Wednesday, January 20, 2021

குருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா? பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின்ற செய்திகள் பரவி வருகின்றது. அங்கே புதிதாக பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்விகாரையினால் சைவ ஆலயத்தின் இருப்பு கேள்விக்குறியாகின்றது என்றும் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பௌத்த விகாரைக்கு முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரே தேவையான நிதியுதவிகளை மேற்கொண்டுவருதாகவும் அங்கு அமைந்துள்ள புத்தர் சிலையானது தனது முழுச்செலவிலேயே அமைக்கப்பட்டதாகவும் முல்லைத்தீவைச் சேர்ந்த கிருபாகரன் எனப்படும் முன்னாள் புலி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளதாவது:

கிருபாகரன் (38) ஆகிய நான் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவன். புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு காரணமாக அவ்வியக்கத்தில் இணைந்து செயற்பட்டதுடன் யுத்தத்தின்போது ஒருகாலை இழந்தேன். தற்போது பௌத்த மதத்தை தழுவியுள்ளதுடன் அம்மதத்தை முல்லைத்தீவில் பரப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

என் அம்மா, அப்பா இருவரும் உயிருடன் இருக்கிறார்கள். அப்பா நகை தொழிலை நடத்தினார். எனவே எங்களிடம் நல்ல பணம் இருந்தது. எனக்கு ஒரு மூத்த சகோதரர், இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். நான் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. ஒரு சகோதரி போரின்போது இறந்தார். நான் முல்லைத்தீவிலுள் வித்தியானந்தா மகா வித்தயாலயத்தில் படித்தேன்.

யுத்தத்தின் இறுதியில் ஒவ்வொரு குடும்பத்தலும் ஒருவர் தம்முடன் இணைய வேண்டுமென புலிகள் அறிவித்தனர். அல்லது வீட்டிற்கு வந்து ஒருவரை கடத்திச் செல்வார்கள். புலிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, நான் புலிகளில் சேர்ந்தேன்.

நான் 10 ஆம் ஆண்டு வரை மட்டுமே படித்தேன். 2006 இல் நான் புலிகளில் சேர்ந்தேன். அப்போது எனக்கு 23 வயது. நான் கெரில்லா போரில் மூன்று மாத பயிற்சி பெற்றேன். எனது தகட்டு இலக்கம் 563. அமைப்பு எனக்கு ‘கார்முகிலன்’ என்ற பெயரை வைத்தது.

புலிகளின் முக்கிய தளபதியான கேணல் தீபனின் கீழ் செயற்பட்டேன். அங்கு எனக்கு கப்டன் தரம் வழங்கப்பட்டது.

முகமாலை முன்னரங்கத்தில் நடந்த மோதலில் எனது காலை இழந்தேன். நான்கு மாத சிகிச்சையின் பின்னர் வழங்கல் பகுதயில் பணியாற்றினேன்.

2009 ஏப்ரல் 5 அன்று வெள்ளமுள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்தேன். எங்களுடன் வந்த போராளிகள் பொதுமக்களிற்குள் ஒளிந்து நின்று துப்பாக்கி பிரயோகம் செய்தது.

நாங்கள் முன்வரிசை போராளிகளாக இருந்த போதும், இராணுவம் எம்மை துன்புறுத்தவில்லை. எங்களை நன்றாக நடத்தினார்கள். பின்னர் புனர்வாழ்விற்கு அனுப்பினார்கள்.

அங்கே சிங்களத்தை நன்றாக பேசக் கற்றுக்கொண்டேன். நாங்கள் புலிகளில் இணைந்த பின்னர், சிங்கள நாடு ஒரு கொலைகார நாடு என்று தலைவர்கள் கற்பித்தனர். இது ஒரு அப்பட்டமான பொய் என்று பின்னர் உணர்ந்தேன்.

நம்முடையதை விட சிங்கள தேசம் சிறந்தது என்று நான் அச்சமின்றி சொல்கிறேன்.

பின்னர் நான் நாயாறு குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதலங்கார கிட்டி தேரருடன் தொடர்பு கொண்டேன். அவரிடமிருந்து தம்மத்தைப் பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது. தமிழில் எழுதப்பட்ட ஒரு புத்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் எனது அறிவை மேலும் மேம்படுத்தினேன். ஒரு நாள் நான் அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசயாவில் வழிபடச் சென்றேன். அந்த நேரத்தில் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் நான் பௌத்தத்தை படித்து, பௌத்தத்திற்கு மாற வேண்டும் என்பதாகும்.

இந்த காலகட்டத்தல் மேதலங்கார தேரர் காலமானார். அவரது உடலை விகாரைக்கு கொண்டு வர முடியாது, ஆலய சூழலில் தகனம் செய்ய முடியாது என தமிழ் தீவிரவாதிகள் குழு கலவரத்தில் ஈடுபட்டனர்.

மேதலங்கர தேரரின் நினைவாக, விகாரையில் ரூ.6 1/2 இலட்சம் செலவில் புத்தர் சிலை கட்டினேன். நீர் வசதிகள் செய்தேன். வெலிஓயா ஸ்ரீ தேவகிரி ராஜமஹா விகாரையில் ஒரு தாதுகோபம் கட்டும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த கட்டுமானத்திற்கு சுமார் ரூ .4 மில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், ருவன்வெலி மகா சாயாவின் இருப்பிடத்திற்கு சுமார் 3 1/2 லட்சம் ரூபாய் செலவிட்டேன். நான் நீண்ட காலமாக ஒவ்வொரு போயாவிற்கும் அனுராதபுரத்திற்கு வருகிறேன்.

மேலும் தற்போது, வெலி ஓயா பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் 4 மில்லியன் ரூபா செலவில் தாதுகோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்

பிரபாகரன் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது உண்மை. இன்று நாம் அனைவரும் சுதந்திரமாக வாழ்கிறோம். அந்த சுதந்திரத்தை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோதபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஒட்டுமொத்த தேசத்தின் கண்ணியமும் மரியாதையும் உண்டு. புலிகள் அமைப்பில் முன்னணி வரிசை போராளிகளாக இருந்தபோதிலும், அவர்களால் எங்களுக்கு வாழ்க்கைப் பரிசு கிடைத்தது என புளகாங்கிதம் கொண்டுள்ளார்.0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com