Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, April 2, 2020

இத்தாலியில் கொரோனா வைரசு தொற்றியது எவ்வாறு? -கலையரசன்

சீனாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான தூரத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது எப்படி என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. இதனால் சிலர் தமது மனம்போன போக்கில் புனைந்த கட்டுக்கதைகளும், வதந்திகளும் சமூகவலைத்தளைங்களில் பரவுகின்றன. இந்த வீடியோவில், இத்தாலியில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் நடந்தது என்ன? எந்த இடத்தில் தவறு செய்தார்கள்? என்பதைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறேன். நாம் மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், அவர்களது அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வோம்.

இனவாத முட்டாள்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இந்த கொரோனா தொற்று நோய் "சீனர்களால் வேண்டுமென்றே பரப்பப் படுகின்றது" என்று பலரும் வெகுளித்தனமாக நினைப்பது போன்று தான், இத்தாலியரும் ஆரம்பத்தில் நினைத்தார்கள். அது தான் அவர்கள் செய்த முட்டாள்தனம் என்பதை உணர்வதற்குள் காலம் கடந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் இத்தாலி முழுவதும் இலட்சக் கணக்கானோருக்கு நோய் தொற்றி விட்டது. இன்று வரை பத்தாயிரம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் இது குறித்த அறிகுறிகள் தென்பட்ட போதெல்லாம் மருத்துவர்கள் அதை சாதாரண சளிக்காய்ச்சல் என நினைத்து அலட்சியப் படுத்தினார்கள். அப்போதே கோவிட் டெஸ்ட் எடுத்திருந்தால் விழிப்படைந்து இழப்புகளை குறைத்திருக்கலாம்.

ஜனவரி மாத தொடக்கத்தில் சீனர்களை மட்டும் தனிமைப் படுத்தினால் போதும் நோய் பரவ விடாமல் தடுத்து விடலாம் என்று தான் இத்தாலியர்கள் நினைத்தார்கள். அரச மட்டத்திலும் இந்த மூட நம்பிக்கை காணப்பட்டது. ஐரோப்பாவில் முதல் தடவையாக இத்தாலி தான் சீனாவுடனான விமான சேவைகளை முற்றாகத் துண்டித்தது. வழமையாக வந்து கொண்டிருந்த சீன சுற்றுலாப் பயணிகளையும் விரட்டியடித்து விட்டனர். சீனர்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து தனிமைப் படுத்தினார்கள். பொது மக்கள் சீன ரெஸ்டாரன்ட் செல்வதையும், சீனக் கடைகளில் பொருட்களை வாங்குவதையும் தவிர்த்துக் கொண்டனர்.

பொதுவாகவே இத்தாலியர்கள் தமது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். அங்கு ஏராளமான மருந்துக் கடைகள் உள்ளன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் சுகாதாரமாக வாழ்வது எப்படி என்று ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான இத்தாலியர்களை பொறுத்தவரையில் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் தான் தொற்று நோய்க் காவிகள் என்ற இனவாத மனப்பான்மை உள்ளது. அது இந்த கொரோனா நெருக்கடியில் சீனர்களுக்கு எதிரான இனவாதமாக மாறியது.

இந்த குறுகிய இனவாத மனப்பான்மை தான் இத்தாலியர்கள் விட்ட மாபெரும் தவறு. வடக்கு இத்தாலியில், எங்கோ ஒரு மூலையில் உள்ள பிரதேசத்தில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது. அந்த இடங்களுக்கு எந்தவொரு சீனரும் சென்றிருக்க மாட்டார். முதன்முதலாக தொற்றுதலுக்குள்ளான ஒரு சாதாரண தொழிலாளியான 38 வயது இளைஞன், வாழ்க்கையில் ஒரு நாளும் சீனாவுக்கு சென்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் நோய் அறிகுறி காணப்பட்டாலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர் சாதாரண சளிக்காய்ச்சல் என்று அலட்சியப் படுத்தி இருந்தார். அதனால் அந்த இளைஞனும் எந்தக் கவலையும் இல்லாமல் மாரத்தன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டான். அத்துடன் உதைபந்தாட்டப் போட்டி ஒன்றையும் பார்வையிட சென்றிருக்கிறான். அப்போதே கொரோனா வைரஸ் பலருக்கு தொற்றி விட்டது.

பெப்ரவரி கடைசியில் விழித்தெழுந்த அரசு இயந்திரம் பலரை பரிசோதித்துப் பார்த்ததில் மூவாயிரம் பேருக்கு வைரஸ் தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. உடனே தொற்று காணப்பட்ட பிரதேசத்தை வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தினார்கள். ஆனால் அதற்குள் நிலைமை கை மீறி விட்டது. ஏற்கனவே பிற பிரதேசங்களுக்கும் வைரஸ் தொற்றி விட்டிருந்தது. இந்த அச்சம் காரணமாக மிலான் பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்தது. அதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தாலியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டன.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இறுதியில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வராத நிலையில், சீனா தனது மருத்துவக் குழுவொன்றை பெருமளவு உபகரணங்களுடன் அனுப்பி வைத்தது. இந்த உதவிகள் யாவும் இத்தாலி தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. அதே நேரம் ஆபத்துக் காலத்தில் கைவிட்டு விட்ட ஐரோப்பிய நாடுகள் இத்தாலியரின் கண்டனத்திற்கு ஆளாகின. ஒரு கட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய கொடியை அகற்றி விட்டு சீனக் கொடியை பறக்க விடுமளவிற்கு வெறுப்புக் காணப்படுகின்றது. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் அறியலாம் என்பது ஓர் உலகப் பழமொழி.

-கலையரசன்

Read more...

Tuesday, January 6, 2015

பேதலிக்கும் பேரினவாதம் - ஓர் அரசியல் கண்ணோட்டம்

மனிதாபிமானம் மரத்துப்போன மனிதர்களின்” தலைமைத்துவத்தின்கீழ் இங்கு நாம் வாழ்கின்றோம். காமமும், ஆடம்பரமும், மோசடியும் மிக்க அரசியல்வாதிகள் இவர்கள்.கற்பொழுக்கமுடைய மனிதர்கள் அரசியலில் சங்கமிக்கும் காலம் மலையேறிவிட்டது. ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனத்தை பாதுகாப்பதுதான் இவர்களது அரசியல் ராஜதந்திரமாகும். இதற்கு பேரினவாதத்தை துணைக்கு அழைப்பதும், அதற்கு சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்கள் சோரம்போவதும்தான் இன்றைய எமது அரசியல் தீமையாக எனக்குப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் கொன்றதை, கொண்டாடிக்கொண்டிருக்கும் தலைவரை, அடிவருடிக்கொண்டிருக்கும் எமது அரசியல்வாதிகள் முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள்.அடுத்து அளுத்கமை அனர்த்தங்களுக்குக் காரணமாக இருந்து அப்பாவி முஸ்லிம்களின் இன்னுயிர்களை காவுகொள்ள வைத்த “கறுப்பு ஜூன் நிகழ்வை” மறந்து செயல்படும் மெத்தனப்போக்கு அடுத்து இனங்காணப்படவேண்டிய விடயம். உலகின் “பௌத பயங்கரவாத முகம்” என இனங்காணப்பட்ட “விராஜ் தேரருக்கு” விசா வழங்கி கௌரவித்து பேரினவாத நச்சுக்கருத்துகளை கக்கவைத்து, எதிர்காலத்தில் இன்னொரு இனச்சுத்திகரிப்பிற்கு தூபமிடக்காரணமாக இருக்கும் தலைவரை தொடர்ந்தும் அடிவருடும் எமது அரசியல்வாதிகள் முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவர்கள்தான். இந்த மூன்று காரணங்களுமே எதிர்க்கால அரசியலை தீர்மானிக்க எமக்குப்போதுமானதாகும்.

துப்பாக்கிரவைகள் ஓய்வுபெற்றதும், இனவாத அரசியல் அரங்கேறின.இது ஒரு சாதாரண பாமரனுக்கும் தெரியக்கூடியதாக இருந்தது. அதேவேளை எமது அரசியல்வாதிகள் பேரினவாதத்திற்குச் சோரம்போய்,சிறுபான்மையினருக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவாக கை உயர்த்தி, பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பலத்துடன் அது நிறைவேற ஒத்துழைத்தனர். 18ம் சீர்திருத்தச்சட்டம் இவர்களின் ஆதரவுடன்தான் நிறைவேறியது.இன்று ஜாதிக ஹெல உறுமய ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறி எதிரணியில் உள்ளதால், எதிரணிக்கு எம்மால் ஆதரவளிக்க முடியாதென்றுகூறும் ரவூப்ஹகீம் அவர்கள், எந்த மனச்சாட்சியிலிருந்து பேசுகிறார் என்பதுதான் எமது முதற்கேள்வி. இவர்கூறும் இனவாதக் கட்சிகள் இதற்கு முன்பு எங்கிருந்தன என்பது எமது அடுத்த கேள்வி. ஞானதேரன் போன்ற ஆன்மீகக்குண்டர்கள் இன்றும் எங்கிருக்கின்றார்கள்.? யாருக்கு ஆதரவளிக்கின்றார்கள்? இவர்களது எதிர்காலத்திட்டங்கள் என்ன? விராஜ் தேரனுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவை? போன்ற விடையங்களை மறைத்து, எம்மை ஏமாற்றி, மீண்டும் பாராளுமன்றம் நுழைய மேற்கொள்ளும் இந்த உத்திகள் ரவூப் ஹக்கீமுக்கு பிரத்தியேகமானதுதான். தீவிரமாகச் செயல்படும் பேரினவாதிகளுக்கு மௌனராகம் பாடும் ரவூப் ஹகீம் முதல், ஆளும் கட்சியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் முற்றாக நிராகரிக்கப்படல் வேண்டும் என்பதுதான் எமது மக்களுக்கு நாம் முன்வைக்கும் செய்தியாகும்.

சமுதாய ஒழுங்கு என்பது புனிதமான உரிமையாகும்.இதுவே மற்றெல்லா உரிமைகளுக்கும் அடிப்படையாகும்.இந்த ஒழுங்கு எமது ஜனாதிபதி ஆட்சியில் நிலவியதா? என்பதுதான் எமது முதற் கேள்வி, இதற்குச் சோரம்போய் அவர்களை அடிவருடிய எமது அரசியல்வாதிகள், நியாயமானவர்களா என்பதுதான் எமது அடுத்த கேள்வி? ”மத உரிமை என்பது மனித உரிமை சார்ந்ததே” என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் எமது அரசியல்வாதிகள். அவர்கள் நிராகரிக்கப்படவேண்டியவர்களே. இனங்களின் கலாசாரக் கூறுகளை மோதவிட்டு அதில் குளிர்காய்ந்த பேரினவாதிகள் இன்று மௌனராகம் இசைக்கின்றனர். .ஏன்? தேர்தல்காலமல்லவா இது? ஆனால் மூர்க்கத்தனமாகத தாக்கப்பட்ட அளுத்கம மக்களின் ஆத்திர உணர்ச்சி அவர்களது ஆத்மாவில் கல்வெட்டுப்போல் பதிந்து விட்டது. இந்த மானசீகத்துயரம் என்னை எழுதத் தூண்டுகிறது.

ஹலால் விவகாரம், மசூதி உடைப்பு, மசூதியினுள் பன்றி மாமிசத்தை எறிதல், கடை எரிப்பு, பர்தா உடை பற்றிய நச்சுக்கருத்துக்கள், ஆன்மீகக்குண்டர்கள் குர்ஆனை கையிலேந்தி வியாக்கியானம் செய்யும் விதம், இவற்றுக்கெல்லாம் மேலாக அளுத்கமை “கறுப்புஜூன்” சம்பவம் போன்ற சமூகத்துரோகங்கலெல்லாம் எங்கிருந்து வந்தன.? விராஜ் தேரனுடன், முஸ்லிம் விரோத உடன்படிக்கை ஓன்றும்கூட கைச்சாத்தானதே. இதற்குள் அடங்கியிருக்கும் தீமையின் ஆழம்பற்றிய உண்மை ஒரு பாமரனுக்குக்கூட தெரிந்திருக்கும் பொழுது ஏன் எமது அரசியல் வாதிகள் இதனைக் “ கண்டுகொள்வதில்லை என்பதே எமது ஆதங்கம். மனிதனுக்கு மனிதப்பண்பாட்டைக் கற்றுக்கொடுத்து அவனை மனிதனாக்க முயல்வதுதான் மதங்களின் பணியாக இருக்கவேண்டும்.பேரினவாத நச்சுவிதைகளை விதைத்து, அப்பாவிகளின் உயிர்களைக் காவுகொள்ளவைக்கும் கறுப்புநிகழ்வுகளை உருவாக்குவதாக இருக்கக்கூடாது.மதவெறியர்கள் அணிந்திருக்கும் “மதம்” என்ற முகமூடியானது தனதுகோதர மனிதர்களைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவாறு தடுத்துவிடுகிறது முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைப்பார்த்து இன்றும் தமிழர்கள் ஏங்குகிறார்கள்.சமுதாயப்பிளவுகளால் எமது அரசியலை நிர்ணயம் செய்யமுடியும் என்ற அற்பநிலை இன்று மாறிவிட்டது. உலகலாவிய பிரச்சினையும்கூட இதுதான். மத்தியகிழக்கிலும்லும் மதவெறித்தனம் தாண்டவமாடுகிறது. அங்கு மதத்தின் பெயரால் புரியப்படும் படுகொலைகள், மதவெறித்தனங்கள், எல்லைகடந்தவை. கடந்தவாரம் தாலிபான்கள் பாகிஸ்தானில் செய்த மாணவர்களின் படுகொலைச் சம்பவங்கள்,ஈராக்கில் isis அட்டூழியங்கள், நைஜீரியாவில் போகோஹராம் படுகொலைகள்,அண்மைய அவுஸ்திரேலிய isis சம்பவங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறி முடிவடைவனவையே.. இதற்குப்பின்னால் சியோனிசம் ஒlழிந்திருந்து தனது கைங்கரியங்களைச செய்வதை மேற்கு நாடுகள் கண்டுகொள்ளப்போவதில்லை.ஏனெனில் மேற்கின் பெட்ரோல் வளங்களின் நலன்கள் அதில் தங்கியுள்ளன.

அநியாயத்திற்கும்,துன்பத்திற்கும்,துவேசத்திற்கும் வழிவகுக்கும் ஞானதேரனின் “அபாயக்குரல்”இன்று சற்று ஓய்ந்துள்ளது.காரணம் தேர்தல்காலமானதால் அடக்கிவாசிக்கும்படி அரசியல் உயர்பீடம் உத்தரவிட்டுள்ளதாம். இதுதான் உண்மை. அத்துடன் அரசியல் துர்நாற்றம் (சில கோடரிக் காம்புகள்) எம்மைவிட்டு சற்று விலகி நிற்பதுபோல் தெரிகிறது.மனச்சாட்சியுடன் போராடி அதில் தோற்றுப்போய் இரு தலைக்கொள்ளி எறும்புபோல் ஒரு தீர்வுக்கு வரமுடியாது திண்டாடுகின்றனராம். பணம், பதவி ஒருபக்கம். மக்களோ இவர்களுக்கு மறுபக்கம். இதுதான் யதார்த்தம்.இதுவே எமக்குப்போதுமானது.இதனையும் எமது அரசியல் வெற்றியாகவே கொள்ளவேண்டும்.இவர்கள் எமக்கு உதவத் தேவையுமில்லை.ஆனால் உபத்திரங்கள் பண்ணாமலாவது இருக்கட்டும் என்றே சொல்லி வருகின்றோம். உலகமே வியக்கும் அளவுக்கு இனவாதம் பேசப்பட்ட ஒரு சூழலை இனங்காணமுடியாத இவர்களின் அரசியல் எமக்குத்தேவையில்லை.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சிறுபான்மைச் சமூகத்தினர் அம்மையாரின் தலைமையில் ஒன்றிணைந்திருக்கும் “மைத்திரிப்பால சிறிசேன” அவர்களை தேர்வுசெய்யும் தார்மீகப்பொறுப்பில் இருக்கின்றார்கள் என்பதே எமது கருத்து.

“மண்ணூர் மைந்தன்”

Read more...

Friday, June 27, 2014

கறுப்பு ஜூலையின் மறுபிறப்பு! தமிழில்: - (இரண்டாம் இணைப்பு) கலைமகன் பைரூஸ்

“முதலில் மனிதன் தன் உயிரைப் பாதுகாப்பதற்கே போரிட்டான். அதன் பின்னர் தனது குழுவை, தனது இனத்தை, நீதியை பாதுகாப்பதற்காகப் போரிட்டான். அத்தோடு மதத் தலைவர்கள் தங்களது மதத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டார்கள். ஆயினும், இன்று இனங்களிடையே பரஸ்பர நல்லுறவையும், சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் போரிட வேண்டியுள்ளது”

“இங்கு நாங்கள் வாழ்வதுடன் மற்றவர்களும் வாழ்வதற்கு இடங்கொடுக்க வேண்டும். இது அவ்வாறானதொரு காலகட்டமாகும். ஒருவருக்கு ஒருவர் குரோதம் நினைக்க எங்களால் முடியாது.”

மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிதா என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க 1956 இல் மக்கள் பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைக்கொண்டதன் பின், ஐக்கிய நாடுகள் பேரவையில் உரையாற்றிய உரையின் ஒரு சிறு பகுதியாகும். அன்றும் நாட்டிலே வர்க்கவாத வேற்றுமை சிறிது தலை தூக்கியே இருந்தது.

தற்போதைய இலங்கை கூட, எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க நிர்மாணித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்துடன் கூடிய அரசினாலேயே ஆளப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருவலை, அளுத்கம பகுதிகளில் நடந்த சிங்கள - முஸ்லிம்களுக்கிடையேயான தகராறு கூட இவ்வரச நிருவாகத்தின் கீழேயே நடைபெற்றது. தங்கள் கட்சியை நிர்மாணித்தவரின் கூற்றை யார்தான் மறந்தாலும், அக்கட்சியை சேர்ந்தவர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்பது உறுதி.

எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க அன்று அவ்வாறு சொன்னது ஒருபுறமிருக்க, கொழும்பு பற்றி எழுதியுள்ள இந்திய தூதுவர் ஒருவர் வேறொரு வகையில் குறிப்பிடுகிறார்.

“சமாதானத்திற்காக பாடுபடுபவர்களும், சமாதானத்திற்கான அனைத்து விடயங்களும் ஆசிர்வாதிக்கப்படுவர், ஆசிர்வாதிக்கப்படும் என அனைத்து மத நூல்களும் கூறுகின்றன. ஆயினும் 1986 இல் ஸ்ரீலங்காவில் சமாதானத்திற்காக செயற்படுவது படுபயங்கரமான செயலாக இருந்தது.”

“விஜய குமாரத்துங்க அவருள் இருந்த சமாதானத்திற்கான விருப்பு மற்றும் சிந்தனைகளுக்காக அவ்வாண்டின் சில மாதங்களுக்கு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்தார். ”

1980 களில் சமாதானத்திற்காக பாடுபட்டவர்களின் நிலை இவ்வாறாகத்தான் இருந்தது. இது 30 ஆண்டு கடும் யுத்தத்தின் பின்னர்தான் இராணுவத்தினரின் பலத்தினால் முடிவுக்கு வருகின்றது. அன்றிலிருந்து ஐந்து வருடங்கள் உருண்டோடியுள்ள போதும், சமாதனம் மற்றும் இனங்களிடையே புரிந்துணர்வு பற்றிப் பேசுவது மீண்டும் பிரச்சினைக்குரிய செயற்பாடாக உள்ளது. சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். அது “மும்மணிகளின் ஆசிர்வாதம்” (துன் சரண) என்பதற்குப் பதிலாக “நாங்கள் சரணம்” (அப சரண) முளைத்தெழுந்ததுடன் ஆரம்பமானதோ என்று கூறத் தெரியவில்லை. ஒரு சிறு கல் பேருவலையைத் தீப்பற்றி எரியச் செய்தது. அதற்கு முன் சாம்பலுக்குள் தீப் பொறிகள் ஆங்காங்கே இருந்திருக்கலாம். ஆயினும் சிங்கள - முஸ்லிம்கள் அதிகமானோருக்கு அவர்கள் இருந்த இடங்கள், உடைமைகள் அனைத்தும் இல்லாதொழித்தே தீயணைந்தது.

இலங்கையின் முதலாவது சுதந்திரம் முன்னாள் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் தலைமையிலேயே பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அது பூர்த்தியான சுதந்திரம் அல்ல என சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கான காரணம் - இனங்களிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்பி “இலங்கையர்” என்ற தன்மையை ஏற்படுத்த முடியாமற் போனமையே அதற்குக் காரணம். இதனால் அடிக்கடி ஏற்பட்ட குழுவாத பிளவுகள் பின்னர் இனவாதப் பிளவாக உருமாறி 30 ஆண்டு சிவில் யுத்தத்திற்கு அடிகோலியது. அதனால் மீண்டும் நாங்கள் இரண்டாவது சுதந்திரத்தைப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கினார். இதனால் முதலாவது சுதந்திரத்திற்காக தேசபிதாவையும் இரண்டாவது சுதந்திரத்திற்காக தற்போதைய ஜனாதிபதியையும் நினைவுகூருகிறோம்.

இரண்டாவது சுதந்திரத்தின் தேனிலவையும் வீணாகக் கழித்துள்ள நாங்கள் மீண்டும் வர்க்கவாத பிளவினைக் கட்டியெழுப்பியுள்ளதாகவே எண்ணவேண்டியுள்ளது. தமிழ் மக்களுடனான பிரச்சினை இன்னும் இருக்க, தற்போது முஸ்லிம்களுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்களே என யாரேனும் ஒருவர் குறிப்பிடுவாராயின், அது பொய்யே அல்ல என்று சொல்லும் அளவுக்கு விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

“அதற்குக் காரணம் முஸ்லிம் அடிப்படைவாதம்தானே?”

எனவும் ஒருவருக்கு தர்க்கிக்க முடியும். அதற்கு உதாரணமாக “ஜிஹாத்”, “தலிபான்”, “அல்-கைதா” அமைப்புக்கள் சிலவற்றை காட்ட முடியும். எல்.ரீ.ரீ.யின் அனைத்து இரகசியங்களையும் வெளிக்கொணர்ந்த எங்கள் அதிதிறமைமிகு புலனாய்வுப் பிரிவினருக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி கண்டுபிடிப்பதற்கு சிரமமே இருக்காது என்று ஒருவர் சிந்திப்பதில் எவ்வித்த் தவறும் கிடையாது.

“முஸ்லிம் சமூகத்தினுள்ளும் அடிப்படைவாதக் குழு இருக்கின்றது. பௌத்த தலிபான்களும் உள்ளனர். அவர்களுக்கு நோர்வேயிலிருந்து உதவித் தொகை வருகின்றது. என்றாலும் இந்நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு நடைபெற்றால் அதற்குப் பலியாவது இளைஞர்களே, அவ்வாறு பலியானால் இந்நாடு சுடுகாடாக மாறிவிடும்.”
-அமைச்சர் விமல் வீரவங்ச (25.06.2014 லங்காதீப)

இவ்வாறு சென்றால், இலங்கை என்ற நாடு எவ்வாறு வெளியே வருவது?

அமைச்சர் விமல் வீரவங்ச மேற்சொன்ன உண்மையைத்தான் தெளிவுறுத்துகின்றார். எந்நாளும் யுத்தம் செய்துகொண்டே இருக்கலாம். அவ்வாறாயின் நாங்கள் செய்ய வேண்டியது என்ன? கடந்த காலங்களில் நாங்கள் பெற்ற படிப்பினைகளை கருத்திற் கொண்டு, இப்போதாவது விடயங்களில் தெளிவு கண்டு, இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கு சிறந்ததொரு அரசியலை நாடுவதே அதற்கான வழி. கடந்த கால படிப்பினைகள் யாவை என்பதைக் கருத்திற்கொண்டு நிகழ்காலத்திற்கு ஏற்ப அதனைச் செயற்படுத்துவதே தேவையாக இருக்கின்றது.

“முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் ஏதோவொரு அசமந்த நிலையினால் 1983 ஜூலைக் கலவரம் பெரும் வடுவை ஏற்படுத்தியது. கலவரம் ஏற்பட்டவுடனேயே ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கவில்லை என ஜனாதிபதிமீது குற்றம் சுமத்தினர். உண்மையான நிலை என்னவென்றால், ஊரடங்குச் சட்டம் பின்னர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட, இராணுவத்தினரும் பொலிஸாரும் அதனை நடைமுறைப்படுத்த விருப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.”

“1983 கலவரம் 1958 கலவரத்துடன் வேறுபடுவது எவ்வாறெனின், பாதுகாப்புப் பிரிவினரின் நாடகத்தினாலேயே. கலவரத்தின் ஆரம்ப நாட்களில், என்றும் இல்லாதவாறு சட்ட நடவடிக்கைகள் மந்தநிலையிலேயே இருந்தன.”

“தான் அவ்விடத்திற்கு சென்று உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சென்ற வேளையிலும் அவர்கள் அவ்விடத்தில் பங்களிப்புச் செய்யாமல் கவனத்திற் கொள்ளாதிருந்தனர். சட்டமும் நீதியும் முழுமையாக செயலிழந்திருந்தன.”
(ஜே.ஆர். ஜயவர்த்தன வாழ்க்கை வரலாற்றிலிருந்து..)

பிற்காலத்தில் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பேராசிரியர் கே.எம்.த. சில்வா தெளிவுறுத்தும் இவ்விடயத்துடன் தொடர்பான காரணிகளை அன்று எதிர்க்கட்சியில் இருந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் வலது சாரிக் கட்சிகள் அரசாங்கத்திற்கு தெளிவுறுத்தியபோதும், தேவையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இயலாது போயுள்ளது. இதனால் 1983 கறுப்பு ஜூலைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலைக்கு ஜே.ஆர். ஆட்சி தள்ளப்பட்டது. பிற்காலத்தில் இவ்வனைத்து விடயங்களையும் தனது ஞானத்தினால் தெரிந்துகொண்ட ஜே.ஆர்., சிரில் என்ற அரசியல் அபிமானம்மிக்க தனது உற்ற உறவினரைக்கூட அரசாங்கத்திலிருந்து தூக்கிவிட்டார். ஜே.ஆரின் நெருக்கமான உறவினர் ஒருவரே அதற்குக் காரணமாக இருந்தவர் என்பது தெளிவாகியது. என்றாலும், அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக செயற்பட்டிருந்தன.

1983 கறுப்பு ஜூலையின் படிப்பினைகள் தற்போதைய அரசுக்கும் தேவைப்பாடானது. அளுத்கம, பேருவலை கலவரம் தொடர்பில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் கட்சிக்கு விரல் நீட்டிக் கொண்டிருக்கின்றது. இதில் அரசியல் கலந்துள்ளது என்பது உண்மை. அன்று எதிர்க்கட்சியும் இவ்வாறுதான் நடந்துகொண்டது. அது பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவினால் நடாத்தப்படுகின்றது. மங்கள சமரவீர பாரதூரமான குற்றச்சாட்டினைச் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு அடங்கிப்போய் தான் இந்தக் குற்றச்சாட்டுக்களை வெளிக்கொணர்வதில்லை எனச் சொல்வது மேலும் பாரதூரமானது.

“இது எங்கள் நாட்டுடன் வெளிநாட்டு உறவை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியாகும்.”

“சிங்கள ராவய, பொதுபல சேனா அமைப்புக்களின் பின்னணியில் பாதுகாப்புப் பிரிவினர் இருக்கின்றர்”

“அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கையில் வியாபார நிலையங்கள், வீடுகள் தீவைக்கப்படும்போது பாதுகாப்புப் பிரிவினர் எங்குதான் நின்றிருந்தார்கள்?”

இது மங்கள சமரவீர முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒருசில மட்டுமே. இது மங்களவின் தனிப்பட்ட செயற்றிட்டமாக இருக்க முடியாது. அத்தோடு அவர் நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு பின்வாங்கவுமில்லை. மிலேனியம் சிட்டியை எதிர்பார்த்து அரசியல் செய்வதை விடவும் இதைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. “ஆம், நான் குற்றம் சுமத்துகிறேன்.. என்னைக் கைதுசெய்து விசாரணை மேற்கொள்ளுங்கள்” என வேறுவிதமாகவும் சொல்லியிருக்கிறார். இது அவர் முஸ்லிம்களைக் கருத்திற் கொண்டுதான் சொல்கிறார் எனவும் கொள்ளமுடியாது. அதற்கப்பாற் பட்டது. இது பச்சைப் பொய் என வைத்துக் கொள்வோம். என்றாலும் தர்க்கிக்க வேண்டியதாகின்றது. மறுபுறத்தில் எதிர்க்கட்சி இவ்வாறான குற்றச்சாட்டைச் சுமத்தும்போது, அரசாங்கம் வாய்பொத்தி மௌனியாக நின்றிருக்குமாயின் 1983 ஜே.ஆர். ஜெயவர்த்தன சாப்பிட்டதையே சாப்பிட வேண்டிவரும்.

இவை அனைத்தும் சர்வதேச காலஅட்டவணைக்கு ஏற்ப நடக்கிறதோ என சந்தேகம் எழுகின்றது. இலங்கையில் பேருவல, அளுத்கம தீப்பற்றி எரிவது ஜோர்தான் இளவரசர் அஸ்ஸெய்யித் ராட் அஸ்ஸெய்யித் அல் - ஹுஸைன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளராக பதவியேற்றதன் காலகட்டத்திலேயே. எங்கிருந்தோ வேலை நடக்கின்றது என்றிருந்தால் அது சரிவர நடக்கின்றது என்பது தெளிவாகின்றது.

அவ்வாறாயின், அரசாங்கத்திலுள்ள பாதுகாப்புப் பிரிவில் உள்ள சிலர் அரசாங்கத்திற்கு குழி பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனரா? அதற்கு உதவியாக இருக்கின்றனரா? பார்த்தபார்வையில் அதற்கு இடமில்லை எனத் துணியலாம். ஆயினும், 1983 இல் அவ்வாறான நிகழ்வு நடைபெற்றிருப்பது பிற்காலத்தில்தான் தெரியவந்துள்ளது. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை மேற்கொள்வதே உசிதமானது. அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் புதியதொரு பாதையில் செல்வதற்கும் வழிவகுக்கலாம்.

வர்க்கவாதம் மற்றும் பிளவுகள் வளர்ந்துவந்தபோதும், அவற்றை வெற்றி கொண்ட நாடுகளையும் நாங்கள் தற்காலத்தில் காண்கிறோம். அதற்குச் சிறந்த உதாரணமாக தென்னாபிரிக்காவை எடுத்துக் காட்டலாம். ஒரு காலத்தில் பயங்கரவாதி என்று பெயர்பெற்று, பின்னர் நோபல் பரிசுக்குரியவராக மாறியவர் நெல்சன் மண்டேலா. இன்று இறந்தும் இறவாதவராக அவர் மக்கள் மனதில் இடம்பெறக் காரணம் செயற்கரிய செய்ததனாலாகும்.

ஒருமுறை அரசியலில் பெரும்பங்கு கிடைத்தாலும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் மீறப்படுமோ என்ற வாதம் நிலவியபோது, ஆபிரிக்காவின் வெள்ளையரான தலைவர்களுக்கு அவ்வாறு நடக்காது என நெல்சன் மண்டேலா குறிப்பிட்ட கூற்றானது எங்கள் நாடும் அவ்வாறானதொரு பாதையில் செல்லும்போது முக்கியத்தும் பெறும்.

மேலும், “ஆபிரிக்கா அங்கு வாழும் கறுப்பர் வெள்ளையர் அனைவருக்கும் சொந்தமானது. வெள்ளையரும் ஆபிரிக்கர்கள்தாம். எதிர்கால நிருவாகத்தின்போது பெரும்பான்மையினருக்கு சிறுபான்மையினர் தேவைப்படுவர். அவர்களை கடலில் தள்ளிவிட வேண்டிய அவசியமில்லை என நான் சொன்னேன்.”
(நெல்சன் மண்டேலாவும் சுதந்திரம் தேடிச் சென்ற பாதையும்”)

மண்டேலாவின் கூற்றை தேவ வாக்காகக் கொண்டு, அதனை அரசியல் யாப்பிலும் சேர்த்து அதற்கேற்ப செயற்பட்டனர். அழகியல் அம்சம்மிக்க கதையாக மட்டும் கொள்ளவில்லை. எங்களுக்கான தேவைப்பாடும் அதுவே என்று புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை.

சிங்களத்தில் - வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්‍රිය රාමනායක)
தமிழில் - கலைமகன் பைரூஸ்

Read more...

Friday, June 20, 2014

அடிப்படைவாதத் தீ ! -தமிழில்: கலைமகன் பைரூஸ்

“தாய் முன்னிலையில் மகளை வல்லுறவுக்குட்படுத்திய கள்ளக் காதலன் கைது”
“இளம் யுவதியொருத்தியை கெடுத்த பிரதேச சபை உறுப்பினருக்கு இருபது ஆண்டுச் சிறை”
“மூன்று வயது சிறுமியைக் கொடுவினை செய்த தேரரைச் சாத்தினாள் தாய்”
“மித்தெனிய விடயம் கண்டு இளம் பௌத்த துறவி கைது”
“9ஆம் தர மாணவி 3 மாத கர்ப்பிணியாய்” - “திருமணம் முடித்த உறவினர் ஒருவரின் வேலையாம்”
“வயோதிபர்களை காதலித்த மாணவியர் 27 பேர் கற்பழிக்கப்பட்டனர்”
சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அறிக்கை

இவை யாவும் சென்ற சில தினங்களாக ஊடகங்களில் வெளியான உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டிய, மிகவும் கீழ்த்தரமான செயல்களாகும். அளுத்கம பத்திராஜகொட பிரதேசத்தில் வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் அல்லது “ட்ரபிக்” பிரச்சினையும் ஒழுக்க்க் கெட்ட இளம் பௌத்த துறவியொருவர் நையப்புடைக்கப்பட்டதும் இக்கால கட்டத்திலாகும். இந்த விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அளுத்கமவில் இடம்பெற்ற “ட்ரபிக்” மேற்சொன்ன தீயவிடயங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது குறைவானது என்றே சொல்ல வேண்டும். என்றாலும், தண்டனைக்குரிய குற்றமாகும். அளுத்கம விடயத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களை மகா சங்கத்தினரிடம் அனுப்பி மன்னிப்புக் கோர வைத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 25 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு ஆவன செய்யபட்டுள்ள போதும், அதனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை.

இளம் பௌத்த துறவி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானது தொடர்பில் மூன்று முஸ்லிம் வாலிபர்களே இனங்காணப்பட்டுள்ளனர். முன் சொன்ன அனைத்து இழிந்த செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் சிங்களவர்களாக இருக்கின்றார்கள். அளுத்கம முஸ்லிம் வியாபார நிலையமொன்றுக்கு தாயுடன் சென்றிருந்த சிறுமியின் மறைவிடத்தை ஒருவர் தடவினார் என்ற செய்தியே அளுத்கம, பேருவலை தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது என்ற செய்தியும் அறியக் கிடக்கின்றது.

இங்கு கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மக்களை அச்சமடையும் வண்ணம் தாக்குவதும், கொலை செய்துகொள்வதும் ஏன்? ஏனைய பகுதிகளில் அவ்வாறானதொரு விடயம் இடம்பெறாமலும் அனைத்தும் சட்டரீதியாக அமைந்துள்ள போதும் குறித்த குற்றம் தொடர்பில் சட்டத்தின் உதவியை மட்டும் நாடுவது ஏன்? நாங்கள் சிந்திக்க வேண்டிய ஆயினும் இதுவரை சிந்திக்காத பிரச்சினை இங்குதான் உள்ளது. அதற்குக் காரணம் நாங்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஒருபக்கச் சார்புடைய சிந்தனையுடையவர்களாக இருப்பதற்கே எங்களை பழக்கிக் கொண்டுள்ளோம்.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட 30 ஆண்டுகள் பிரிவினைவாத யுத்தத்தின் பின்னர்கூட வர்க்கவாத மனோநிலையிலிருந்து விலக முடியாதுள்ளது. அதற்காக உடனடியாக விரல் நீட்டப்படுவது இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கும், சில மதகுருமார்களுக்குமே. நாடு சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட, இன்னும் எங்களில் “இலங்கையர்” என்ற கோட்பாட்டை உடையவர்களாக இருக்க முடியாதுள்ளது. 2009 மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் (எல்.ரீ.ரீ.ஈ தோல்விக்குப் பின்னர்) கூட அதனை நிலைநாட்ட சந்தரப்ப சூழ்நிலை கிடைத்துள்ள போதும், நாங்கள் பல்வேறு வேண்டத்தகாத விடயங்களில் எங்களை ஈடுபடுத்தி வீணர்களாக இருக்கின்றோம். அது தொடர்பில் எதிர்காலச் சந்ததியினர் எங்களைச் சாபமிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீலங்கா சிங்கள பௌத்தர்கள் உள்ள பெரும்பான்மையினர் வாழும் நாடு என்பதை புதிதாகச் சொல்ல வேண்டிய தேவை இல்லை. சில பௌத்த மதகுருமார் உபதேசிக்கும்போது, விஷ்ணுவின் மூலம் புத்தபெருமானைக் கொண்டு, இலங்கை பௌத்தர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதில் உண்மை எந்தளவு இருக்கின்றது என்பது தெரியாதவிடத்தும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை நாடுகின்ற, நல்லன போதிக்கின்ற விடயங்கள் பற்றி சிலர் கவனத்திற் கொள்ளாத போதும், இலங்கை வாழ் பெரும்பான்மையான பொதுமக்கள் அதன்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் “அனைத்து உயிரினங்களும் துன்ப துயரமின்ற வாழ்வதாக” எனக் கூறுவது தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கித் தள்ளி அல்ல. என்றாலும் சிலர் தமது மதத்தைச் துச்சமாக மதித்து, இழிந்த அரசியலுக்குள் பிரவேசிக்கின்ற தன்மையைக் கண்கூடாகக் காண்கிறோம். பிரச்சினை இங்குதான் உள்ளது. தேரவாத பௌத்தம் நிர்மலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சமூகம், அதனைக் கருத்திற் கொள்ளாது தீய அடாவடித்தனங்களுடன் மிகக் கொடிய இனவாதக் குரோதத்தோடு வாழ்வதற்கு இடமில்லை.

அதற்கு ஏனைய இனங்களின் அடிப்படைவாதமும் இணையுமல்லவா? என்று ஒருவர் விவாதிக்க முடியும்.

அதில் ஓர் உண்மை உள்ளது. பொது பல சேனாவிலிருந்து வந்தாலும், ராவண பலயவிலிருந்து வந்தாலும், தௌஹீத் ஜமாஅத்திலிருந்து வந்தாலும், தலிபான், ஜிஹாத், அல்கைதாவிலிருந்து வந்தாலும் அதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். முஸ்லிம் அடிப்படைவாததின் காரணமாக இஸ்லாமிய நாடான ஈராக் இன்று மிகவும் பயங்கரவிளைவைச் சந்தித்துள்ளது. அவ்வாறான ஒரு நிலை இலங்கையில் இல்லை. 2500 ஆண்டுகட்கு மேல் பாதுகாக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த அடிப்படைவாதமல்லாத சூழல் அதற்கு வரலாற்றுச் சான்றாக உள்ளது. எந்தவொரு இனமும் தங்களுக்குள் எந்தவொரு சிந்தனையையும் கொண்டிருப்பதற்குத் தடையில்லை. அதற்காக அமைப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்குத் தடை இருப்பதாகவும் தெரியவில்லை. தவறு இருப்பது அந்த இடத்தில் அல்ல. அந்த இனக்குழு இனவாதக் குழுவாக தம்மை மாற்றிக் கொள்வதில்தான் பிரச்சினை உள்ளது. தேசாபிமான சால்வை போர்த்திக் கொண்டுள்ள பொது பல சேனா மட்டுமன்றி, “அல்துகீ” (இவர் தௌஹீத் இயக்கத்தைச் சொல்வதாக நினைக்கிறேன்) “ஜிஹாத்” போன்ற அமைப்புக்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருப்பதாக நினைப்பதற்குக் காரணம் இதே பின்னணியில் இருப்பதனால்தான்.

“தேசாபிமானம் எங்களின் கடைசி ஆன்மீகத்தின் இருப்பாக இருக்கக் கூடாது. எனது கடைசி இருப்பிடமாக மனிதாபிமானமே இருக்க வேண்டும். நான் வாழும் மட்டும் தேசாபிமானத்திற்காக மனிதாபிமானத்தை நசுக்க இடமளிக்க மாட்டேன்.”

என மகாகவி ரவீந்தரநாத் தாகூர் சொன்னார். பல்வேறு இனவாத முருகல்கள் இருந்தபோதும், இன்று இந்தியா உலகின் பலம்பொருந்திய நாடாக இருப்பதற்குக் காரணம் அந்நாடு சிறந்த தூரப் பார்வையுடன் இருப்பதனாலாகும். அவை எல்லாவற்றையும் விட முன்னே சென்று ஒரு தூதுவராகக் கருதப்படுகின்ற புத்த பெருமானின் (சித்தார்த்தரின்) விசுவாசிகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இலங்கையில் இன்னும் இழிந்த இனவாதம் தலைதூக்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன என சிந்திக்கக் கடமையாக இருக்கின்றது.

“ஆம் நாங்கள் இனவாதிகள் தாம்
நாங்கள் மதவாதிகள் தாம்
என்ன சொல்கிறீர்கள்
எங்களுக்கு கைநீட்டினால் அவ்வளவுதான்”

பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய அமைப்பொன்றின் மதகுருமார்களில் ஒருவர் இப்படிச் சொல்லும்போது, அந்தப் பேச்சு ஊடகங்கள் வாயிலாக முழு உலகிற்கும் செல்லும்போது, அதனோடு சேர்த்து பற்றி எரிகின்ற வியாபார நிலையங்களின், வீடுகளின், அநாதையான மக்களின் படங்கள் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும்போது. உருவாகின்ற படமானது புத்திதெளிந்த எந்தவொரு நபருக்கும் நன்கு விளங்கும். தொழில்நுட்பம் வீறுநடைபோடுகின்ற காலகட்டத்தில் இதனை எதனாலும் மறைக்கவியலாது. அதேபோல, நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனத்திற்கு “நாங்கள் கைவிடப்பட்டவர்களாக இருக்கின்றோம்” என்ற எண்ணப்பாடு உள்ளத்து எழுவதற்குரிய சாத்தியக் கூறுகள் உள. இது முளையிலேயே நாட்டுக்கு கெடுதியானது. தெரிந்தோ தெரியாமலோ இந்த அடிப்படைவாதமானது எங்களை கழுமரத்தில் ஏற்றக் காத்திருக்கும் சர்வதேசத்திற்கு உதவி செய்துள்ளது. இவர்களது எல்லாம் தெரியும் என்ற நிலைப்பாடு இவ்வாறு அழிவுப்பாதைக்கு வழிவகுத்துள்ளது. அவ்வாறன்றி, அடிக்கடி எருமை மாட்டுக் கதைகள் கதைக்கும் அரசியல்வாதிகளால் அல்ல.

அளுத்கம பத்திராஜகொடவிலிருந்து தர்மோபதேசத்திற்காக முச்சக்கர வண்டியொன்றில் சென்றிருந்த இளம் பௌத்த துறவியொருவர், இடையில் தாக்கப்படுவாராயின் அது குற்றமாகும். அவ்வாறான அசிங்கமான செயலைப் புரிவது எந்த இனத்திற்குரியவராக இருந்தாலும் தண்டனைக்குரியவரே. அந்தத் தண்டனையில் இனவாதமில்லை. இவ்வாறான அசட்டுத்தனமான காரியங்களைச் செய்யக்கூடியவர்கள் எல்லா இனங்களிலும் இருக்கத்தான் செய்கின்றனர். இது தொடர்பில் அளுத்கம பொலிஸார் உச்சகட்ட சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அது தெளிவு. என்றாலும் அதற்குப் பின்னர் நடந்தவை தெளிவற்றவை. இப்பிரதேசத்தின் சுற்றுச் சூழல் பற்றி பொலிஸாருக்கு புதிதாகச் சொல்லத் தேவையில்லை. அது தெரியாத பால்குடிப் பாலகர்கள் பொலிஸில் இருப்பதாகத் தெரியவில்லை. கைகலப்பு தொடர்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சிறைவைப்பதற்கு ஆவன செய்யப்பட்டதன் பின்னர், பௌத்த பிரச்சாரக் கூட்டமொன்றை அங்கு வைப்பதற்கு அனுமதி கொடுத்திருந்தமையே இன்றைய பிரச்சினைக்கு அடிகோலியுள்ளது. அது அவ்வாறு நடந்தால் இவ்வாறான பின்விளைவுகள் ஏற்படலாம் என பொலிஸாரிடம் முஸ்லிம்கள் பலமுறை எடுத்துச் சொன்னபோதும், களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குமார வெல்கமவின் பேச்சையும் கேட்காமல், அதற்கு அனுமதி வழங்கியிருப்பது பின்னர் ஏற்பட்ட அனைத்து அழிவுகளுக்கும் காரணமாகியுள்ளது. இறுதியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட, பதில் கூறவேண்டிய கடமையில் உள்ள அமைச்சர்களும் மந்திரிமார்களும் உடனடியாக அங்கு சென்றதனாலேயே பிரச்சினை கொஞ்சமாகவேனும் தணிந்தது எனலாம். அவ்வாறு இல்லாதிருந்தால் அதன் பிரதிபலிப்பு, இவ்வளவுதான் என்று கூறுவதற்கும் இடமளிக்காது இருந்திருக்கும்.

மாவனல்லைக்கும், பதுள்ளைக்கும் வழங்காத உத்தரவு அன்று அளுத்கமவுக்கும் வழங்கப்படாதிருந்திருந்தால் இந்த சேதங்கள் ஏற்படாதிருந்திருக்கலாம். அத்தோடு அந்தத் தாக்குதலுக்கு வெளியிடங்களிலிருந்து குண்டர்கள் அழைத்து வரப்பட்டிருக்கின்றமை தெட்டத் தெளிவாகியுள்ளது. ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்த வேளையிலும் அதனை அறியாதவர்களாக பொலிஸார் இருந்திருக்க நியாயமில்லை. மத மாநாட்டுக்கு உத்தரவு வழங்கியதும், அதன்பின்னர் பயணித்த வாகன ஊர்வலத்திற்கு முஸ்லிம் பள்ளியிலிருந்து கற்கள் எறியப்பட்டதும், அதன்பின்னர் வேறு இடங்களிலிருந்து குண்டர்கள் வந்து குறித்த அசம்பாவிதங்கள் இடம்பெற உதவியதும், மேலதிக விசாரணைகளுக்கு உதவியாக அமையும். அது சமாதானத்தை விரும்புகின்ற நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, இந்த அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலத்திற்கும் பயனளிக்கும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கின்ற சிறுபான்மை இன வாக்களித்தல் முறையை இல்லாதொழிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றது. அரசாங்கம் அந்த முடிவுக்கு வருவதற்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் உதவியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது. அவ்வாறு உடந்தையாக இருந்திருந்தால், அது வேறொரு அரசியல் நாடகமாக இருப்பது தெளிவு. இன்று அதன் நன்மையை எதிர்க்கட்சியே அடைந்துள்ளது. அரசாங்கம்தான் இதனைச் செய்வதாயின், கூடுதலாக அபிவிருத்தி பற்றிப் பேசிப்பேசி, பல்வேறு கனவுகளை விதைப்பதால் பெரும்பான்மையானோர் இதனைக் கண்டுகொள்ளாதிருக்கக் கூடும். சுட்டிக் காட்டினாலும் ஏற்றுக்கொள்ளாத மனோநிலையில் உள்ளோரும் உளர். அரசாங்கம் தனக்கே தான் பந்துக்கு “கோல்” போட்டுக் கொள்ளுமா? என்றுதான் சிலர் சிந்திக்கின்றனர். அதனோடு தொடர்புடைய மற்றொரு வாதமாக இருப்பது என்னவென்றால், வெற்றிக்கு சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் மட்டும் போதுமானது என்பது. அவ்வாறாயின், தற்போது நடைமுறையில் உள்ள அடிப்படைவாதத்தின் கீழ் அந்த வாக்களிப்பு முறையை தட்டத்தான் முடியுமா? என்று வெள்ளோட்டம் பார்க்கின்றது போலும்.

அரசாங்கத்திற்கு மூளை இருக்குமானால், இவை யாவும் நடைபெறுவது ஒரே இடத்திலிருந்து தானா? என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.

சிங்களத்தில்: வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්‍රිය රාමනායක)
தமிழில்: கலைமகன் பைரூஸ்

Read more...

Thursday, May 1, 2014

மதவாதமும் இலங்கையும்! - வெல்லவாய் சுமனபோதி தேரர்

இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளது என்பதை இறந்த கால வரலாற்றை எடுத்து நோக்கும்போது தெளிவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் பொதுமக்களே இன்னல்களை அனுபவித்தனர். இனம், மதம் எதுவாக இருந்தபோதும், பிரச்சினைகள் என்று வரும்போது அவர்கள் இன்னல்களைச் சந்தித்தனர்.

நிகழ்கால நிகழ்வுகளை எடுத்து நோக்கினாலும் அவ்வாறே உள்ளன. சென்ற முப்பது ஆண்டு காலமும் பொதுமக்களே பாரிய இன்னல்களை அனுபவித்தார்கள். அதேபோல, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற செயற்பாடுகளினூடாக இன்னல்களைச் சுமப்பவர்கள் இந்நாட்டு மக்களே. அதனால், இப்போது மேலெழுந்துள்ள பிரச்சினைகள் வெகுதூரம் செல்லாமல் இருக்க அதனை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவர்களாக உள்ளோம். அவ்வாறு கிள்ளி எறியும்போது அது எல்லோருக்கும் நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டும். அதனை அடிப்படையாக வைத்தே ஒவ்வொருவரினதும் எண்ணப்பாடுகளை அலசி ஆராய்வதற்காக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

மதவாதத்தை நாம் எடுத்துக் கொண்டால் அது பாரியதொரு தலைப்பு. அவ்வாறான ஒரு விடயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேச முடியாது. பொறுமையாகவே செய்ய வேண்டும். ஏன் என்றால், அதுவே வைராக்கியத்தையும் குரோதத்தையும் உண்டுபண்ண வல்லது. எது எவ்வாறாயினும் மதவாதம் பற்றிப் பேசுவதற்கு முன், மதங்கள் தொடர்பிலான சில விடயங்களை அலச வேண்டியுள்ளது… அது நன்மை பயக்க்க் கூடியது.

நிகழ்கால உலகில் மூன்று முக்கிய மதங்கள் உள்ளன. கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க, இஸ்லாமிய, பௌத்த மதங்களே அவை. அம் மதங்கள் எல்லாவற்றிலும் உபதேசிக்கும் போது, ஏதேனும் ஒருவகையில் குறிக்கோள் ஒன்று உள்ளது. அவ்வாறாயின் அம்மதங்கள் மனிதனுக்கு எவ்வாறு பயன்படுகின்றது? என்பது மிக முக்கியமான விடயமாகும். அதனைத் தெளிவுறுத்துவதன் ஊடாக மதங்கள் பற்றி விபரிக்கலாம்.

கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க மத்த்தை எடுத்து நோக்கினால், அதன் அடிப்படை எண்ணக்கருவானது “உலகம் மகாபலம் பொருந்திய இறைவன் என்ற ஒருவனால் உருவாக்கப்பட்டது” என்றிருக்கின்றது. அம்மத்த்தைச் சரிவர பின்பற்றினால் கடவுளுடன் ஒன்றித்து சந்தோசிக்கலாம். அதாவது, மனிதன் முதல் உலகிலுள்ள அனைத்தையும் பரிபாலிக்கக் கூடியவன் கடவுளே.. அவனே உலகைப் படைத்தான். அக்கடவுளுக்கு தேவையான முறையில் நடந்துகொண்டால் ஊழியூழி காலம் சுவனத்தில் சந்தோசித்து இருக்கலாம். மாறாக, வழி தவறினால் கொடிய நரகமே அவர்களது இருப்பிடமாக இருக்கும் என்பது அவர்களுடைய அடிப்படை எண்ணக்கருவாகும்.

இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலும் இதற்குச் சமமானது. அதற்கேற்ப, “உலகம் எல்லாப் புகழும் மிக்க வல்லவன் ஒருவனால் நிர்மாணிக்கப்பட்டதாகும். மனிதர்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் கடவுள் அறிகின்றான். மேலும் மக்கள் அனைவரும் மீண்டெழுப்பப்படும் நாளில், அவர்களது நன்மை - தீமைகள் நிறுக்கப்பட்டு அதற்கேற்ப நீதி வழங்கப்படும். நன்மை செய்தவர்கள் நல் சுவர்க்கத்திற்கும், தீமை செய்தவர்கள் தீய நரகத்திற்கும் அனுப்பப்படுவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த சமயத்தை எடுத்து நோக்கினால், இது ஏனைய மதங்களை விட முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “பிறந்த அனைத்து உயிரினங்களும் வயதிற்குச் செல்லும், நோய் வாய்ப்படும், மரணத்தை அனுபவிக்கும்” என்று துன்புறக் கூடிய நிலையையே எடுத்துக் கூறுகின்றது. மேலும், மீண்டும் மீண்டும் அவதரித்து அத்துன்பங்களை அனுபவிக்கும். சில நேரம் துன்பத்தை அனுபவிக்கும்… அதுவே பெரும் இன்பத்தைத் தரும். அவ்வாறு துன்பத்தை அனுபவிப்பதாயின், அதிலிருந்து மீள்வதற்கான வழிவகையும் உள்ளது என “சத்துரார்ய சத்ய” குறிப்பிடுகின்றது.

இப்போது நாங்கள் மேலே குறித்த சமயங்கள் பற்றி அலசுவோம்…

கிறிஸ்தவ அல்லது கத்தோலிக்க பார்வையின்படி, உலகம் எல்லா வல்லமையும்மிக்க கடவுள் ஒருவரினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமும் அதனையே சொல்கிறது. உலகம் ஏதேனும் ஒருவகையில் கடவுளால் நிர்மாணிக்கப்பட்டதாயின், நிர்மாணித்த கடவுள் கிறிஸ்தவ - கத்தோலிக்க அல்லது இஸ்லாமியக் கடவுளா? என்ற வினா மக்கள் மனங்களில் தோன்றுவது இயல்பானதே. உண்மையில் உலகத்தை யார்தான் உருவாக்கினார்? கிறிஸ்தவ/கத்தோலிக்க கடவுள் உருவாக்கியிருந்தால் இஸ்லாமிய மதம் பொய்யானது. இரண்டும் உண்மையாக முடியாது. இரண்டும் உண்மையானால் உலகம் அவர்கள் சொல்லும் கடவுளால் உருவாக்கப்படவில்லை. ஏன் என்றால், உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டதாயின், அது அவருக்கு தீமையை விளைவிப்பதனால். எனவே, உலகம் என்பது ஒருவரின் உருவாக்கமன்று. இருவரின் உருவாக்கமே. அப்படியாயின் எல்லாம் வல்லவன் உலகில் ஒருவன் இருக்க முடியாது. கூட்டாகவே உள்ளது. அதனால், ஆரம்ப்ப் பகுதியை எடுத்து நோக்கினால், ஒன்றுடன் ஒன்று முரணாகவே இருக்கின்றது. அப்படியாயின், அவற்றில் அடங்கியுள்ள ஏனைய விடயங்களும் ஒருமைப்பாடாக இருக்க வேண்டும்.

பௌத்த மதத்தை எடுத்து நோக்கும்போது, அங்கு உயிரினங்கள் துன்பத்திற்கு உள்ளாவது பற்றியே எடுத்தோதப்பட்டுள்ளது. அதாவது, வயதிபத்தை அடைதல், நோய்வாய்ப்படுதல், மரணம், துன்பம், கவலை, விரதம், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், விருப்பமற்றவர்களுடன் இணைதல், தேவையானவை கிடைக்காமை போன்ற கவலைகளுடன் பிறந்த மனிதன் உட்பட உயிரினங்கள் அனைத்தும் துன்பத்திற்கு உள்ளாகும். பார்த்த பார்வையிலேயே சில உயிரினங்களின் தோற்றப்பாடு விளங்கும். உண்மையிலேயே நாங்கள் வயோதிபத்தை அடைய அடைய துன்புறுகிறோம். 60, 70 வயதை அடையும்போது, முடிகள் பழுத்து, பற்கள் உதிர்ந்து சரீரம் அலையாய் மடிந்து, கை கால்கள் சக்தியிழந்து முதுகு வளைந்து, எல்லோராலும் வேண்டத்தகாதவராக மாறுவது எல்லோருக்கும் உரித்தான செயற்பாடாகும். அது சிங்களவருக்கும், தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும், மேற்கத்தேயவருக்கும் பொதுவான உரிமை. நோய்வாய்ப்படுவது அவ்வாறுதான். மரணமும் அவ்வாறுதான். அதற்கு மேலாக கவலை, துன்பமும் அவ்வாறுதான். அதனால் பௌத்த மத்த்தில் சொல்லப்படுகின்ற துன்பம் உண்மையானது.

அதேபோல, அனைத்து உயிரினங்களும் மீண்டும் மீண்டும் அவதரிப்பதாக பௌத்த மதம் குறிப்பிடுகின்றது. பார்க்கும் பார்வையில் காட்சி தரக்கூடியது அல்ல. என்றாலும், ஆராய்ந்து பார்த்தால் புலனாகும். எட்கா கேஸி, ப்ரைடே மார்பி போன்றவர்களின் ஆய்வின் மூலம் மறுபிறப்பின் உண்மை தெளிவாகியுள்ளது. மறுபிறப்பு பற்றிய குறிப்புக்கள் மூலமும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மறுபிறப்பு இருந்தால் துன்பத்தை அடைந்தேயாக வேண்டும். ஏன் என்றால் பிறந்தவர்கள் அனைவரும் துன்பத்தை அடைந்தேயாக வேண்டும். மீள் பிறப்புக்கான காரணம் பற்றியும் பௌத்த மதம் எடுத்துச் சொல்கிறது.

அதாவது கண், காது, மூக்கு, நாக்கு, உடம்பு, உள்ளம் என்ற அனைத்து புலனுறுப்புக்களினாலும் பெறப்படுகின்ற காட்சி, சத்தம், நாற்றம், சுவை, தீண்டுதல், எண்ணங்கள் என்ற குறிக்கோள்களில் இருக்கின்ற பேராசை. அதாவது காட்சி, சத்தம், நாற்றம் (மணம்), சுவை, தீண்டுதல், எண்ணங்கள் எனும் குறிக்கோள்களில் இருக்கின்ற சில ஆசைகளும், பிரியங்களும், விருப்புக்களும், தேவைகளும், பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மீண்டும் மீண்டும் பிறக்கின்ற தன்மையை ஏற்படுத்துகின்றது. மீண்டும் மீண்டும் துன்பத்தை அனுபவிக்கச் செய்கின்றது. அதுவும் சரிதான்.

தமிழில் - கலைமகன் பைரூஸ்

நீளும்....

Read more...

Friday, March 21, 2014

தெற்கின் வாக்காளர் பெருமக்களே! - கலைமகன் பைரூஸ்

இனிப்புக்களாலான அரசியலுக்கு முற்றுப் புள்ளிவைத்து, மக்களின் பிரச்சினைகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள்…

தெற்கில் மண்ணெய் விளக்கு ஏற்றுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை 43,206
ஓலைக் குடிசைகள் 2,414
தோட்ட தொடர் வீடுகள் (லயின் காமராக்கள்) 6,521

தம்பட்டமடிக்கும் வேட்பாளர்களே இதோ மக்கள் பிரச்சினைகள்…

தெற்கில் இருப்பது வாக்குப் போரன்று! முதலமைச்சருக்கான போரே!

தென் மாகாண சபைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் மிக அண்மையில் இருக்கின்ற போதும், இன்னும் தெற்கிலுள்ளவர்களுக்கு தேர்தல் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றது. அதாவது தெற்கில் தேர்தல் சூடுபிடிக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது.

அதி நவீன, புதிதாக வந்திறங்கியுள்ள வாகனங்களில் வேட்பாளர்கள் கிராமங்கள் தோறும் வந்திறங்கினாலும், தெற்கிலுள்ளவர்கள் அவர்களைப் பற்றியோ, தேர்தலைப் பற்றியோ கணக்கிலெடுப்பது மிகக் குறைவாகவே உள்ளது.

தென் மாகாணத்தில் 24 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். தென் மாகாணத்தின் சிறிய அரசைத் தெரிவு செய்யும் நாளாக மார்ச் 29 குறிக்கப்பட்டுள்ளது. இம்முறை என்றும் காணாத முறையில் கட்சிகளுக்கு இடையில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறாதிருக்கின்றது. மாகாண சபை முதலமைச்சராக யார் வருவாரோ என்றே சிலர் தலையைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களிடையே யார்தான் முதலமைச்சராக வருவாரோ? என குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அது பனிப்போர் போலும் உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் சான் விஜயலால் மற்றும் முன்னாள் அமைச்சர் யூ.டீ.ஜீ. ஆரியத்திலக்க, கீதா குமாரசிங்க ஆகியோர் இம்முறை காலி மாவட்டத்திலிருந்து தேர்தலில் களம் குதித்துள்ளதன் காரணம் முதலமைச்சருக்கான கனவிலேயே…

அதேபோல, மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற முன்னாள் தென்மாகாண சபையின் கல்வியமைச்சர் சந்திமா ராசபுத்ர, இம்முறை முதலமைச்சர் பதவி தனக்கே கிடைக்க வேண்டும் எனவும், அதற்கான சகல தகுதிகளும் தன்னிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து முதலமைச்சருக்கான போரில் கலந்துகொள்ள களம் குதித்திருப்பவர் தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. ரோஹன பிரிய உபுல் என்பவர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இவ்வாறு முதலமைச்சருக்கான இழுபறி இருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

காலி மாவட்டத்திலிருந்து பந்துலால் பண்டாரிகொட, சஞ்சீவ கருணாத்திலக்க - மாத்தறையிலிருந்து ஜெஸ்டின் கலப்பத்தி, ஸ்ரீ விஜேவிக்கிரம - ஹம்பாந்தோட்டையிலிருந்து தென்னகோன் நிலமே, எம்.பீ. லால்சந்திர போன்றோர் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தேர்தல் போரில் ஈடுபட முன்வந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒரே ஒரு முஸ்லிம் அபேட்சகரே போட்டியிடுகின்றார். இம்திஸான் நவாஸ் எனும் வேட்பாளரே அவர். அவருக்கு ஆதரவு தேடி குக்கிராமங்கள் தோறும் ஐதேகவின் முக்கிய உறுப்பினர்கள் ஏறி இறங்குகின்றனர். அவரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக பிரபல நடிகை நதீஷா ஹேமமாலீ உட்பட ஏனைய வேட்பாளர்களும் அவரது கூட்டங்களுக்கு வந்துபோவதை அவதானிக்க முடிகின்றது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் ஐதேகவின் தேர்தல் கூட்டங்கள் விரல் விட்டெண்ணக் கூடிய அளவிலேயே இருக்கின்றன. என்றாலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐதேகவின் செயற்பாடு மும்முரமாக உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தனது தேர்தல் பிரச்சாரத்தை வழமை போலவே முன்னெடுத்துச் செல்கின்றது. அவர்கள் முன்னர் இருந்த தென் மாகாண சபையில் ஏற்பட்டதாக குறிப்பிடுகின்ற ஊழல் மோசடிகள், பாலியல் வல்லுறவு விடயங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய “தெற்கின் ஒலி” (தகுணே ஹண்ட) என்ற கையேட்டுப் பத்திரிகையொன்றையும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன், ஜேவிபியின் புதிய தலைவர் அநுர குமார திசாநாயக்க தேர்தல் வலயங்கள் தோறும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இன்று (21) இரவு 8.00 மணிக்கு வெலிகம - கொலேதண்டவிலும் அவரது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், இம்முறை மாகாண சபைத் தேர்தலில், மாகாணத்திலுள்ள மக்களின் பிரச்சினைகள் மேடைகளில் பேசப்படுவது மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. இம்முறை தேர்தல் மேடைகளில் பேசப்படும் கருப்பொருளாக இருப்பது தேசிய அரசியலே. அதுமட்டுமன்றி, சிங்களக் கவிதைகள், பாடல்கள், இசைக்கச்சேரிகள் போன்றவை ஏராளம்.. ஏராளம்.. எல்லாவற்றிலும் மேலாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பேருந்துகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளில் இசைக்கச்சேரிகளின் இருவெட்டுக்கள் என்ற பேரில், ஏதேனும் ஒரு கட்சிசார் ஆதரவு தேடுகின்ற இசைக் கச்சேரியே பயணிகள் உள்வாங்குமாறு செய்யப்படுகின்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கைகளுக்கு ஏற்ப, தென் மாகாணத்தில் உள்ள குடிசைகளின் தொகை 2414. தோட்டப்புற தொடர் வீடுகள் (லயின் அறைகள்) 6521. இவர்களுக்கு இன்ன உதவிகள்தான் செய்ய வேண்டும் எனச் சொல்லும் மேடைகள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. தற்போது வெலிகம கொலேதண்டவில் ஜேவிபி தலைவர் அநுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார். முற்று முழுதாக அரசாங்கத்தையும், ஆளும் கட்சி அமைச்சர்களையும் குற்றம் சாட்டுவதும், மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதுமே நடந்துகொண்டிருக்கிறது. (இலங்கை நேரம் இரவு 10.57)

தென் மாகாணத்தினுள்ளே உள்ள வீடுகளின் தொகை 6 இலட்சத்து 27 ஆயிரத்து 657 அளவில் இருக்கின்றது. அவற்றில் தென்னோலை, வைக்கோல் கூரைகளுடன் கூடிய வீடுகளாக 6343. வீட்டுக் கூரைக்கு தகரம் அடித்த வீடுகளின் தொகை 26102. அலுமினியம் தகடு போடப்பட்டள்ள வீடுகள் 2922 எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிடுகின்றது. http://www.gic.gov.lk/gic/index.php?option=com_org&Itemid=4&id=50&task=org&lang=ta

தெற்கில் மண்ணெய்யினால் ஒளியைப் பெறும் வீடுகளின் தொகை 43206. இவ்வாறான நிலையில் தென் மாகாணத்து மக்கள் தென் மாகாண சபைக்கு ஒருவரை நியமிப்பதானது மாகாண மட்டத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கேயாகும்.

என்றாலும், மாகாணத்தில் உள்ள மக்களின் பெரும் பிரச்சினைகள் மேடைகளில் பேசு பொருளாக இல்லாமல் அரசாங்கமும், அதனுடன் தொடர்புடைய அரசியலுமே பேசு பொருளாக உள்ளன. மேடைகளில் இனிப்புப் பண்டங்களும், பொருட்களின் அன்றைய இன்றைய விலைகளுமே பேசப்படுகின்றன.

இம்முறை தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் அசம்பாவிதங்கள் விரல் விட்டெண்ணக் கூடிய அளவிலேயே இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தென் மாகாண சபையில் இம்முறை மிகவும் நீதியான தேர்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனக் கூறுவது தப்பன்று.

தென் மாகாணத்தில் சட்டம் மிகவும் உறுதிவாய்ந்ததாக நடைமுறைப்படுத்தப்படுவது காலி மாவட்டத்திலாகும். காலி மாவட்ட பிரபல அரசியல்வாதி ஒருவர் “இங்கு ஒரு சுவரொட்டி கூட ஒட்ட விடுகிறார்கள் இல்லையே.. எப்படி நாம் அரசியல் செய்வது?” எனக் குறிப்பிட்டார்.

எதுஎவ்வாறாயினும், தென் மாகாணத்தில் இம்முறை சட்டம் உறுதிபட இருப்பதனால்தான் மிகக் குறைந்த அளவில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன எனக் குறிப்பிடலாம். இது சந்தோஷிக்கத் தக்க நிகழ்வாகும்.

மேலும், மக்கள் தேர்தல் பற்றி கவனத்திற் கொள்ளாமலிருப்பது மறைக்க முடியாத உண்மையாக உள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை கிஞ்சித்தேனும் இல்லாமலிருப்பதும், அதனைப் பயன்படுத்தி ஜேவிபி வானளாவ முழங்குவதும்…. கைதட்டல்கள் ஜேவிபியை தென்மாகாணம் வெல்லச் செய்யும் என்ற ஒருசாராரின் கூற்றும் இங்கு சுட்டிக் காட்டத் தக்கது.

தோட்டப்புற கூட்டங்களுக்குக் கூட மக்கள் ஆதரவு குறைவாக உள்ளதை அவதானிக்கத் தக்கதாகவுள்ளது. சில வேட்பாளர்கள் அவ்வக் கிராமங்களுக்குச் சென்று அப்பியாசப் புத்தகங்கள் வழங்குவதும், அதனைப் பெற்றுக் கொண்டு சிறுவர்கள் ஓடிவிடுவதும்.. கூட்டத்தில் கலந்துகொள்வோரில் விரல் விட்டெண்ணக் கூடிய அளவிலேயே வாக்காளர்கள் கையொப்பமிடுவதும் நகைக்கத்தக்கதும் சிந்திக்கத் தக்கதுமாகும்.

எதுஎவ்வாறாயினும் தென் மாகாண மக்கள், தென் மாகாண சபைக்காக புத்திசாதுர்யம்மிக்க, கற்ற, நற்குண நல்லொழுக்கங்களுடன் கூடிய ஒரு பகுதியினரைத் தேர்ந்தெடுப்பர் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

இன்று தெற்கிற்குத் தேவையாக இருப்பது உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் மேடைப்பேச்சாளர்கள் அல்ல… சொல்லும் செயலும் ஒன்றாகச் செயற்படும் அரசியல்வாதிகளே.. மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களே… அவர்கள் நிச்சயமாக இயலாமையில் வாடும் மக்களின் துன்பத்தில் பங்குகொண்டு, மக்களின் பணத்தை வீண்விரயம் செய்யாமல் பாதுகாப்பவர்கள் என நம்புகின்றனர் பெறுமதிமிக்க வாக்குச் சொத்துக்கார்ரகளான வாக்காளர்கள்….

Read more...

Thursday, February 20, 2014

சுவிட்சர்லாந்தில் முன்னாள் பெண் புலிக்கு நடாத்தப்பட்ட கற்பழிப்பு வகுப்பு பிசகியது! பீமன்

பிபிசி யில் கற்பழிக்கப்பட்ட நந்தினியின் உண்மைப் பக்கம் ஏது?

கற்பு என்பது முன்னொரு காலத்தில் தமிழ் பெண்களின் இல்வாழ்வுக்கான நல்லாயுதமாக கணிக்கப்பட்டதுடன், இது கள்வர் - காடையர்களால் அன்றில் ஏதோ ஒரு வழியில் அழிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அது பரம இரகசியமாக பேணப்படும். ஆனால், தமிழ்ப் பெண்களின் கற்பு தற்காலத்தில் மற்றவர் மீது பழிசுமத்துவதற்கான தீய ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. எது எவ்வாறு புனிதத்துடன் பேணிப்பாதுகாக்கப்பட்டதோ அது இன்று புலிகளின் ஊசலாடலுக்காக நயவஞ்சகத்தனமாக ஏலத்தில் விடப்பட, சம்பந்தப்பட்ட பெண் அவரது குடும்பத்தினர் கணவர் குழந்தைகள், வாழ்நாள் முழுக்க கறையைச் சுமந்து செல்கின்றனர்.

இதற்குச் சான்றான வரலாற்றுப் பதிவு ஒன்று இங்கு பொருத்தமாகுமென நினைக்கின்றேன்….

சமாதான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளுக்கு பயணம் செய்த புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்திலுள்ள புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரிடம் காதல் வயப்படுகின்றார். இக்காதல் விவகாரம் தலைமைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. குறித்த புலி உறுப்பினருக்கு தகுந்த விசா இல்லாத காரணத்தால் தனது சகோதரனின் கடவுச்சீட்டில் இலங்கை சென்று காதலியை பதம் பார்த்து விட்டு வருகின்றார். காதலி கர்ப்பிணியாக சுவிட்சர்லாந்துக்கு அரசியல் தஞ்சம்கோரி வருகின்றார். சர்வதேச நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டேன், எனது வயிற்றில் வளரும் சிசுவுக்கு தகப்பன் யார் என்று தெரியாது. ஆனால் , இலங்கை இராணுவம்தான் தகப்பனாக இருக்க வேண்டும் என்று கதை புனையப்படுகின்றது. இந்தப் புனைவு எதற்காக புனையப்பட்டது? இலங்கை இராணுவத்தின் மீது பழி சுமத்துவதற்காகவா? அன்றேல், இலகுவாக வீசாவினை பெற்றுக்கொள்வதற்காகவா?

இவை இரண்டிலும் எது முதல்நிலைப்படுகின்றது என்ற வாதங்களுக்கு அப்பால், இன்று 8 வயதுச் சிறுவனாக துள்ளித்திரிகின்ற அவனின் உண்மையான தந்தை யார் என்று தாய்க்கும் தந்தைக்கும் தெரிந்தாலும் அவன் சமூகத்திற்கும் சுவிஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கு பிறந்த பையன்.

இலங்கை அரசின் மீது பழிசுமத்தவேண்டும் என்பதற்காக தமிழ் பெண்கள் அரசியல் தஞ்சம் கோரும்போது தாம் கற்பழிக்கப்பட்டோம் எனக்கூறுமாறு அறிவுறுத்தி ஏமாற்றும் மலிந்த இழிசெயல் நீண்டு செல்கின்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்துக்கு அரசியல் தஞ்சம் தேடி வந்த இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட பெண் புலி ஒருவரிடம், இலங்கை அரசாங்கம் உங்களை கற்பழித்தது என்று கூறுமாறு அறிவுறுத்திய சம்பவம் பிசகிப்போயுள்ளது.

குறித்த யுவதி சுவிட்சர்லாந்துக்கு வந்து அரசியல் தஞ்சம் கோருவதற்கு முன்னர் எவ்வாறு தனது அரசியல் தஞ்சம் கோரலை கையாள்வது என வக்கீல் என்ற பெயரில் வலம் வரும் லுசன் பகுதியை சேர்ந்தவரிடம் ஆலோசனைக்காக சென்றபோதே மேற்படி பிசகல் எற்பட்டுள்ளது.

ஆலோசனை கேட்டுச்சென்ற யுவதியிடம் இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டேன் என்று கூறுங்கள் அப்போதுதான் வீசா தருவார்கள் என்றபோது, “வீசா தராவிட்டால் பாதிப்பேதுமில்லை அதற்காக எனது கணவனுக்கு உரித்தானதை என்னால் ஏலம்போட முடியாது” என்று கூறியுள்ளார் குறித்த யுவதி.

சுமார் 18 வருட காலங்கள் பிரபாகரனுக்கு மிகவும் அண்மையாக இருந்துள்ள மேற்படி பெண்புலி, தொடர்ந்தும் பிரபாகரன் மீது மையல்கொண்ட மனநோயாளிகளில் ஒருவராகவே காணப்படுகின்றார். பிரபாகரனுக்காக தங்களுடைய வாழ்நாளை தொலைத்துவிட்டோம் என விரக்தியடைந்திருக்கும் ஏனைய புலிகளிலும் வித்தியாசமானவராக இருக்கின்றார். “பிரபாகரன் இன்றும் தனக்கு வீரன்” என்கின்றார் இந்தப் பெண் புலி. லண்டனிலே பிபிசி யில் தோன்றி வீசாவுக்காக தனது அத்தனையையும் அம்பலத்தில்விட்ட தமிழ் யுவதிக்கு எதிர்மாறாக புலம்பெயர் புலிப்பினாமிகளின் வயிற்றுப்பிழைப்புக்கு நேரடிச்சவால் விடுத்து தமிழ் பெண்களின் தன்மானத்தை காத்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது.

புலம்பெயர் புலிகள் அரசியல் தஞ்சம் கோருகின்ற பெண்கள், கற்பழிக்கப்பட்டோம் என்று கூறிவிட்டால் சம்பந்தப்பட்ட அரசாங்கம் இலங்கை சென்று குறித்த இராணுவத்தினரை கைது செய்து வந்துவிடுவர் எனக் கனவு காண்கின்றனர். இலங்கை இராணுவத்தின் அத்தனைபேரும் இராமர்கள் என்றோ குற்றமிழைக்காதவர்கள் என்றோ நான் கூறிவிடமாட்டேன். பல்வேறுபட்ட குற்றமிழைத்த எத்தனையோ இராணுவத்தினர் இலங்கை இராணுவ வரலாற்றில் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இன்று புலம்பெயர் புலிகள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் குற்றவாளிகளை தப்பவைக்கும் நடவடிக்கையே! உண்மையில் எவராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இலங்கையில் நீதி கோரவேண்டும். குற்றவாளிகளை கூண்டில் அடைக்க கூடிய பொறிமுறைகள் இலங்கையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும். மாறாக குற்றஞ் சுமத்தல் ஒன்றே போதுமானது என நினைக்கின்றார்கள்.

ஆனால், இலங்கை அரசாங்கம் இவர்களது குற்றச்சாட்டுக்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லையா?

குற்றஞ்சாட்டுக்களை முன்வைக்கின்றவர்கள் அதனை நிரூபிக்கவேண்டும். நாங்கள் ஏன் எமது நேரத்தை அல்லது சக்தியை செலவிடவேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படை விதியின் பிரகாரம் மௌனம் காக்கின்றார்களா?

இல்லாவிட்டால், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அரசிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்போவதில்லை மாறாக இவை, மேலும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடித்தரும் என்று கருதுகின்றார்களா?

என்ற பல்வேறுபட்ட கேள்விகள் எழுகின்றது. கடந்த மாதம் நந்தினி என்ற பெயரில் பிபிசி யில் தோன்றி யுவதி ஒருவர் தான் கற்பழிக்கப்பட்டதாக கதை கூறியுள்ளார். வீசாவினை பெற்றுக்கொள்வதற்காகவே அப்பட்டமான பொய்யை தனது மகள் கூறியுள்ளார் எனவும், தனது மகளின் மேற்படி செயலுக்காக வருந்துவதாகவும் நல்லூரடிப் பிரதேசத்தில் ஆசீர்வாதப்பர் வீதி யில் (சென் பெனடிக் வீதி) வசிக்கின்ற பெற்றோர் அயலவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையிலே இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கெடுக்க வந்திருந்த பிரித்தானிய பிரதமரிடம் குறித்த பெற்றோரை உண்மையின் சாட்சியங்களாக அழைத்துச்சென்று தங்களது நாட்டில் எமக்கு எதிராக திட்டமிட்ட பொய்குற்றச்சாட்டுக்கள் பரப்புரை செய்யப்படுகின்றது என்பனை நிரூபியுங்கள், பிரித்தானியாவின் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு டேவிட் கமருனிடம் விளக்கம் கேளுங்கள் என பல்வேறுபட்ட தேசப்பற்றுள்ள தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தபோதும், அவ்விடயம் இடம்பெறவில்லை.

இதற்கான காரணம் - அதிகாரிகளின் திறமையின்மையா? இல்லையெனில், நாட்டினுள் வந்திருந்த விருந்தாளியை அவமதிக்கக்கூடாது என்ற இலங்கையின் விருந்தோம்பலின் அல்லது இராஜதந்திர பண்புகளின் வெளிப்பாடா?

கடந்த 09-11-2013 அன்று, பிபிசி தொலைக்காட்சியில் நந்தினி என்ற பெயரில் தோன்றிய யுவதி, தான் 2013 ஆண்டு ஆரம்பப்பகுதியில் தனது வீட்டிலிருந்தபோது வீடு தேடிவந்த இலங்கை இராணுவத்தினர் தன்னை வான் ஒன்றில் ஏற்றிக்கொண்டு சுமார் 4-5 மணித்தியாலயங்கள் ஓடிச்சென்று, இராணுவ முகாமொன்றில் வைத்திருந்து தொடர்ச்சியாக தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், தனக்கு ஓய்வே இருக்கவில்லை என்றும் எந்த நேரமும் ஓட்டிக்கொண்டே இருந்தார்கள் என்றும், ஓட்டியவர்களின் எண்ணிக்கையே தன்னால் சொல்ல முடியாது என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதியை தொலைக்காட்சியில் கண்ட ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

இவரது தந்தையார் பெயர் முத்துராசா. யாழ் மாநகர சபையில் வேலை செய்திருக்கின்றார். யாழ் நல்லூரடிப் பிரதேசத்தில் ஆசீர்வாதப்பர் வீதி (சென்பெனடிக்ட் ஸ்றீர்) வசித்து வருகின்றார்.

நந்தினியின் உண்மையான பெயர் நளாயினி. லக்கி என்றும் அவர் அழைக்கப்பட்டிருக்கின்றார். விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் படித்தவர். வன்னியையோ அன்றேல், யுத்தத்தின் வடுக்களையோ கண்டவர் என்று கூடக் கூறமுடியாது.

நளாயினிக்கும் - யூகன் பத்மராசா என்பவருக்கும் 2008 இல் திருமணப்பேச்சு முற்றுப்பெற்றுள்ளது.

யூகன் 2003 ஆண்டிலிருந்து லண்டனில் வசிக்கின்றார். ஆனால் இவர் லண்டனில் தங்குவதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் திருமணப் பேச்சு முடிவுற்றதிலிருந்து நளாயினி கொழும்பிலேயே தங்கியிருந்திருக்கின்றார். அதற்கும்மேலாக மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சட்டவிரோத முகவர்கள் மூலம் பிரித்தானியாவிலுள்ள தனது வருங்கால கணவனுடன் இணையும் நோக்கில் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சென்று வந்திருக்கின்றார்.

2013 முற்பகுதியில் இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, மாணவர்களுக்கான விசாவை பெற்றே இவர் பிரித்தானியா சென்றார் என்று சொல்லப்படுகின்றது. (என்றாலும், இதை ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியவில்லை)

இலங்கை மூன்று தசாப்தகால கொடிய பயங்கரவாதத்தை கொடுப்பதற்கரிய விலையை கொடுத்து தோற்கடித்திருக்கின்றது. அங்குள்ள மக்கள் அதன் கொடுமையிலிருந்து இன்னும் மீண்டவர்களாக இல்லை.

இக்கொடுமைகளிலிருந்து மீள அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகள் தேவைப்படுகின்றது. அவர்கள் தொழில்வாய்ப்பின்றி பசி பட்டினியால் வாடுகின்றனர். இந்த துயர் நிலை நீங்கவேண்டுமாயின் நிச்சயமாக இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். ஆனால், அவ்வாறு முதலீடு செய்ய முயற்சிக்கின்றவர்களை தமது சொந்த இலாபங்களுக்காக , தமது ஊசலாடலுக்காக புலிகள் தமிழ் மக்களை தவறாக வழிநடாத்தி, பல்வேறுபட்ட போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு தடுக்கின்றனர்.

இச்செயற்பாடுகளால் குறித்த ஒரு சிலருக்கு அந்தந்த நாடுகளில் வாழ்வதற்கு சிலநேரம் அனுமதி கிடைக்கலாம். அனால், இலங்கையிலே அல்லற்படுகின்ற மக்களுக்கும் உதவி வேண்டி நிற்கின்ற மக்களுக்கும் கிடைக்கபோவது என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இப்போலிப்பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு அந்தந்த நாடுகளில் இருக்கின்ற இலங்கை தூதரகங்கள் நேர்த்தியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொண்டுள்ளதாக இதுவரை அறியமுடியவில்லை. குறித்த யுவதி, பிரித்தானியாவிலே பகிரங்கமாக தோன்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றார் என்றால், பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்தூதரகம் செய்யவேண்டியது - யாழினி இலங்கைக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கின்றார் என்றும் இவரது குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும் பிரித்தானிய நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து யாழினி கற்பழிக்கப்பட்டார் என்பதை நிரூபிக்குமாறு கட்டளையிடுவதற்கான ஆவன செய்ய வேண்டும். அவ்வாறு நிரூபிக்க மூடியாது போனால், அவர் பொய்குற்றச் சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றார் என்றும் இவரது பொய்குற்றச்சாட்டுக்களை மக்களுக்கு எடுத்துச் சென்ற பிபிசி ஊடகச் சேவை தாம் ஒலிபரப்புச் செய்த செய்தியானது பொய் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

மேற்படி செயற்பாட்டை இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் செய்து முடிக்காதவரை இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தே செல்லும்.

எனவே, சாதாரணமாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமது வாழ்வை மேம்படுத்திகொள்வதற்காக ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தடைபோட முற்படும் சக்திகள் தோற்கடிக்கப்படவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

Read more...

Wednesday, February 19, 2014

சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது! -எம். ரிஷான் ஷெரீப்

மக்கள் ஒன்றிணைந்தால் அநீதியை வெற்றிகொள்ளலாம்!!

ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் 'வேசி' எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன். சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே, அந்த அதிபரான W.M சமன் இந்திரரத்னவின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் பல கொடுக்கப்பட்டிருந்த போதும், அவருக்கிருந்த அதிகாரத்தின் காரணத்தாலும், அரசியல் பலத்தாலும் அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த வருடம் மே மாதத்துக்கு முன்பிருந்தே இந்த அதிபருக்கெதிராகவும், அப் பாடசாலையில் இடம்பெறும் சில மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முறைப்பாடுகள் உயர் கல்வித் திணைக்களங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றபோதிலும் கூட, எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர், மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனும் மனுவை பெற்றோர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த நிலையில், இயலாத பட்சத்தில் கடந்த 2013 மே மாதம் 17ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட பாடசாலை அமைந்திருக்கும் வலயத்தின் கல்வித் திணைக்கள உயரதிகாரிக்கு இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவிட்டு இரு மாதங்கள் கடந்த பின்னர் 2013 ஜூலை மாதம் 23 ஆம் திகதி, அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் அந்த உயரதிகாரி. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், சிறுமி வெனுஷாவின் மரணத்தின் பின்னர், அவளது தற்கொலைக் கடிதம் கிளப்பிய அலை, பூதாகரமாக எழுந்தது. தான் ஒரு தீக்குச்சியாகி ஏனைய மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. அக் கடிதமும், அதன் மொழிபெயர்ப்பும் இணைய ஊடகங்களின் மூலமாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்களில் ஒன்றுசேர்ந்த நல்ல மனங்களின் காரணமாக அதிபருக்கிருந்த அரசியல்பலத்தினால் மறைக்கப்படவிருந்த உண்மைக்கும், மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்ட அநீதிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.


மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பிரிவு விஷேட காவல்துறையினரால் அதிபர் சமன் இந்திரரத்ன, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. 1995 இல 22 குற்றத் தண்டனைச் சட்டத்தின் 308 ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது மனரீதியாகத் துன்புறுத்தலும் சேர்ந்ததுதான் என்பதாலும், 2006 இல 16 குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மன ரீதியாகத் துன்புறுத்துவது என்பதுவும் குற்றமாகக் கருதப்படுவதாலும் அப் பிரிவுகளின் கீழ் அதிபருக்கு தண்டனை வழங்கப்படச் சாத்தியமிருக்கிறது. அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பத்து வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்வார்.

அதிபர் சிறுமியின் நடத்தை குறித்து தவறாகக் கூறியதால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமியின் தந்தை, மரண விசாரணைக்கான உடல் பரிசோதனையின் போது, சிறுமியின் கன்னித்தன்மை சான்றிதழையும் வைத்தியர் குழுவிடம் கோரியிருந்தார். எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத விடயம் இது. எனினும், சிறுமி கன்னித்தன்மையுடனே மரணித்திருக்கிறாள் எனச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிபர் சிறுமி மீது குறிப்பிட்ட 'வேசி - விபச்சாரி' எனும் கூற்று பொய்யாகியிருக்கிறது. அத்தோடு சிறுமியின் தற்கொலைக்கு அவளது பெற்றோரே காரணமென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் உரைத்து, அதிபரைக் காப்பாற்ற முனைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரது கருத்துக்கள், அநீதியை எதிர்த்து எழுந்த மக்களது ஆர்ப்பாட்டங்களின் முன்னிலையில் அடிபட்டுப் போயிருக்கிறது.

எதற்கும் தற்கொலை தீர்வல்ல. ஏனைய மாணவர்களின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்துகொண்ட சிறுமி வெனுஷாவின் நடவடிக்கையை யாரும் இங்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது. எனினும், மக்கள் ஒன்றிணைந்தால், அநீதிகளுக்கெதிராக எதையும் சாதிக்கலாம் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.

இங்கு செய்தியாகப் பதிவிட்டும், எனது வலைத்தளம் மற்றும் ஃபேஸ்புக் முகப்பிலிருந்து பகிர்ந்தும் இந்த அநீதிக்கெதிராக ஒன்றிணைந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

பிந்திய பதிவேற்றம் -
கைதுசெய்யப்பட்ட குருநாகல் ஜோன் கொத்தலாவல வித்தியாலய அதிபர் சமன் இந்திரரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் இவரை விடுவிக்க குருநாகல் பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Read more...

Saturday, February 8, 2014

மின்சாரம் பற்றி அகத்தியருந்தான் கண்டுபிடித்தாரே!

குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

Read more...

Thursday, December 26, 2013

ஆழிப்பேரலை விட்டுச்சென்ற எச்சங்கள்! -செ.துஷ்யந்தன்

ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடி ஆண்டுகள் ஒன்பது கழிந்து விட்டது ஆனாலும் அது ஏற்படுத்திச்சென்ற வலிகளும் வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களில் ஆறாத ரணங்களாக இருக்கின்றன.

செல்வத்தையும்இ மகிழ்சிசியையும் வழங்கிய கடல் சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குள் புகுந்து ஊழித்தாண்டவம் ஆடும் என்று யார் நினைத்தார்கள் ? 2004 டிசம்பர் 26 வழமை போன்றே பொழுது விடிந்தது. டிசமபர் 25 இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிய கழிப்பில் அன்று மாலை படுக்கைக்கு சென்ற பலர் காலை பிணமாக மாறிய பயங்கரம் தேசத்தையே ஒரு உலுக்கு உலுக்கியதை எப்படி மறக்க முடியும்.


இன்று நினைத்தாலும் என் ஈரக்குலை நடுங்குகின்றத ஒவ்வொரு பொழுதும் கடலை பார்த்து எமது சீவியம் போனது கூட்டுக்குடும்பமாய் இருந்த எங்களை பேரலை சின்னாபின்னமாக்கியதை என் உடம்பின் உயிர் இருக்கும் வரை மறக்கவே முடியாது. யாருக்குமே நாங்கள் துரோகம் செய்யவில்லை என் கணவன் இரண்டு பிள்ளைகள்இ பேரப்பிள்ளைகள் என ஐந்து பேரை கடலுக்கு இரையாக்கி விட்டு நான் தனிமரமாய் நிற்கிறேன் என்னதான் கொட்டிக்கொடுத்தாலும் அழிந்து போன என் குடும்பத்தையும் இ நிம்மதியையும் உங்களால் மீட்டுத்தர முடியுமா ?!. கண்களில் நீர் ததும்ப கணத்த மனதுடன் கேட்டார் ஆழிப்பேரலையின் உயிர் தப்பிய கல்முனையைச் சேர்ந்த க.திலகவதி.

ஆழிப்பேரலையின் அதிக உயிர் இழப்புக்களை சந்தித்த மாவட்டங்களுள் அம்பாறை மாவட்டம் முதல் இடம் பெறுகிறது. அதிலும் கல்முனைப் பிரதேசமே ஆழப்பேரலையால் முற்றாக உருக்குலைந்து போன பிரதேசமாகும். அன்று அப்பேரலையால் பாதிக்கப்பட்ட கல்முனை மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை. சிலருக்கு இன்றும் இருப்பதற்கு கூட வீடு கிடைக்காத நிலையில் இலவு காத்த கிளி போல வாழ்கின்றனர். இதற்கு அரசியல் வாதிகளினதும்இ அதிகாரிகளினதும் அசமந்த போக்கே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கென கட்டப்பட்ட வீட்டுத் திட்டங்கள் கூட இதுவரை அம்மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாதுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியில் அம்பாறை நுரைச்சோலை எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள 500 வீட்டுத்திட்டமானது பேய் உறையும் வீடுகளாகவும் பற்றைக் காடுகளாகவும் காட்சியளிக்கின்றன. இதற்கு காரணம் சுனாமியால் பாதிக்கப்படாத சிங்கள மக்களுக்கும் அதில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என அரசியல் வாதிகள் முரண்டு பிடிப்பதே ஆகும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென அவர்களின் கலைஇ கலாசார அடையாளங்களை பிரதிபடுத்தக்கூடியவாறு இவ்வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கபபடாத சமூகம்; உரிமை கோருவது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும். தற்போது இவ்வீட்டுத்திட்ட விவகாரம் நீதி மன்ற விடயத்தில் இருப்பதனால் அதற்கான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை இதனால் உறவுகளை இ வீடுகளை இழந்த மக்கள் அகதிகளாகவே உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர். பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் காலம் தாழ்த்தாது மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். தயவு செய்து இதனை அரசியல் ஆக்கி ஏழைகளின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக்கொள்ளாதீர்கள்.

இதே போன்று கல்முனை தமிழ் பிரதேசங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அரச சார்பற்ற நிறுவனங்களால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டுத் திட்ங்களும் அரையும் குறையுமாகவே காணப்படுகின்றன. இதில் பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை வீட்டுத்திட்டம் இன்றும் வசதிகள் அற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. இங்கும் சில வீடுகள் முழுமை பெறாத நிலையில் உள்ளன.

2004 டிசம்பர் 26 இற்கு முன்னர் தனித்தனி வீடு இ வாசல்களில் சுதந்திரமாய் வாழ்ந்த இப்பகுதி மக்கள் இன்று தொடர் மாடி வீட்டுத் திட்டங்களில் சொல்லொண்னா துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் கல்முனை இ பெரியநீலாவணை பகுதிகளிலுள்ள  குறித்த தொடர் மாடிகளில் நீர்இ மின்சாரம் இ சுகாதாரம் மற்றும் கலை இ கலாசார ரீதியிலான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக இவர்கள் மிகுந்த மன உளச்சலுக்கு மத்தியிலே காலத்தை கடத்தி வருகின்றனர்.
ஆழிப்பேரலை ஏற்பட்ட போது ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடிய குடும்ப உறவுகளில் பலர் காணாமல் போயிருந்தனர்; அப்படி காணாமல் போனவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையில் சிலர் வாழ்கின்றனர். அவர்களுள் பாண்டிருப்பைச் சேர்ந்த சிவலிங்கம் இப்படிக் கூறுகின்றார்.

“சுனாமியடிச்சி ஒன்பது வருசமாப் போகுது என்ட மகன் உயிரோடிருக்கிறான் என்ற நம்பிக்கை மட்டும் உள்ளது. எல்லா இடத்திலேயும் சாத்திரம் கேட்டுப் பார்த்திட்டன் மகன் உயிரோடு இருக்கிறதாத்தான் சொல்றாங்க. சுனாமி நேரம் என்ட மகனை உயிரோடு யாரோ பஸ்சில் ஏத்தி விட்டிருக்காங்க. அத பலர் பாத்திருக்காங்க அவன் அம்பாறைக்கு போன இடத்தில் தான் தவறியிருக்கிறான். அப்ப அவனுக்கு ஆறு வயசு. இப்ப 15 வயசு இருக்கும். எங்கேயோ ஒரு பௌத்த விகாரையில மகன் பிக்குவா மாற்றப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். என்ட மகன் ஒரு நாள் எங்களை தேடி வருவான்.” என்றார். இவரைப் போல பலர் சுனாமியின் போது காணாமல் போன உறவுகளைத் தேடி அலைந்துகொண்டே இருக்கின்;றனர் அவர்களின் நம்பிக்கையும்இ தேடலும் வீண் போய்விடக் கூடாது என்பதே எனது பிரார்த்தனை.

ஆழிப்பேரலையில் சிக்கி உயிர் பிழைத்த மக்களைவிட சுனாமித் தண்ணி காலில் பாடாதவன் கூட அதை காரணம் காட்டி பல வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொண்ட கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சுனாமியில் சிக்கி உறவுகள் உடைமைகள் பலவற்றை இழந்து நிhக்;கதியாய் நின்ற மக்களை காரணம் காட்டி வயிறு வளர்த்த பலர் இன்று வசதி படைத்தவர்களாக திரிகின்றனர் ஆனால் சுனாமியில் நேரடியாய் பாதிக்கப்பட்ட மக்களோ இன்னும் எழுந்திருக்கமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

சுனாமி பேரலையில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூர்ந்து உறவுகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பல்வேறு இடங்களிலும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கல்முனை தமிழ் பிரதேசத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வில் நினைவுத் தூபிக்குமுன் ஒன்று கூடும் உறவுகள் சுடர் ஏற்றி அழுதுபுலம்பும் காட்சி நெஞ்சை நெகிழச் செய்யும்.

ஆழிப்பேரலை அள்ளிச்சென்ற உயிர்களும்இ உடைமைகளும் கடலுக்குள் அடங்கிப் போனாலும் அவை விட்டுச்சென்ற எச்சங்கள் என்றுமே மறக்கமுடியாதவைகளாகும்

Read more...

Monday, December 2, 2013

எயிட்ஸ் நோயினால் அழிந்ததோர் இனம் பற்றித் தெரியுமா? -ரஸானா மனாஃப்

தகாத முறையில் உறவை நாடும் அனைவருக்கும் இச் சம்பவம் ஒரு படிப்பினையே!

எயிட்ஸ் நோயினால் அழிந்துபோன ஒரு இனத்தைப்பற்றிய கதை இது.. பாதுகாப்பற்ற உடலுறவை நாடும் அனைவருக்கும் இந்த சம்பவம் ஒரு படிப்பினை.

உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிர்க்கொல்லி நோயான எய்ட்சின் கோர முகம் குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை.

உலகில் கொடிய வியாதி எது என்றால் எய்ட்ஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நோய் நேற்று இன்று தோன்றியது அல்ல. பல நூற்றாண்டுகளாகவே மனிதனை பாதிக்கும் கொடிய நோய் ஆகும்.

பண்டை காலத்தில் மன்னர்களை இந்த நோய் பாதித்துள்ளது என்றும் இதற்கு ராஜநோய் என்று பெயர் சூட்டி இருப்பதும் பழம் ஏடுகள் நமக்களிக்கும் ஆதாரங்கள். இந்த கொடிய நோய்க்கு எய்ட்ஸ் என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.

இந்த கொடிய எய்ட்ஸ் நோய் உலகில் ஒரு இனத்தையே அழித்துள்ளது. அந்தமானில் குற்றவாளிகள் குடியிருப்பு அமைக்க 15.01.1858 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்திய அரசு உத்தரவு எண் 88–ன் படி கேப்டன் எச்.மேன் என்பவர் 22.01.1858 அன்று அந்தமான் தீவுகளுக்கு வந்து பிரிட்டீஸ் கொடியை ஏற்றி இத்தீவுகளை இந்திய அரசுடன் இணைத்தார் என்பது வரலாறு.

குற்றவாளிகள் தப்பி ஓடுவதை தடுக்கவும் அவர்களின் தொல்லையில் இருந்து மக்களை காக்கவும் எடுக்கப்பட்ட முடிவு தான் அது. இதன் அடிப்படையில் முதன் முதலில் தண்டனை பெற்ற 50 ராணுவ வீரர்கள் உள்பட 200 கைதிகளை 4.3.1858 அன்று கொல்கத்தாவில் இருந்து அழைத்து கொண்டு 10.6.1858 அன்று அந்தமானில் கொண்டு சேர்த்தது பிரிட்டீஸ் அரசு.

அந்தமான் தீவுகள் இதற்கு முன்பு நீக்ரோட்டிக் என்ற இனத்தவருக்கு உரிமைப் பட்டதாக இருந்தது. அப்போது அந்தமான் காட்டுப் பகுதியாகவே இருந்தது. கிழங்கு, தேன் எடுப்பது, வேட்டையாடுவது ஆகியவை இந்த அந்தமான் இனத்தவரின் தொழில்.

நீக்ரோட்டிக் இனத்தை சேர்ந்த அந்தமானியர்கள் தங்கள் எல்லைக்குள் ஊடுரு வல்காரர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. ஆனால் இவர்களால் பிரிட்டீசாரை எதுவும் செய்ய முடிய வில்லை. அந்தமானின் பூர்வீக குடிகளின் அபாயகரமான அம்புகளில் இருந்து தங்களை பாதுகாத்து பிரிட் டீஷ்காரர்களால் முடிய வில்லை.

எனவே அவர்கள் தங்களை பாதுகாக்க குற்றவாளிகளை பலிகடாவாக்கினார்கள். அங்குள்ள அழகிய காடுகளை அழிக்கவும் கைதிகளை பயன்படுத்தினர். கைதிகளை காவலாளிகளாகவும் நியமித்தனர். ஆனால் அவர்களை அந்தமானியர்கள் அம்பு எய்து கொன்றனர்.

1858–ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலில் காவலாளிகளாக இருந்த 170 கைதிகள் கொல்லப்பட்டனர். தப்பிய கைதிகளை பிடிப்பதற்காக அந்தமானியரை பிரிட்டீசார் பயன்படுத்தினர். இதில் பல உயிர் சேதம் ஏற்பட்டது. அந்தமானியர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அந்தமானிய பெண்கள் பலரை பிரிட்டீசார் அந்தமான் இல்லத்தில் பணிக்கு அமர்த்தினர். அந்தமானியர் இனத்தில் இளம்பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்னர் மணமானவர்கள் மற்றும் தனியாக இருப்பவர்களுக்கு பொதுச் சொத்தாக இருப்பர்.

ஆனால் திருமணமான பின்னர் அவர்கள் வேறு யாரையும் அணுக விடமாட்டார்கள். விதவைகள் ஆனாலும் ஆண்களை பார்த்து சிரிக்க மாட்டார்கள். கடவுளைப் பற்றி எந்த கொள்கையும் இல்லாதவர்கள் இந்த அந்தமானியர்கள்.

இவர்கள் முழு நிர்வாணமாக திரியும் இனமாக இருந்தனர். பெண்கள் மேலாடைக்கு பதில் உடலில் வண்ணப்பூச்சுகளை மட்டுமே பூசுவர். மணப்பெண்கள் எளிதாக கிடைப்பார்கள். மணச்சடங்குகள் விரிவாக எடுப்பது இல்லை. மூத்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்ணையும், ஆணையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களை கூப்பிட்டு மணமுடித்துவிடுவார். ஆனால் அதற்கு இரு தரப்பு சம்மதமும் கேட்பதில்லை.

திருமணச் சடங்குகளும் நடத்தப்படுவதில்லை. 2 மனைவி உள்ள ஒருவர் 3–வது பெண்ணை திருமணம் செய்யும்போது மட்டும் திருமணச்சடங்கு வைக்கப்படும். 3 பெண்களை மணப்பது, பெண்களை பொதுச் சொத்தாக வைத்து உடலுறவு கொள்வது போன்ற பழக்கங்கள் அந்தமானியரிடம் இருந்தது. அந்த கால கட்டத்தில் அந்தமானிய பெண்களை பிரிட்டீசார் வேலைக்கு எடுத்து அந்தமான் இல்லங்களில் அவர்களை விபசாரிகளாக்கினர்.

இதன் தொடர்ச்சியாக அந்த பெண்கள் மூலம் பரவிய பால்வினை நோயான மேலும் பரவி இன்று அந்த இனமே அழிந்துவிட்டது. 1858–ம் ஆண்டில் அந்த மானியரின் மக்கள் தொகை 15 ஆயிரம், 1901–ம் ஆண்டு 625, 1911–ம் ஆண்டு 455, 1921–ம் ஆண்டு 209, 1931–ம் ஆண்டு 90, 1951–ம் ஆண்டு 33, 1961–ம் ஆண்டு 19, 1971–ம் ஆண்டு 24, 1981–ல் 26, 1991–ம் ஆண்டு 16, 2001–ம் ஆண்டு 10. இன்று அவர்கள் இனமே இல்லை.

பெரிய காயங்கள், அம்பு, துப்பாக்கிகளால் ஏற்பட்ட கொடுங்காயங்களை மண்ணை பூசி குணப்படுத்தி வந்தவர்கள் அந்தமானியர்கள். கொடிய கொசுக்களுக்கு மத்தியில் அடர்ந்த காட்டுக்குள் வசித்த போதும் அவர்களை எந்த வியாதியும் தாக்க வில்லை. ஆனால் எய்ட்ஸ் வியாதி அந்தமானிய இனத்தையே அழித்து விட்டது. விபசாரம், பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கைதான்.

Read more...

Wednesday, November 13, 2013

மார்க்சிசத்திற்கான போராட்டமும் நான்காம் அகிலத்தின் பணிகளும்!

- டேவிட் நோர்த்

கீழ்வரும் அறிக்கை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்12வது கூட்டத்தொடருக்கு டேவிட் நோர்த்தால் வளங்கப்பட்டதாகும்.

சோவியத் யூனியனாக இருந்ததிலிருந்து உருவாக்கப்பட்ட அரசுகளைதொழிலாளர் அரசுகள் என வரையறுக்க முடியாது. அக்டோபர் புரட்சியால்ஏற்படுத்தப்பட்ட சொத்துறவுகளை, அதன் திரிக்கப்பட்ட வடிவத்திலும் கூட,இந்த அரசுகள் பாதுகாக்கவில்லை. இந்த அரசுகள் அனைத்தும் தெள்ளத்தெளிவாகவே தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களை இல்லாமல்செய்வதையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அவற்றை தொழிலாளர்அரசுகள் என வரையறை செய்வது, இந்தப் பதத்திற்குரிய எந்தவிதமானமார்க்சிச உள்ளடக்கத்தையும் பறித்து விடுகிறது. 1930ல் சோவியத் யூனியனைதொழிலாளர் அரசு என்ற வரையறையை நிராகரித்தவர்களுடன், ட்ரொட்ஸ்கிசர்ச்சையில் இறங்கினார்.

ஸ்ராலினிஸ்டுக்கள் செய்த குற்றங்களுக்காக,அவர்களுக்கு எதிராக வார்த்தைகளால் பழிவாங்கக்கூடாது, மாறாக இன்னும்எஞ்சியிருக்கும் அக்டோபர் புரட்சியின் வெற்றிகளை - மிக முக்கியமாகஇருந்து கொண்டிருக்கின்ற தேசியமயமாக்கப்பட்ட சொத்தையும் அரசுதிட்டமிடலின் அடிப்படைகளையும்- பாதுகாக்க வேண்டும் என்றார்.அதிகாரத்துவத்தின் நலன்கள் இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட மட்டம்வரைசோவியத் அரசு இன்னும் பாதுகாக்கப்பட வேண்டும் அக்டோபர் புரட்சியினால்ஏற்படுத்தப்பட்ட சொத்துவடிவங்கள், ஆழமான சீரழிவுக்குள்ளான போதிலும்தொழிலாளர் அரசு என்ற வரையறை இன்னும் மதிப்புள்ளதாகவேஇருக்கின்றது. என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.

1939 சர்ச்சையின்போது ட்ரொட்ஸ்கி விவரித்தார், சோவியத் யூனியனைபாசிஸ்டுக்களாலோ அல்லது அந்த அர்த்தத்தில் ''ஜனநாயக''ஏகாதிபத்தியத்தாலோ அடையும் இராணுவத் தோல்வியின் விளைவு என்பது,ஸ்ராலினிச சர்வாதிகார ஆட்சியின் அழிவு மட்டுமல்ல, அது சமூக உறவுகள்,சொத்துவடிவங்களின் எல்லைகளிலும் எதிர்ப்புரட்சிக்கு இட்டுச் செல்லும்,ஆகவே இது வெறுமனே வார்த்தைகள் சம்பந்தப்பட்ட சர்ச்சை அல்ல. 1939ல்பேர்ன்ஹாமிடம் ட்ரொட்ஸ்கி கூறியதாவது, (நான் இங்கே சுருக்கித் தருகிறேன்)

''நல்லது, நீங்கள் சோவியத் யூனியனை தொழிலாளர் அரசு அல்ல எனக்கூறஆசைப்படுகிறீர்கள், -நான் அதனை ஏற்றுக் கொண்டால் செய்ய வேண்டியவேலையின் கண்ணோட்டத்தில் இருந்து என்ன அரசியல் முடிவை நாம்எடுக்கவேண்டுமென்று கேட்பீர்களா? நீண்டகாலத்துக்கு முன்பே, ஸ்ராலினிசஅதிகாரத்துவத்தை தூக்கி வீசுவது அவசியமானது என்பதில் உடன்பட்டோம்.நாம் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று கருதுகிறீர்கள்?வரையறையில் மாற்றக் கோரி நீங்கள் முன்வைப்பது எதைக் குறிக்கிறது?''

அது தெளிவானது- பேர்ன்ஹாம், சாட்ச்மன் ஆகிய இருவரதும் பரிணாமவளர்ச்சியினால் அது உறுதிப்படுத்தப்பட்டது- அதாவது சோவியத் யூனியனைஒரு தொழிலாளர் அரசாக வரையறை செய்வதை கைவிடுதலானதுஏகாதிபத்தியத்துடனான போரில் சோவியத் யூனியனை தொழிலாளர் வர்க்கம்பாதுகாக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கே வழிவகுக்கும். இன்னும் சரியாகக்கூறினால் சோவியத் யூனியனின் மீதான ஏகாதிபத்திய வெற்றிக்கே சாதகமாகஇருக்கும். இது சார்புரீதியான குறைந்த காலத்தில், பேர்ன்ஹாமின்நிலைப்பாடாக இருந்தது. கொரியப்போர் காலகட்டத்தின் போது அது சட்ச்மன்உடையதாகவும் இருந்தது.

சோவியத் யூனியன் தொழிலாளர் அரசு என்ற வரையறை, அக்டோபர்புரட்சியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சொத்து வடிவங்களைப் பாதுகாப்பதுடன்எப்பொழுதும் கட்டுண்டிருந்தது. புதிய அரசுகளாகத் தோன்றிய ரஷ்யா,உக்கிரேய்ன், உஸ்பேஸ்கிட்ஸ்தான், கஜக்ஸ்தான், ஜோர்ஜியா மற்றும் ஏனையசுதந்திர குடியரசுகளின் கூட்டமைப்பு ஆகியன ஏதோ ஒரு வழியில்அரசுசொத்துடமையைப் பாதுகாக்கின்றன என்று, இன்னும் பேணுவதுசாத்தியமற்றதாகும். டிசம்பர் 1991அன்று ஜெல்ட்சின், கிராவ்சக், ஷாஷ்கேவிச்ஆகியோர் கையெழுத்திட்ட ஆவணங்களில் CIS தனிச்சொத்துடமையைஏற்படுத்துவதில் உறுதிகொண்டுள்ளது என்று தெளிவாகவே குறிப்பிட்டனர்.இந்த அடிப்படை மாற்றமானது, கொர்ப்பசேவ் அரசினால் 1985 இருந்துமுன்னெடுத்து வரப்பட்ட கொள்கைகளின் வெளிப்பாடு மட்டுமல்ல,ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகரப் பண்பின் இறுதி முடிவாகும்.

புதிய சொத்துடமை வடிவங்களை ஏற்படுத்தும் நோக்கில்தான் CIS ஐஉள்ளடக்கிய இந்த அரசுகள் அமைக்கப்பட்டன இதுவே, இந்த அரசுகளைப்பற்றிய வரையறையை சரிபார்ப்பு செய்வதை வேண்டி நிற்கிறது. இதுசிலருக்கு தொந்தரவாக இருக்கலாம்- நம்மை விமர்சிப்பவர்களின் நிலைப்பாடுபற்றி நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்- ஆனால் இந்த தேவையானதிருத்தங்கள் நமது இயக்கத்தின் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தில்வேரூன்றி உள்ளன. நாம் பாரம்பரிய முறைப்படுத்திக் கூறல்களை, வர்க்கப்போராட்டத்தின் ஸ்தூலமான அபிவிருத்திகளின் வெளிச்சத்தில் மறுசரிபார்ப்புச் செய்ய கடமைப்பட்டவர்கள். அப்போதுதான் நம்முடையமுறைப்படுத்திக் கூறல்கள் புறநிலை யதாத்தத்திற்கு பொருந்தக் கூடியதாகஇருக்கும். நம் முன்னே உள்ள பணி புதிய அரசுகளுக்கு பொருத்தமானவரையறையை வழங்குவது மட்டுமல்ல, இந்த மாற்றங்களின்தாற்பரியங்களை பரந்த வரலாற்று உள்ளடக்கடத்தில் புரிந்து கொள்ளவும்வேண்டும்.

இது வெறுமனே வார்த்தைகளையும், சொற்பதங்களையும்மாற்றுகின்ற விடயமல்ல. சோவியத் யூனியன் இனியும் தொழிலாளர் அரசுஅல்ல என்று சொல்வது மட்டும் போதாது. தொழிலாள வர்க்கத்தின் புறநிலைவரலாற்று அனுபவத்தின் உள்ளடக்கத்தில் இந்த மாற்றம் எதைபிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அதிகமாகப் பயன்படுத்துவதால் சர்வ சாதாரணமாக்கப்பட்டசொற்றொடராகவும் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால்இந்த விவகாரத்தில் உண்மையாகச் சொல்ல முடியும், 1917ல் திறக்கப்பட்டமுழு வரலாற்றுக் கட்டத்தினதும் முடிவுக்கு நாம் வந்து விட்டோம் என்று.அக்டோபர் புரட்சியானது நவீனகால வரலாறு மற்றும் தொழிலாள வர்க்கத்தின்வரலாற்றில் தீர்க்கமான நிகழ்ச்சியாகும்.

தொழிலாள வர்க்கத்தால் அதிகாரம்வெற்றி கொள்ளப்பட்டது, வரலாற்று அபிவிருத்தியின் புதிய கட்டத்தைக்குறிக்கின்றது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்சால்தொடக்க வடிவம் கொடுக்கப்பட்ட, உலக சோசலிசத்தின் வரலாற்றுமுன்னோக்கு யதார்த்தமாக்கப்பட்டது. சோசலிசப் புரட்சி நடைமுறைப்பிரச்சனையாகி விட்டது.

தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் அபிவிருத்தி

அக்டோபர் புரட்சி ஆகாயத்திலிருந்து விழவில்லை. அது சர்வதேசத்தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் அபிவிருத்தி மற்றும் வர்க்கப் போராட்டம்ஒரு புறநிலையான வரலாற்று வளர்ச்சிப் போக்கின் சாதக உச்ச நிலையாகஇருந்தது. வர்க்கப் போராட்டத்தின் சூழலில் மாறுதல்கள் ஏற்பட்டபோதிலும்1917க்கு முன்னர் 70 வருடங்களாக மக்களின் அரசியல் நனவு, வரலாற்றுரீதியாக முன்னிருந்திராத வகையில் வியப்பூட்டும் அளவுக்கும் அபிவிருத்திஅடைந்திருந்தது. 19ம் நூற்றாண்டு பற்றிய வரலாற்றுப் படிப்பினையை இந்தகட்டமைப்புக்கு வெளியே புரிந்து கொள்ள முடியாது. மார்க்சிசத்தின்அபிவிருத்தியும் நனவு பூர்வமான அரசியல் சக்தியாக மக்களின்வளர்ச்சியும்தான், 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 20ம் நூற்றாண்டின் முதல்10 ஆண்டுகளுக்கும் தனிச் சிறப்பான பண்புகளை வழங்கின.

எண்ணிப்பாருங்கள் பெப்ரவரிப் புரட்சி ஆண்டிலும் 1848இன் இரத்த யூலை நாட்களிலும்பிறந்த ஒரு பாரிஸ் தொழிலாளி, 1871ல் பாரிஸ் கம்யூன் போராட்டத்தில்இளைஞனாகப் பங்கெடுத்திருப்பார், அவருக்கு 41 வயது மட்டுமே ஆகியிருக்கும்போது 2ம் அகிலம் அமைக்கப்பட்டிருக்கும் அவரது 70தாவது பிறந்தநாளைஅடைவதற்கு முன்னரே 1917ல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைவெற்றி கொண்டதை பார்ப்பதற்கு அவர் இன்னும் உயிர் வாழ்ந்திருக்கமுடியும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதப்பட்ட காலப்பகுதியில் பிறந்தஒரு தொழிலாளியின் வாழ்க்கைக் காலம், அக்டோபர் புரட்சியை உள்ளடக்கியஅரசியல் அபிவிருத்தி காலப்பகுதியின் சுழற்சியைக் கொண்டிருந்தது.

முதலாளித்துவத்துக்கு எதிரான குரூரமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளஒரு புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் புறநிலையானதோற்றத்தினாலும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வெகுஜனஅமைப்புக்கள் உருவாக்கப்பட்டதாலும், தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப்பிரிவின் நனவு ஒழுங்கமைக்கப்பட்டது.

அந்த காலகட்டத்திற்கும், நாம் கடந்து செல்லும் காலகட்டத்திற்கும்இடையிலான உறவை ஒருவர் கருத்தில் கொள்கையில், இந்த வரலாற்றுஉள்ளடக்கத்தை நினைவில் கொள்ள வேண்டும். 1914 ஆகஸ்டின் நிகழ்ச்சிகளில்திகைப்படைந்த போதிலும், இந்த தொழிலாளர்கள் அவற்றை, சோசலிசத்தின்தோல்வி என்று அல்லாமல், சோசலிசத்தின் காட்டிக்கொடுப்பு என்றே புரிந்துகொண்டார்கள். 3 ஆண்டுகள் கழிந்து, போல்ஷிவிக் கட்சியால் அதிகாரம்வென்றெடுக்கப்பட்டதை, மார்க்சிசத்தைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு எதிராக,மார்க்சிசத்தினால் தொடுக்கப்பட்ட எதிர்த் தாக்குதலாக, வர்க்க நனவுள்ளபாட்டாளி வர்க்கத்தின் சிறந்த பிரதிநிதிகள் கண்டார்கள்.

ரஷ்யப் புரட்சி, ஐரோப்பா முழுமையும் புரட்சிகரப் போராட்டங்களின் அலையைஎழுப்பி விட்டது. எவ்வாறாயினும் அவை சமூக ஜனநாயகத்தின் துரோகத்தால்தோற்கடிக்கப்பட்டன. இத் தோல்விகள் சோவியத் அரசின் தனிமைப்படலைநீடிக்கச் செய்ததுடன், அதனுடைய சீரழிவுக்கும் வழிவகுத்தன.அதிகாரத்துவமானது அதிகாரத்தைப் பிடுங்கி, அக்டோபர் புரட்சியின் ஆழமானகீர்த்தியைப் பயன்படுத்தி, அது அடிப்படையாகக் கொண்டிருந்த ஒவ்வொருகொள்கையையும், காட்டிக் கொடுத்தது. இந்தக் கட்டத்தில் தொழிலாளவர்க்கத்துக்குள் ''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' என்ற வேலைத் திட்டத்தின்விளைபயன்களை மதிப்புரை செய்வது தேவையில்லாதது. குறைந்த பட்சம்சில பெரிய முதலாளித்துவ நாடுகளில் புரட்சி முன்னெடுக்கப்படாவிடில்,இறுதியில் சோவியத் யூனியன் அழிய நேரும் என்று நமது இயக்கம்எப்பொழுதும் வலியுறுத்தி வந்தது.

1920 நடுப்பகுதியிலிருந்து, சோசலிச சர்வதேசியம் பற்றிய முக்கிய விஷயம்மீதான தாக்குதலானது, தவிர்க்கமுடியாதபடி இதர அனைத்து விஷயங்களிலும்மோதுதல்களை தோற்றுவித்தது. அது சோசலிச பொருளாதாரஅபிவிருத்தியின் வளர்ச்சிப் போக்குடன் தொடர்பானவற்றையும்உள்ளடக்கியிருந்தது. சோசலிசத்தை நோக்கிய சோவியத் பொருளாதாரத்தின்அபிவிருத்தியானது, அதிகாரத்துவத்தின் தேசியவாத வேலைத்திட்டத்திலும்,தொழிலாளர்களது ஜனநாயகத்தின் சுவடுகளை நசுக்கும் அதனுடையசர்வாதிகாரத்திலும் எதிர் கொண்டுள்ளது என இடது எதிர்ப்பு வலியுறுத்தியது.அண்மைய நிகழ்ச்சிகள் ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகளின் வியப்பூட்டும்விஞ்ஞான முன் ஆய்வை உறுதிப்படுத்துகின்றன. 1931ல் ட்ரொட்ஸ்கியால்எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து ஒரு பந்தியை மேற்கோள் காட்ட என்னைஅனுமதியுங்கள்.

''இறுதி ஆய்வில், சோவியத் யூனியனின் அபிவிருத்திகளின்அனைத்து முரண்பாடுகளும் இந்த வகையில் தனிமைப்படுத்தப்பட்டதொழிலாளர் அரசுக்கும் அதனைச் சுற்றிய முதலாளித்துவசுற்றிவளைப்புக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு இட்டுச் செல்லும். தனிஒரு நாட்டுக்குள் தன்னிறைவு சோசலிசப் பொருளாதாரத்தை நிர்மாணிப்பதில்சாத்தியமற்றதானது, ஒவ்வொரு புதிய கட்டத்திலும் நீட்டப்பட்ட அளவிலும்மிக ஆழமாயும் சோசலிசக் கட்டுமானத்தின் அடிப்படை முரண்பாடுகளைபுதுப்பிக்கின்றது. இந்த அர்த்தத்தில், உலகின் எஞ்சிய பகுதிகளில் உள்ளமுதலாளித்துவ அரசு, இன்னொரு நீண்ட வரலாற்று காலகட்டத்திற்கு தன்னைநிலைநிறுத்திக் கொள்ளும் திறமையுடையதாக நிரூபிக்கப் படுமானால்,சோவியத் யூனியனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், தவிர்க்கமுடியாதபடிபேரழிவுகளை சந்திக்க நேரிடும்.''

இந்தக் கட்டுரையின் முடிவில், அவர் எழுதினார், ''சோவியத் யூனியனின்உள்ளும் புறமுமான முரண்பாடுகளில் இருந்து அது முழுமையாகவும்,இறுதியாகவும் விடுபடுவதை, உலகப் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிகரமானபுரட்சி அரங்கில்தான் காணமுடியும். அங்கே மட்டும்தான் காணமுடியும்''

சோவியத் அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்பு, ஐரோப்பாவில் தொழிலாளவர்க்கத்தின் வெற்றியைத் தடுத்ததுடன், சர்வதேச மார்க்சிச இயக்கத்தைஊனமடையச் செய்தது என்பதனை, சோவியத் யூனியனதும் ட்ரொட்ஸ்கிசஇயக்கத்தினதும் வரலாற்றை நன்கு கற்றவர்கள் அறிவார்கள். சோவியத்யூனியனின் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான தனிமைப்படலுக்குஸ்ராலினிசம் இடைவிடாது செயல்பட்டதால், அது இறுதியில் இன்றைய திடீர்பல்டிக்கு வழிவகுத்தது. சோவியத் யூனியனில் இருந்தது சோசலிசபொருளாதாரம் அல்ல. கிழக்கு ஐரோப்பாவில் போருக்கு பிந்தையஉடன்படிக்கைகள் மூலம் மேலும் ஆதாரம் வழங்கப்பட்டதே தவிர முடிவுக்குகொண்டுவரப்படாத -தேசிய தன்னிறைவு ஆட்சி என்ற கட்டமைப்புக்குள்-முன்னேறிய முதலாளித்துவ அரசுகளின் பொருளாதார செயல்பாடுகளைசோவியத் யூனியன் முன்னேறி கடந்து செல்வது என்பது ஒரு புறம்இருக்கட்டும். ஒரு போதும் அவற்றிற்கு சமமாக கூட வர முடியவில்லை.சர்வதேச வளங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் தன்னிறைவுஆட்சியின் வேலைத்திட்டம் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பியபொருளாதாரங்களை புறநிலையான எந்த உற்பத்தித் திறன்அளவீடுகளிலிருந்தும் பிரித்தது. அத்துடன் திட்டமிடல் முறைகளை குற்றமானவகையில் தகாது உபயோகிப்பதை மறைப்பதையும் அதனைத் தொடர்ந்துசெய்வதையும் சாத்தியமாக்கியது.

உற்பத்தி சக்திகளை அறிவுபூர்வமாகபயன்படுத்துவதற்கும், விஞ்ஞான ரீதியாக திட்டமிடுவதற்கும் அதிகாரத்துவம்பெரும் தடையாக, மற்றைய ஒவ்வொன்றிலும் இருப்பது போலவே இருந்தது.ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய கூறாகமாறியுள்ள அந்த வகையான கம்பியூட்டர், செய்தித் தொடர்புகள் மற்றும்தகவல் பரிமாற்றங்களில் அதன் பரந்த அளவிலான விளைபயன்களைகொண்டுள்ளதால், சமுதாயத்தின் மீதான அதிகாரத்துவத்தின் சர்வாதிகாரமேலாதிக்கத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக அதனை அதிகாரத்துவம் பார்த்தது.

சோவியத் யூனியனில் பொருளாதார முன்னெடுப்புக்கள், ஏற்கனவே தமதுவரலாற்று சுழற்சியின் முடிவை நெருங்கி விட்டிருந்த பழையதொழிற்துறைக்குள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. முன்னேறியமுதலாளித்துவ நாடுகள் நீண்ட பொருளாதார நெருக்கடிக்குள்சென்றுகொண்டிருந்த போதிலும், 1970களில் சோவியத் பொருளாதாரம்முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை விட பின்னுக்கு மேலும் மேலும்வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது.

1973ல் இருந்து முதலாளித்துவ அமைப்பை பாதித்த பொதுவான தேக்கமும்அநேக அதிர்ச்சிகளும் சோவியத் பொருளாதாரத்தின் நெருக்கடியைஆழப்படுத்தின. இது அரசியல் ரீதியாக சோவியத் யூனியன் இராணுவச்செலவை செய்யும்படி ஏகாதிபத்தியம் கொடுத்த பிரமாண்டமான அழுத்தம்,எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றவாறாக பல்வேறு விதமானவழிகளில் வெளிப்படுத்தப்பட்டது.

இறுதியாக சோவியத் யூனியனின் மீதுஏகாதிபத்தியத்தால் கடுமையாக திணிக்கப்பட்ட பொருளாதார, அரசியல்அழுத்தமானது தேசியவாத வழியில் சோசலிசத்திற்கான பாதை இருக்கமுடியாது என்ற அடிப்படை உண்மையையே கோடிட்டுக் காட்டியது. உலகப்பொருளாதாரத்தின் அழுத்தத்தினின்று தப்பிப்பதற்கு அப்பால், சோவியத்யூனியன் மேலும் மேலும் அதன் தாக்கத்திற்கு கீழ் வந்தது. போலியானசோவியத் அமைப்பின் தேசிய தன்னிறைவு ஆட்சியின் தோல்வி இன்னும்கூடுதலாகத் தெளிவாகத் தொடங்கியது.

ஸ்ராலினிச அமைப்பின் மீதான வரலாற்று நிந்தனை

சோவியத் யூனியனுள்ளும் ஐரோப்பாவினுள்ளும் இடம்பெற்ற நிகழ்ச்சிகள்,ஸ்ராலினிச அமைப்பின் மீதான வரலாற்று நிந்தனையாகும். ஆனால்ஸ்ராலினிசம் மட்டுமே தாக்குதலுக்கு ஆளாகியிருக்கவில்லை. குறிப்பிட்டமட்டத்திற்கு சோவியத் யூனியனுள்ளும் சர்வதேச ரீதியாகவும் தொழிலாளவர்க்கம், அதிகாரத்துவத்தின் அரசியலால் பொறிக்கிடங்குக்குள்வீழ்த்தப்பட்டுள்ளதால் அதிகாரத்துவத்தின் கிரிமினல் கொள்கைகளின்விளைபயன்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவ மீட்சியின் அதிர்ச்சி பல இலட்சக் கணக்கானதொழிலாளர்களால் உணரப்பட்டு வருகிறது. சோவியத் யூனியனில் சமூககலாச்சார வாழ்க்கையானது, அரை நூற்றாண்டாக காணாத மட்டத்திற்கு மிகவேகமாக குறைந்து வரும் உண்மையான அபாயம் நிலவுகிறது.

கலாச்சாரத்தில் மனம் கவரும் வெற்றிகள் வேகமாகவே அழியக்கூடும்.இலட்சக்கணக்கான சோவியத் இளைஞர்கள், சீர்குலைந்து வரும் கல்விமுறையுடன் மோதலில் உள்ளனர். அவர்களது பெற்றோர்களுக்கும் ஏன்பாட்டனாருக்கும் கூட கிடைத்த கல்வி வளங்கள், அவர்களுக்கு கிடைக்காமல்இருக்கும். பின்தங்கிய நாடுகளில் தொழிலாள வர்க்கத்திற்கு பழகிப்போனஅனைத்துப் பயங்கரங்களும் சோவியத் யூனியனுக்குள் தோன்றுகின்றன.பிரதான சோவியத் நகரங்கள் சுகாதாரமின்மையும் நம்பிக்கையின்மையும்ஆசியா, இலத்தீன் அமெரிக்கா உட்பட உலகில் எங்கும் சமமாகச்சொல்லமுடியாத அளவுக்குக் காணப்பட்டதை தான் கவனித்ததாக, Financial Timesல் இவ்வார இறுதியில் செய்தியாளர் ஒருவர் எழுதினார்.

முதலாளித்துவமீட்சியின் முழுமையான முடிவுகள் இன்னும் நிறைவேற்றப்படாதவேளையில், இது வெளியிடப்பட்டுள்ளது. அவை உற்பத்தி சக்திகளின்பல்வேறு எல்லைப் பரப்புகளின் ஊடாக படிப்படியாக அவற்றின் வழியில்வேலை செய்து கொண்டிருக்கின்றன. ஒருவர் கட்டாயம் கேட்கவேண்டும்உதாரணமாக போக்குவரத்துத் துறை செயல்படுவது நிற்கும்போது என்னநிகழும்? இதன் விளைபயன்கள் உண்மையிலேயே பயங்கரமானவைஎன்பதுடன் அவை, சோவியத் யூனியனில் முதலாளித்துவ மீட்சியானது,மக்களின் சமூகப் பொருளாதார நிலைகளில் பயங்கரமான வீழ்ச்சியைஏற்படுத்தும் என்ற நமது எச்சரிக்கைகளை ஊர்ஜிதம் செய்கின்றன.

அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சி முயற்சிகளிலிருந்து புரட்சியின்சமூக வெற்றியைப் பாதுகாக்க அரசியல் புரட்சி இன்றியமையாதது என நாம்வலியுறுத்தினோம். ஆனால் ஸ்ராலினிச ஆட்சியின் வீழ்ச்சி, சோசலிசப்புரட்சியை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமானஅரசியல் அணிதிரளல் மூலம் அல்லாமல், அதிகாரத்துவத்தின் சதியினாலேநிறைவேறியது என்பதை நாம் கட்டாயம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.தொழிலாள வர்க்கம் தோல்வியினால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதைச்சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த தோல்வியை ஆய்வு செய்வதுஅவசியமானது.

1991, டிசம்பர் 8ல் மின்ஸ்கில் நடந்ததும், உண்மையில் சர்வதேச தொழிலாளவர்க்க இயக்கத்திற்கு நடந்து வந்ததும், அனைத்துத் தொழிலாள வர்க்கஇயக்கங்களின் நீடித்த சீரழிவினதும், சிதைவினதும் உச்ச நிலையாகும்.

இத் தோல்வியானது, பல பத்தாண்டுகளாக புரட்சிகர தொழிலாளர் இயக்கம்காட்டிக் கொடுக்கப்பட்டதன், வழிமாறியதன் விளைபொருளாகும். சோவியத்யூனியனிலும் உலகம் முழுவதிலும், தொழிலாள வர்க்கம் அதனுடைய சொந்தஅமைப்புக்களின் ஆழமான சிதைவு, சீரழிவினது விளைபயன்களைஎதிர்கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது. போருக்குப் பிந்தைய காலம், வர்க்கப்போராட்டம் அதிகாரத்துவ தில்லுமுல்லுகள் மற்றும் நசுக்குதலுக்கு ஆளானபண்பினைக் கொண்டிருந்தது. இந்த முழுமையான காலப்பகுதியும், தொழிலாளவர்க்கத்தின் சுதந்திரமான புரட்சிகர முன்முயற்சிகளுக்கு பிரதியீடாகஅனைத்து சக்திவாய்ந்த எந்திரங்களை அவை ஸ்ராலினிசமாகவோ அல்லதுசமூகஜனநாயகமாகவோ இருந்தாலும் சரி பொதுவாகவே பிற்போக்குஅரசியல் தன்மை கொண்ட காலப்பகுதியாக இருந்தது.

இங்கேதான் நான் முன்னர் சொன்ன விஷயத்திற்கு வருகிறேன். அது1847லிருந்து 1917 பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த தொழிலாளர்களின்வாழ்க்கை பற்றியது, அந்தக் காலகட்டத்தை நாம் புகழ்ந்தேத்தவோ அல்லதுஅதன் பல முரண்பாடுகளை மூடிமறைக்கவோ கூடாது. ஆனால் சாராம்சத்தில் அது இறுதியாக ரஷ்யப் புரட்சியில் தனது உச்ச அளவு வெளிப்பாட்டைக் கண்டுகொண்ட மக்களின் புரட்சிகர நனவின் ஆழமான வளர்ச்சியின் பண்பினைக் கொண்டிருந்தது. இன்னொரு விதத்தில் போருக்கு பிந்திய காலகட்டத்தின் அரசியலானது, தொழிலாள வர்க்கத்தின் மீது அதிகாரத்துவங்களின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

போருக்குப் பிந்தைய பெரும்பாலான காலகட்டத்தில் இந்த அதிகாரத்துவங்கள் தொழிலாள வர்க்க இயக்கத்துள் நியாயமான, ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் முற்போக்கான பாத்திரத்தையும் கூட வகித்ததாக தோன்றியிருக்கலாம். நிச்சயமாக பப்லோவாதம் அந்தக் கருத்தைத்தான் வலியுறுத்த முயற்சித்தது. தொழிற்சங்கங்கள் அதிக பலம் கொண்டவையாக வளர்ந்தன. ஸ்ராலினிஸ்டாகவோ அல்லது சமூக ஜனநாயகவாதியாகவோ இருந்தாலும் சரி தம்மை தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உரிமை கோரிக்கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசியல் மேல் கட்டுமானத்தில் நிலைநிறுத்தப்பட்ட பகுதிகளாக அமைந்தன.

வாழ்க்கைத்தரங்கள் உயர்ந்தன. சீர்திருத்தங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கையின் அபிவிருத்தி மற்றும் அதனுடைய புரட்சிகர நனவின் நிலைப்பாட்டிலிருந்து கருதுகையில், அந்தக் காலகட்டம் தேக்கம், சீரழிவு, சிதைவின் காலகட்டமாகும். பொருளாதார விரிவாக்க காலங்களில் வாழ்க்கைத் தரங்களை உயர்த்த பெரும் போராட்டங்கள் தேவைப்படாதிருந்தபோது, சீரழிவின் ஆழமோ அல்லது அதன் வரலாற்று விளைபயன்களோ முழுமையாகத் தெளிவாகவில்லை. ஆனால் உலக நெருக்கடியின் அபிவிருத்தி இந்த நெருக்கடியை மேல்மட்டத்திற்கு கொண்டுவந்தது. உலகம் முழுமையும் அதிகாரத்துவ மயப்படுத்தப்பட்ட அமைப்புக்களின் பிற்போக்கு பண்பு அம்பலமானது. அவற்றின் கையாலாகாத் தன்மையும் அம்பலமானது என்பதை குறிப்பிடத் தேவையில்லை.

மண்டேல் பிரமைகளை விதைக்கிறார்.

அனைத்துலகக் குழுவின் ஆய்வினைத் தாக்குபவர்கள் சமீபத்திய நிகழ்ச்சிகளை பரந்த வரலாற்று உலகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் முயற்சியில்லாதவர்கள் என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. ஏர்னெஸ்ட் மண்டேல், ''மிக்கையில் கோர்பச்சேவின் தடுக்கமுடியாத வீழ்ச்சி'', என்ற கட்டுரையை இப்போது எழுதியிருக்கிறார். கோர்பச்சேவ் இருபதாம் நூற்றாண்டின் மிக அறிவாற்றல் படைத்த அரசியல்வாதி என்று நம்மிடம் அண்மையில் சொன்னவரிடமிருந்து இது வந்துள்ளது. சிறப்பாக இந்தக் கட்டுரை சோவியத், ரஷ்ய தொழிலாளர்களை துன்பத்துக்கு ஆளாக்கிய தோல்வியின் விளைபயன்களை மூடிமறைப்பதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. கோர்பச்சேவின் அரசியல், எதிர்ப்புரட்சிகர அரசியல் என்பதை மண்டேல் இன்றுவரை மறுத்து வருகின்றார். அவர் இப்பொழுது, ''கோர்பச்சேவ் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பது ஒரு பிரமையாகும்'' என்கிறார். ஆனால் திருவாளர் மண்டேலின் அரசியல், இந்தப் பிரமையைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

அவர் மேலும் எழுதுகின்றார் ''சோவியத் யூனியனுள் கோர்பச்சேவின் கீழ் ஆழமான மற்றும் சாதகமான மாற்றம் ஏற்பட்டது சம்பந்தமாக ஒருவர் கண்களை மூடிக்கொண்டால், அது ஒரு தவறாக இருக்கும். இந்த மாற்றங்கள் சாராம்சத்தில் கிளாஸ்நோஸ்ட்டில் சுருக்கி கூறப்பட்டுள்ளது. அல்லது நீங்கள் விரும்பியவாறு கூறினால், ஜனநாயக சுதந்திரங்களின் கணிசமான அளவு விரிவுபடுத்தலை நடைமுறையில் சோவியத் மக்கள் அனுபவித்தனர்.''
''சோவியத் யூனியனில் கோர்பச்சேவின் கீழ் சாதகமான மாற்றங்கள் நிகழ்ந்தது'' என்று மண்டேல் பேசும் பொழுது, ஒருவர் உண்மையில் பழைய சொல்வாடையை நினைவு கூருவார், ''ஆப்பரேசன் வெற்றிதான் ஆனால் ஆள்தான் காலி'' ஆம், பப்லோயிசத்தின் பிற்போக்கு அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, கிளாஸ்நோஸ்த் அபாரமான வெற்றிதான். மண்டேல் பாராட்டும் ஜனநாயக வளர்ச்சிப் போக்குகள் என்பது, ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியின் உச்சநிலைக்கான சமூகச் சூழலை அவர்கள் உண்டு பண்ணுவதற்காக, ஆளும் பிரிவுகளுக்குள்ளேயே ஏற்படும் தகராறுகளை பகிரங்கமாய் வெளிப்படுத்தலன்றி வேறல்ல. இந்த வளர்ச்சிப் போக்குகளுக்கு மண்டேல் துணை நின்றார். அவர் அதற்கு துணை செய்ததில் சிறிய பங்கு வகிக்கவில்லை. சில நாடுகளில், மற்றவற்றில் செய்வதைவிட அதிகம் செய்தார். செக்கோஸ்லாவோக்கியா, ஜேர்மனி அல்லது போலந்தாக இருந்தாலும் சரி அங்கே வலதுசாரிகளுக்கு, அவரது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு அரசியல் முகமூடியை வழங்கினார். இவ்வாறு செய்ததன் மூலம் அவர் இறுதியாக சோவியத் யூனியன் நொறுங்க வழிவகுத்த அரசியல் சூழ்நிலைகளுக்கே பங்களிப்புச் செய்தார். மண்டேல் கோர்பச்சேவுக்கு ஆதரவளித்தார். மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அவர் உருவாக்கிய அரசியல் நபர் தாரிக் அலி எழுதிய புத்தகம் வேறெவருக்கும் அல்ல பொறிஸ் ஜெல்ட்சினுக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டது.

இப்பொழுது ஷீலா டோரன்சின் ''நியூஸ்லைனில்'' மார்டின் பூத் எழுதிய கட்டுரையின் பக்கம் திரும்புவோம். அது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சோவியத் யூனியன் இல்லாமல் போய்விட்டது என்று நாம் சொன்னதாக ஆத்திரப்படுகிறார். இது கடந்த 4 மாத நிகழ்ச்சிகள் ஏதோ அனைத்துலகக் குழுவினால் இட்டுக் கட்டி கூறப்பட்டதைப் போன்று இருக்கின்றது. பகுத்தறிவாளர்கள் இதை எவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்வார்கள் என்பதை ஆச்சரியப்படுமளவுக்கு, நீயூஸ் லைனால் பத்திரிகையால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடு அபத்தமானதாக இருக்கின்றது. டோரன்சையும், பூந்தையும் பொறுத்தமட்டில் அதிகமாக ஒன்றும் நிகழவில்லை. அவர்கள் சோவியத் யூனியனின் சட்டரீதியான கலைப்பைச் சுற்றிய எந்த நடவடிக்கைகளையும் கவனத்தில் கொண்ட அளவில், அதனை தொழிலாள வர்க்கத்தின் இடைவிடாத புரட்சிகர தாக்குதலின் சமீபத்திய வெளிப்பாடுகள் என்று புகழாரம் செய்தனர். இந்த தாக்குதல் அதன் 47வது வருடத்தை அடைந்துள்ளது என்று டோரன்ஸ் கூறுகிறார். உண்மையில் ஹீலி, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அனுபவங்களை எந்தவிதமான ஆய்வு செய்வதன் அவசியத்தையும் தவிர்க்க, ''தோற்கடிக்கப்படாத தொழிலாள வர்க்கம்'' என்ற அதி அற்புத ஸ்தூலமற்ற அருவமான சொல்லை உருவாக்கினார். இந்தோனேசியாவில் இரத்தக்குவியல், சிலியில் மக்கள் மீது ஒடுக்குமுறை, இலங்கையில் இன அழிப்பு, சோவியத் யூனியனில் முதலாளித்துவ மீட்சி, இவ்வாறாக என்னதான் நிகழ்ந்திருந்தாலும்கூட -இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படாத தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தாக்குதல் என்றும், அல்லது அதே சர்வவியாபகமான, உன்னதமான வரலாற்று சாராம்சத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும்- தோற்கடிக்கப்படாத தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தாக்குதல் என்றும் எடுக்கப்பட வேண்டும்.

நாம் முன்வைத்த நிலைப்பாடுகளை பூந்தும் டோரன்சும், புரூனோ ரிசியின் நிலைப்பாட்டுடன் ஒப்பீடு செய்கின்றனர். சோவியத் யூனியனுக்குள் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டுவிட்டது. சோவியத் யூனியன் இனியும் தொழிலாளர் அரசாக இருக்க முடியாது என்று கோரியவர்களுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கி செய்த விவாதங்களின் உள்ளடக்கத்தை அவர்கள் ஒரு போதுமே புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் அவர்களது கட்டுரையை வாசித்தால், ட்ரொட்ஸ்கி எழுப்பிய அடிப்படைப் பிரச்சனையை -சோவியத் அரசால் என்ன சொத்து உறவுகள் காப்பாற்றப்படுகின்றன?- என்பதை ஒதுக்கித் தள்ளுவதைக் காணலாம். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ''எண்ணங்கள்'' ''நோக்கங்களை'' நாம் அடிப்படையாகக் கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நமது பதப்பிரயோகம் முழுமையாக ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களையே அடிப்படையாய் கொண்டுள்ளது. ஆரம்ப காலத்தில், அதிகாரத்துவம் அரச சொத்துடமையைக் காப்பாற்றும்படி ''நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது'' என்று நாம் கூறியபோது, அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொத்துடமை வடிவங்களுக்கும் அதிகாரத்துவத்தின் சட ரீதியான நலன்களுக்கும் இடையிலான புறநிலை உறவைப்பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருந்தோம்.

சிடுமூஞ்சித்தனமான, மடைத்தனமான வழியில் நியூஸ் லைன் பத்திரிகை, அரசின் கைகளில் எஞ்சியிருக்கும் சொத்துடமை, வீதாசாரத்தைக் கெட்டியாகப் பிடித்த வண்ணம், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனிச்சொத்துடமை சம்பந்தமான அரசியல் நோக்கின் அடிப்படைப் பிரச்சனையினது கவனத்தைத் திசைதிருப்புவதற்காக முயற்சிக்கின்றது. டோரன்சின் பகுத்தறிவுப்படி, போருக்குப் பிந்தைய பெரும்பாலான காலப்பகுதியில், இங்கிலாந்தில் பெரும் தொழிற்துறைகள் அரசின் கையில் இருந்ததால், அது ஒரு தொழிலாளர் அரசாக இருந்தது என்று ஒருவர் விவாதிக்க முடியும்.

ஆனால் எம்மை பொறுத்த அளவில், என்ன விதாச்சார சொத்துக்கள் அரசுடமையானது அற்றது என்று ஒப்பிடும் ஒரு பிரச்சனையாக ஒரு போதுமே இருக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை சரியாகச் சொன்னால், அது அரசின் வரலாற்றுத் தோற்றத்திற்கும் அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட சொத்து வடிவங்களை அழிப்பதற்காகவே சுதந்திர அரசுகளின் கூட்டமைப்பு (CIS) ஏற்படுத்தப்பட்டது. ஆரம்ப வரலாற்றுக்கட்டத்தில் ஸ்ராலினிச அரசாங்கம் அரச சொத்துடமையைப் பாதுகாத்தது. அதற்கு காரணம், அது தனிப்பட்ட ரீதியில் சோசலிசத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதனால் அல்ல. மாறாக ஆளும் தட்டின் சலுகைகள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொத்து வடிவங்களில் கட்டுண்டு கிடந்தமையால்தான். ஆனால் முதலாளித்துவ மீட்சியின் நலன்களுடன் கட்டுண்டு கிடக்கும் சமூகத் தட்டினால் உருவாக்கப்பட்ட அரசே, CIS ஆகும்.

ஜனவரி அறிக்கையில் நாம் கூறியவாறு, இந்த தனிநபர்களின் நிலைப்பாட்டின்படி 51% சொத்துடமை தனியார்மயப்படுத்தப்படவில்லை எனில் ஒருவர் CIS ஐ தொழிலாளர் அரசு என இன்னும் கருதமுடியும். ஒருவர் இது அவர்களது கண்ணோட்டத்தினை மிகைப்படுத்திக் கூறுவதாக நினைத்திருக்க முடியும். ஆனால் இதற்கிடையில் அவர்கள் பதிலளித்திருக்கிறார்கள், ''அதுதான் சரியான விடயம். ஆனால் பொருளாதாரம் 51% வரை தனியார்மயப்படுத்தும் மட்டத்தை அடைவதற்குத் தேவையானது என்ன என்பதே முழுமையான விஷயமாகும். இவ்வாறு CIS இன் வர்க்கப் பண்பு பற்றிய பிரச்சனை. எவ்வளவு சதவீதம் சொத்து அரசுடமையில் உள்ளது, எவ்வளவு சதவீதம் தனியாருக்கு உடமையானது என்ற ரீதியில் தீர்மானிக்கும் அளவியல் ரீதியான பிரச்சனையாகவும், வெறும் தோற்றம் பற்றிய பிரச்சனையாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எழுப்பிய மிகமுக்கியமான விவாதம் இந்த பந்தியில் தரப்பட்டுள்ளது. வேர்க்கஸ் லீக்கின் முன்னோக்குகளின் தீர்மானங்களில் நாம் குறிப்பிட்டோம், ''ஸ்ராலினிச ஆட்சிகளின் தகர்வானது, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர நனவின் அபிவிருத்தியைக் காட்டிலும் அதிக வேகத்தில் நடந்துள்ளது'' என்று. இதனை மேற்கோள் காட்டி டோரன்சும், பூந்தும் கூப்பாடு போட்டார்கள், ''என்ன கருத்துவாத பிதற்றல் தனது ஒடுக்குமுறையாளரை இந்த அம்சத்தில் ஏகாதிபத்தியத்தின் ஸ்ராலினிச ஏஜண்டுகளை தூக்கி வீசும் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான போராட்டத்துக்கு வெளியிலும் புரட்சிக் கட்சியின் நனவுபூர்வமான தலையீடு இல்லாமல் எப்படி புரட்சிகர நனவு அபிவிருத்தி அடையமுடியும்?''

புரட்சிக் கட்சி பற்றி அவர்கள் குறிப்பிடுவது, பின்யோசனையின் பின்னர் சேர்க்கப்பட்ட ஒன்றாகும். தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான இயக்கத்தில் இருந்து தோன்றுவதுதான் புரட்சிகர நனவு என்பதே அவர்களது நிலைப்பாட்டின் மையமாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தினுள் ''உண்மையான போராட்டத்தைத் தவிர வேறு எவ்வழியிலும் அங்கு புரட்சிகர அரசியல் நனவுக்கான அபிவிருத்தி கிடையாது'' ஆனால் இந்த அம்சம்தான் முக்கியமானது என்று நாம் வலியுறுத்துகின்றோம். அக்டோபர் புரட்சியை சாத்தியமாக்கிய அரசியல் நனவின் மட்டம் 1917 பெப்ரவரிக்கும், அக்டோபருக்கும் இடையில் மட்டும் உருவாக்கப்படவில்லை. அது கடந்த 70 வருட காலத்தில் ஐரோப்பிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சிசத்திற்கான நீண்ட வரலாற்றுப் போராட்டத்தின் விளைவாலாகும். 1917 வெற்றியின் மிச்ச மீதங்களாக எவை இருந்தபோதிலும், அவற்றைப் பாதுகாக்க சோவியத் தொழிலாளர்கள் ஏன் கிளர்ந்து எழவில்லை என ஒருவர் புரிந்து கொள்ள விரும்பினால், கடந்த 70 வருடகால அரசியல் அபிவிருத்தியை, 1917க்கு முந்திய 70 வருடகால அரசியல் அபிவிருத்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ரஷ்ய புரட்சிக் காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் நோக்கு நிலை, பெரும்பாலும் சந்தர்ப்பவாதத்திற்கும், ஏனைய முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ சிந்தனைப் போக்கிற்கும் எதிரான மார்க்சிசத்திற்கான போராட்டத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக, பல தசாப்தங்களை உள்ளடக்கிய நீண்ட போராட்டம், ரஷ்ய, ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் ஆழ்ந்த புரட்சிகர மற்றும் சோசலிச கலாச்சாரத்தை உண்டுபண்ணியது.

ஆனால் கடந்த 70 வருடங்கள் போல்ஷிவிக் கட்சிக்குள் அரசியல் நெருக்கடியின் முதல் சமிக்ஞையுடனும் அதிகாரத்துவத்தின் விரைவான வளர்ச்சியுடனும் ''ஒரே சமயத்தில் ஏற்பட்ட வெகுஜனங்களின் அரசியல் நனவின்மீது தொடுக்கப்பட்ட தொடர்ச்சியான தாக்குதலால் பண்பிட்டுக் காட்டப்படுகிறது. மார்க்சிசத்தின் மகத்தான வெற்றியை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் நனவின் அபிவிருத்தியை, ஒடுக்கப்படும் சுரண்டப்படும் மக்கள் நனவுபூர்வமான வரலாற்று சக்தியாக மாற்றம் அடைந்ததை ஸ்ராலினிசம் அழிக்கக் கிளம்பியது. ஆனால் டோரன்சும், பூந்தும் மார்க்சிசத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதென்பது ஒருபுறமிருக்கட்டும், அதன் சாதனையை அறிந்திருக்கவில்லை. அதுதான் அரசியல் சம்பந்தமாக அவர்களின் முற்றுமுழுதான குட்டிமுதலாளித்துவ மற்றும் சந்தர்ப்பவாத அணுகுமுறையின் உண்மையான அடித்தளமாகும்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீதான ஸ்ராலினிசத்தின் பாதிப்பை ஒருவர் பிரதிபலிக்கும் பொழுதுதான், ''தொழிலாள வர்க்கத்தின் தோற்கடிக்கப்படாத இயல்பு'' பற்றிய தத்துவத்தின் ஆழ்ந்த மார்க்சிச விரோதப் பண்பினை ஒருவர் சரியாக மதிப்பிட முடியும். உண்மையில் அந்த மிகப்பெரிய தோல்வி என்னவெனில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் காரியாளர்களை மொத்தமாக அழித்ததும், அதன் அரசியல் நனவின் மட்டத்தை மோசமான கீழ்நிலைக்கு கொண்டு வந்ததுமாகும்.

சமூக ஜனநாயகத்தின் மற்றும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களின் விளைபயன்களை அறிந்துகொள்வதன் மூலம் மட்டுமே அவர்கள் அதனை வெல்லமுடியும். தொழிலாள வர்க்கம் ஒரு தோல்வியினால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்திக் கொள்ளல், அங்கு சோசலிசப் புரட்சிக்கான முன்னேற்றம் கிடையாது என அர்த்தப்படுத்தாது. ஜனவரியில் நாம் வலியுறுத்திக் கூறியவாறு, சோவியத் யூனியனை சட்டரீதியாக இல்லாதொழிப்பதற்கும், சோவியத் தொழிலாள வர்க்கம் தனது சக்தியை அணிதிரட்டி எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையை நசுக்குவதற்கும் இடையில் பெரிதளவு வேறுபாடு காணப்படுகின்றது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், சோவியத் தொழிலாளர்களை பாதிப்புக்குள்ளாக்கிய பின்னடைவானது, முதலாளித்துவ மீட்சியின் வெற்றி தவிர்க்கமுடியாதது என அர்த்தப்படுத்தவில்லை. சோவியத் யூனியனுக்குள் மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச ரீதியில் நிலமை மிகவும் ஸ்திரமற்றிருக்கிறது. அதனால் இந்த வகையான நியாயப்படுத்த முடியாத, அபத்த முடிவுகளுக்கு வரமுடியாது. சோவியத் யூனியனின் உடைவு தொழிலாள வர்க்கத்திற்கு மிகப்பெரும் அபாயங்களை முன்வைத்துள்ளது.

ஆனால் அது, முதலாளித்துவம் எப்படியோ தனது சொந்த முரண்பாடுகளை வெற்றி கண்டுவிட்டது அல்லது புதிய உள் சமநிலையை ஏற்படுத்தியுள்ளது என்று அர்த்தப்படுத்தவில்லை. முன்னாள் சோவியத் யூனியனில் வெற்றிகரமாக முதலாளித்துவ ஆட்சி நிலைநாட்டப்படுமாயின், அது நிச்சயமாக உலக முதலாளித்துவத்தைப் பலப்படுத்தும் குறிப்பிடத்தக்க புதிய சேமிப்புக்களையும் வழங்கலாம். ஆனால் முன்கணிக்கக்கூடிய எதிர்காலத்துக்குள் அது அனேகமாக நிறைவேற்றப்படமாட்டாது. அதேவிதமாக சோவியத் யூனியனின் உடைவும், அதன் விளைவாக நிகழும் நெருக்கடிகளும் சமூக எழுச்சிகளும் உலக முதலாளித்துவத்தின் பொதுச்சமநிலையின்மைக்கு பங்களிப்புச் செய்யும். இது முறைப்படி கிழக்கைரோப்பா முழுமையும் அதன் அபிவிருத்திப் போக்கில் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தும். முன்னாள் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் மேலாதிக்கத்திற்கான போராட்டமானது, ஏகாதிபத்திய சக்திகளுள் முன்னைக் காட்டிலும் அதிக மோதலை உண்டு பண்ணும். நாம் ஏற்றுக்கொண்ட அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகளின் தீர்மானத்திலிருந்து வளர்த்தெடுத்த ஆய்வு மற்றும் பேர்லின் மாநாட்டுக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையையே தொடர்ந்தும் நாம் அடித்தளமாகக் கொண்டுள்ளோம். அவற்றில் உலக முதலாளித்துவத்தின் அரசியல் நிலமையின்மையும், உற்பத்தி சக்திகளின் பூகோள அபிவிருத்திக்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலான மோதுதல் பற்றிய பொது அம்சங்களையும் நாம் வலியுறுத்தியிருந்தோம். இந்த முன்னோக்கு தவறு என்றோ, அல்லது அது சோவியத் யூனியனில் நிகழ்ச்சிப் போக்குகளால் மேலாளுமை செய்யப்பட்டு விட்டது என்றோ நம்பச் செய்ய ஒன்றுமில்லை. இந்த நிகழ்ச்சிகளுள் எமது முன்னோக்கின் உறுதிப்பாட்டைத்தான் கண்டோம்.

உலக அளவிலான அபிவிருத்திகள் எதையாவது சுட்டிக் காட்டுமாயின், அது 1991 ஏப்ரலில் பேர்லின் மாநாட்டு அறிக்கை எழுதப்பட்டதில் இருந்து ஏகாதிபத்திய நெருக்கடி, நிச்சயமாக பண்பியல் ரீதியாக அபிவிருத்தி அடைந்துள்ளதை பற்றியதையே ஆகும். இன்றைய உலக அரசியல், அதிக அளவில் பைத்தியக்கார விடுதியின் உட்புறத்தை ஒத்திருக்கின்றது. தேசிய அரசு அமைப்புமுறையின் உடைவைப்பற்றி அடிக்கடி பேசியும், எழுதியும் வருகின்றோம். அதனுடன் 1945 இலிருந்தும் வரும் முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புக்களைப் பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்றோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நன்கு ஏற்படுத்தப்பட்ட முதலாளித்துவக் கட்டமைப்பான கனடாவின் உடைந்து நொருங்கும் தன்மையைக்கூட நாம் கவனித்தோம். கடந்த ஆண்டு அறிக்கையில் பால்கனில் வரவிருக்கும் உடைவைப் பற்றியும் பேசினோம். இப்பொழுது, இக்கூட்டத்தில், பிரிட்டனின் இறுதி உடைவுக்குச் சாத்தியமான அரசியலை, ஆய்வுக்கான தலைப்பாக நாம் எடுத்துக் கொள்ளலாம். சுதந்திர ஸ்கொட்லாந்து பிரச்சனை மற்றும் வேல்ஸ் கூட பழைய எல்லாவித பொருளாதார உறவுகளின் உடைவின் மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது.

பழைய தேசிய அரசு முறையின் உடைவு

இந்த பொருளாதார அபிவிருத்தியின் மட்டத்தில் உற்பத்தியின் பூகோள ஒருங்கிணைப்புடன் இத்தகைய விடுபடத் துடிக்கும் குட்டி அரசுகள் ஏதும் தொடர்ந்து உயிர் வாழும் என நம்புவது அபத்தமானதாகும். அவை பூகோள ரீதியிலான பொருளாதார சக்திகளின் அழுத்தத்தின் கீழ் பழைய தேசிய அரசுமுறை உடைந்து நொருங்குவதையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. திட்டவட்டமாக, உற்பத்தி சக்திகளின் பூகோள ரீதியான ஒருங்கிணைப்பே தேசியவெறி வெடிப்பைத் தூண்டிவிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குட்டி முதலாளித்துவ அரசியல்வாதிகள், எல்லா சர்வதேசப் போட்டிக்கும் எதிராக தங்களது கிழடு தட்டிப்போன தேசங்களைப் பாதுகாக்கப் போவதாக வலியுறுத்துவதன் மூலம், தங்கள் வயிற்றுப் பிழைப்பை செய்து கொண்டிருக்கிறார்கள். இது என்னவெனில், உற்பத்தி சக்திகளின் உலக ரீதியான அபிவிருத்தியினால் உண்டு பண்ணப்பட்ட பிரச்சனைகளுக்கு, முதலாளித்துவத்தின் குழப்பமான எதிர்விளைவைத் தவிர வேறொன்றுமல்ல. முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி சக்திகளின் உலக அளவிலான விரிவாக்கத்தின் முற்போக்கான அரசியல் வெளிப்பாடாக, தேசிய இயக்கங்கள் இருந்த 19ம் நூற்றாண்டு காலத்தைப் போன்று அல்லாமல், தற்போதைய விடுபடத் துடிக்கும் தேசிய இயக்கங்கள் மற்றும் தேசிய அரசுகள், உலகப் பொருளாதாரத்தின் சக்திகளை ஒருங்கிசைவான முறையில் அணிதிரட்டுவதற்கு முதலாளித்துவத்தின் இயலாத்தன்மையின் அரசியல் குழப்பத்தின் எதிர்வினையைத்தான் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

இந்த நெருக்கடி முதலாளித்துவ சக்திகளுக்கிடையிலான உறவினுள்ளும் முதலாளித்துவ அரசுகளுக்குள்ளேயும் கண்டு கொள்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் ஸ்திரமின்மை, உலக முதலாளித்துவ அமைப்பின் பொதுவான ஆரோக்கியம் பற்றிய விஷயத்தில் பெரும்பிரதி விளைவுகளை கொண்டுள்ளது. வெளிப்படையாகவே பொருளாதார வளங்களிலும் வீழ்ச்சி இருந்தபோதிலும் தனது பூகோள மேலாதிக்க நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா செய்யும் அழிவு முயற்சிதான் இன்றைய உலக அரசியலில் மிகவும் வெடிக்கக்கூடிய காரணியாகும். 1991மார்ச்சில் நமது கடைசி பிளீனக் கூட்டத்தில், வளைகுடாப் போருக்குப் பின் அமெரிக்காவில் சுபீட்ச மனோநிலை இருந்த போதிலும் புஷ் நிர்வாகம் ஆற்றொணா நெருக்கடியில் இருந்தது என்பதை விளங்கினோம். உண்மையில் நெருக்கடியை முன்கூட்டியே எதிர்பார்த்து செய்யப்பட்ட முயற்சியான போரும் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, ஆயுதங்களின் பலாத்காரத்தின் மூலம் தூக்கி நிறுத்தும் முயற்சியாகவும் இருந்தது. இப்பொழுது போருக்குப் பின்னர் ஒரு வருடத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தின் கீழ் புஷ் நிர்வாகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. நேற்றைக்கு முந்தைய நாள் ஹெரால்ட- டிரிபியூன் பத்திரிகை பூகோள ஆதிக்க நிலையை சவால் செய்யும் எவரையும் தடுப்பதற்கான திட்டத்தினை பென்டகன் மூலோபாய வல்லுனர்கள், ''புதிய உலக ஒழுங்கில்'' ஒரேயொரு ''வல்லரசுக்கே'' இடமுண்டு என்று வெட்கங்கெட்ட முறையில் பிரகடனம் செய்கின்றனர். இந்த வகையில் யுத்தக் கோடுகள் ஏற்கனவே வரையப்பட்டுவிட்டன.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள அசியல் ஸ்திரமின்மை, அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் பிரதிபலித்தன. அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் உலகப் பிரச்சனைகளிலிருந்து பிரிட்டனை விடுவிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். பிரிட்டனில் தற்போது அழைப்பு விடப்பட்டிருக்கும் தேர்தல், பிரிட்டனுள் சமூக உறவுகளை நிலைபெறச் செய்ய ஒன்றும் செய்யப் போவதில்லை. பிரான்சில் மித்திரோன் அரசு செல்வாக்கு இழந்துவிட்டது, ஜப்பானிலும் ஜேர்மனியிலும் பொருளாதார மந்தம் தொடங்கிவிட்டது. CIS (சுதந்திர நாடுகளின் பொதுநல அமைப்பு) ஏற்படுத்தப்பட்டபோது ஆட்சியிலிருந்த பெரும்பாலான முதலாளித்துவ தலைவர்கள், நீண்ட காலத்திற்கு பதவியில் இருக்க மாட்டார்கள் என்பதைக் காண்பது அதிகரித்து வருகிறது. சோவியத் யூனியனின் உடைவு, உலக முதலாளித்துவம் புதுவாழ்க்கை பெறும் குத்தகைக்கான எவ்வித தானியங்கி வழியையும் வழங்கவில்லை. எவ்வாறாயினும், நான்காம் அகிலத்தின் ஆற்றல் உலக நெருக்கடியால் எழுப்பப்பட்ட வாய்ப்புக்களை கிரகித்து நாம் கடந்து வந்த முழு வரலாற்றுக் காலகட்டத்தின் படிப்பினைகளைத் தொகுத்து புரிந்து கொள்வதற்கானதாக இருக்கும். திட்டவட்டமாக அந்த அடிப்படையில் தற்போதைய சூழ்நிலையில் நாம் எதிர்கொள்ளும் பணிகளை விளக்கக் கூடியதாக இருக்கும். தொழிலாள வர்க்கத்தினுள் மகத்தான மார்க்சிசத்தின் அரசியல் கலாச்சாரத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான பொறுப்பு, அது அனைத்துலகக் குழுவினால் தலைமை தாங்கப்படும் நான்காம் அகிலத்தின் மேல் விழுகிறது. அதுவே உண்மையான புரட்சிகர தொழிலாளர் இயக்கத்தை கட்டி அமைப்பதற்கான ஒரேயொரு அடித்தளமாகும்.

நீண்ட அரசியல் போராட்டம்

இந்த அபிவிருத்திகளின் வேகத்தை ஒருவராலும் துல்லியமாக முன்கணிக்க முடியாது. ஆனால் ஒரு நீண்ட அரசியல் போராட்டத்திற்கு நமது இயக்கம் தயார் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பு போராட்டங்களை வழிபடும் போக்கினை ஹீலி வளர்த்தெடுத்தார். புரட்சிகரக் கட்சியின் அபிவிருத்திக்கும் வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான அபிவிருத்திக்கும் இடையிலான உண்மையான உறவைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை. வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான அபிவிருத்தியை தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான பொருளாதாரப் போராட்டங்களின் விளைவாக பார்ப்பது பெரும் தவறாகும். அல்லது இந்தப் பொருளாதாரப் போராட்டங்களில் கட்சியின் தேவையான தலையீடுகளின் உடனடி மற்றும் நேரடி விளைவாகக் கூட பார்ப்பது பெரும் தவறாகும். அல்லது தொழிலாள வர்க்கத்தின் பொருளாதாரப் போராட்டங்களில் கட்சி கட்டாயம் தலையீடு செய்ய வேண்டும். ஆனால் அது ஒன்றே பரந்த புரட்சிகர இயக்கத்தை உருவாக்காது. ஆழமாகிச் செல்லும் வர்க்கப் போராட்டம் புரட்சிகர இயக்கத்தின் பொதுவான அடித்தளத்தை வழங்குகிறது.

ஆனால் அது தானாகவோ நேரடியாகவோ அல்லது தன்னியல்பாகவோ அதன் வளர்ச்சிக்குத் தேவையான அரசியல், அறிவார்ந்த இன்னும் சொல்லப்போனால் கலாச்சாரத்தையும் கூட உடனே தோற்றுவிக்காது. மேற்கூறியவையே ஒரு உண்மையான புரட்சிகர நிலைமைக்கு வரலாற்று தயாரிப்பாகும்.

புரட்சிகர இயக்கத்தின் பொதுவான புறநிலை அடிப்படைக்கும் அது மேலாதிக்கம் செய்யும் வரலாற்றுச் சக்தியாக மாறுவதற்காக கடந்து செல்லும் சிக்கலான அரசியல் சமூக மற்றும் கலாச்சார செயல்முறை போக்குகளுக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை நாம் கிரகிக்கும் பொழுதுதான், ஸ்ராலினிசத்திற்கு எதிரான நமது வரலாற்றுப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். மற்றும் இன்று நம்முன் நிறுத்தப்பட்டுள்ள பணிகளைப் பார்க்க முடியும். நாம் முதலாளித்துவ மறுமலர்ச்சிக் காலத்துக்குள் நுழைந்துள்ளோம் என நம்புவதற்கு அப்பால், சோசலிசத்திற்கான புறநிலை ரீதியான பொருளாதார முன் தேவைகள் 1917ஐ விட இன்று அதிகம் அபிவிருத்தி அடைந்துள்ளன என்று சொல்லமுடியும். மேலும் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இருப்பு, அது 75 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட அதிகம் சோசலிசத்துக்கு பக்குவமானதாக இருக்கிறது. உலக அளவில் பொருளாதார வாழ்வில் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையும் செல்வாக்கும் அது 75 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கின்றது. 75 வருடங்களுக்கு முன் உலகின் பல பகுதிகள் பெரும்பாலும் கிராமப் புறங்களாக இருந்தன. அவை இப்பொழுது தொழிற்துறைப் பாட்டாளிகளிடமிருந்தும் பொருளாதார துறைகளுடன் தொடர்புடைய பாட்டாளிகளிடமிருந்தும் உபரி மதிப்பைக் கறந்தெடுப்பதை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார மையங்களாக இருக்கின்றன.
ஆனால் பொருளாதாரத்தின் புறநிலை அபிவிருத்தியும் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை அபிவிருத்தியும் 1917ல் இருந்ததைவிட மிக அதிகமாக இருக்கையில், தொழிலாள வர்க்கத்தின் அகநிலை அரசியல் நனவு இன்று மிகவும் குறைந்த நிலையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நம் சொந்த இயக்கத்தையும் அது எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதற்கு இந்த உண்மை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வரலாற்று சுய முரண்பாடுள்ள உண்மையை சோசலிசப் புரட்சிக்கு தாண்டிச் செல்ல முடியாத தடையாகப் பார்க்கக் கூடாது. ஆனால் நாம் பேச்சுக்கு கூறினால் வெல்லப்படவேண்டிய பிரச்சனையாக பார்க்க வேண்டும். மிக ஆரம்பத்தில் இருந்து தொடங்கவில்லை. இது 1992 ஆகும் 1917 அல்ல. சோவியத் யூனியனின் முடிவு வரலாற்றின் முடிவல்ல. முழு வரலாற்றின் நிகழ்வுப் போக்குகள் தற்போதைய சூழ்நிலையில் புறநிலை ரீதியாக பொதிந்திருக்கிறது. சமுதாயம் அங்கீகரிக்கப்படுகிறதோ இல்லையோ நவீன சமுதாயமும் தற்போதைய அரசியல் சூழலும் கடந்த காலத்தின் விளைபொருளாகும். தற்போது மறைந்து கிடக்கும் குழப்பமான வடிவத்தினின்று கடந்துபோன இவற்றை அகழ்ந்தெடுக்க வேண்டும். 1942ன் ஓடுகாலிகள் கடந்தவற்றை நிராகரித்தனர். அந்த வகையில் அவர்கள் எதிர்கொள்ளும் நிலைமை பற்றி முழுமையாக மேழெழுந்தவாரியான மதிப்பீடு செய்தனர். அவர்கள் பாசிசத்தின் வெற்றியை மட்டும்தான் பார்த்தனர். அத்துடன் அவர்கள் அந்தக் காலகட்டத்தின் நிகழ்ச்சிகளை அவற்றைத் தோற்றுவித்த வரலாற்று வளர்ச்சிப் போக்குகளில் இருந்து துண்டித்தனர். இவ்வாறு அவர்கள் சோசலிசத்தை நிராகரிப்பதையே உயிர் வாழக்கூடிய முன்னோக்காக வந்தடைந்தது. மோசமான ''ஜனநாயக'' வாதிகளாக மாறினர்.

சோசலிசத்தைப் பற்றி பேசுவதை அர்த்தமில்லாததாக அவர்கள் முடிவு செய்தனர். மார்க்ஸ் செய்தவற்றை, சுதந்திரமான தொழிலாள வர்க்க கட்சியை கட்டியெழுப்புதலை செய்யாது கடந்த காலத்தை புதுப்பிக்க 1845க்கு திரும்புவது இன்றியமையாதது என்று அவர்கள் கருதினர். இதிலும் பார்க்க அவர்கள் தங்களது பணியை முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒரு புதிய வீரகதாகாலத்தை மறுஉற்பத்தி செய்வதாக கண்டுகொண்டனர். ஆனால் அது 1942ல் பிற்போக்கு முன்னோக்காக இருந்தது. இன்றும் அது அந்நிலையை விட சிறப்பாக எதையும் கொண்டிருக்கவில்லை. உண்மையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அபிவிருத்திக்கு, இன்றைய சூழ்நிலை 70 வருடங்களுக்கு முன்னர் இருந்ததைவிட மிகக் குறைவான இணக்கம் உடையதாகவே இருக்கின்றது.

ரஷ்யப் புரட்சியின் வரலாற்றை உட்கிரகித்தல்

ரஷ்யப் புரட்சியின் முழு வரலாற்றினையும் உட்கிரகிப்பதன் அடிப்படையில் நாம் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். தற்போது தொழிலாள வர்க்கத்திற்குள் மிகப் பெரிய குழப்பம் காணப்படுகின்றது. அதன் கண்ணோட்டங்கள் சரியான வரலாற்று நனவை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. மக்கள் கடந்துவந்த முந்தைய வரலாற்று அனுபவங்களில் இந்தப் போலியான நனவு வேரூன்றியிருக்கிறது. இந்த வரலாற்று அனுபவங்களை கட்சியின் தலையீடு இன்றி உட்கிரகிக்க முடியாது.

ஸ்ராலினிசம்தான் மார்க்சிசம் என்றும் சோவியத் யூனியனின் உடைவு மார்க்சிசத்தினை, சோசலிசத்தினது தோல்வியை நிரூபிக்கின்றது என்றும் பல லட்சக்கணக்கானோரை திசைதிருப்ப மிகப் பெரிய பொய்கள் உருவாக்கப்பட்டன. ஸ்ராலினிசம், மார்க்சிச எதிர்ப்பு கோட்பாடு, வரலாற்றில் மிகப் பயங்கரமான எதிர்ப்புரட்சியின் விளைபொருள் என்பதை நிரூபித்தது. இப் பொய்களை மறுக்கவேண்டியது இன்றியமையாததாகும். தொழிலாள வர்க்கத்துக்குள் அதன் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஏனையவை பற்றிய பாதுகாப்பு சம்பந்தமாக நமது இயக்கம் கட்டாயம் எடுக்க வேண்டிய நாளாந்தப் போராட்டங்களுக்கு, இதனை ஒரு பிரதியீடாகவோ அல்லது மாற்றாகவோ நான் முன்வைக்கவில்லை. அவ்வித தலையீடுகள் நமது வேலையில் மிக இன்றியமையாததாக மிக முக்கியமான அம்சம் என்பதால் நாம் உடன்படுகிறோம் ஆனால் நமது இயக்கம் எடுத்தாக வேண்டிய புரட்சிகர முன்னோக்கின் ஒட்டுமொத்த பாதுகாப்பின் ஒரு பகுதியாக, இத்தகைய போராட்டத்தை அகன்ற வரலாற்று கட்டமைப்புக்குள் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தியின் மீது இத்தகைய பேரழிவிலான பாதிப்பை ஏற்படுத்திய அரசியல் சக்தி வேறெதுவும் இருந்ததில்லை என்று கூறியாக வேண்டும். ஹிட்லர், அவர் யாராக இருக்க வேண்டுமோ அவ்வாறே இருந்தார். அவர் ஒரு பாசிச, ஏகாதிபத்திய அரசியல்வாதியாவார். ஆனால் ஸ்ராலினும், சோவியத் அதிகாரத்துவமும், அதேபோல் உலகம் முழுவதிலும் இருந்த பரந்த ஸ்ராலினிச கட்சிகளும் அக்டோபர் புரட்சியின் பேரில் உரிமை கோரிக் கொண்டு பேசினார்கள்.
சோவியத் யூனியனில் இன்று KGP யின் கோப்புக்கள் திறக்கப்படுகின்றன.

இவற்றிலிருந்து வெளிவரும் தகவல்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் இழைக்கப்பட்ட குற்றங்கள், அளவிட முடியாத அளவுக்கு இருந்ததை எடுத்துக்காட்டும். மாஸ்கோ வழக்குகள் பற்றிய அவரது கண்டனங்களை எழுதிக் கொண்டிருக்கையில் கூட சோவியத் யூனியனில் நடைபெற்றுக் கொண்டிருந்த இரத்தக் குளியலின் அளவை ட்ரொட்ஸ்கியினால் எளிமையாக அறிந்திருக்க முடியாது. இப்படிக் கூறுவதனால் ட்ரொட்ஸ்கியின் எழுத்துப் படைப்புக்களில் அது எதையாவது வெளியே எடுப்பதாக நான் நினைக்கவில்லை. 1937ல் மாஸ்கோவில் ஒரு நாளைக்கு 1000 கம்யூனிஸ்ட்டுக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். லெனினுடன் இணைந்து வேலை செய்தவர்கள், மிகச் சிறந்த மார்க்சிச அறிஞர்கள், தத்துவார்த்தவாதிகள், 30 அல்லது 40 வருடங்களான புரட்சிகர வரலாற்றைக் கொண்ட இந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் 10 அல்லது 15 நிமிடங்களே வழக்கு விசாரணைக்கு வழங்கப்பட்டது. குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு பின்புற அறைக்கோ அல்லது நீதிமன்ற வளாகத்திற்கோ இழுத்துச் செல்லப்பட்டு கழுத்தின் பின்புறம் சுட்டனர். அவர்களுடைய உடல்கள் அடையாளம் இடப்படாத புதைகுழிகளில் புதைக்கப்பட்டன. உயர்ந்த கல்விபெற்ற இந்த மனிதர்களின் கையெழுத்துப் பிரதிகள் எரிக்கப்பட்டன.

 பெரும் மார்க்சிச கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு அவ்வித மகத்தான பங்களிப்புச் செய்த புரட்சியாளர்களின் அறிவார்ந்த மரபின் விளைவாகவே ரஷ்யப் புரட்சி தோன்றியது. அது இல்லாமல் ரஷ்யப் புரட்சி நடைபெற்றிருக்க முடியாது. அந்த மரபு அழிக்கப்பட்டது. மாஸ்கோ வழக்குகளில் ட்ரொட்ஸ்கியையும் பிற முக்கிய பிரமுகர்களையும் நாம் அறிவோம். 1936க்கும் 1940க்கும் இடையில் அழிக்கப்பட்டவை மார்க்சிசத்தின் மலர்கள் அல்ல. அதன் அடிவேர்கள் ஆகும்.

ஸ்ராலினின் அரசியல் இன அழிப்பு

ஸ்ராலின் என்ன செய்ய விழைந்தார்? தொழிலாள வர்க்கத்தினுள்ளும் சமுதாயத்தினுள்ளும் மார்க்சிச கலாச்சாரத்தின் அனைத்து சுவடுகளையும் அழித்தொழிப்பதற்கான முயற்சி இது என்பதை தவிர்த்து, பரந்த அளவு படுகொலைகளை ஒருவரால் விளக்க முடியாது. ஒரு எழுத்தாளர், ட்ரொட்ஸ்கிஸ்டுக்கள் இன ஒழிப்பு என்ற புத்தகத்தை எழுதினார் என நான் அறிந்தேன். அது மிகப் பொருத்தமான தலைப்புத்தான். ஸ்ராலினினது இன அழிப்பு, அரசியல் ரீதியாக குறிவைக்கப்பட்டதாகும். அவரது பலியாட்களை தேர்வு செய்வதில் மதம் அல்லது இனம் இவற்றின் பின்னணியும் ஒரு முக்கிய பங்கு வகித்த போதிலும் கூட, முக்கியமாக அந்தக் காரணங்களுக்காக அவர் மக்களைக் கொல்லவில்லை. ஆனால் ஸ்ராலினது பிரதான அக்கறை, அவரது பலியாட்களின் அரசியல் மற்றும் அறிவுஜீவிக் கண்ணோட்டத்துடன் இணைந்திருந்தது. மார்க்சிச இயக்கங்களிலும், கம்யூனிச இயக்கங்களிலும் அரசியல் வரலாற்றைக் கொண்டிருந்தவர்களும், தங்களது தலையிலும் சுதந்திரமான சிந்தனைகளைக் கொண்டிருந்தவர்களும் அழித்தொழிக்கப்படும் அபாயத்தை எதிர் கொண்டனர். அரசியல் கோட்பாடுகளை முன்னெடுத்தவர்கள், சிந்தனைக்குரிய அரசியல் பத்திரங்களை எழுதியவர்கள், கலைத்துறையில் குறிப்பிடத்தக்க வேலைகளைச் செய்தவர்கள், முக்கிய இசையைத் தொகுத்தவர்கள், எழுச்சியூட்டும் கவிதையை எழுதியவர்கள் அல்லது புதுமையான திரைப்படத்தை தயாரித்தவர்கள் இவர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டனர். இந்த பரந்தளவு கொலையின் நோக்கம், 1917 அக்டோபரை தயாரித்த அரசியல், சமூக, கலாச்சார சூழ்நிலைகளைத் தழுவிய தனி நபர்களை வேரோடு களைவதற்கேயாகும்.

இந்தக் குற்றத்தின் மிகப்பெரிய அயோக்கியத்தனத்தை ஒருவர் கிரகிக்க முடியவில்லையெனில், கடந்த ஆண்டு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும் என நான் நினைக்கவில்லை. அதனால்தான் அங்கு பலாத்கார எதிர்ப்புரட்சி நடைபெறவில்லை. எனவே முதலாளித்துவ மீட்சி பற்றி நாம் பேசக் கூடாது என்று டோரன்ஸ் பேசுகையில் -இதை அவர்களது வசதியான லண்டன் மனையில் இருந்து அவர்கள் நமக்கு கூறுகையில்- சோவியத் யூனியனில் எதிர்ப்புரட்சிகரப் பலாத்காரத்திற்கு பற்றாக்குறையே இல்லையென்பதை நாம் சற்றும் பொறுமையின்றி எடுத்துக் கூறவேண்டியுள்ளது. அரசியல் எதிர்வினையானது, அக்டோபர் புரட்சியின் தலையை அழிப்பதை நாடி நின்றது. சோவியத் யூனியனில் அது வெறுமனே ஒன்று அல்லது இரண்டு தலைகளை அல்ல, இலட்சக்கணக்கான தலைகளாக இருந்தது. இவ்வாறு இறந்து போனோருள் தோழர்களுக்குப் பரிட்சயப்படாத பெயர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் ரஷ்ய மற்றும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்காக கல்வியில் ஆழமான பங்களிப்புச் செய்த ஆட்களையும் அது உள்ளடக்கியிருந்தது. சர்வதேச சோசலிச இயக்கத்துடன் கட்டுண்டு கிடந்த அறிவுஜீவி வாழ்வின் உச்சத்தில் ட்ரொட்ஸ்கி இடம்பெற்றிருந்தார். ஆனால் அதன் செல்வாக்கு ரஷ்ய மற்றும் ஐரோப்பிய கலாச்சார வாழ்க்கையில் பரந்து விரிந்திருந்தது. அதையே ஸ்ராலினிசம் துடைத்துக்கட்ட விரும்பியது.

மார்க்சிசத்திற்கும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவின் வரலாற்று அடித்தளத்தைப் புரிந்துகொள்வது அவசியமானதாகும். ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை பிளெஹானேவ் ஆவர். ஆனால் அவரது எழுத்து செர்னி செவ்ஸ்கி என்பவரின் முந்தைய சாதனைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த தலைமுறையின் ஒரு பகுதியாக இருந்த புகழ்பெற்ற சிந்தனையாளர்களாகிய அவரது அரசியல் கண்ணோட்டங்கள் 1840களில் ஒரு வடிவத்தை எடுத்தன. அவை அலெக்சாண்டர் ஹெர்ஜன் மற்றும் பெலின்ஸ்கி போன்ற அத்தகையோரையும் உள்ளடக்கியிருந்தன. ஜெனிவாவில் சார்பு ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1883லிருந்து பிளெஹானேவ் வேலை செய்தார். பின்னர் 1890களின் நடுப்பகுதியில் லீனா தங்க வயல்களில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இது வர்க்க உறவுகளில் ஆழமான பாதிப்பை உண்டு பண்ணியது. ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் வரலாற்றின் மேடைக்கு அதன் வருகையை அறிவித்தது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுக்கள், பாட்டாளி வர்க்கத்தின் கல்வியைப் பொறுப்பெடுத்துக் கொண்டனர். இந்த மகத்தான மார்க்சிஸ்டுக்களால் கல்வி புகட்டப்பட்ட பாட்டாளி வர்க்கம்தான் ரஷ்யப் புரட்சியை நடாத்தியது.

எப்படி லெனினும், ட்ரொட்ஸ்கியும் 1917ல் மக்கள் செல்வாக்கைப் பெற்றனர்? 

பெப்ரவரி புரட்சிக்குப் பின் அவர்கள் ரஷ்யாவுக்கு திரும்பியபொழுது, குட்டி முதலாளித்துவ தீவிரவாத அலையில் பெட்ரோகிராட் மூழ்கியிருந்தது. கட்சியின் தலைமை அங்கு நிலவிய சந்தர்ப்பவாத மனோநிலைகளுக்கு ஒத்துப்போனது, இடைக்கால அரசாங்கத்திற்கும் போரைத் தொடர்வதற்கும் அங்கீகாரம் அளித்திருந்தது. இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக லெனின், ''ஏப்ரல் ஆய்வை'' முன்னெடுத்தார். மத்திய குழுவுக்குள் அவர் மோத நேரிட்ட எதிர்ப்பு இருந்தபோதிலும், லெனின் கட்சி ஊழியருள் சிறந்த சக்திகளை அணிதிரட்டினார். பிராவ்தா பத்திரிகையில் ஸ்ராலினது கட்டுரையை வாசித்தபோது, தலையை பிய்த்துக் கொண்ட ஆயிரக்கணக்கான கட்சி மற்றும் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த தொழிலாளர்கள் இவற்றுள் அடங்குவர். இதெல்லாம் என்ன? காப்ரியில் கட்சி பள்ளியில் லெனினிடம் நான் கற்றுக் கொண்டது அதுவல்லவே. நான் எப்பொழுதுமே வேறுவிதமாக அல்லவா சிந்தித்தேன் என்று அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
போல்ஷிவிக் கட்சிக்குள்ளான அவரது போராட்டத்தில், ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் மீதுதான் அவர் தங்கி நின்றார் என லெனினுக்குத் தெரியும்.

இடைக்கால அரசாங்கம் பற்றிய பிரச்சனையிலும், எழுச்சிக்கான திட்டத்திலும் லெனினை எதிர்த்தவர்கள், பல்லாயிரக்கணக்கான அரசியல் ரீதியாகப் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த தகராறுகளைப் படித்திருப்பர் என்றும் பிராவ்தாவில் வெளியிடப்பட்ட தத்துவார்த்த வாக்குவாதங்களை ஆயிரக்கணக்கான போல்ஷிவிக் தொழிலாளர்கள் கவனித்துக் கொண்டு வருகின்றதுடன், முறைப்படி இந்தப் பிரச்சனையை அவர்கள் மக்களுக்கு விளக்குவார்கள் என்றும் அறிவார்கள். இவ்வாறாக, ''நீங்கள் எனது வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் நான் இராஜினாமா செய்துவிட்டு, பரந்த கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சாரத்தை முன்னெடுப்பேன்'' என லெனின் மத்திய குழு உறுப்பினர்களிடம் கூறியபொழுது, அவரது எதிரணியினர் அசட்டையாக எடுத்துக் கொள்வதற்கான அச்சுறுத்தலாக அது இல்லை. ஆயிரக்கணக்கான போல்ஷிவிக் தொழிலாளர்கள் கலந்துகொள்ளக் கூடிய கூட்டத்தை தன்னால் கூட்ட முடியுமென்றும், இந்த தொழிலாளர்கள் பின்னர் அவசர மாநாட்டை கூட்டுமாறு கோரி, போல்ஷிவிக் கட்சியின் தற்போதிருக்கும் தலைமைகளை வெளியேற்றி விட்டு, புதிய மத்திய குழுவை தேர்ந்தெடுப்பர் என்றும் லெனின் அறிவார். லெனினது எதிராளிகளும் அதை அறிந்து கொண்டிருந்தனர். அதுவே அவரது அரசியல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்தது.

ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தின் சக்தியிழந்த தன்மை

1917க்குப் பின்னர் உள்நாட்டு யுத்தம் வந்ததுடன், அது தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவிலான விளைவை ஏற்படுத்தியது. வர்க்க நனவுள்ள பாட்டாளி வர்க்கத்தின் கணிசமான பகுதி 1921ல் துடைத்தொழிக்கப்பட்டது. அதில் தாக்குப் பிடித்து எஞ்சியிருந்தோருள் அனேகர் அரசினுள்ளும் இழுக்கப்பட்டார்கள். ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தின் சக்தியிழந்த தன்மை மேலோங்கி வருவதாக ட்ரொட்ஸ்கி அடிக்கடி எழுதினார். போல்ஷிவிக் செல்வாக்கின் கொத்தளங்களாக இருந்த பல தொழிற்சாலைகளில் அரசியல் ரீதியாக கல்வி புகட்டப்பட்ட தொழிலாளர்கள் இல்லாது போயினர் அல்லது அமைப்புக்குள் உள்ளிழுக்கப்பட்டனர். இதுதான் 1923-24ல் அந்தளவு கவனத்தை ஈர்த்த மாற்றத்திற்கு அடித்தளமாக இருந்தது. கட்சி அமைப்பின் சீரழிவு போல்ஷிவிக் கட்சிக்குள் பரந்த அளவு எதிர்ப்பினை தூண்டி விட்டது. இது ''46 பேர்களின் கடிதம்'' என்ற அந்தவகையான பத்திரங்களில் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் ட்ரொட்ஸ்கியின் ''புதிய போக்கு'' (New Course) வெளியிடப்பட்ட பின், கல்வியூட்டப்பட்ட தொழிலாளர்களின் பரந்த தளத்தின் ஆதரவை இனி சார்ந்திருக்க முடியாது என்று கட்சிக்குள் இருந்த மார்க்சிஸ்டுக்கள் உணர ஆரம்பித்தனர். அது சற்றேறக்குறைய துடைத்துக் கட்டப்பட்டிருந்தது. மேலும் லெனினுடைய மரணத்திற்குப் பின்னர், அதிகாரத்துவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அவமானகரமான ''லெனின் லெவி'' போல்ஷிவிக் கட்சியை உண்மையில் அழித்தது. இலட்சக்கணக்கான விவசாயிகளும், கொஞ்சமும் கல்வியூட்டப்படா தொழிலாளர்களும் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டனர். அரசியல் ரீதியாக பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களும், விவசாயிகளும் கட்சிக்குள் எஞ்சியிருந்த மார்க்சிச காரியாளர்களுக்கு மேலாக நிரம்பி வழிந்தனர். இந்த மார்க்சிச காரியாளர்கள், ஸ்ராலினிச பிரிவினரால் எளிதாக வளைக்கக்கூடிய மக்கள் மத்தியில், தாம் தனிமைப்பட்டிருப்பதைக் கண்டனர்.

நிச்சயமாக தொழிற்சாலைகளில் மார்க்சிச தொழிலாளர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் இன்னமும் சிறுபான்மையாகவே இருந்தனர். ஆயினும் அவர்களைக் கண்டு ஸ்ராலின் அஞ்சினார். களையெடுப்பின் பிரதான நோக்கத்துள் ஒன்று, அவர்களை சரீர ரீதியாக துடைத்துக் கட்டுவதன் மூலம் ஆலைகளில் மீண்டும் மார்க்சிசம் வேரூன்றாமல் செய்வதாகும். தொழிற்சாலைகளுள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெளிப்பாடுகளை, ஸ்ராலினிஸ்டுக்கள் எவ்வாறு கையாண்டனர் என்பதை பல தஸ்தாவேஜுகள் காட்டுகின்றன. ஒரு தொழிற்சாலையில் ஒரு ட்ரொட்ஸ்கிச தொழிலாளியைக் கண்டுபிடித்தால், KGP அந்த தனிநபரை மட்டும் விடுவதில்லை. அவரது பகுதியில் உள்ள ஏனைய ஒவ்வொரு தொழிலாளியையும் சுட்டுக் கொன்றது.

இந்த நிகழ்ச்சிப்போக்கு, வரலாற்றின் எந்த எதிர்ப்புரட்சியைப் போலவும் இரத்தவெறி கொண்டதாகும். அது அவ்வாறாக அரசின் பண்பை மாற்றவில்லை. சோவியத் யூனியன் சீரழிந்த அரசாக நீடித்திருந்தது. ஆனால் பழைய மார்க்சிச அரசியல் கலாச்சாரத்தில் சிறிதளவே எஞ்சியிருந்தது. அவற்றை களையெடுப்புக்கள் துடைத்துக் கட்டின. அதன் விளைவுகள் சோவியத் யூனியன் எல்லைகளுக்கு அப்பால் உணரப்பட்டன.
ஸ்ராலினிசம்தான் மார்க்சிசம் என்ற பொய்க்கு பதிலாக, ஸ்ராலினிசத்தின் கைங்கரியங்களை நாம் அம்பலப்படுத்துவது தேவையானது. ஸ்ராலினிசம் என்றால் என்ன என்பதை அறிவதற்கு, ஸ்ராலினிசம் யாரைக் கொலை செய்தது என்பதை ஒருவருக்கு காட்ட வேண்டும். எந்த எதிரிக்கு எதிராக ஸ்ராலினிசம் தனது பகிரங்கமான தாக்குதல்களை தொடுத்தது? என்ற கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டும். ஸ்ராலினிசம் நிறைவேற்றிய குற்றங்களின் தொலைதூர அரசியல் முக்கியத்துவத்தினை அம்பலப்படுத்துவதன் மூலம், வரலாற்று உண்மைகளை மீண்டும் நிலைநாட்டுவதே நமது இயக்கத்தின் மகத்தான அரசியல் பணியாக இருக்க வேண்டும். வழக்குகள், களையெடுப்புகளை, அழித்தொழிப்புகளை, ட்ரொட்ஸ்கியின் படுகொலை சம்பந்தமான தஸ்தாவேஜுக்களை பகிரங்கப்படுத்துவதே இந்த அம்பலப்படுத்தல்களின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்.

ஸ்ராலினிசத்தின் குற்றங்கள் பற்றிய ஆவணக் காப்பகத்தை பகிரங்கப் பார்வைக்கு திறக்க அனைத்துலகக் குழுவின் பிரச்சாரம்
ரஷ்யாவில் ஆவணக் காப்பகங்கள் திறக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் சூழ்நிலை மிகவும் தெளிவாக இல்லை. ஆவணக் காப்பகத்தை யார் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர், யார் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையில் ஒருவருக்கும் தெரியாது. ஆவணங்கள் பணத்திற்கு விற்கப்படுகின்றதாகவும் கூட செய்திகள் வருகின்றன.

ஸ்ராலினிஸ்டுக்களும் அவர்களது அடியாட்களும் இவர்களுள் பெரும்பாலோர் அரசு எந்திரங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், முதலாளித்துவ மீட்சியில் முன்னணியில் நிற்பவர்களாவர். இவர்கள் வரலாற்று உண்மையை நிலைநாட்டுவதற்கு தேவையான சான்றுகளை அழிப்பதற்கு அங்கு நிலவும் குழப்ப நிலைமைகளைப் பயன்படுத்தலாம் என்ற அபாயம் நிலவுகின்றது. ஸ்ராலினிச ஆட்சிகளுக்கு எதிரான மார்க்சிஸ்டுகளை அழிப்பதுடன் தொடர்புடைய எல்லாவித குற்றச் செயல்களையும் அம்பலப்படுத்துவதற்கு, ஸ்ராலினிஸ்டுக்களதும் GUP, NKVD, KGP, யினதும் ஆவணக் காப்பகத்தை திறப்பதற்கான பிரச்சாரத்தை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அவசியம் முன்னெடுக்க வேண்டும். துன்பத்துக்குள்ளான பலியாக்கப்பட்ட அனைவரும் இனம் காணப்பட வேண்டும். அவர்களது அரசியல் செயல்பாடுகள் தெளிவாக்கப்பட வேண்டும். கொடிய இக் குற்றங்களுக்கு ஏற்பாடு செய்தவர்களின், அவற்றை நிறைவேற்றியவர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இவ் ஆவணக் காப்பகங்களின் பகிரங்கத் திறப்பானது, ஸ்ராலினிச ஆட்சியின் உண்மையான வரலாற்று, சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தினை நிலைநாட்டுவதற்கு தேவையானதாகும். தனது எதிர்ப்பாளர்களான சோசலிஸ்டுக்களை அழிப்பதற்காக சோவியத் அரசினால் நடாத்தப்பட்ட அரசியல் இனப்படுகொலை தொடர்பான தஸ்தாவேஜுக்கள், சந்தேகத்திற்கு இடமில்லாமல் சிடுமூஞ்சித்தனமாகவும் போலியாகவும் ஸ்ராலினிசம் தன்னை மார்க்சிசத்துடன் இனம் காட்டிக் கொண்டதை செல்லாக் காசாக்கும்.
நாம் இதனை எல்லா நேரமும் தொழிலாள வர்க்கத்துக்குள் விளக்குகின்ற அதேவேளையில், அறிவுஜீவிகள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் பரந்த மட்டத்தில் ஆதரவுக்கான பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் இந்த தாக்குதலை ஒன்று குவிக்காமல் சர்வதேச மார்க்சிச இயக்கத்தை திருப்பிக் கட்டுவது சாத்தியமில்லை.

வரலாற்று உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான பிரச்சாரத்தைப் பற்றி நாம் பேசுகையில், குறுகிய அர்த்தத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு மட்டும் நன்மை பயப்பதாக அல்லாமல் எல்லா முற்போக்கு மனித சமுதாயத்தினருக்கும் நன்மை பயப்பதாக இந்தப் பணியை நாம் பார்க்கிறோம். லுபியான்காவில் நடந்த விவகாரம் போராடும் அனைத்து மனித குலத்திற்கும் அக்கறையுள்ள விஷயமாகும். ஸ்ராலினிசத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவது, சமூக சிந்தனைக்கும் அரசியல் சிந்தனைக்கும் அவர்கள் விளைவித்த பாதிப்பை வெற்றி கொள்வதற்கான மிக அத்தியாவசியமானதன் ஒரு பகுதியாகும்.

எல்லா அரசியல் விஷயங்கள் சம்பந்தமான நிலைப்பாட்டில் அனைத்துலக குழுவுடன் ஒத்துப் போகிறவர்களுடன் மட்டுமோ அல்லது அந்த அர்த்தத்தில் தங்களை சோசலிசத்தின் முன்மொழிபவர்களாகக் கருதிக் கொள்பவர்களுடன் மட்டுமோ நாம் அணுகக் கூடாது. மாஸ்கோ வழக்குகளை அம்பலப்படுத்துவதற்கான தனது போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி எடுத்த அதே அணுகுமுறையை நாம் எடுத்தாக வேண்டுமென்று நான் நினைக்கிறேன். நாம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடம் போகவேண்டும். ஆவணக் காப்பகங்களை பகிரங்கப் பார்வைக்குத் திறப்பதற்கு விசாரணைக் குழு அமைப்பதற்கான இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தருமாறு கோரவேண்டும். அந்தக் குழு லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை தொடர்பாக சுற்றி நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மாஸ்கோ வழக்குகளின் பதிவுக் குறிப்புகளையும் வெளிக் கொணர்வதற்கான அக்கறையுடன் கூடிய அறிவுபூர்வமான பணியினை ஏற்படுத்துவதில் குற்றமற்ற மேன்மை கொண்டவர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதுதான் நாம் தொடங்கவிருக்கும் இடம். இந்த பேரழிவான குற்றங்களின் அரசியல் தன்மையை அம்பலப்படுத்துவதன் மூலம்தான், உண்மையில் ஸ்ராலினிசம் என்னவாக இருந்தது என்பதை அம்பலப்படுத்த முடியும்.

நான்காம் அகிலம் மட்டுமே இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க முடியும். அதற்கு தேவையான அரசியல் பார்வையையும் நேர்மையான பொறுப்புக்களையும் அது மட்டுமே கொண்டிருக்கின்றது. ஸ்ராலினிசம் வெல்ல முடியாத சக்தியாக தோற்றமளிக்கின்ற பொழுது, பல பத்தாண்டுகளாக மார்க்சிசத்தின் பாரம்பரியங்களையும், கோட்பாடுகளையும் காத்து வந்த ட்ரொட்ஸ்கிச இயக்கம், வரலாற்று உண்மையை நிலைநாட்டுவதற்கு செய்யக்கூடிய அத்தனை முயற்சிகளையும் செய்யவேண்டும். அந்த அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மறுமலர்ச்சிக்குத் தேவையான அடித்தளங்களை அமைக்க வேண்டும். ...

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com