள்வி.

இவை இருந்தால் அது உரிமையல்ல. அது eligibility. உதாரணமாக ஒரு வருடத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெறுகிறார்கள். ( eligibility) ஆனால் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. Eligibility உரிமையானால் பல்கலைகழகம் கட்டாயம் கிடைக்கவேண்டும். கிடைக்கின்றதா?

ஒரு குறித்த பதவி வெற்றிடத்திற்கு தகைமையுள்ள பலர் விண்ணப்பிக்கின்றனர். அனைவருக்கும் eligibility இருக்கின்றது. எல்லோருக்கும் கிடைப்பது உரிமையா? எனவே, சபைபெற தகமை இருக்கின்றது; என்பதனால் அது உரிமையாகிவிடாது.

சம உரிமை ( equal right)

இதே தன்மையுள்ள எல்லோருக்கும் அந்தத் தகைமை இருக்கின்றது; என்ற ஒரே காரணத்திற்காக வழங்கிவிட்டு நமக்குத் தராவிட்டால் அப்பொழுது சம உரிமை பாதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, அதனைப் பெறுவது நம் உரிமை எனலாம். அவ்வாறாயின் கொழும்பு மாநகரசபை எத்தனை சபைகளாக பிரிக்கப்பட வேண்டும். எனவே, இங்கு சம உரிமையும் பாதிக்கப்படவில்லை.

நம்மை நாமே ஆளுவது நமது உரிமை இல்லையா?

இது அடுத்த கேள்வி: உள்ளூர் ‘ஆட்சி’, ஆட்சி என்ற சொல் பாவிக்கப்பட்டாலும் இது Self-Rule என்ற அர்த்தத்தில் வருகின்ற ஆட்சியல்ல. இது சில உள்ளூர் நிர்வாகங்களை செய்வதாகும். அவ்வாறு “ ஆட்சி” என்றுதான் எடுத்துக்கொண்டாலும் அந்த உரிமை ஒவ்வொரு ஊருக்கும் அல்லது குறித்த தகமையுள்ள எல்லா ஊர்களுக்கும் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினால் மேல் கூறப்பட்ட விடைகளுக்குள்ளேயே செல்லவேண்டி ஏற்படும்.

தம்மைத் தாமே ஆளும் உரிமை என்பது “ சுய நிர்ணய உரிமையுடன் சம்பந்தப்பட்டது” ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி சுயநிர்ணய உரிமை இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் உள்ளூராட்சி சபையல்ல, மாகாணசபையல்ல, ஆகக்குறைந்தது Nation State வரையாவது செல்லலாம்.

எனவே, இங்கு “உரிமை”என்ற சொல் பொருத்தமற்றது; என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு “ உரிமை, உரிமை” என்கின்ற உணர்வு இளைஞர்களுக்கு ஊட்டப்படுகின்றபோது அது அடுத்த ஊருக்கெதிராக ஒரு பிரதேசவாத வெறியாக மாறுகிறது. அடுத்த ஊர் அந்த உரிமையைத் தடுக்கின்றது; என்ற அடிப்படையில். இதைப்பற்றி சிந்திப்போம் சகோதரர்களே!

நியாயமான கோரிக்கை


“நியாயமான கோரிக்கை” என்ற பதம் பொருத்தமா?

நியாயம் அல்லது நீதி கோருவது பிரதானமாக இரண்டு அடிப்படையில். ஒன்று நடந்த அநீதிக்கு தீர்வு அல்லது நீதி கேட்பது. இரண்டு நடக்கப்போகும் அநீதியைத் தடுக்க தீர்வு கேட்பது.

1987 இல் இணைத்தது அநீதி என்கிறோமா? அவ்வாறாயின் அது முழு நாட்டுக்கும் பொருந்தும் என்பது ஒரு புறமிருக்க, கல்முனையில் இணைத்த அனைத்து சபைகளுக்கும் அது பொருந்தவேண்டுமே! அவ்வாறாயின் கல்முனையும் தனது அன்றைய சபையைக் கேட்பது நியாயமாகத்தானே இருக்கவேண்டும். அவ்வாறு கல்முனைக்கு வழங்காமல் அடுத்த ஊருக்கு வழங்கினால் அது அநியாயமில்லையா? சம உரிமை மீறப்படாதா?

எனவே, எங்கு பாவிக்கப்படவேண்டிய சொற்கள் எங்கு பாவிக்கப்படுகின்றன; என சித்தித்துப்பாருங்கள். கல்முனை, நீங்கள் பிரிக்கும்போது சம உரிமையைப் பேணுங்கள், அது எமது உரிமை, எங்களுக்கு சம உரிமையை மறுத்து அநியாயம் செய்துவிடாதீர்கள்; என்று அரசிடம் விடுக்கும் நியாயமான கோரிக்கையைப் பார்த்து ஏன் கோபப்படுகிறோம்; சகோதரர்களே!

புரிகின்றதா நாம் தவறான பாதையில் செல்கின்றோம்; அர்த்தமில்லாமல் இரு ஊர்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படுகிறோம்; என்று.

மதப்பற்று என்பது தன் மதம் சிறக்கவேண்டுமென நினைப்பது, செயற்படுவது. மதவாதம் என்பது அடுத்த மதத்தவர்களை நசுக்கி தன் மதத்தவர்களை வாழவைப்பது.

ஊர்ப்பற்று என்பது தன்னூர் சிறக்கவேண்டுமென நினைப்பது. ஊர்வாதம் என்பது அடுத்த ஊரை நசுக்கி, அதற்கு அநியாயம் செய்து தன் ஊரை வாழவைக்க முயல்வது.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், மேலே கூறியிருப்பவை உங்கள் கோரிக்கை தொடர்பாக அல்ல. மாறாக கோரிக்கையும் உரிமையென்றும் நியாயமென்றும் அடுத்த ஊர் அந்த உரிமையை, நியாயமான கோரிக்கையைத் தடுக்கிறார்கள்; என்றும் இரு ஊர்களுக்குள்ளும் ஏற்படுத்தப்படும் பிளவுகள் தொடர்பானதாகும்.

கோரிக்கை

இப்பொழுது கோரிக்கை தொடர்பாக பார்ப்போம்

குறித்த கோரிக்கைக்குப் பொருத்தமான பதம் ‘ அபிலாஷை, விருப்பம்’ என்பதாகும். உதாரணமாக தம்மைத்தாமே ஆள தமிழர்கள் அதிகாரம் கேட்பது அவர்களது அபிலாஷை, தனிநாடும் அவர்களது அபிலாஷை. சமஷ்டியும் அவர்களது அபிலாஷை. அபிலாஷைகள் எல்லாம் உரிமையல்ல. அபிலாஷைகள் நியாயமாக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம்.

அவர்களின் அபிலாஷையான தனிநாட்டை அரசு ஏற்கவில்லை. சமஷ்டியை சிலர் ஏற்கின்றனர். சிலர் மறுக்கின்றனர். அதேபோன்று அதிகாரப்பகிர்வும். அதனால்தான் அதிகாரப்பகிர்வுடன் சேர்த்து தமது சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்க வேண்டுமென்று தமிழர்கள் கோருகின்றனர். அப்பொழுது அவையனைத்தும் அவர்களது உரிமையாகிவிடும்.

எனவே, உரிமை என்ற சொல்லைப் பாவித்து ஊர்களைப் பிரித்துவிடாமல் இருப்போம். நமது அபிலாஷைக்கு யாரும் எதிர்ப்பில்லை. ஒற்றுமையாக அடைய முயற்சிப்போம். வீண் வாதங்களை ஓரம் கட்டுவோம்.

எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா?

தமிழர்கள் கேட்கும் எல்லையை வழங்க முடியாது; என்று ஒரு ஊர் சொன்னால் அடுத்த பக்கம் அப்படியானால் எங்களது பழைய எல்லையைத் தருவீர்களா? என்கிறார்கள்.

அவ்வாறாயின் தமிழர் கேட்கின்ற மொத்த town ஐயும் உங்களது சபைக்காக தாரைவார்க்க வேண்டுமென்கிறீர்களா? இவ்வாறு கூறுவதற்கு கலிமாச்சொன்ன ஒரு சகோதர முஸ்லிமுக்கு மனசு வருகின்றதா?

அதேநேரம், உள்ளூராட்சி எல்லையைப் பொறுத்தவரை அவ்வாறு பழைய எல்லையென்ற பிரச்சினை கல்முனை- சாய்நதமருதில் இல்லை; என்பதை அறிவீர்களா? 1987இலும் இன்றும் ஒரே எல்லைதான் என்பது தெரியுமா?

நீங்கள் கூறும் எல்லை குறிச்சியோடு அதாவது பிரதேச செயலகத்தோடு சம்பந்தப்பட்டது. குறிச்சிக்கும் வட்டாரத்திற்கும் வித்தியாசம் புரியாதவர்களா முகநூலில் பிரதேசவாதம் பேசுகிறார்கள்?

இந்த குறிச்சி எல்லைப் பிரச்சினையில் எதுவித பங்குமில்லாமல் பழி சுமந்தவன் நான்; இல்லை, வேண்டுமென்று அரசியலுக்காக வக்கிரத்தனமாக பழி சுமத்தப்பட்டவன் நான். ( இது தொடர்பாக ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கின்றேன்) மாகாணசபையில் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஒரு தசாப்தத்திற்குமேல் தலைவரின் செயலாளராக சாய்ந்தமருது மக்களுக்கு தோள்கொடுத்த ஒருவன்.

எனது அரசியல் அனுபங்களை ஒரு தொடராக எழுதவேண்டும்; என்ற எண்ணம் இருக்கின்றது; இன்ஷாஅல்லாஹ், அப்பொழுது பல விடயங்களை இளைய தலைமுறை அறிந்துகொள்ளமுடியும். சாய்ந்தமருது மார்க்கட் குண்டுவெடிப்பின்போது, அல்லது S T F சாய்ந்தமருது கடற்கரையில் நின்றவர்களை கொத்தாக அள்ளிச்சென்றபோது, மாளிகைக்காட்டில் பணம்கொடுக்காமல் மீன் பறித்த பொலிசாருக்கும் மீனவர்களுக்கும் கைகலப்பேற்பட்டபோது, இவ்வாறு இன்னும் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளில் களத்தில் நின்றது யார்; என்பது புரியும்.

மறைந்த தலைவர் ஒருமுறை அம்பாறை பங்களாவில் வைத்துக் கூறினார், “ சாந்ந்தமருது- கல்முனை பிரதேசவாதத்தை வை எல் எஸ் ஹமீட்டை வைத்தே உடைக்க வேண்டுமென்று சொன்னார்”. அதை அங்கு சிலர் கேட்டுக்கொண்டு நின்றார்கள். அதுதான் வினையானது. பழிசுமத்தியவர்களுக்கு தீர்ப்புக்கொடுக்க அல்லாஹ் போதுமானவன்.

சாய்ந்தமருது பிரிந்தாலும் கல்முனைக்குப் பாதிப்பில்லை.

இது அடுத்த வாதம். அன்புள்ள சகோதரர்களே, எதைவைத்து இதைச் சொல்கிறீர்கள். மருதமுனை, நற்பிட்டிமுனையை வைத்துத்தானே! உண்மையில் மருதமுனை, நற்புட்டிமுனை சகோதரர்கள் கல்முனைமீது எப்போதும் அக்கறைகொண்டவர்கள்; என்பது வேறுவிடயம். ஆனால் அருகேயுள்ள, சுமார் 40% திருமண உறவுகளால் பின்னிப் பிணைந்த ஊரே கல்முனைக்கு என்ன நடந்தால் என்ன, எங்களது கோரிக்கை நிறைவேறினால்போதும்; என்று நினைக்கும்போது மருதமுனையும் நற்பிட்டிமுனையும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளை உதறித்தள்ளிவிட்டு ஒவ்வொரு உள்ளூராட்சித் தேர்தலிலும் கல்முனையைப் பாதுகாக்க கல்முனையுடன் இணைந்து அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பார்கள்; என்று எதிர்பார்ப்பது நியாயமா?

எத்தனை கட்சிகள். எத்தனை நிலைப்பாடுகள். இவைகள் அனைத்தும் உதறித்தள்ளப்படும் என நினைக்கிறீர்களா? கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் சாயந்தமருது பிரிந்தாலும் கல்முனைக்குப் பாதிப்பதில்லை; என நிரூபித்ததாக கூறுகிறீர்கள். அனைத்தையும் தலைகீழாக கூறுகிறீர்கள்.

அவ்வாறெனில் ஏன் தமிழ்த்தரப்பின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைக்கவேண்டியேற்பட்டது, வாக்களிக்காமல் இருந்தவர்கள் எத்தனைபேர்? என்பதையெல்லாம் சிந்தித்தீர்களா? இவர்களை நம்பி பல ஆயிரம் கோடி கல்முனையில் முஸ்லிம்களின் சொத்துக்களை ஆபத்தில் விடவேண்டுமா?

கல்முனை மாநகரைப் பாதுகாக்கும் பொறுப்பு கல்முனையிடமே இருக்க வேண்டும்


ஒன்றில் தற்போதைபோல் ஒன்றாக இருக்க வேண்டும். பிரிவதாயின் ஒரு சிறிய risk ஐக் கூட கல்முனை ஏற்கமுடியாது. அந்தவகையில் பிரிவதாயின் கல்முனை மாநகரைப் பாதுகாக்கும் பொறுப்பு கல்முனையிடமே இருக்க வேண்டும். அப்பொழுது அவர்களது கட்சி அரசியலை, மாகாண, பொதுத்தேர்தலின்போது பார்த்தாலும் மாநகரசபைத் தேர்தலில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுபடுவார்கள்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அத்தனை கட்சிகள் போட்டியிட்டும் சுமார் 75% ஒற்றுமைப்படவில்லையா? ஒற்றுமைப்பட்டும் தமிழ்தரப்பின் தயவுடன்தானே ஆட்சிபிடிக்க முடிந்தது. மாநகரசபை கல்முனையின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா? ஏன் சிந்திக்க மறுக்கின்றோம். ஏன் விதண்டாவாதம் பேசுகின்றோம்

உடனடியாக நிர்வாகம் அமைக்கமுடியுமா?

நாளை சாய்ந்தமருதுக்கு தனிச்சபை பிரகடனப்படுத்தினாலும் நாளைமறுதினம் தேர்தல் நடக்குமா? இல்லை. தேர்தலுக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு வருடம் போகும். அதுவரை கல்முனை மாதகரசபையுடன்தான் இருக்கவேண்டும். எனவே, இவ்வளவு கசப்பான அதீத அவசரத்தில் அர்த்தமிருக்கின்றதா?

உங்களுக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. நீங்கள் தெரிவுசெய்த கையாலாகாத, உங்களை ஏமாற்றிய அரசியல்வாதிகள் TNA ஐயை மீறி இப்பொழுது உங்களுக்கு எதுவும் தரப்போவதில்லை.

எனவே, ஒன்றில் அடுத்த தேர்தல்வரை பொறுத்திருங்கள். தேர்தலில் இந்த கையாலாகாதவர்கள் அனைவரையும் துரத்திவிட்டு ஒரு புதிய நெஞ்சுரமுள்ள அணியை உருவாக்க முயற்சியுங்கள். அதனை நீங்கள் தனியாக செய்யமுடியாது. ஏனைய ஊர்களுடனும் முடிந்தால் மொத்த மாவட்டத்துடனும் பேசுங்கள். அம்பாறை மாவட்ட மொத்தப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முன்மாதிரியாக இருங்கள்.

அல்லது இந்த நான்கு ஊர்களும் அவசரமாக பேசுங்கள். அடுத்த பொதுத்தேர்தலில் ஒரு சுயேட்சைக்குழுவை இறக்க முயற்சி செய்யுங்கள். இப்பொழுதே வேட்பாளர்களைத் தேடுங்கள். அந்த செய்தி இந்த கையாலாகத தலைவர்களுக்குப் போனால்போதும், ரணிலின் காலில் விழுவார்கள் தங்கள் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக.

இந்த ஆலோசனையை உள்ளூராட்சித் தேர்தலுக்குமுன்பும் முன்வைத்திருந்தேன். அன்று இந்த நான்கு ஊர்களும் இணைந்து ஒரு சுயேட்சையை நிறுத்த முற்பட்டிருந்தால் அப்பொழுதே பிரச்சினை தீர்ந்திருக்கும். ஆனால் பிரிந்து ஊர்வாதம் பேசினோம். கர்வம், Ego என்பவற்றிற்குள் முடங்கிக் கிடந்தோம். எதைச் சாதித்தோம். பிரிந்து நிற்கும்வரை இனியும் சாதிக்கப்போவதில்லை. இரண்டு ஊர்களும் கசப்பைத்தான் வளர்க்கும்.

பிரிவினையை நாடுவது சாய்ந்தமருது என்ற அடிப்படையில் இதில் முதல் முன்னெடுப்பை நீங்கள் செய்வது மிகவும் பொருத்தமானது.

அதேநேரம் கல்முனை பொறுப்பில்லாமல் நடந்துகொள்ள முடியாது. குறிப்பாக, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போதாவது தமிழ் பிரதேச செயலகம் அவர்கள் கேட்கும் எல்லையால் வழங்கப்பட சாத்தியம் இருக்கிறது.

காரணம் TNA ஜனாதிபதித் தேர்தல் நிபந்தனையில் இதையும் முன்வைப்பார்கள். முஸ்லிம் வாக்குகள் இலவசமாக கிடைக்கும்; என அரசுக்குத் தெரியும், வட கிழக்கிற்கு வெளியே அவர்களுக்கு எழுதிவைத்த வாக்குகள். வட கிழக்கில் அருமைக் கட்சிகள் பெற்றுக்கொடுக்கும். எனவே, தமிழ்த்ரப்பைத் திருப்திப்படுத்தவே அரசு முனையும். எல்லாவற்றையும் இழக்கப்போகிறோம்.

எனவே, சாய்ந்தமருதுதான் பேசவேண்டும்; என்று எதிர்பார்க்காமல் நீங்களும் முயற்சி செய்யுங்கள். இன்னும் சொல்லப்போனால் மேலே கூறியதுபோல் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் அவசரப்பட வேண்டியது சாயந்தமருதல்ல, கல்முனை.

நிர்வாகங்கள் அரசியல் வாதிகளின் பொக்கட்டிலிருந்து வெளியேறுங்கள். அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்துவதை விட்டுவிட்டு ஊரைப்பாருங்கள்.

சகல ஊர் உலமாக்களே!

நீங்கள் தீனைச் சுமந்தவர்கள். மக்களுக்கு வழிகாட்டவேண்டியவர்கள். நீங்களாவது முன்வரமாட்டீர்களா இம்முன்னெடுப்பைச் செய்வதற்கு. இம்முன்னெடுப்பைச் செய்வதற்கு நீங்கள் மிகச்சிறந்தவர்கள் அல்லவா!

மருதமுனை, நற்பிட்டிமுனை நிர்வாகிகளே!

நீங்கள் இப்பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப்படாதவர்கள். நடுநிலையாய் இதனை முன்னெடுப்பதற்கு உங்களைவிட பொருத்தமானவர்கள் இல்லை. எனவே, முன்வருவீர்களா?

நாம் தகுதியான தலைமைத்துவங்களை, பிரதிநிதித்துவங்களை தெரிவுசெய்திருந்தால் இவ்வாறான ஒரு வேண்டுகோள் விடுக்கவேண்டி ஏற்பட்டிருக்காது. அவர்கள் எப்பொழுதோ இதனைச் சாதித்தருப்பார்கள். என்ன செய்வது நாம் எல்லோரும் அத்தவறை செய்துவிட்டோம்.

இப்பொழுது இவர்களைத் தண்டிப்பதல்ல பிரச்சினை. அதனைத் தேர்தல் வரும்போது பார்க்கலாம். இப்பொழுது நமது காரியத்தைச் சாதிக்கவேண்டும். மேலே கூறியதுபோல் ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் தமிழ்த்
தரப்பு அனைத்தையும் சாதிக்கும் வாய்ப்பு பலமாக இருக்கின்றது. நாம் அனைத்தையும் இழக்கும் வாய்ப்பிருக்கிறது. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரத்தால் பிரயோசனம் இல்லை.

இதைச் சாதிப்பதற்கு தற்போதிருக்கும் ஒரே வழி இந்த சுயேச்சை முன்னெடுப்புத்தான். கடந்தகால கசப்புகள் எதைப்பற்றியும் பேசவேண்டாம்.

கல்முனை நான்காகப் பிரிப்பு. தமிழ்ப்பிரதேச செயலகம் மூடல் அல்லது நான்கு பிரிப்பில் தமிழருக்கு தீர்க்கப்பட்ட எல்லைக்குள் ஒரு சபை, ஒரு செயலகம்.

இது உடனடியாக செய்யப்படவேண்டும். இல்லையெனில் சுயேச்சை களமிறக்கப்படும். இதுதான் கோசமாக இருக்க வேண்டும். நீங்கள் ஏற்பாடுகளைச் செய்யுங்கள். வேட்பாளர்களைத் தயார்படுத்துங்கள். ஆனால் பெரும்பாலும் சுயேச்சை இதற்காக நிறுத்தவேண்டி ஏற்படாது. அடிவயிற்றில் கைவைக்கப்போகிறார்கள் எனத் தெரிந்ததும் அனைத்தும் நடக்கும்.

இதை ஒரு பாடமாகவைத்து எதிர்காலத்தில் எல்லா ஊர்களும் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம். பாம்பிற்கு மண்டையில்தான் அடிக்கவேண்டும். தயாரா?

ஒற்றுமைப்படுவோமா?

அம்பாறை மாவட்ட மொத்த முஸ்லிம்களே! இது கல்முனைத்தொகுதிப் பிரச்சினை எனப்பாராமல் சமூகப் பிரச்சினையாகப் பாருங்கள். உங்களது ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குங்கள்..

Read more...

இரட்டை குடியுரிமை சமாச்சாரம் முடிவு. ஜூன் மாதத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது இரட்டை குடியுரிமை தடையாகவுள்ளதாக பெரிதும் பேசப்பட்டு வந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள அவர் தனது அமெரிக்க பிரஜா உரிமையை ரத்துச் செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு முடித்துள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த 26ம் திகதி லண்டன் நோக்கி புறப்பட்ட அவர் அங்கு சில சந்திப்புக்களை மேற்கொண்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் இவ்வாரம் தனது இரட்டை பிரஜா உரிமையை ரத்துச் செய்யும் விடயத்தை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பத்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பித்திருந்தபோதும், அதற்கு தேவையான மேலதிக ஆவனங்களை இவ்வாரம் அமெரிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தில் நேரடியாக சென்று சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் அவர் தேர்தல் களத்தில் குதித்தல் சவாலானது எனக் கருதும் தரப்பு ஒன்று அமெரிக்காவில் கோத்தபாய மீது குற்றவியல் வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரது இரட்டை குடியுரிமை வாபஸ் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்த முயற்சித்தது. இருந்தபோதும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு அவை கைவிடயப்பட்டுள்ளதாக இலங்கைநெட் நம்பகமாக அறிகின்றது.

அமெரிக்காவில் முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு பலத்த வரவேற்புக்கள் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வாழ் சக்திவாய்ந்த இலங்கையர்கள் பலர் அவரை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர் எனவும் இலங்கைநெட் அறிகின்றது. அவர் எதிர்வரும் 16ம் திகதி இலங்கை வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

கொமாண்டோ படையணியையும் பொறுப்பேற்றார் சாவேந்திர சில்வா.

புலிகளுடனான யுத்தத்தில் பிரதான படையணி ஒன்றுக்கு தலைமைதாங்கிய மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா கொமாண்டோ படையணியின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ளார். நேற்று (05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கனேமுல்லை பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொமாண்டே படையணி தலைமையகத்தில் சம்பிரதாய நிகழ்வுடன் பதவி பொறுப்போற்கும் நிகழ்வு இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மத வழிப்பாடுகளுடன் உத்தியோகபுர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு பதவியை பொறுப் பேற்றுக் கொண்ட அவர்படைத் தலைமையக வளாகத்தில் ஒரு மரத்தை நடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டதுடன் பிரிகேடியர் பிரசன்ன சேனாரத்ன மற்றும் கொமாண்டோ படையணி கட்டளை தளபதிகள் உட்பட அனைத்து அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

கொமாண்டோ படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ரூல்ப் நுகேரா அவர்கள் இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் நிமித்தம் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவி பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் பிரிகேடியர் பியந்த சேனாரத்ன பிரிகேடியர் உபாலி ராஜபக்க்ஷ ஒபரேஷன் பணிப்பகத்தின் பிரிகேடியர் உதித்த பண்டார கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் கேர்ணல் அணில் சேமசிரி மற்றும் கட்டளை தளபதி பிரிகேடியர் கேணல் ஷாமல் சில்வா மற்றும் கொமாண்டோ படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டன.

இராணுவத்தின் பிரதான அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டபோது அந்நியமனத்திற்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்து எதிர்ப்பலைகள் எழுந்த நிலையிலேயே, அவருக்கு மேலதிக பதிவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

புலிகளை அழித்தொழிப்பதற்கு நாங்கள் ராஜபக்சவிற்கு உதவினோம். கஜேந்திரன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.

புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவரான தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முழுமையான ஆதரவை வழங்கியிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததனூடாக தாங்கள் அவ்வியக்கத்தினை ஒழிப்பதற்கு உதவியதாக ஏற்றுக்கொண்டுள்ளார். புலிகள் இயக்கம் மீதான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு பிரித்தானியாவில் சுகபோகம் அனுபவித்த கஜேந்திரன், அங்கிருந்து இலங்கை அரசிற்கு உதவியதாகவும், யுத்தம் முடிவடைந்த பின்னர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒப்பந்தத்தை செய்து கொண்டு இலங்கை வந்ததாகவும் பா.உ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த விடயம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் புலிகளை அழிப்பதற்கு அன்றைய அரசிற்கு உதவினார் என்பதன் ஊடாக அன்று அக்கூட்டமைப்பில் அங்கத்தவராக இருந்த கஜேந்திரன் தானும் அதற்கு உதவியதை ஏற்றுக்கொள்கின்றார்.

மேலும் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருந்து தெரிவித்த கஜேந்திரன்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள கிராம புரட்சி என்ற 'கம்பெரலிய திட்டத்தை' சிபாரிசு செய்வதாகவும் சாடுகின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காது தொடர்ந்து காலத்தைக் கடத்திவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்கள் நெருங்கி வருவதால், அந்தத் தேர்தல்களில் வாக்கு வங்கிககளை அதிகரித்துக்கொள்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

தமிழ் மக்களை ஏமாற்றி தமக்கான வாக்கு வங்கிகளை அதிகரித்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்தின் கம்பெரலிய திட்டத்திற்கு பேராதரவை வழங்குவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கூறுகின்றார்.

Read more...

Friday, April 5, 2019

விக்கிக்கு உச்ச நீதிமன்று கொடுத்தது செருப்படி. நொதேர்ன் பவருக்கும் 20 லட்சம் செலுத்த உத்தரவு.

சுன்னாகத்தில் இயங்கிய நொதேர்ன் பவர் நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையத்தினால், நிலத்தில் கொட்டப்பட்ட எண்ணெய் மற்றும் கிறீஸ் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டது. இதனால் சுன்னாகம் பகுதியிலும் அதனை அண்டிய பல பகுதிகளிலும் குடிநீர் கிணறுகளில் எண்ணெய் கலப்பு ஏற்பட்டது.

குறித்த நிறுவனத்திற்கான அனுமதி விக்கினேஸ்வரனால் முறைமையான ஒழுங்குகள் பின்பற்றப்படாமல் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவி வந்த நிலையில் குறித்த நிறுவனத்தினால் மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என விக்கினேஸ்வரன் வெள்ளை அடித்து வந்தார்.

இந்நிலையில் இந்த மாசை ஏற்படுத்திய, நொதேர்ன் பவர் நிறுவனத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையத்தின் தலைவர் கலாநிதி ரவீந்திர காரியவசம், அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

நொதேர்ன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டினால், நீர் மாசு ஏற்பட்டுள்ளது என்றும் இது குடிநீருக்காக கிணறுகளை நம்பியிருக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதியரசர்கள் பிரசன்ன ஜெயவர்த்தன, பிரியந்த ஜெயவர்த்தன, தெஹிதெனிய ஆகியோர், சுற்றாடல் மாசை ஏற்படுத்திய நொதேர்ன் பவர் நிறுவனம், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கும் தலா 40 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாத வகையில்- 20 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளனர்.

இத்தீர்ப்பு தொடர்பாக இன்று தனது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய வட மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் தவராசா,
நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக் கொணரப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சுன்னாகம் பகுதியில் அனல் மின்நிலையத்தின் ஒயில் தாங்கியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பகுதி நிலத்தடி நீரில் ஒயில் மாசு கலந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அந்த அனல் மின்நிலைய நிறுவனமான நொதேன் பவர் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடடனர்.

இதன்போது வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அப்போதைய விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன் ஆகியோர் போராட்டத்தை முடக்க தாம் ஆய்வு செய்வதாக கூறி அதற்கு பெருமளவான நிதியையும் செலவழித்தனர்.

அதன் பின்னர் சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் மாசுக்கள் எவையுமே இல்லை என அறிக்கையையும் வெளியிடடார்.

அவ்வாறு அவர்கள் வெளியிட்ட அறிக்கை பொய்யானது அதிலும் ஊழல் நடந்துள்ளது என நான் மாகாணசபையில் பல இடங்களிலும் கூறியிருந்தேன்.ஆனாலும் அவர்கள் நான் சொல்வதற்கு மறுப்பு கூறி வந்தனர்.

மேலும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய தூதுவர் வடக்கு மாகாண முன்னாள் முதல்வரிடம் சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அங்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என சர்வசாதாரணமாக கூறியிருந்தார். அதனையும் நான் ஆதாரத்துடன் மாகாண சபையில் கூறியிருந்தேன்.

இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களை கருத்தில் எடுக்காது ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இந்த இருவரினதும் பித்தலாட்டங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளியில் வந்துள்ளது. இவர்கள் மூடி மறைத்த விடயம் நீதித்துறை ஊடாக வெளிவந்துள்ளது.என்றார்.

இதேவேளை அனல்மின் நிலையத்தினால் ஏற்பட்ட நீர் மாசு பாதிப்புக்கு 20 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு நொதேன் பவர் நிறுவனம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

த.தே.கூ வின் பூரண ஆதரவுடன் ஒப்பேறினார் ரணில் விக்கிரமசிங்க. 45 வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

மஹிந்த அணியும், ஜே.வி.பியும் எதிராக வாக்களித்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சபையிலிருந்து வெளியேறி இருந்தார்கள்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மார்ச் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

6ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, 12ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு கடந்த 13ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது.

இன்று மாலை வரவு – செலவுத் திட்டம் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும், அதிருப்தி நிலையிலுள்ள ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்களையும் வளைத்து ரணில் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க மஹிந்த அணியினர் வகுத்த வியூகம் இறுதியில் பிசுபிசுத்துப் போனது. ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

Read more...

சிறிலங்கன் எயார்லைன் தனியாருக்கு விற்பனை. புலியின் கைக்கு செல்கின்றதாம்! சாடுகின்றது தொழிற்சங்கம்.

இலங்கையின் தேசிய விமானச் சேவையான சிறிலங்கன் ஏயார்லைன் கடந்த பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. இதற்கான காரணம் வெளிப்படையானது. அரசியல்வாதிகள் நிறுவனத்தின் வழங்களை சுரண்டுவதும், நிர்வாகத்திலுள்ள குறைபாடுகளுமே இந்நிலைக்கு காரணமாகும்.

இந்நிலையில் இலங்கை அரசு அந்நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அதனை புலிகளுடன் தொடர்புடைய நிறுவனமான லைக்கா நிறுவனமே கொள்வனவு செய்யவுள்ளதாகவும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தேசிய சுதந்திர சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜனக விஜேபதிரன குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அந்த சங்கம் நேற்று ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

'விடுதலைப் புலிகளின் நிதி ஒதுக்கீடுகளுடன் செயற்படும் நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் இரண்டு அதிக இலாபகரமான துணை நிறுவனங்கள் இரண்டை அந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தகைய ஒப்பந்தத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் சென்றால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பில் லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது கண்காணித்து வருவதாகவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் சேவையாற்றி, அனுபவமுள்ள அதிகாரிகள் சிலரை அவர்கள் இணைத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய விமான சேவையின் நட்டம் என்ற முடிச்சை அவிழ்க்கச் சென்று, பாரிய பாதிப்பு ஏற்பட்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை அடகு வைக்கும் அபாயத்தை ஜனாதிபதி உணர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கேட்டரிங் நிறுவனம் வருடாந்தம் மில்லியன் கணக்கில் இலாபமீட்டுகின்றது எனவும் இலாபமீட்டும் நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான தேவை என்ன எனவும் ஜனக்க விஜேபத்திரண கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, நேரடியாக மூடவுள்ள விமான நிறுவனத்தை, மறைமுகமாக மூட சிலர் முற்படுவதாகவும் தொழிற்சங்கம் என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு இது குறித்து எச்சரிக்கை விடுப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஹசந்த யசரத்ன குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்ததைப் போன்று, ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தை இந்த அரசாங்கத்தினால் விற்பனை செய்ய முடியாது எனவும் ஹசந்த யசரத்ன கூறினார்

Read more...

இழப்பீட்டு பணியக ஆணையாளராக கேர்ணல் ரத்னபிரிய பந்து!

நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

தாரா விஜயதிலக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ஏஏஎம் பதிஹூ, லெப்.கேணல் ரத்னபிரிய பந்து ஆகியோர் இழப்பீட்டுப் பணியகத்துக்கான ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்கள் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திறந்த மற்றும் போட்டி செயல்முறைகளின் மூலம், இந்த ஆணையாளர்களை அரசியலமைப்பு பேரவை தெரிவு செய்ததாக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகம் தெரித்துள்ளது.

இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்குவதற்கும், அதனை அதிகாரிகளை நியமிப்பதற்குமாக 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் நோக்கில் இந்தப் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஆணையாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள கேணல் ரத்னபிரிய பந்து, விசுவமடுவில் சிவில் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் என்பதும், வடக்கில் மாற்று அரசியலை முன்னெடுக்க தயாராக இருப்பதாக கடந்தவாரம் தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, April 3, 2019

அடைக்கலநாதனின் பேச்சு நெஞ்சில் ஈட்டியால் குத்தப்பட்ட மக்களின் புண்ணில் தீயினால் சுடுவது போன்றது. மறவன்புலவு ஆவேசம்.

நாடாளுமன்றத்தில் 3.4.2019 இன்று இந்து விவகார, இன நல்லிணக்க அமைச்சுத் தொடர்பாகச் செல்வம் அடைக்கலநாதனின் பேச்சு இலங்கையில் வாழ்கின்ற 22 லட்சம் சைவ மக்களின் நெஞ்சத்தைத் திருக்கேதீச்சரத்தில் ஈட்டியால் குத்திய புண்ணில் தீப்பிழம்பால் சுடுவது போல் எரிக்கிறது.

இந்தக் கொடுமையான உரையைச் சைவ மக்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் சிவசேனையின் தலைவன் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைத்கலநாதனின் பாராளுமன்ற உரை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு என்ற வரிகளைத் தெரிந்தவர்கள் செல்வம் அடைக்கலநாதனின் அறிவுக் குறைவை மிக எளிதாக கண்டு அறிவார்கள்.

கத்தோலிக்கர்களால் திட்டமிட்ட நிகழ்வாகத் திருக்கேதீச்சர வளைவு உடைந்தது.

பாதிரியார் எனப் போர்வை அணிந்து வந்த மார்க்கசு அங்கே நின்று உடைப்பவர்களை ஏவிக் கொண்டிருப்பதைக் காணொளிகளில் பார்க்கலாம் கேட்கலாம்.

உடைப்புக்கு முன்பே பாதிரியார் அங்கு வந்து விட்டார்.

அவர் அங்குள்ள ஊடகவியலாளரை மிரட்டியிருக்கிறார்.

அங்கு நின்ற மற்றவர்களை மிரட்டியிருக்கிறார்.

தன் அடியாட்களை உடைக்குமாறு ஆணையிட்டிருக்கிறார்.

இதை எல்லாம் மறைத்துச் சைவர்களின் மனத்தைப் புண்படுத்திய செல்வம் அடைக்கலநாதனுக்குச் சைவ மக்கள் ஒருபொழுதும் வாக்களிக்கக் கூடாது.

இயேசுவைக் கடவுள் என்கிறார். முட்டாள்கள்தான் இப்படிப் பேசுவர்.

இயேசுவே தன்னை இறைத்தூதர் என்றும் தனக்கு மேலே ஒரு கடவுள் இருப்பதாகவும் சொல்லிக் கொள்கிறார்

தன்னைக் கடவுளாக அவர் எப்பொழுதும் அறிவித்ததே இல்லை

விவிலியத்தைப் படிக்காதவர்கள் சிறுவயதிலேயே படிப்பை விட்டு இயேசுவின் கொள்கைக்கு எதிராக இயேசுவின் போதனைகளுக்கு எதிராக மலைப்பிரசங்கத்தில் கூறியவைக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்கள்

சைவ சமயம் என்றால் மருந்துக்குக்கூட தெரிந்திருக்காதவர்கள் சைவ கொள்கைகளை அறிந்திருக்காதவர்கள் சிவனைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்கள்

இவர்கள் எல்லாம் சிவனைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் பேசுகிறார் என்றால் மன்னார் மக்கள் செய்த மாபெரும் தவறேயாம்

இவர்களைப் போன்றவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மன்னார்க் கத்தோலிக்க மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள் சைவர்களின் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .

Read more...

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக அரசியல்வாதிகள் தீவிரப்படுத்துகின்றார்கள்.

தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் ரிபாஸ் குற்றச்சாட்டு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல்வாதிகளின் நடத்தைகளும், நடவடிக்கைகளும் பிரச்சினையை மேலும் கூர்மைப்படுத்தி இரு இனங்களுக்கும் இடையிலான விரிசலை தீவிரப்படுத்துவனாக உள்ளனவே ஒழிய சுமூக தீர்வை பெற்று தருவனவாக இல்லை என்று தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்பு மற்றும் சட்ட விவகாரங்களுக்கான மேலதிக செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ. எல். ரிபாஸ் தெரிவித்தார்.

இவரின் மருதமுனை இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (03) புதன்கிழமை சந்தித்து கல்முனையை மையப்படுத்திய அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு பேசியவை வருமாறு

தேசிய அரசியலில் கல்முனையை மையப்படுத்திய பல்வேறு பிரச்சினைகள் பேசுபொருட்களாக மாறி இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், அரசாங்கத்தின் பங்காளிகளும் இவற்றை ஆர்வத்துடன் செவிமடுத்து உரிய தீர்வுகளை பெற்று தருகின்றார்கள் இல்லை. மாறாக இவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகள் இப்பிரச்சினைகளை இன்னமும் கூர்மைப்படுத்துவதுடன் இனவாதம், பிரதேசவாதம் ஆகியவற்றை தூண்டி விட்டு பிரிவினைகளை நிரந்தரமாக்கி வைத்திருக்கின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகம், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை ஆகிய விடயங்கள் இவ்வகையில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. இவை சார்ந்த பிரச்சினைகளை பிச்சைக்காரனின் புண்ணை போல நீடிக்க வைத்து வங்குரோத்து அரசியல் செய்கின்றார்கள்.

சாய்ந்தமருது பிரச்சினையின் பின்னணியில் அண்மையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கார் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டன. அதே போல முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராக்கள் அகற்றப்பட்டு உள்ளன. அத்துடன் மாநகர சபை உறுப்பினர்கள் இருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பெயரில் பிணையில் வெளியில் வந்துள்ளனர். ஆனால் இப்பிரச்சினையை தீர்த்து தர வேண்டியவர்கள் அமைச்சர்களாக அரசாங்கத்தில் இருந்து கொண்டும் தீராத தலை வலியாக இதை தொடர்ந்தும் வைத்திருக்கின்றனர். எமது தலைவர் அதாவுல்லா அமைச்சராக பதவி வகித்தபோது கல்முனையில் நான்கு சபைகளை உருவாக்குகின்ற முயற்சியில் ஆக்கபூர்வமாக செயற்பட்டு ஏற்று கொள்ள கூடிய தீர்வை முன்வைத்து இருந்தார். சாய்ந்தமருதுக்கான சபை உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஏனைய மூன்று சபைகளையும் பொறுத்த வரை எல்லை பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண்பதற்கு தமிழ் பேசும் இரு சமூகங்களையும் சேர்ந்த அரசியல், சமூக, பொதுநல செயற்பாட்டாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல்வாதிகளின் நடத்தைகளும், நடவடிக்கைகளும் இனங்களுக்கு இடையில் மேலும் விரிசல்களை விரிவுபடுத்தி தீவிரம் அடைய வைக்கின்றன. இரு சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களும் ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமும், அவசரமுமான நகர்வாக அமைய வேண்டி இருக்கின்றது.

(எஸ்.அஷ்ரப்கான்).

Read more...

Tuesday, April 2, 2019

தமிழ் மக்களின் தன்மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக த.தே.கூ ரணிலிடம் சரணாகதி.

தற்போதுள்ள அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது என்றும் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் சலுகைகளுக்காக சரணாகதி அரசியல் மேற்கொள்ளுகின்றனர் என்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாடுகின்றனர்.

தமிழ் ஊடகம் ஒன்றிடம் கூட்டாகத் கருத்துக்கூறிய மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் மேற்கண்ட குற்றச்சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது சுமத்தியுள்ளதுடன் வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி என்ற பெயரில் பல கோடி ரூபாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாகக் கொடுத்து அவர்களைத் தம் பக்கம் வளைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் 5ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தை நாம் தோற்கடித்தே தீருவோம் என்றும் கூறியுள்ள அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.

அதில் இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூட்டமைப்பினரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.

ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிரதமரிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கோடி ரூபாவைச் சலுகையாகக் கோரியுள்ளனர் என்றும், அதற்குப் பிரதமரும் இணங்கியுள்ளார் என்றும் அறிகின்றோம். நாட்டு மக்களின் நிதி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுகபோக வாழ்க்கைக்குச் செலவாகப் போகின்றது.
கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் ரணில் அரசிடமிருந்து பல கோடி ரூபாவை சலுகையாகப் பெறவுள்ளனர்.

ஆனாலும், வரவு – செலவுத் திட்டத்தை நாம் தோற்கடித்தே தீருவோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர், ஜே.வி.பியினர், ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அதிருப்தியாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு அதிருப்தியாளர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்காளிக்கவுள்ளனர்' – என்று குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

Monday, April 1, 2019

நமது சமூகத்தில் துரோகத்தின் தேவை. நடேசன்

விபீசணன் இராமனோடு சேர்ந்திராமல் இராவணனோடு, சகோதரன் என்ற ஒற்றுமையோடு போர் செய்து அழிந்திருந்தால் இலங்கைக்கும் மக்களுக்கும் என்ன நடத்திருக்கும் ..? என நாம் சிந்தித்திருக்கிறோமா ? இராமனோ அல்லது சேர்ந்து வந்த குரங்குகளோ இலங்கையை எரியூட்டிவிட்டுச் சென்றிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

ஒற்றுமையாக இருப்பது என்பது மிகவும் ஆதிகால மக்களின் கோட்பாடு . மிருகங்கள் மற்றும் பகைவர்களிடமிருந்து தங்களையும் குடும்பத்தையும் அல்லது இனக்குழுவையும் காப்பதற்கான ஒரு பாதுகாப்பு கவசம். இந்தக் கவசம் கிரேக்கத்தில் 2500 வருடங்கள் முன்பாக நகர அரசுகள் உருவாகியபோது உடைபடுகிறது . மக்கள் ஜனநாயகம் என்ற குடையில் திரளும்போது அங்கு பல தரப்பட்ட கருத்துகள், கேள்விகள் பல எழுப்பப்படுகிறது. விவாதங்கள் நடக்கின்றன. மக்கள் பொதுவெளியில் ஒன்று கூடி விவாதிக்கிறார்கள். சோக்கிரட்டிஸ் தொடக்கம் பல அறிஞர்கள் கேள்விகளைக் கேட்க மக்களைத் தூண்டுகிறார்கள். இதன் வெளிப்பாடே நாம் தற்போது அனுபவிக்கும் ஜனநாயகம்.

சமூக மாற்றத்தில் விவசாயி தொழிலாளியை விட ஏராளமான தொழில்சார் பிரிவுகள் உருவாகின்றன. ஒரு மருத்துவரது தேவை மற்றைய மக்களிடம் வேறுபடுகிறது. ஆண்களது தேவைகள் பெண்கள் ,குழந்தைளிடமிருந்து மாறுபடுகிறது. நமது வடமாகாணத்தின் தேவையும் கிழக்கு மாகாணத்தின் தேவையும் வித்தியாசமானது. அதேபோல் வட மாகாணத்தில் கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்தின் தேவைகள் மாறுபடுகிறது. மலையத் தமிழர் முற்றிலும் வித்தியாசமானவர்கள் என அவர்களது தலைவர் தொண்டமான் உணர்ந்ததால் இன்று அவர்கள் புதிய சமூகமாக இலங்கையில் வாழ்கிறார்கள்.

உலகத்தில் முட்டாள்கள் மட்டுமே வேறுபாடுகளை உணராது வித்தியாசமான தேவைகளைப் புரியாது ஒற்றுமையை வலியுறுத்துவார்கள். செம்மறியையும் வெள்ளாட்டையும் ஒன்றாக நினைப்பார்கள்.

பெரும்பான்மையினரது கருத்தை ஏற்காதபோது மற்றவர்களை துரோகிகளாகப் பார்ப்பது 21 ஆம் நூற்றாண்டில் இன்னமும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களில் எத்தனை உயிர்கள் இந்த துரோகி பட்டம் கொடுத்து அழிக்கப்பட்டிருக்கிறார்கள்..? இந்த உயிர்கள் மேலுலகம் சென்றனர். இதைச் செய்தவர்கள் இன்றுவரை யாரிடமாவது மன்னிப்புக் கேட்டார்களா? ஆனால் இப்படி துரோகிப் பட்டம் சுமந்து கொலை செய்யப்பட்டவர்களது உறவுகள் இன்னமும் சிலுவையைச் சுமந்தபடி வாழகிறார்கள்.

அறமற்று மாற்றான் மனைவியைக் கவர்ந்தது தவறு எனச் சொல்லியும் கேளாத இராவணனுக்கு விபீசணன் செய்த துரோகம் அக்காலத்து இலங்கை மக்களைக் காப்பாற்றியது.

இலங்கையில் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியான கருணா என்ற முரளீதரனைப் போருக்கு பின்பு சந்தித்து பேசியபோது எனக்கு அவர் மீது மதிப்பு மரியாதை ஏற்பட்டது . நோர்வேயால் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை மறுத்ததால் புலிகளிடையே பிரிவு ஏற்பட்டது. அதை விடப் பல காரணங்கள் இருக்கலாம். இவையெல்லாம் எனக்கு பிரச்சினையில்லை. அத்துடன் கருணாவின் பிரிவுக்கு முன்பான கிழக்கு மாகாண விடுதலைப்புலிகளின் செயல்களைப் பலர் விமர்சிப்பார்கள். ஏற்றுக் கொள்கிறேன் . அதே வேளையில் மாற்றங்களை வரவேற்கிறேன். காரணம் கிழக்கு மகாணத்தில் முள்ளிவாய்க்கால் போன்ற அழிவைத் தவிர்த்த ஒரு முக்கிய கதாநாயகனாகக் கருணாவைப் பார்க்கிறேன் . பிற்காலத்தில் புனர்வாழ்வு துணை அமைச்சராக இருந்தபோது விடுதலைப்புலிகளாக இருந்து சரணடைந்தவர்களை நீதிமன்றத்தினூடாக செல்லாது புனர்வாழ்வு முகாம்ளுடாக வெளிக்கொணர்ந்ததிலும் கருணாவின் பங்கு உள்ளது. இலங்கையின் நீதித் துறையூடாகச் செல்வது புதை குழிகளை கடப்பதுபோன்ற செயல். அங்கு சென்றபின் ஜனாதிபதி நினைத்தாலும் கைகொடுத்து வெளியே இழுக்க முடியாது . தற்போதைய அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் இந்த புதைகுழியில் சிக்கியவர்கள். அரசாங்கத்துடன் கள்ள உறவு வைத்திருக்கும் தற்போதைய தமிழ்தேசியக்கூட்டமைப்பு இவர்களை வெளிக்கொணர முடியாது இருப்பதற்கு இதுவே காரணம் .

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் சமூக உரிமைக்கான போராட்டத்தை, தமிழருக்கும் சிங்களவருக்கும் அல்லது தமிழருக்கும் இலங்கை அரசிற்கான போராக்கினார்கள். இங்கே 15 வீதமான தமிழர்களை 70 வீதமான சிங்களவருடனும் மிகுதி இஸ்லாமியர்களுடனும் பொருதவைப்பதே விடுதலைப்புலிகளின் நோக்கம். இந்த மாதிரியான இனப்போர் அநீதியானது. எக்காலத்திலும் வெல்லமுடியாதது என்பதைப் புரிந்துகொண்டவர்கள் லக்ஷ்மன் கதிர்காமர் , நீலன் திருச்செல்வம் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள்.

விடுதலைப்புலிகளைத் திருத்த முடியாது என்பதால் போரை நிறுத்த முடியாது. அரசுடன் அவர்கள் நின்றதால் இலங்கை இராணுவம் மற்றும் அரசிற்கு இந்தப்போர் தமிழருக்கு எதிரான போர் என்று சொல்லமுடியாது .

இரண்டாம் உலகப்போர் , ஜப்பானிய அரசிற்கும் அல்லது கிட்லருக்கும் நாசிகளுக்கும் எதிரான போரென அமெரிக்கர் சொல்லவில்லை. ஜப்பான், ஜேர்மனுக்கு எதிரான போராகவே நடத்தி குண்டுகளை வீசி சாதாரண மக்களை அழித்தார்கள் .

தமிழ்ப்பிரதேசங்களில் பொதுமக்களை அழிக்கவில்லையா ? எனக்கேட்கலாம் . உண்மை! பொதுமக்கள் அழிந்தார்கள்! ஆனால், அதற்கான பல தவறுகள் விடுதலைப் புலிகளிடம் இருந்தன . கிழக்கு மாகாணத்தில் பெரிதாகப் போர் நடந்தபோது கிழக்கு போராளிகள், மக்களை இராணுவத்திடம் சரணடைவதை தடுக்கவில்லை. ஆனால் வடமாகாணத்தில் நான்கு இலட்சம் பேரை போர்க்களத்தில் தங்களது பாதுகாப்பணையயாக வைத்திருந்தார்கள். பொது மக்கள் பெண்கள் சிறுவர்களிடம் ஆயுதம் கொடுத்து அவர்களையும் போராளியாக்கினர். இதேபோல் வெளிநாட்டுத்தமிழர்கள் 90 வீதமானவர்கள் விடுதலைப்புலிகளைக் காப்பாற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழர்கள்- வெளிநாட்டுத்தமிழர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களல்ல என அரசுடன் தொடர்பு கொண்டு பேசினோம் . விபீசணர்களாகவோ ஒத்தோடிகளாகவோ பெருமிதத்துடன் மாறினோம். இதன் பின்பு இலங்கை அரசு எங்களது சில கோரிக்கைகளை செவி சாய்த்தது

சமூகத்தில் 90 வீதமானவர்கள் முட்டாள்தனமாக அழியும்போது, சிலர் துரோகிகளாக மாறுவது பெருமைக்குரிய விடயமாகக் கருதுகிறேன் . அவர்கள் அப்படி சமூக அக்கறையில் துரோகியாவது அந்த சமூகத்திற்கான சேவை என்று சங்கே முழங்கு.

Read more...

பகிடிவதையின் கொடுமை, மேலுமொரு மாணவன் கடிதமெழுதி வைத்துவிட்டு தற்கொலை.

மொரட்டு பல்கலைக்கழகத்தின் ஹோமாகம - தியகம தொழில்நுட்ப நிறுவனத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பகிடிவதையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குருநாகல் - கும்புக்கெட்டே - சடுவாவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஷனில்க தில்ஷான் விஜேசிங்க என்ற மாணவனே தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் முதலாவது பிள்ளையான இவர், தனது மரணத்திற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தியகம தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவன், பகிடிவதைக்கு உள்ளானதன் பின்னர் ஏற்பட்ட உளவியல் தாக்கத்திற்கு குருநாகல்லில் உள்ள மனநல மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார் என கும்புக்கெட்டே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை, குருநாகல் மருத்துவமனையில் சட்ட மருத்துவ அதிகாரியினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read more...

5 தசப்பங்களுக்கு முன்னர் மருதானை புகையிரத நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட உடுவில் யுவதியின் கதை கேளீர்.

இலங்கையிலே இன்று பல்வேறு வகையான கடத்தல்கள் தொடர்பாக பேசப்படுகின்றது. சேகுவரா கலவரத்தை அடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் தொட்டு அண்மையில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவினால் அரசியல் இருப்பிற்காக மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றில் நிலுவையில் நிற்கும் கடத்தல் வரை நாம் இடைவிடாது பேசிக்கொண்டிருக்கின்றறோம்.

இந்நிலையில் இற்றைக்கு சுமார் 5 தசாப்தங்களுக்கு முன்னர் தான் மருதானை புகையிரத நிலையத்தில் வைத்து உடுவில் பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரை கடத்திச் சென்ற கதையை கூறுகின்றார் லக்ஷ்மன் பெரேரா.

சிங்களமொழியை விளங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு மொழிபெயர்ப்பு கீழே.



நாம் இன்று சமாதானம் ஒற்றுமை தொடர்பில் பேசுகின்றோம். நாங்கள் இந்த நாட்டிலே 50 வருடங்களுக்கு மேலாக வாழுகின்றோம். எனது மனைவி ஒரு தமிழர். அவர் யாழ்பாணத்தில் உடுவில் பிரதேசத்தை சேர்ந்தவர். நான் பதுளைப் பிரதேசத்தை சேர்ந்த சிறந்ததோர் பௌத்த சிங்கள குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் எங்கள் இருவரிடையேயும் உருவான நட்பானது காதலாகமாறி நாம் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டோம்.

இச்சந்தர்ப்பத்தில் எங்களுக்கு இரு பகுதியினரும் இல்லாது போனார்கள்.

என்னுடைய அக்கா என்னை பார்த்து „அடேய் உனக்கு சிங்களப் பெண்கள் கிடைக்காததாலா தமிழிச்சி ஒருத்தியை கட்டினாய்" என்று கேட்டார். ( எனது இருதயத்திற்கு எவ்வாறிருந்தது என நெஞ்சில் கைவைக்கின்றார். )

அதேநேரம் எனது மனைவியின் அண்ணர் ஒருவர் அவரை அடித்து ஒரிடத்தில் மறைத்து பூட்டி வைத்தார். ஆனால் அவருடைய அம்மா „அந்த சிங்கள இளைஞன் உன்னை கனித்துக்கொள்வானா" என்ற ஒரே ஒரு வினாவை மாத்திரம் கேட்டிருந்தார். அதற்கு அவர் „ஆம்" என்ற பதிலை அளித்ததுதான் தாமதம், அம்மா யாழ்தேவியில் ஏறி கொழும்பு வருவதற்கு அவரின் கையில் பணத்தை கொடுத்தார். அங்கே அயலவர்கள் குழப்பி விட்டார்கள், அத்துடன் இங்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அவர் வந்து இறங்கும்போது பிடித்துக்கொள்வதற்கு உறவினர்கள் நிரம்பி விட்டார்கள்.

அவ்வேளையில் மருதானை ரயில் நிலையத்திற்கு சென்ற நான் அவரை அந்த நிலையத்திலிருந்து இறக்கி எடுத்துக்கொண்டு ஒழித்தோடிச்சென்று நுகேகொடைக்கு அப்பால் உள்ள பிரதேசமொன்றில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தினோம்.

பின்னர் இருதரப்பினரும் எம்முடன் இணைந்து கொண்டார்கள். அவர்கள் இப்போது என்னை மிகவும் நேசிக்கின்றார்கள். முன்னர் இருந்ததிலும் பார்க்க இப்போது அதிக அன்பு செலுத்துகின்றார்கள்.

ஆனாலும் இனங்களிடையே ஏற்பட்டுள்ள குரோதம் மற்றும் கசப்பு தொடர்பாக அவர் இவ்வாறு விவரிக்கின்றார்.

நான் யாழ்பாணம் செல்லுகின்றபோது எங்கள் குடும்பத்தை சேர்ந்த பிள்ளை ஒன்று எனது மடியில் வந்து என்றும் இருக்கும். ஒரு முறைபோயிருந்தபோது, கண்ணீர் மல்க ஓடிவரும் குழந்தை காலடிகளை மெதுவாக எடுத்துவைத்து மிகவும் அவதானமாக என்னருகில் வந்து நின்றது. அவ்வாறு வந்த குழந்தை என்னிடம் கேட்டது „பாட்டா! நீங்கள் சிங்களவரா' என எனது இதயம் பிழந்தது. அந்தக் குழந்தையின் அன்பு எனக்கு தேவைப்பட்டது. நான் ஆம் சிங்களவன் என்று சொன்னால் அது கிடைக்காது என்பதை அறிந்து கொண்டு இல்லை மகனே நான் தமிழன் என்று பொய் சொன்னேன். அப்போது அந்தக் குழந்தை என்னை கட்டியணைந்து நீங்கள் தமிழா என்று முத்தமிட்டது.

எனவே இது எங்கிருந்து வந்தது வீட்டில் பேசப்பட்ட விடயம் அக்குழந்தையின் காதுகளில் விழுந்துள்ளது. இது கசப்பானது. இந்த கசப்புக்கு வைத்தியம் செய்யப்படவேண்டும்.

இந்த நாட்டிலே அவன் சிங்களவன்
இவன் முஸ்லிம்
அவன் தமிழன் என்கின்ற கசப்புக்கு மருந்தளிக்கப்படவேண்டும்.

ஆகவே இவற்றை செய்யக்கூடியது சகல சமூதாயங்களையும் சேர்ந்த பிரசங்கிகளாலும், மத தலைவர்களாலும் மாத்திரமே. குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். இனம் மதங்களாக பிரிவதால் நாம் அடையப்போவது எதுவும் இல்லை என்ற விடத்தை அவர்களது அடிமனதில் பதியவைக்கவேண்டும்.

நாங்கள் கல்வி கற்கும் காலத்தில் எங்கள் அணியின் தலைவராக சுந்தரலிங்கம் இருந்தான். அவனுக்கு நாங்கள் எல்லோரும் பயம். ஆனால் அவன் எங்கள் எல்லோர் மீதும் அன்பு செலுத்தினால். எங்களுக்கு அப்போது அவன் தமிழன் என்று விளங்கவில்லை.

அந்த விடயம் இன்று இல்லை. இனவாதம் எவ்வாறாவது ஒழிந்து புகுந்து கொள்கின்றது. அது எதற்காக ஒரு சிலரின் சுயலாபங்களுக்காகவேயன்றி நாட்டுக்காகவோ சமூதாயத்திற்காகவோ அல்ல.

எனவே இவ்விடயத்தில் சமயத்தலைவர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவர்கள் சிறார்களில் மனங்களில் இனபேதம், மதபேதம் பதியாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவ்வியடம் மேலிடத்திலிருந்து வரவேண்டும். கீழே இருக்கின்ற மனிதர்களை இவ்விடத்தில் எவ்வித குறையும் கூறுவதற்கில்லை.

இந்நாட்டிலிருக்கின்ற இனவாத பேயை விரட்டி அடிக்க கூடியவர்கள் சமயத்தலைவர்களே என லக்ஷ்மன் பெரேரா நம்புகின்றார். ஆனால் அந்த பேயை ஆட்டுபவர்களே சமயத்தலைவர்களாக இருக்கின்றபோது அது நடைபெறுமா என்பது இலங்கைநெட்டின் கேள்வியாகும்.

ஆகையால் இலங்கையில் இனவாத பேயை விரட்டியடிக்க மக்களே அணி திரளவேண்டும் என்பதும், மக்களை அணிதிரட்ட இன்று இலகுவான சாதனமாக காணப்படும் சமூகவலைத்தலங்களை பயன்படுத்த முடியும் என்றும் இலங்கைநெட் நம்புகின்றது.

இனவாத பேயை விரட்டவேண்டும் என்று நீங்களும் விரும்பினால் பகிருங்கள் இப்பதிவை.

Read more...

பல பில்லியன்கள் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருட்கள் அழித்தொழிக்கப்பட்டது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கைது செய்யப்படப்படுகின்ற போதைப்பொருள் மீண்டும் சந்தைக்கு வருதாக மக்களால் குற்றம்சுமந்தப்பட்டு வருகின்ற நிலையில் பாதுகாப்பு படையினால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள 765 கிலோ கிராமிற்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருட்கள் இன்று பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய களனிய மகுறுவெலவில் அமைந்துள்ள சுரவீர களஞ்சிய வளாகத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் அதனை ஜனாதிபதி நேரடியாக சென்று மேற்பார்வை செய்திருந்தார் என்பது சிறப்பம்சமாகும்.

அத்துடன் இந்த நடவடிக்கைகளை பார்வையிட ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி 926 கிலோ கிராம் கொகெயின் போதைப்பொருள் பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட போதைப் பொருட்களே அவ்வாறு அழிக்கப்பட்டது. இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பகிரங்கமாக அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 03 ஆம் திகதிக்கு பின்னர் சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேலும் தீவிரப்படுத்துவதுடன் போதைப்பொருட்களை இலங்கையில் இருந்து முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுத்து செல்வதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.




Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com